இந்த முறை நான் சாமியாரை பார்க்கச் சென்றபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. எவரையுமே அவரை சுற்றி காணவில்லை.
நான் மெதுவாக அவரிடம் சென்று "சாமி" என்றேன்.
மூடிய கண்களைத் திறந்தவர் "என்ன இந்த பக்கம்" என்றார்.
"எங்கே உங்கள் சிஷ்ய கோடிகள்"
"கடந்த சில நாட்களாக எவரும் இங்கே தென்படவில்லை"
"என்ன காரணமாக இருக்கும்"
"தெரியவில்லை"
"சாமி நீங்கள் சற்று கிளுகிளுப்பான சாமியாராக இருந்து இருந்தால் எல்லாரும் மயக்கத்தில் வந்து இருந்து இருப்பார்கள். நீங்கள் எப்போது பார்த்தாலும் பூமி, ஆகாயம், நட்சத்திரம் என சொல்லிக் கொண்டிருந்தால் எவர் உங்களைத் தேடி வருவார்கள்"
"இதோ நீ வந்து இருக்கிறாயே"
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அட கருமமே, என நினைத்துக் கொண்டு
"இல்லை சாமி, பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதே என்று வந்தேன்".
"சரி உட்கார்"
நான் மறு பேச்சின்றி அமர்ந்தேன்.
"நீ பூமி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என சொன்னாய் அல்லவா"
"ஆமாம் சாமி, பக்தா என என்னை எதற்கு கூப்பிட மறுக்கிறீர்கள்"
"பக்தா என்றால் உனக்குப் பிடிக்காதே, சரி சரி பூமி பற்றி கேள்"
"ஆமாம் சாமி இத்தனை கோளங்கள் இருக்க பூமியில் உயிரினங்கள் தோன்றி இருப்பதற்கு காரணம் இயற்கை தேர்வு என சொல்கிறார்களே, அதாவது ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை என்று"
"சரி, ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை, அப்படியெனில் இந்த இயற்கை இப்படி இருக்க வேண்டுமென எவர் படைத்தது?"
அட கண்றாவியே என நினைத்துக் கொண்டு
"சாமி, இயற்கை தானாக உருவானது அதனால் தான் இயற்கைத் தேர்வு"
சாமி கலகலவென சிரித்தார்.சோளிகளை எடுத்தார். சிதறடித்தார். எல்லாம் ஆங்காங்கே உருண்டு புரண்டு நின்றது.
"மொத்தமாக இருந்த சோளிகளை சிதறடித்தது நான். நான் சிதறடிக்காமல் இருந்து இருந்தால் எப்படி அவை சிதறும்"
"சாமி இந்த சோளிகள் எங்கே இருந்து வந்தது?"
"எதற்கு கேட்கிறாய்?"
"எல்லாம் ஒரு கணக்குதான்"
"ஓஹோ, நீ என்ன சொல்ல வருகிறாய் என புரிகிறது"
"இவ்வுலகில் உள்ள மொத்த சக்தியும் இதுவரை மாற்றம் அடைந்தது இல்லை என்கிறார்களே"
"எந்த வகையான மாற்றம்"
"புரியவில்லை"
"இதோ சோளிகள் எப்படி ஒரு பொருளில் இருந்து உருவானதோ, அந்த பொருளானது எப்படி வேறு ஒரு பொருளில் இருந்து உருவானதோ அதைப்போலவே சக்தியும் மாற்றம் கொள்ளும்"
"சக்திக்கும், ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடு யாது?"
"இரண்டும் ஒன்றுதான். சக்தியும் விசையும் வேறு வேறு"
"சக்தியின் அளவு வேறுபாடு அடையவில்லை, அதனை உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்றால் என்ன அர்த்தம்? இப்படித்தான் இருக்க வேண்டும் என இயற்கைத் தேர்வு செய்ததா? எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு என்று சொல்லுங்களேன்"
"இறைவன் தவிர எல்லாமே இயற்கைத் தேர்வு தான், போய் வா"
"எதற்கு சாமி இப்படி விட்டேந்தியாக பதில் சொல்கிறீர்கள்"
"பிறகு என்ன, இறைவன் ஒருவனே அனைத்தையும் தேர்வு செய்தவன். இதில் இயற்கைத் தேர்வு, செயற்கைத் தீர்வு என்றெல்லாம் சொல்லக் கொண்டிருந்தால் எப்படி"
"சாமி, தேர்வு, தீர்வு. எவ்வளவு அழகான பதில். இயற்கைத் தேர்வு செய்ய வாழ்க்கைக்குத் தீர்வு கிடைக்கும்"
"இறைவன் தீர்ப்பு இறுதி தீர்ப்பு"
சாமியாரை அழைத்துக் கொண்டு நடந்தேன். ஒரு இடத்தில் அளவு கடந்த கூட்டம். என்னவென விசாரித்ததில் புதிதாக ஒரு சாமியார் வந்து இருப்பதாகவும் பல விசயங்களை மிகவும் எளிமையாக சொல்வதாகவும் சொன்னார்கள்.
சாமியாரைப் பார்த்தேன்.
"சாமி, நீங்க கொஞ்சம் புரியும்படியா பேசினா எல்லாரும் உங்களைத் தேடித்தான் வருவாங்க"
"எல்லாம் இயற்கைத் தேர்வு"
"சாமி, இறைவன் தீர்ப்பு இல்லையா?"
உன் சோலிய பாரு என சாமி தனது வேடம் கலைக்க, நான் என் தூக்கம் தொலைக்க விட்டத்தில் இருந்த பல்லி ஒன்று எனது வாயின் அருகில் எச்சம் விட்டுச் சென்றது. இனி அங்கே சிறு பருக்கள் முளைக்கும்.
ஆமாம் இவ்வுலகில் எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு?
(முற்றும்)