பயணம் என்றால் பெரும்பாலோனோருக்கு கொள்ளை பிரியம். எனது தந்தை ஓரிடத்தில் ஓய்வாக அமர்ந்திருக்க மாட்டார். ஆசிரியராக வேலை புரிந்தபோது அவர் சைக்கிளில்தான் வேலைக்கு செல்வார். அதனால் எண்பது வயதாகியும் கூட திடகாத்திரமாகவே இருக்கிறார். அவ்வபோது அவர் இறந்து போவதாக எனக்கு கெட்ட கனவு வந்து தொலைக்கும். அப்பொழுதெல்லாம் மனம் திடுக்கிட்டு எழும். சில நாட்கள் எல்லாம் கவலைகள் மனதை கொத்தி பிடுங்கும். எங்களை எல்லாம் ஆரோக்கியமாக இருக்க சொல்லும் அவரை நினைக்கும்போது பல நேரங்களில் மனது கவலைப்படும். உடல்நலனை பற்றி அக்கறை இல்லாமல் போய்விட்டோமே என தோன்றும்.
அந்த சைக்கிள் பயணம் மட்டுமின்றி நடை பயணமும் அதிகம் மேற்கொண்டவர். ஓய்வு காலங்களில் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் என சொன்னாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாதவர். வாகனம் வாங்கி தருகிறோம், அதில் சென்று வாருங்கள் என வாகனமும் வாங்கி தந்த பின்னரும் விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர் என பல நேரங்களில் பேருந்தில் பயணம் புரிபவர். லண்டன், அமெரிக்கா என வருடம் இருமுறை பயணம் மேற்கொள்வார். வீட்டினில் தங்கவே மாட்டார். காலை எழுந்ததும் பூங்கா செல்கிறேன் என நடை பயணமும், மாலை வேறொரு பூங்கா செல்கிறேன் என நடை பயணமும் என அவரது வாழ்க்கை பயணங்களில் தான் மிகவும் அதிகமாக கழிந்து இருக்கிறது.
சில இடங்களுக்கு சென்றதுமே அலுப்பு தட்டி விடும் பலருக்கு. எப்படி அலைவது என அங்கலாய்ப்போர் பலர். எனது தந்தையை பார்த்தால் எப்படி இப்படி இவரால் அலைய முடிகிறது என ஆச்சர்யம் எழத்தான் செய்கிறது.
அப்படிப்பட்ட பயணம் மேற்கொண்ட அவரிடம் அவரது பயணம் பற்றி ஒருநாளேனும் ஒருநாள் அமர்ந்து கேட்டுவிடத்தான் ஆசை. நான் பல இடங்கள் பயணம் செய்தது உண்டு. அதை இணையதளங்களில் எழுதிய பின்னர் எழுத்தில் வைத்தது உண்டு. ஆனால் எத்தனை சுவராஸ்யமாக எழுதினேன் என எனக்கு தெரியாது. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த விதத்தில் ஒரு பயண கட்டுரை படித்தேன் சில ஆண்டுகள் முன்னர். அந்த பயண கட்டுரை படித்ததும், அந்த இடத்தினை சென்று பார்க்கும் ஆவல் மேலிட்டது. அடுத்த வருடமே பயணம் மேற்கொண்டோம்.
இவர் குழுமத்தில் முன்னர் எழுதினாலும், வலைப்பூவில் என்னைப் போலவே எழுதிய பல விசயங்களை சேகரித்து வருகிறார். இவரது எழுத்துகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவரது மற்ற கட்டுரைகளும் குறைந்தவைகள் அல்ல. நிச்சயம் பல விசயங்களை இவரது பதிவின் மூலம் தெளிந்து கொள்ளலாம்.
அவருக்கு சிறந்த பதிவர் விருது வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் வேறு யாருமல்ல மின்மினிபூச்சிகள் வலைப்பூவின் சொந்தக்காரரான ஷக்திப்ரபா. அவர் எழுதிய பயணக் கட்டுரை தங்கள் பார்வைக்கு.
திருவண்ணாமலை பற்றிய அற்புதமான பயணக் கட்டுரை.
1
2
3
4
5
Thursday, 11 November 2010
Wednesday, 10 November 2010
நுனிப்புல் பாகம் 2 நிறைவு பகுதி.
