ஒழுக்கத்துடன் வாழ்வதுதான் சிறந்த நாகரிகம். ஆஹா, எத்தனை அட்டகாசமான வாக்கியம்.
எது எது எல்லாம் ஒழுக்கம்? இந்த ஒழுக்கம் என்பதற்கான வரையறை எது? எவரேனும் தெரிந்தால் பட்டியல் இடுங்கள். அந்த பட்டியலை படித்து தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது.
அது இருக்கட்டும், இந்த படத்துக்கு வருவோம். ஒழுக்கத்தை வலியுறுத்துவதற்கு ஒழுங்கீனத்தை அல்லவா காட்ட வேண்டி இருக்கிறது!
ஒழுக்கத்தை பற்றி சொல்ல ஒழுக்கத்தின் வலிமையை அல்லவா படமாக்கி இருக்க வேண்டும். ஒழுக்கம் தவறி போன விசயம் சொன்ன சிந்து சமவெளி! இந்த படத்தை எழுதுவதன் மூலம் ஒழுக்கம் தவறி போன எனது எழுத்து.
இந்த திரைப்படம் சகித்து கொள்ள முடியாத மன வலிதனை தந்து சென்றது. இது ஒரு ரஷ்ய நாவலின் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாகவும் நூறு சதவிகிதம் கற்பனை அல்ல என சொல்லும்போதே உலகில் இத்தகைய கொடுமைகள் பரவலாக நடந்து கொண்டிருப்பதை நமக்கு காட்டுவதற்குதான் என புரிந்து கொள்ள முடிகிறது. மருமகள்-மாமன் உறவு கொச்சைபடுத்தபட்டு இருக்கிறது என்பதை விட உடல் இச்சைக்கு அடிமையாகி போன இரண்டு மனிதர்களின் அலங்கோல வாழ்வு தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. காமம் மட்டுமா ஒழுக்கம், ஒழுங்கீனத்தை சுட்டி காட்டும் கருவி?
ஊர் உலகில் அரசால் புரசலாக நடக்கும் விசயங்களை அப்பட்டமாக படத்தில் காட்டும்போது இயக்குநர்களின் தைரியம் வெகுவாக பாராட்டபடுகிறது. உதாரணமாக பருத்தி வீரன் படத்தை சொல்லலாம். ஒரு கிராமத்தை அப்படியே கொண்டு வந்ததாக சொல்லி கொண்டார்கள். அதுவும் ஒழுக்கம் கெட்ட விசயத்தை சொன்ன ஒரு படம் தான்.
இப்பொழுது ஊர் உலகில் நடக்கிறது என்பதற்காக முழு நிர்வாண படங்களை எடுத்தால் எதற்கு அதற்கு தடை விதிக்க வேண்டும்? அது ஒழுங்கீனங்களை தானே சுட்டி காட்டுகிறது! என்ன வரையறை வைத்து கொண்டு எப்படி வாழ்க்கை அமைகிறது? விசித்திர எண்ணம். வக்கிர எண்ணம். வித்தியாச உலகம்.
இது மட்டுமல்ல. இலக்கியங்கள், காவியங்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்ட விசயங்களின் அடிப்படையில் தான் பிரபலமாகி இருக்கிறது. காலம் காலமாக நாம் செய்து கொண்டு வரும் தவறு இதுதான். தவறு செய்யாத மனிதனே இருக்க முடியாது என்கிற கோட்பாடுதனை வைத்து கொண்டு தவறு செய்யும்போதெல்லாம், தவறி போகும் போதெல்லாம் நான் மட்டுமா செய்கிறேன், இந்த உலகில் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள் தெரியுமா என சப்பை கட்டு கட்டும் மனிதர்கள் மிகவும் அதிகமாகவே இருக்கிறார்கள், தென்படுகிறார்கள்.
படம் தொடங்குகிறது. சிறிது நேரத்திற்கெல்லாம் கதையை யூகித்து கொள்ள முடிகிறது. எப்படி யூகம் செய்ய முடிந்தது. இதைத்தான் பல படங்களில் சின்ன சின்ன காட்சிகளாக வைப்பார்கள். ஆனால் இதுவே முழு படமாகி வந்து இருக்கிறது.
