எங்க ஊருல கருவாயன் அப்படின்னு என்னை கூப்பிடுவாங்க. நான் ஒரு நாள் கூட என்னை கூப்பிட்டவனை திருப்பி அடிச்சது இல்லை. நிற வெறியை கிளப்புறானு இனவெறியை சொல்றான்னு ஒருநாளும் கத்துனது இல்லை.
கஞ்சா கருப்பு அப்படின்னு ஒரு நகைச்சுவை நடிகரு கூட இருக்காரு. அவர் ஒரு நாள் கூட தன பேருல கருப்பு இருக்கேன்னு கவலைப்பட்டு இருப்பாரானு தெரியலை.
சினிமா பாட்டு எழுதி தேசிய விருது வாங்குன விஜய் கூட கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு அப்படின்னு ரொம்பவே கருப்பு கலரை புகழ்ந்து எழுதுனாரு. கருவண்ண கண்கள், கரு மேக கோலங்கள் அப்படி இப்படி கருப்பு பத்தி நம்ம ஊருக்காரங்க அத்தனை பெருமையா பேசுறாங்க.
ஆனா கருப்பு இனத்தவரை 'டே கருப்பு' அப்படின்னு சொன்னா அது இனவெறி, நிறவெறியாம். எனக்கு ரொம்ப நாளாவே சந்தேகமா இருந்துச்சு. கருப்பு இனத்தவர்கிட்ட போய் இதை கேட்டு பாக்கலாமா அப்படினுட்டு ஒரு கருப்பு இனத்தவரை 'டே கருப்பு' அப்படின்னு கூப்பிட்டேன். பொளார் அப்படின்னு ஒரு அறை விட்டதுல என் கன்னம் கருப்பா பழுத்து போச்சு. அன்னைக்குல இருந்து எது எது என்னைய சொன்னா எனக்கு வலிக்குமோ அதுமாதிரி அது அது மத்தவங்களை சொன்னா வலிக்கும்னு நினைச்சேன். ஆனா நினைப்பு நினைப்போட இருந்துச்சு.
'யே குண்டு' அப்படின்னு ஒருத்தரை கூப்பிட்டேன். 'என்னடா சொன்ன, அப்படின்னு அந்த பொண்ணு காலுல இருக்க செருப்பை தூக்கி என் மேல எறிஞ்சிருச்சி' வலி தாங்கலை. குண்டா இருக்கவங்களை 'குண்டு' அப்படின்னு சொல்றது கூட தப்புதானாம். ஒல்லியா இருக்கிறவங்களை 'ஒல்லி பச்சான்' அப்படின்னு சொல்றதும் குத்தம் தானாம். இருக்கறதை இருக்கறமாதிரியே சொன்னா எல்லாரும் அடிக்க வராங்க. 'டூ யூ நோ ஹௌ ஐ ஃபீல்? அப்படின்னு கேட்கறாங்க.
இது மாதிரி என்னை ஒருதரம் 'போடா முட்டாபயலே' அப்படின்னு ஒருத்தர் திட்டினதும் எனக்கு ஜிவ்வுன்னு கோவம் தலைக்கு மேல ஏறிருச்சு. எதுக்குடா அப்படி சொன்ன? அப்படின்னு கேட்டேன். 'முட்டாபயல முட்டாபயனு திட்டாம அறிவாளினா திட்டுவாங்க' அப்படின்னு சொல்லிட்டு விடுவிடுன்னு போய்ட்டான்.
ஹூம், முட்டாளத்தான இருக்குமோ அப்படின்னு நினைக்கிறப்போ ஒரு கருப்பு இனத்தவரு போனாரு.
வாய் வரைக்கும் வார்த்தை வந்துச்சி. அன்னைக்கு வாங்குன அடி நினைவுக்கு வந்ததால மனசுக்குள்ளார சொல்லிக்கிட்டேன். டே கருப்பு! அவனுக்கு கேட்கபோறதும் இல்லை, என்னை அவன் அடிக்கப் போறதும் இல்லை.
அப்புறம் தான் செய்தி தாளைப் பார்த்தேன். கருப்பு அப்படின்னு ஒரு கருப்பு இனத்து விளையாட்டு வீரரை ஒரு வெள்ளை இனத்து விளையாட்டு காரர் கூப்பிட்டாருன்னு அந்த வெள்ளை இனத்தவரை எட்டு போட்டிகளில் தடை பண்ணிட்டாங்க. அவரும் என்கிட்டே பாவமா கேட்டாரு. கருப்புதனை கருப்பு அப்படின்னு சொல்றது தப்பா!
ரொம்ப ரொம்ப ரொம்பவே தப்பு அப்படின்னு ஆறுதல் சொல்லிட்டு இனிமே மனசுக்குள்ள சொல்லிக்கோ அப்படின்னு போய்ட்டேன். ஒரு சில வார்த்தைகள் இனத்தை கேலி பண்ணுவதாகவும், நிறத்தை கேலி பண்ண கூடியதாகவும் இருக்கு, அதை எல்லாம் தெரிஞ்சி வைச்சிக்கிரனும் அப்படின்னு புது டிக்சனரி போடலாம்னு போய்கிட்டு இருக்கேன்.
டே கருவாயா! எவனோ என்னை கூப்பிட்டான். அவனை சொல்லி குத்தமில்ல!