27. கனியும் குழந்தையும்
பாரதியின் அழுகைக்கு அர்த்தம் தெரியாமலேதான் இருந்தது. வாசனும் மாதவியும் பாரதியினை சமாதனப்படுத்தினார்கள். நாச்சியார் பாரதியினை அமரச் சொன்னார். மாதவி வாசனிடம் நாம் ஊரைச் சென்று பார்த்து வரலாம் என அழைத்தாள். வாசன் பாரதியை அங்கே தனியாக விட்டுச்செல்ல மனமில்லாமல் பாரதியையும் அழைத்தான். ஆனால் பாரதி தான் இங்கேயே இருப்பதாக கூறி அமர்ந்துவிட்டாள்.
இருவரும் சாத்திரம்பட்டியின் தெருக்களில் நடக்க ஆரம்பித்தார்கள். மிகவும் குறைந்தபட்ச வீடுகளே இருந்தன. தெருக்கள் மிகவும் சுத்தமாக இருந்தது. கிராமத்துக்கென ஒரே ஒரு கோவில் மட்டுமே இருந்தது. அந்த கோவிலுக்கு வைகுண்டநாதர் திருக்கோவில் என பெயரிட்டு இருந்தார்கள். ஊரைச் சுற்றி பெரிய வேலி அமைத்து இருந்தார்கள். வழியில் சென்றவர்கள் இவர்களைப் பார்த்து வெளியூரா எனக் கேட்டுவிட்டு பேசாமல் சென்றுவிட்டார்கள். மந்தையில் இப்போது இவர்களை வரவேற்ற ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவரிடம் வாசன் 'இந்த ஊருக்குப் பஸ் எல்லாம் வராதா' என்றான். 'பஸ் எல்லாம் எதுக்கு, நீங்க எப்படி வந்தீங்க' என்றார். 'ஊரில ரொம்ப பேரு இல்லையே' என்றான். 'தோட்டம் காடுகளில இருப்பாங்க' என்றார். 'படிக்கிறதுக்கு ஸ்கூல்' எனக் கேட்டபோது 'படிச்சி என்னத்த சாதிச்சிட்டீங்க, சம்பாத்தியத்தைப் பெரிசா நினைச்சி சாத்திரத்தை, கட்டுப்பாட்டை, ஒற்றுமையை, அன்பை தூக்கிப் போட்டுட்டீங்க' என்றார்.
'வெளியூருக்கு எல்லாம் போய் வேலைப் பார்க்கமாட்டாங்களா?' என்றான் வாசன். 'வெளியூர் போனா இரண்டு மூணு நாளுல திரும்பனும் இல்லைன்னா போனதோட அப்படியே இருக்கனும். திரும்பி வந்தா விரட்டி விட்டுருவோம். இந்த மண்ணு காப்பாத்தாதுனு போனவங்கதானே அப்படியே போகட்டும்!' என்றார். 'கல்யாணம் பண்ணிட்டுப் போறவங்க' என்றான் வாசன். 'அவங்க வரலாம், போகலாம்!' என்றவரிடம் இவ்வளவு கட்டுப்பாடா? என்றான் வாசன். 'நிறையவே கட்டுப்பாடு இருக்கு' என்றார். 'ம்ம் நீங்க இந்த ஊர்த்தலைவரா' என்றான். 'நான் ஊர்க்காவல் காரன். ஊர்த்தலைவரைப் பாருங்க உங்களுக்கு இன்னும் சிலது சொல்வாரு, அதை நான் சொல்லக்கூடாது, அவர் நான் எதுவும் சொன்னேனா எனக் கேட்டா நான் என்ன சொன்னேனோ அதை மட்டும் சொல்லுங்க' என்றார். மாதவி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவள் 'யாரும் தட்டிக்கேட்கறது இல்லையா' என்றார். 'தட்டி வைச்சிருவோம்' என்றார் அவர்.
கிராமத்தலைவர் கோதண்டராமன் வீட்டினைக் காட்டிவிட்டு சென்று விட்டார். கோதண்டராமனுக்கு வயது அறுபது இருக்கும். இந்த இருவரையும் பார்த்து 'உங்களை மாதிரி இந்த ஊரில யாராவது சேர்ந்து திரிஞ்சா அடுத்த நிமிசமே ஊரைவிட்டு விரட்டிருவோம்' என்றார். வாசன் அதற்கு 'இவள் என் தாய்மாமன் மகள்' என்றான். 'யாரா இருந்தா என்ன, இந்த ஊருக்குக் கட்டுப்பாடுனு ஒண்ணு இருக்கு. நீங்க இங்க தங்குறமாதிரி இருந்தா இப்பவே சொல்லிருரேன் பொழுது சாயுறதுக்குள்ள ஊரைக் காலி பண்ணுங்க' என்றார்.
