9. மனிதர்களின் உலகம்
நாச்சியார் சுந்தரவேலன் சொன்ன பட்டாம்பூச்சி வளர்க்கும் பெண்ணைக் காண வேண்டும் என தன் விருப்பம்தனைத் தெரிவித்தார். சுந்தரவேலன் தற்போது வேறு வேலையாக வேறு ஒரு இடம் செல்வதாக இருப்பதால் வேறொரு நாள் சந்திக்க ஏற்பாடு பண்ணுவதாக கிளம்பிப் போனான்.
யசோதை நன்றாகச் சமைத்து இருந்தாள். மதிய உணவு சாப்பிட்ட பிறகு மாலை வேளையில் சிம்மக்கல்லில் சென்று தான் சந்திக்க இருந்த நபர்களை பள்ளிக்கூடம் கட்டுவது குறித்துப் பேசிவிட்டு வந்தார். யசோதையும் உடன் சென்று இருந்தாள்.
''அத்தை அவ்வளவு பணம் கேட்கிறாங்க, என்ன பண்ணப் போறீங்க''
''கோவில் நிலத்தில ஒரு பகுதியை பள்ளிக்கூடம் கட்ட உபயோகிக்கலாம்னு இருக்கேன். ஊருல ஒரு ட்ரஸ்ட் மாதிரி ஆரம்பிச்சி பண்ணனும்''
''நிறைய செலவு ஆகும் அத்தை, அவங்க சொல்றது எல்லாம் பார்த்தா ஒவ்வொரு கட்டத்தில அனுமதி வாங்கி பண்றதுக்கே போதும் போதும்னு ஆயிரும், அப்புறம் பிள்ளைக வந்து சேரனும். இப்போ இருக்க பிள்ளைக காசு கொடுத்துப் படிக்கப் போறாங்க, அவங்களை நம்ம ஊரிலேயே இருக்கச் சொல்றது இலேசான விசயம் இல்லை''
''ஆறு வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாம்''
''நல்லா யோசியுங்க அத்தை''
நாச்சியார் பள்ளிக்கூடம் விசயமாக சில நாட்கள் அலைந்து திரிந்தார். மனிதர்களின் உலகம் பணத்தினால் கட்டப்பட்டு இருக்கிறது. தனது கனவு பணம் என்ற ஒன்றினால் தடுத்து நிறுத்தப்படும் என்றே அவருக்குத் தோனியது.
புதன்கிழமை அன்று அவர் மாலை அங்கங்கள் வளர்ச்சி குறித்த நிகழ்வு/கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது எப்படி எல்லாம் உடல் முழு வளர்ச்சி அடையாத குழந்தைகள் பிறக்கின்றன என்பது குறித்து நிறைய அறிந்து கொண்டார். எவ்வித குறைகளும் இன்றி பிறக்கும் குழந்தைகள் நல்ல நம்பிக்கைகளோடு வளர்வது மிகவும் முக்கியம். நல்லதொரு கல்வி சீரான செல்வம் என எல்லாக் குழந்தைகளும் ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ்தலே பெரும் வரம் தான்.
தனக்கு இருக்கும் குறைகளை எண்ணி மனம் தளர்ந்து போகாத குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் உற்றார்களின் பங்கு அதிகம் எனவும் மருத்துவ வளர்ச்சி குறித்தும் நிறைய பேசப்பட்டது. நாச்சியார் மனம் கனத்தது.
''அத்தை உங்க பெருமாள் இந்தக் குழந்தைகளுக்கு எல்லாம் ஒன்னும் செய்ய மாட்டாரா''
''அதான் உன்னைப் போல மருத்துவர்களை உருவாக்கி இருக்காரு யசோ''
நாச்சியார் குரல் உடைந்து இருந்தது. பசியால், வறுமையால் குழந்தைப் பருவம் படுகின்றபாடு இந்த உலகம் கவனிக்கத் தவறிய, சரி பண்ணத்தவறிய ஒன்று. குழந்தைகளைத் திருடி விற்றல், காமங்களினால் சிறுவர் சிறுமியர் எனப் பாராமல் அவர்தம் வாழ்வைச் சிதைத்தல் என இந்த மனிதர்களின் உலகம் நிறையவே அல்லல்படுகிறது.
''குறையுள்ள படைப்புகள் என்ன செய்ய முடியும் அத்தை, சொல்லுங்க''
''பெருமாளை நினைக்காத பிறப்புகள் மட்டுமே குறை உள்ளவை யசோ, நல்ல எண்ணங்களும், பிறருக்கு உதவி புரிதலும், துயர் கொண்டோர் துயர் துடைத்தலும்னு மனித மற்றும் பிற உயிர்களோட நலத்துக்கும், வளத்துக்கும் உழைக்காத எந்த ஒரு பிறப்பும் மட்டுமே குறைகள் உள்ளவை யசோ. மனித வாழ்க்கை பத்தி நிறைய சொல்லி இருக்கு, அன்பின் வழி நடப்பதுனு ஆயிட்டா எதுவுமே குறையாகப் படாது, எல்லாமே குறை நீக்கிய ஒன்றாகத்தான் இருக்கும்''
நாச்சியார் சொன்ன விசயங்கள் யசோதையையும், சுந்தரவேலனையும் நிறையவே யோசிக்க வைத்தன.