தங்கள் பாதையில், கொள்கையில் இருந்து தவறி போனபின்னர், தவறியே வாழ்பவர்கள் அவ்வாறு வாழும் போது குற்ற உணர்வுடன் வாழ்ந்து இருந்தால் மட்டுமே அதை தவறு என உணர்வார்கள். இல்லையெனில் மீண்டும் மீண்டும் தவறு புரிந்து கொண்டேதான் இருப்பார்கள். தவறுகளுக்கு இடையில் சிறிய இடைவெளிகள் இருக்கலாம். இதனால்தான் தவறு செய்பவர்களை மொத்தமாக அழித்துவிட வேண்டும், அல்லது அவர்களாகவே அழித்து கொள்ள வேண்டும். இதில் கருணை, தாட்சண்யம் எல்லாம் பார்த்து கொண்டிருக்க கூடாது. தப்பு என தெரிந்து செய்பவர்கள்தான் இவ்வுலகில் அதிகம் இருக்கிறார்கள்.
இந்த இரண்டு விசயத்தை படத்தில் வைத்து இருக்கிறார்கள். கதையில் வரும் மருமகள் பாத்திரம் குற்ற உணர்வுடன் இருந்தாரா என கண்டு கொள்ள இயலவில்லை. அந்த மருமகள் பாத்திரம் ஒரு கதையினை படித்த போது தனது தவறு என எப்படி தெளிந்து கொள்ள முடிகிறது என்பதுதான் பல மனிதர்கள் செய்யும் சராசரி தவறு. பிறர் சுட்டிக்காட்டும்போது தவறாக தெரியாத விசயம் தவறு என தெரிகிறதா? அல்லது இப்படி வாழ்ந்துவிட்டோமே என வேதனை உயிரை பிடுங்கி எரிகிறதா? பலருடைய வாழ்க்கையில் எதுவுமே நடக்காத மாதிரிதான் செல்கிறது.
தொடரும் பரிதாபங்கள். தொடரும் கொலைகள். படித்தவர், படிக்காதவர், அறிவில் சிறந்தவர் என அனைவரும் தடுமாறும் இந்த காமம் அத்தனை கொடுமையானதா! ஆமாம் என்றுதான் இலக்கியங்கள், பலரது வாழ்க்கை, பலரது படைப்புகள் சொல்லி செல்கின்றன.
ஒழுக்க கேடான விசயங்களில் இருந்து தப்பித்து வாழ தெரிந்தால் நாகரிகம் மிகவும் சிறப்பு உடையதாக இருக்கும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.
எது எதுவெல்லாம் ஒழுக்கம்? பட்டியலை படிக்க ஆசையாகத்தான் இருக்கிறது.
நன்றி சாமி.
Saturday, 16 October 2010
Friday, 15 October 2010
கவிதா அவர்களின் பெண்ணிய ஆணாதிக்க சிந்தனை
அழகிய கட்டுரையை எழுதியமைக்கு பாராட்டுகளுடன்.
முழு விசயத்தையும் எழுதி மறுமொழி அனுப்பினேன். மிகவும் பெரிதான மறுமொழி என கூகிள் மறுத்துவிட்டது. எனவே அதை இங்கே வெளியிடுகிறேன்.
கவிதா அவர்களின் கட்டுரையில் (முழு கட்டுரை படிக்க) நான் நினைக்கும் முரண்பாடுகள்.
௧. //அவளே முதல். அவளே முடிவும்.//
இந்த வார்த்தைகள் மூலம் கட்டுரையின் மொத்த சாரமும் தொலைந்து விடுவதாக கருதுகிறேன்.
௨. //ஒரு பெண் நினைத்தால் நல்லவனை கெட்டவன் ஆக்கலாம், கெட்டவனை நல்லவனாக ஆக்க முடியும். அது தான் பெண்ணிற்குண்டான தனித்தன்மை//
இதுவும் கூட ஒரு விதத்தில் மிகவும் பொய்யான பிரச்சாரம். ஒரு ஆண் கூட இதை எளிதாக செய்துவிட முடியும். எத்தனை மனைவிமார்கள் கணவனை புரிந்து கொண்டு வாழ்க்கையை திருத்தி அமைத்து இருக்கிறார்கள் என்பதை ஒரு படம் எடுத்துதான் சொல்ல வேண்டும்.