பெருமாள் தாத்தாவின் முப்பாட்டன்கள் பற்றி வாசன் சொன்னான். 'அதான் அவர் இங்கே வந்திருந்தாரே, இங்கே தங்கவிடாம விரட்டி அடிச்சிட்டோமே' என்றார். மாதவி குறுக்கிட்டு 'அவராத்தான் போயிருக்கார்' என்றாள். மாதவியை கோதண்டராமன் முறைத்தார். தனக்கு வேலை இருக்கிறது என கிளம்பினார்.
நாச்சியார் வீட்டிற்கு வந்தார்கள். 'வாங்கப்பா சாப்பிட போகலாம்' என நாச்சியார் மூவரையும் அழைத்துக்கொண்டு அச்சுதன் வீட்டிற்குச் சென்றார். அச்சுதன் அமைதியாகவே இருந்தார். மூவரும் சாப்பிட்டுவிட்டு அனந்தன் வீட்டிற்குச் சென்றார்கள். 'திருமால் இனி ஊருக்குள்ளேயே வரமுடியாதா' என்றான் வாசன். 'யார் என்ன சொன்னாங்க' என்றார் அனந்தன். வாசன் சொன்னதைக் கேட்டு அனந்தன் சிரித்தார். 'திருமால் வரலாம் போகலாம்' என்றார். 'இந்த ஊர் ரொம்ப வித்தியாசமா இருக்கு' என்றான் வாசன். 'பழைய விசயங்களிலே ஊறிப்போனவங்க மட்டும்தான் இங்கே இருக்க முடியும். ரொம்ப பேரு ஊரைவிட்டுப் போயிட்டாங்க, கொஞ்ச குடும்பங்கள்தான் இங்கே இருக்கு' என்றார். 'குளத்தூருக்கு வாங்க' என சொன்னான் வாசன். 'காலம் வரட்டும்' என்றார் அனந்தன். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள்.
வழியில் செல்லும்போது பாரதி எதுவுமே பேசாமல் வந்தாள். மாதவி, நாச்சியார் எதுவும் சொன்னார்களா என கேட்டபோது ம்ம் சொன்னார்கள் என்றார். இவங்கதான் உங்க சொந்தக்காரங்க என்றாள் மாதவி. எப்படி சொந்தமாகும் மாதவி என்று மட்டும் கூறிவிட்டு மேற்கொண்டு பாரதி பேசவில்லை. வாசன் இதில் தலையிடவில்லை.
நாராயணபுரத்தில் தேவகியை அழைத்துக்கொண்டு குளத்தூர் வந்தடைந்தார்கள். தேவகி கிருஷ்ணதேவியைப் பார்க்க இயலவில்லை என கூறினாள். குளத்தூர் அடைந்ததும் பாரதி வீட்டில் சென்று பெரியவரிடம் பெரியப்பா என அழத்தொடங்கிவிட்டாள்.
பாரதி, நீ நாச்சியாரைப் பார்த்தியாம்மா? என்றார் பெரியவர். 'ஆமாம் பெரியப்பா, பார்த்தேன், உங்களைப் போலவே அவங்களும் கல்யாணமேப் பண்ணிக்காம வாழறாங்க'. 'ம்ம் கேள்விப்பட்டேன்மா'. 'பெரியப்பா நீங்க அவங்களைப் போய் பாருங்க' என்றாள் பாரதி. 'ம்ம்' என்றார் பெரியவர்.
மறுதினம் காலையில் வாசன் சோலையரசபுரத்தில் சோதிட சாஸ்திரி நம்பெருமாளைக் காணச் சென்றான், ஆனால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக சொன்னார்கள். வாசனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. அடுத்த தினங்களில் பாரதியும் கிருத்திகாவும் சென்னைக்கு கிளம்பினார்கள். பாரதி மரபியலில் கவனம் செலுத்த முடியாது போனாள். அதே வேளையில் ஒவ்வொரு நாளும் பெரியவரின் மனம் தனது கடந்தகாலத்தை அதிகமாகவே நினைக்க ஆரம்பித்தது. ஆனால் சாத்திரம்பட்டிக்குச் செல்ல மனம் இடம்தரவில்லை. பெரியவரை வாசன் ஒருமுறை அழைத்துப் பார்த்தான். ஆனால் முடியாது என கூறிவிட்டார். விடுமுறைக்கு வந்த மாதவியும் தேவகியும் விடுமுறை முடிந்து கிளம்பினார்கள். . பூங்கோதையும் ரோகிணியும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றார்கள்.