''மனநிலையினைப் பாதிப்பு செய்யாத குழந்தைப் பருவத்தை நன்றாக அனுபவிக்கக் கூடிய ஒரு சூழலை நாம உருவாக்கனும் அம்மா''
சுந்தரவேலன் சொன்னபோது நாச்சியார் புன்முறுவல் செய்தார்.
பணம் மனிதர்களை நிறையவே மாற்றி அமைந்துவிட்டது. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது என்பது போலவே எழுதி வைக்கப்பட்ட எழுத்துக்கள் கூடச் சொல்லிச் செல்கிறது. உடல் உறுப்புகளை விற்பது என பல காரியங்களில் ஈடுபடும் கூட்டம் ஒன்று இருக்கவே செய்கிறது.
அன்று இரவு தூங்கப் போகும் முன்னர் நாச்சியாருக்கு மனம் என்னவோ செய்து கொண்டு இருந்தது. இந்த பட்டாம்பூச்சிகள் எத்தனை அழகாக தன்னை உருமாற்றம் செய்து கொள்கிறது. அது போல இந்த மனிதர்களும் தங்களில் உருமாற்றங்களைச் செய்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். எல்லோரும் கால் கைகளோடு சுகமாக இருப்பார்கள் என மனம் நினைத்தது.
யசோதை படுத்தவுடன் தூங்கிப் போனாள். அந்த இரவின் அமைதியில் குறை ஒன்றும் இல்லை என்ற பாடல் ஒலித்தது.
நாச்சியார் இந்த உலகம் எவ்வித குறைகளும் இன்றி இருக்க வேண்டிக் கொண்டார். அடுத்த நாள் சுந்தரவேலன் வீட்டிற்குச் சென்றார். அங்கே பட்டாம்பூச்சிகள் வளர்க்கும் பாமாவைச் சந்தித்தார்.
இருபத்தி ஒரு வயது நிரம்பிய பாமா தனக்கு சிறு வயதில் இருந்தே வண்ணத்துப் பூச்சிகள் என்றால் கொள்ளைப்பிரியம் எனவும் அதை தான் தேடி அலைந்த காலங்களை நினைவு கூர்ந்தாள். மொத்தம் இருபது வண்ணத்துப் பூச்சிகள் அங்கே இருந்தன. நிறைய செடிகள் வீட்டில் தென்பட்டன. பட்டாம்பூச்சிகளுக்கென அவை வளர்க்கப்பட்டது போல இருந்தது.
''பாமா, இந்தப் பட்டாம்பூச்சி தான் முட்டை இட்டதும் தனது சந்ததிகளை அதன் சுதந்திரத்துக்கு விட்டுரும் வளர்க்க எல்லாம் செய்யாது ஆனா நாம அதை நம்ம கட்டுப்பாட்டுல வைக்க நினைக்கிறோம் எல்லா உயிர்களையும் நாம நம்ம கட்டுப்பாட்டுல வைச்சி வளர்க்க நினைக்கிறோம், அதன் சுதந்திரம்படி வளர நாம இடம் தரது இல்லை. நம்மோட தேவைகள் எதையுமே சுதந்திரமா இருக்க விடுறது இல்லை''
''ஆசையா இருந்துச்சும்மா எல்லாத்தையும் இங்கே வைச்சி இருக்கமாட்டேன், கொஞ்சம் கூட்டம் கூடினா அவைகளை வெளியே பறக்க விட்டுருவேன்''
''அதனோட ஆசைகளை நாம என்னனு யோசிச்சோமோ பாமா''
நாச்சியார் தான் சொன்னதில் எவ்விதப் பொருளும் இல்லை என அறிந்தவர்தான். மனிதர்களின் உலகம் பேரன்பினால் நிறைந்து இருப்பின் எல்லா உயிர்களும் அதனதன் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு இருந்து இருக்கும்.
பாமா தான் சொன்னதை கேட்டு எவ்வித மறுப்பும் சொல்லாமல் இருந்தது, தனது கருத்துக்களோடு உடன்பட்டது என நாச்சியாருக்கு பாமாவை நிறையவே பிடித்துப் போனது. பாமாவை பெருமாள்பட்டிக்கு வருமாறு அழைத்தார். தனது படிப்பு முடிந்து விடுமுறை சில வாரங்களில் வருவதால் ஒரு மாதம் கழித்து வருவதாக பாமா உறுதி சொன்னாள்.
இந்த உலகில் நாம் நேசிக்கும் மனிதர்கள் நமது எண்ணங்களுக்கு மதிப்பு தருபவர்களாகவே இருக்க வேண்டும் என அவர்களையே நாம் தேடிக் கொள்கிறோம்.
(தொடரும்)