௩ //பெண் என்பவள் எப்படி ஆணால் ஆதிக்கம் செய்ய படுகிறாளோ அதே போன்று, ஆணும் பெண்ணால் ஆதிக்கம் செய்ய படுகிறான் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை//
ஆதிக்கம் என்பதற்கும், அன்பின் வெளிப்பாடு என்பதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. பொதுவாக ஒரு விசயத்தை சொல்லும்போது இது போன்ற 'இதுதான் முடிவு' என்பது போன்ற வாசகங்கள் பெரும் சறுக்கலை ஏற்படுத்தி விடுகின்றன. பல வேளைகளில் வாழ்வில் அன்பின் வெளிப்பாடு என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். எங்கிருந்து ஆதிக்கம் வந்தது? புரிதலை தொலைத்து நிற்கும் கூட்டங்கள் நாம்.
௪ //ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணுக்கு எதிரி.//
இதுவும் ஒரு போலியான பார்வைதான். உலகில் இந்த விசயம் பரவலாகவே பேசப்படுகிறது. ஒரு பெண் மட்டுமல்ல, ஆணும சரி. அவரவர் அவரவருக்கு எதிரி. இதில் எந்த பாகுபாடும் இல்லை.
௫. //பெண்ணிற்கு தேவையானவற்றை அறிந்து செய்பவன், அல்லது செய்ய விடுபவன் ஆணாக இருக்கிறான்.//
இங்கே பெண்ணுக்கு எனப்படும் சுதந்திரமும், ஆணுக்கு எனப்படும் சுதந்திரமும் தொலைந்து விடுகிறது. ஒரு ஆண் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் காரணிகள் வாழும் சூழல் பழக்க வழக்கங்கள் எனும்போது சில முரண்பாடுகள் எழும்.
௬. //குறிப்பாக மனைவியை பற்றி பேச விரும்புவதில்லை. முடிந்த அளவு தானே சமாளிக்கிறார்கள்.//
இதுவும் ஒரு பொது காரணி தான். எனக்கு தெரிந்த பலர் அவரவர் மனைவியை பற்றி சொல்வது உண்டு. உங்கள் விசயம், பார்த்து கொள்ளுங்கள் என்பதுதான் எனது பதில்.
ஒரு கணவன் மனைவி என்பவர்கள் அவர்களுக்குள் இருக்கும் பிணக்குகளை அவர்களே தீர்த்து கொள்ளும் வலிமை பெற்று இருக்க வேண்டும். இதை யார் வலியுறுத்துவது? தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வெளி காரணிகள் அதிகம்.
கவிதா,
//ஒவ்வொரு ஆணையும் தனியாக விசாரித்து... எனும் வரியில் இருந்து
பரிதாப நிலையில் கூட இருக்கிறார்கள். முடிக்கும் வரை//
இதற்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ள முயற்சி செய்து இருக்கீர்களா?
இதற்கு ஒரு காரணம் நம்பகத்தன்மை. மறைத்து செயலாற்றுவது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது. இந்த ஆண்கள் படும் பாட்டிற்கு பெண்கள் காரணம் அல்ல, ஆண்களே காரணம். வெளிப்படையாக வாழும் எந்த ஆணும் சரி, பெண்ணும் சரி பிரச்சினைக்கு உட்படமாட்டார்கள் எனக் கொள்ளலாம். வேசம் கட்டும்போதுதான் வாழ்க்கை நாசமாகிறது.
௬. //பெண்ணின் புலம்பல்கள் பெண்ணியமாகிறது, ஆணின் அமைதி ஆணாதிக்கமாகிறது என்று தான் என் புரிதலாக இருக்கிறது.//
இது சரியில்லாத புரிதல் என்றே கருதுகிறேன். நான் பெண்ணியம் பற்றியோ, ஆணாதிக்கம் பற்றியோ எழுதாதற்கு காரணம் ஒன்று தான். உயிரினங்கள் தன்னை நிலை நிறுத்தி கொள்ள எது வேண்டுமெனினும் செய்து தொலைக்கும். இதில் பாகுபாடு பார்ப்பது எவ்வாறு.
சற்று சிந்தித்து பாருங்கள்.
பெண் எல்லா நேரத்திலுமா புலம்பி கொண்டே இருக்கிறார்.
ஆண் எல்லா நேரத்திலுமா அமைதியாக இருக்கிறார்.
௭. //பெண்ணால் சட்டென்று முடியாத பல விஷயங்கள் ஆணால் முடியும்.//
நீச்சல் குளம் விசயம் எனக்கு மிகவும் புதிராக இருந்தது. முதலில் உயிரை காப்பாற்ற குதித்தது ஒரு பெண் தானே!
பெண்ணாலும் முடியும் என்பது தொலைந்து போன நம்பிக்கையா?