நாட்கள் ஓடின. ஊரில் நல்ல மழை பெய்து இருந்ததால் விவசாயம் மிகவும் செழிப்பாக இருந்தது. வாசன் வழக்கம்போல கதைகள் சொன்னான். சுமதி எப்போதும் போல் பள்ளிக்குச் சென்றாலும் திருவில்லிபுத்தூர் செல்வதையே தனது குறிக்கோளாய் கொண்டிருந்தாள். பூங்கோதைக்கு வளைகாப்பு குளத்தூரிலேதான் நடந்தது, இங்கேயேதான் இருப்பேன் என சொல்லியதன் காரணமாக அவளது பெற்றோர்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
ஒவ்வொரு நெகாதம் செடியிலும் மூன்றே மூன்று காய்கள் மட்டுமே வந்தது. பல நாட்கள் பின்னர் நெகாதம் செடியில் காய்கள் கனியாக மாறியது. பெரியவரின் மனம் மிகவும் சந்தோசமாக இருந்தது. கனிகளையெல்லாம் ஒருநாள் காலையில் பறித்தார்கள். கனிகள் பறிக்கப்பட்ட அன்று மாலையே அனைத்துச் செடிகளும் வாடிப்போயின. செடிகள் வாடியதைக் கண்டதும் வாசன் பெரும் கலக்கம் அடைந்தான். ஒரு கனியை உடைத்துப் பார்த்தபோது ஐந்து விதைகள் இருந்தது. மற்றொரு கனியை உடைத்துப் பார்த்தபோது எட்டு விதைகள் மட்டுமே இருந்தது. மற்றொரு கனியில் விதைகளே இல்லை. வாசன் அந்த கனிகளை யாரையும் சாப்பிட அனுமதிக்கவில்லை. வாசன் தானே முன்நின்று அனைத்து கனிகளிலிருந்தும் விதைகளை சேகரிப்பதாக பெரியவரிடம் சொன்னான்.
அன்றே மாலையோடு மாலையாக அனைத்துச் செடிகளும் நிலத்திலிருந்து பிடுங்கப்பட்டன. அவைகளை பத்திரமாக பெரியவரின் வீட்டில் சேர்த்தான் வாசன். செடிகள் வாடியது கண்டு ரோகிணி மிகவும் யோசிக்கலானாள். அப்பொழுதே ரோகிணி பெரியவரிடம் சென்று ஆய்வகம் குறித்து மீண்டும் பேசினாள். அந்த நிமிடமே பெரியவர் ஆய்வகத்தையும் ஆஸ்ரமத்தையும் வாசனிடம் கட்டச் சொல்லி உத்தரவு போட்டார். ஆஸ்ரமம் நாளாகட்டும் என்றான் வாசன். ஆனால் பெரியவர் உடனே செய்யுமாறு சொன்னார்.
அன்று இரவே வலியின் காரணமாக பூங்கோதை நாணல்கோட்டையில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். வாசன் கேசவனுடன் மருத்துவமனைக்குச் சென்று இருந்தான். உறவினர்களும் சென்று இருந்தார்கள். பூங்கோதையின் பெற்றோர்களுக்கு தகவல் சொல்லி இருந்தார்கள். செடியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்த கேசவன் மிகவும் பதட்டமாக காணப்பட்டார். மருத்துவர்கள் பூங்கோதையை ஒரு அறைக்குள் அவசர அவசரமாக தள்ளு கட்டிலில் வைத்து அழைத்துச் சென்றார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் குழந்தை அழும் சப்தம் கேட்டது. ஒரே ஒரு அழுகை சப்தம் மட்டுமே கேட்டது.

அறையின் வெளியில் இருந்தவர்கள் பதட்டமடைந்தார்கள். மாப்பிள்ளை என் பூங்கோதை என்று கேசவன் வாசனின் தோள்மேல் சாய்ந்தான். வாசன் தைரியம் சொன்னான். மருத்துவர் அறையினில் இருந்து வெளியில் வந்தார்.
இவர்கள் கேட்கும் முன்னரே சுகப்பிரசவம்தான், இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கு, தாயும் குழந்தைகளும் நலமாக இருக்காங்க, கொஞ்ச நேரத்துக்குப்பறம் நீங்கப் போய் பாருங்க என்று சொல்லிவிட்டு நடந்தார். கேசவன் மனம் சந்தோசத்தில் துள்ளியது. செடி தந்த பயம் தற்போது அறவே நீங்கியது. அனைவரும் அளவிலா சந்தோசம் அடைந்தார்கள்.
என்ன குழந்தைகளுனு சொல்லாம போய்ட்டாரே என அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு நினைவு வந்தது. அதற்குப்பெண் வந்த நர்ஸ் உள்ளே வாங்க இரட்டைப் பையன்க என சொல்லி அழைத்தார். மொத்தமாக அனைவரும் செல்லாமல் ஒருசிலர் மட்டுமே சென்றனர்.
பூங்கோதை என கேசவன் பூங்கோதையின் நெற்றியைத் தடவினான். சிரித்த முகத்துடன் கேசவனைப் பூங்கோதைப் பார்த்தாள். வயதான பாட்டி ஒருவர் நர்ஸிடம் ஒரே ஒரு அழுகை சத்தம்தான் கேட்டது எனக்கேட்டார். ம்ம் முதல்ல வந்த பையன் சிரிச்சமுகத்தோட வந்தான் அதோ அதுதான் முத பையன். நாங்க தட்டி தட்டி பார்த்தோம் அழலை. இரண்டாவது பையன்தான் அழுதான் அதுதான் இரண்டாவது பையன். அழனுமே எனப் பாட்டி முதல் குழந்தையைப் பார்த்தார். சிரித்த முகத்துடனே இருந்தது. பாட்டி குழந்தையின் கையை கிள்ளினார். ங என சத்தம் எழுப்பிவிட்டு மீண்டும் சிரித்தமுகம் காட்டியது அந்த குழந்தை. பாட்டி கையெடுத்து வணங்கினார்.
வாசன் குழந்தையைப் பார்க்க வந்தான். முதல் குழந்தை கண்கள் விழித்துப் பார்த்தது. தீட்சண்யமான கண்கள். பெருமாள் தாத்தாவோ என மனம் சொல்லியது. குழந்தை கண்கள் மூடி திறந்தது. வாசன் கைகள் தொட்டு வணங்கினான். பக்கத்து குழந்தையைப் பார்த்தான். கண்கள் விழித்துப் பார்த்தது. தீட்சண்யமான கண்கள். வாசன் மனம் நடுங்கியது. இரண்டு குழந்தைகளில் அத்தனை வித்தியாசம் பார்க்க இயலவில்லை. ஒரே மாதிரியாகவே இருந்தது. குழந்தையின் கைகள் தொட்டான், கண்கள் மூடி திறந்தது. அம்மா என சத்தம் போட வேண்டும் போலிருந்தது வாசனுக்கு.
அந்த அறையைவிட்டு வெளியேறினான் வாசன். உடல் எல்லாம் வியர்த்துக் கொட்டத் தொடங்கியது. அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்தான். கேசவனும் மற்றவர்களும் ஊருக்குக் கிளம்பினார்கள். பூங்கோதைக்குத் துணையாய் இருவர் மட்டும் தங்கினார்கள். வாசன் அவர்களுடன் வீடு வந்து சேர்ந்தான்.
விஷ்ணுப்பிரியனின் திட்டம் கேசவனுக்கும் பூங்கோதைக்கும் குழந்தையை உண்டாக்க வைப்பது. மாதவி வரைந்த படத்தை வைத்து சுபா அப்படித்தானே சொன்னார். திருமலையில் திருமால் சிரித்ததன் அர்த்தம், பெருமாள் தாத்தாவின் ஆசை வாசனின் மனதை என்னவோ செய்தது. ஒரே பெருமாள் உருவாக்க முனைந்ததில் இருவர் எப்படி உருவானார்கள் என வாசன் நினைக்கும்போதே மயக்கம் வரும்போல் இருந்தது.
விஷ்ணுப்பிரியன் தனக்குச் சொல்லித்தந்த மரபியல் தத்துவம் ஞாபகத்துக்கு வந்தது. கருவானது உருவானபின்னர் அந்த கரு சிலவேளையில் இரண்டாக பிரிந்து இரண்டு கருக்களாக உருவாகும், அப்படி உருவாகினால் அது ஒரேமாதிரியான இரட்டைக்குழந்தைகளாக ஒரே மூலக்கருவிலிருந்து உருவாகும் எனவும், சில நேரங்களில் ஒரு விந்து ஒரு அண்ட செல்லுடனும், மற்றொரு விந்து மற்றொரு அண்ட செல்லுடன் இணைந்து இரண்டு வெவ்வேறு கருக்களாக உருவாகும்போது இரட்டைக்குழந்தைகள் வெவ்வேறு மூலக்கருவிலிருந்து பிறக்கும். அப்படியெனில் விஷ்ணுப்பிரியன் வைத்த ஒரே கரு இரண்டாகப் பிரிந்ததா? என எண்ணினான் வாசன். எந்த ஒரு பிரச்சினையில்லாமல் இரண்டு குழந்தைகளும் நன்றாக வளரவேண்டும் என வேண்டிக்கொண்டான்.