இதை இதை பெண்கள் செய்தல் கூடாது என வரையறை வைத்து கொள்ள சொன்னது யார்?
எனக்கு தெரிந்த பெண்கள் பலர் சாமர்த்தியசாலிகள், தைரியசாலிகள்.
--------------------------------
நான் பல விசயங்களை இந்த கட்டுரையில் ரசித்தேன். குறிப்பாக
//ஆண்களின் ஆதிக்கம் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது. பெண்களின் ஆதிக்கம் அவர்களின் இயல்பு//
//பெண்ணியம் பேசியும் ஆணாதிக்கவாதி என பறைசாற்றிக்கொண்டும் அவரவர் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாமல், இருவரும் அவரவர் வேலையை ஆண் பெண் ஈகோ இல்லாமல் செய்து வந்தாலே பிரச்சனை வராது//
இருவரும் என்பதில் அனைவரும் என்று சொல்லி இருக்கலாம் தான். :)
நன்றி கவிதா.
கடைசியாக
முரண்பட வேண்டும் என எண்ணினால் மட்டுமே எந்த ஒரு விசயத்திலும் முரண்பட்டு கொள்ள முடியும். ஏற்று கொள்ளும் பக்குவம் வரும்போது, எதுவுமே செய்ய இயலாது என்கிற பொது எல்லாமே சரி என்றுதான் போக தோன்றும். வாழ்வில் நாம் இரு நிலைகளிலும் வாழ்ந்து விடுகிறோம் என்பதுதான் கொடுமை.

Thursday, 14 October 2010
எனது ஆங்கில நாவலுக்கான கதைக் கரு.
எத்தனை வருட கனவு? எத்தனை வருட சிந்தனை? தலைப்பு மட்டுமே கையில் இருந்தது? எதை பற்றி எழுத?
எப்பொழுது பார்த்தாலும் இறைவன் பற்றிய சிந்தனை, அன்பு பற்றிய ஆதிக்க சிந்தனை, உலகில் கஷ்டபடும் கோடானுகோடி மக்களை பற்றிய சிந்தனை.
இதுவரை என்னால் எழுதப்பட்ட கதைகள் எல்லாம் அன்பை வலியுறுத்தும் வண்ணமே அமைந்து இருந்தது.
ஆங்கில நாவலுக்கு தலைப்பு வைத்த பின்னர் கூட இறைவன் பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. தலைப்பை பிறரிடம் சொல்லும்போதெல்லாம் 'எங்களுக்கு தெரியும் நீ எதைப் பற்றி எழுதப் போகிறாய் என' என்றே சொன்னார்கள். இறைவன் பற்றிய சிந்தனையை ஆங்கில நாவலிலும் நான் எழுதுவேன் என்பதை எப்படி அவர்கள் தீர்மானித்தார்கள் என தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்த மொழி அதுதான். இறை எனும் அன்பு மொழி.
இறைவனை விட்டு வெளியில் வர வேண்டும். என்னால் அத்தனை எளிதாக வெளி வர இயலாத சூழல். அன்பை பற்றிய எண்ணம் தனை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும். எல்லோரும் அன்பாகத்தான் இருக்கிறார்கள், எனது பார்வை மட்டுமே முட்டாள்தனமாக இருக்கிறது எனும் எண்ணம் என்னுள் நிகழ வேண்டும். இப்படி பல நாட்கள் சிந்தித்த போதெல்லாம் எதுவுமே தோன்றுவதில்லை. கதை கரு இல்லாமல் நான் இனிமேல் தமிழ் நாவலோ ஆங்கில நாவலோ எழுதுவதில்லை என்பதை முடிவு செய்து வைத்திருந்தேன். அதனால்தான் தமிழ் நாவல் ஒன்று 'புதைக்க வா, எரிக்க வா' இன்னும் காத்து கொண்டிருக்கிறது. கதை கரு தயாராக இருந்தாலும் ஆங்கில நாவல் தான் அடுத்த இலக்கு.