மருத்துவமனையில் இருந்து தாயும் சேய்களும் ஊருக்கு வந்தார்கள். திருமலையில் இருந்தும் பலர் வந்திருந்தனர். விஷ்ணுப்பிரியனும் வந்திருந்தார்.
குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா வைத்தனர். குழந்தைகள் பிறந்தபின்னர் பூங்கோதை வாசனிடம் பெயர் கேட்டிருந்தாள். வாசன் முதல் குழந்தைக்கு அஷ்டவதன் எனவும் இரண்டாவது குழந்தைக்கு ஐவரதன் எனவும் பெயரிடச் சொன்னான். அதையே மனதில் வைத்துக்கொண்ட பூங்கோதை கேசவனிடம் சொல்ல கேசவனும் சரியென சொன்னான். அந்த பெயரையே குழந்தைகளுக்கு வைத்தார்கள்.
அந்தவாரமே நெகாதம் விதைகளை நிலத்தில் விதைத்தார்கள். ரோகிணி நெகாதம் செடியினை வெட்டி நடச்சொன்னாள். அந்த பணியும் நடந்தேறியது. ஆய்வகம் கட்ட வேண்டி ஆயத்தங்கள் நடந்தது. ஆஸ்ரம பணியும் தொடங்கியது. மாதங்கள் ஓடின. வாசனால் ஊரைவிட்டு எங்குமே செல்ல இயலவில்லை. திருமால் சென்னைக்கு அழைத்து இருந்ததற்கு கூட செல்ல இயலாமல் இருந்தது. பெரியவர் சாத்திரம்பட்டி செல்லாமல் தட்டி கழித்தார். சாத்திரம்பட்டியிலிருந்து எவருமே வரவில்லை. குழந்தைகள் சாதாரண குழந்தைகளாகவே நன்றாக வளர்ந்தனர். பூங்கோதை பெருமகிழ்ச்சியில் இருந்தாள்.
ஆய்வகமும் ஆஸ்ரமமும் கட்டப்பட்டது. நெகாதம் விதைகள் மீண்டும் செடிகளாகி காய்கள் வரத் தொடங்கி இருந்தது. காய்கள் வர விதை எடுத்தக் காலகட்டமே நட்டுவைக்கப்பட்ட செடிகளும் எடுத்துக்கொண்டது குறித்து ரோகிணி ஆச்சர்யம் கொண்டாள்.
குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது. இன்னும் மூன்று மாதத்தில் நெகாதம் செடியில் கனிகள் எல்லாம் வரும். மேலும் விதைகள் அதிகமாகவே கிடைக்கும். இம்முறை விநாயகம் வாங்கிய நிலங்கள் அனைத்திலும் நெகாதம் செடியை வளர்க்கலாம். அதனால் மற்ற விவசாயத்தை ஓரிரு மாதங்களுக்குள் முடித்துக்கொள்வதாக பெரியவர் சொன்னார். வளரும் இந்த செடியில் ஒரு சிறுபகுதியை ஆராய்ச்சிக்காக ரோகிணி எடுத்துக்கொள்ள பெரியவர் அனுமதி தந்து இருந்தார்.
மாதவி மூளை பற்றிய ஆராய்ச்சிக்காக சென்னையில் இருக்கும் திறமை வாய்ந்த மருத்துவர் ஒருவரின் தொடர்பினை பெற்றாள். பாரதி மரபியல் குறித்து மீண்டும் எழுதத் தொடங்கி இருந்தாள். அடுத்த வருடத்தில் இவர்களது மருத்துவபடிப்பு முடிந்துவிடும். இவர்கள் இருவரும் தங்களது விருப்பத்தில் வெற்றி பெறுவார்களா என்பது பின்னரே தெரியும்.
ஆஸ்ரமத்தில் குழந்தைகள் வந்து இணைவார்களா என்பதும், ரோகிணியின் ஆய்வு வெற்றிபெறுமா என்பது பின்னரே தெரியும். குளத்தூர் பெரிய எதிர்பார்ப்பை தனக்குள் மிக ஆழமாகவே விதைக்கத் தொடங்கியது.
(வளரும்)
நுனிப்புல் பாகம் - 3 இனி ஆக்ஸ்ட் 2012 ல் தொடரும்.

Tuesday, 9 November 2010
கம்யூனிசமும் கருவாடும் - 6
கம்யூனிசமும் கருவாடும் 1
கம்யூனிசமும் கருவாடும் 2
கம்யூனிசமும் கருவாடும் 3
கம்யூனிசமும் கருவாடும் 4
கம்யூனிசமும் கருவாடும் 5
ஜெர்மன் மொழி கற்று கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அதிகம் உண்டு. ஜெர்மன் மொழியில் பல விசேசங்கள் உண்டு என எனது கற்பனை அவ்வப்போது சொல்லிக்கொள்ளும். இப்படி ஒன்றை குறித்த கற்பனையானது உண்மைதனை ஒழித்துவிடும் அளவுக்கு வீரியம் மிக்கது என்பதை எவர் அறிவர்? ஆனால் கற்பனைகளில் உலகம் சஞ்சாரம் செய்வது உலகம் தோன்றிய முதல் நாளில் இருந்து இருந்து கொண்டே இருக்கிறது. உண்மை என ஒரு விசயம் குறிப்பிடப்பட்டாலும் கற்பனை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
கம்யூனிசம் சித்தாந்தம் முதலில் ஜெர்மன் மொழியில் தான் வெளியிடப்பட்டது. மொழி பெயர்ப்பு என வரும்போது மூல நூலின் ஜீவன் தொலைந்து விடுவதாகவே கருதுவேன். இதன் காரணமாக மொழி பெயர்ப்பு நூல்களை படிக்கும் போது அத்தனை சுவாரஸ்யம் என்னிடம் இருப்பதில்லை. மேலும் ஒரு விசயத்தை அப்படியே மொழி பெயர்ப்பதை காட்டிலும் சொல்லப்பட்ட விசயத்தை புரிந்து கொண்டு அவரவர் சிந்தனையின் பொருட்டு எழுதும் விசயங்கள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை இந்த கம்யூனிச சித்தாந்தத்தில் கைகொள்வது சரியாகுமா என தெரியாது எனினும் மொழிபெயர்ப்பு என்கிற அஸ்திரத்தின் மூலம் மார்க்சும், இங்கெல்சும் என்ன சொல்ல வந்தார்கள் என்பதை திரித்து விடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருக்கிறது. ஏதேனும் இந்த கட்டுரையில் தவறு நீங்கள் கண்டால் அது எனது தவறுதானே அன்றி நிச்சயம் மார்க்ஸ் மற்றும் இங்கேல்ஸ் அவர்களின் தவறு அல்ல என்பதை தெளிவுபடுத்தி கொள்கிறேன்.
முகவுரை
பொதுவாகவே முகவுரை எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் சொல்ல வரும் விசயத்தின் முழு சாராம்சத்தையும் சில வரிகளில் சொல்லி முடித்து விட வேண்டும். இப்படிப்பட்ட கட்டுப்பாடு தேவையில்லை எனினும் முகவுரை ஒரு குறிக்கோளினை தெள்ள தெளிவாக புரியும் வண்ணம் அமைந்துவிடுதல் மிகவும் சிறப்பு. அப்படித்தான் இங்க்கேல்சும், மார்க்சும் தொடங்கி வைத்து இருக்கிறார்கள்.
'ஒரு பூதம் மொத்த ஐரோப்பாவையும் பயமுறுத்தி கொண்டிருக்கிறது. அது கம்யூனிசம் எனும் பூதம். இந்த பூதத்தை முறியடித்து விட பழைய ஐரோப்பா மொத்த சக்திகளை தெய்வீக உடன்பாடு என சேர்ந்துள்ளது. அவை போப், ட்சார் , மேட்டேர்நிச், கிசாட், பிரான்சு பழமைவாதிகள், ஜெர்மன் காவல் மற்றும் உளவாளிகள்.'
பதவியில் இருக்க கூடியவர்கள் அவர்களுக்கு எதிர் அணியில் இருப்பவர்களை கம்யூனிஸ்ட்கள் என குற்றம் சுமத்தாமல் இருப்பது எதற்கு? கம்யூனிஸ்ட்கள் குற்றவாளிகள் என சொல்வதையும், கம்யூனிஸ்ட்களின் எதிரிகளை எதிர்க்கும் நிலை எதிர் அணியில் இல்லாமலிருப்பது எதற்கு?.
இந்த விசயங்களிலிருந்து , இரண்டு விசயங்கள் புலப்படுகிறது
1. கம்யூனிசம் ஒரு சக்தி என்பதை அனைத்து ஐரோப்பிய சக்திகளும் அங்கீகரித்து உள்ளது
2. கம்யூனிஸ்ட்கள் தங்களது எண்ணங்களை, குறிக்கோளினை, செயல்பாடுகளை உலகின் கவனத்திற்கு கொண்டு வருவது இதுதான் சிறந்த நேரம். சின்னஞ்சிறு கதை கொண்ட கம்யூனிச பூதத்தின் சித்தாந்தம் அந்த அமைப்பு பற்றி சந்திக்கும் தருணம் இது'
யார் இந்த ட்சார், மேட்டேர்நிச், கிசாட் .
ட்சார் எனப்படுவர் கிறிஸ்துவம் அல்லாத ஆளுமைவாதிகள். இவர்கள் பல்கேரியா, போலந்து, ரஷ்யா, செர்பியா போன்ற நாடுகளில் அரசு அமைத்து கொண்டு ராஜ பரம்பரையாக வாழ்பவர்கள். இவர்கள் கம்யூனிசத்துக்கு கட்டாயம் எதிரியாகத்தானே இருக்க இயலும்! இந்த வார்த்தை கூட சீசர் எனப்படும் பேரரசர் பெயரிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மேட்டேர்நிச் என்பவர் ஆஸ்திரியாவில் வாழ்ந்த ஒரு அரசர். அவர் ஒரு ராஜதந்திரி என அழைக்கப்பட்டவர். நெப்போலியனுடன் இணக்கம் கொண்டிருந்தவர். இவர் கம்யூனிசத்துக்கு எதிரானவர் என குறிப்பிட காரணம் இவரின் ராஜ தந்திர செயல்கள். ஆனால் இந்த கம்யூனிச சித்தாந்தம் வெளியிடப்பட்ட ஆண்டு ஆஸ்திரிய போராளிகளால் அரசவையினை துறக்க வேண்டி வந்தது.
கிசாட் பிரான்சு நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தவர். மிகவும் திறமை வாயந்தவர் எனினும் இவரது செயல்பாடுகள் மக்களின் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கி இருந்தது.
இந்த முகவுரையில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது என்னவெனில் அரச பரம்பரை மற்றும் தனி மனித ஆட்சி என்பது முற்றிலும் ஒழித்திட கம்யூனிசம் வழி செய்யும் என்பதுதான்.
ஆனால் நடந்தது என்ன? கம்யூனிசம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடத்தினார்கள் ஸ்டாலின் மற்றும் மாவோ ஜேடாங் போன்ற மாபெரும் தலைவர்கள் என போற்றப்படுபவர்கள். ஸ்டாலின் என்பவரால் கம்யூனிசம் நிச்சயமாக ஒரு பெரும் சக்தி என நினைத்து கொண்டிருந்தோருக்கு அவரது அடக்குமுறை செயல்பாட்டினை அப்படியே செயல்படுத்துவது என்பது குதிரை கொம்பாகத்தான் இருந்தது. ஸ்டாலின் இல்லையென்றால் ரஷ்யா சின்னாபின்னமாகி என்றோ போயிருக்கும் என்போர் உளர்.
உணவுக்கே தட்டழியும் மனிதர்களிடம் உணவுக்கு வழி செய்ய காட்டப்படும் வழிகள் எதுவாக இருப்பினும் ஏற்றுக்கொண்டு செய்வார்கள். அடிமைகளாக வாழ பழகி கொண்ட மக்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் அன்றைய ரஷ்யா இருந்தது. அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஸ்டாலின். மாபெரும் வெற்றி பெற்ற ஸ்டாலினை பார்த்து சூடு போட்ட நாடுகள் பல உண்டு. ஆனால் என்னவொரு துரதிர்ஷ்டம், தழும்புகள் மட்டுமே பிறநாடுகளுக்கு மிச்சம். அந்த தழும்பு இப்போது ரஷ்யாவுக்கும் சொந்தம் எனும்போது வருத்தம் மேலிடத்தான் செய்கிறது.
அடுத்து முதல் அத்தியாயம் தொழிலாளிகளும், முதலாளிகளும். மார்க்சும், இங்க்கேல்சும் கம்யூனிசம் எதற்கு அவசியம் என்பதற்கான விசயங்களை அலசி ஆராய்ந்த பின்னர் எழுதியதாக இருக்கும். கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படை விசயமாகவே இந்த அத்தியாயம் பார்க்கப்படுகிறது.
(தொடரும்)

Subscribe to:
Posts (Atom)
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...
-
அப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...