இந்த ஆங்கில நாவலுக்கு இத்தனை சிந்தித்தேன் என நினைக்கும்போதுதான் எனது நுனிப்புல் நாவல் மூன்றாம் பாகத்துக்கான அடிப்படை கருவாகவும் வைத்து கொள்ளும் சாத்தியம் இருந்தது என கண்டு கொண்டேன். இந்த சிந்தனை நேற்றுதான் எழுந்ததா? பல நாட்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த எண்ணம் திடீரென வெளி வந்ததா? நான் என்ன எழுத நினைத்தேன் என எழுதி முடித்தால் மட்டுமே தெரியும் . ஒரு சின்ன விசயத்தை வைத்து அதை சுற்றி பாத்திரங்கள் வரைவதுதான் நான் கற்றுக் கொண்ட எழுத்து முறை. இப்படித்தான் பல மெகா தொடர்கள் எல்லா மொழிகளிலும் உருவாக்கப்படுகிறது என்றே கருதுகிறேன்.
எதற்கு ஆங்கில நாவலுக்கு இத்தனை முன்னுரிமை? கனவு. கனவு மட்டுமே காரணம். தமிழ் மொழி வழியில் கற்று கல்லூரியில் எல்லா பாடங்களும் ஆங்கிலம் என்றபோது பாட புத்தகத்தில் ஆங்கில சொல்லின் மேல் தமிழ் எழுதி கற்று வாழ்ந்த வாழ்க்கை, ஆங்கிலம் என்றாலே பெரிய விசயம் எனும் கிராமத்து எண்ணம் உள்ளுக்குள் குடிகொண்ட கொடுமை. இதையெல்லாம் உடைத்து எறிந்து விட முடியாதா எனும் ஒரு ஏக்கம்.
எனது ஆராய்ச்சி நூலில் விழுந்த திருத்தல்கள் கண்டு மனம் கசிந்தது. எனது முதல் ஆராய்ச்சி கட்டுரையை வெளியிடும் முன்னர் ஆங்கிலம்தனை சரிபாருங்கள் என்றுதான் கட்டுரை வெளியீட்டாளரிடம் இருந்து கருத்து வந்தது. ஆங்கிலம் ஒரு மொழி. எனது பெயரை பார்த்தாலே ஆங்கிலம் சரியில்லை என நான் எழுதுவதை திருத்திவிட துடிக்கும் பலரை பார்த்து இருக்கிறேன். இதன் காரணமாகவே நன்றாக ஆங்கிலம் தெரிந்த ஒருவர் எழுதியதை நான் எழுதியதாக ஒருவரிடம் தர அவர் அதையும் திருத்தியதை கண்டு மனதுள் சிரித்து இருக்கிறேன். இது இப்படித்தான் என ஒரு முடிவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் வரை உலகில் புரட்சி என்பது வெறும் பேச்சுதான்.
தமிழ் வழி வந்த மாணவர்கள் பலர் நான் எழுதிய தமிழ் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க சொன்னபோதெல்லாம் தமிழ் கற்று கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன்.
Stephen Hawking எழுதிய The Grand Design புத்தகத்தை வெகு குறைந்த நாட்களில் படித்து முடித்துவிட்டேன். என்னை பொறுத்தவரை இது ஒரு பெரிய அதிசயம்தான். M-Theory க்கு mental theory என அவர் வைத்து இருந்திருக்கலாம் என தோன்றியது. பல பேரறிஞர்கள் படு முட்டாளாக இருக்கிறார்கள் எனும் ஒருவருடைய கூற்று எனக்கு பழகிப் போன ஒன்று.
தமிழ் மட்டுமே ஓரளவுக்கு தெரிந்த எனக்கு இந்த ஆங்கில நாவல் எழுதப் போவது பெரும் சவால்தான். எனக்கு ஆங்கிலம் சரியாகவே தெரியாது என்பதுதான் எனது நாவலுக்கு முதல் தடைக்கல். இனிமேல் ஆங்கிலம் நன்றாக கற்று எழுதுவதென்றால் இன்னும் பல வருடங்கள் ஆகிவிடும். ஆங்கிலம் சரியாக தெரியாத எனது எண்ணத்தை எனது பலமாக எனது நாவலுக்கு வைத்துக் கொண்டால் என பலமுறை தோன்றியது உண்டு. அதை நடைமுறைபடுத்தி விடும் வாய்ப்பு இப்போது அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.
நுனிப்புல் பாகம் 3 பிப்ரவரி மாதம் 2012ல் எழுத இருப்பதால் அதற்குள் இந்த ஆங்கில நாவலை எழுதி முடித்து விட வேண்டும் எனும் ஆவல் அதிகமாகவே இருக்கிறது. பல ஆங்கில நாவல்களை படித்தால் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
இந்த ஆங்கில நாவலை நிச்சயம் தமிழ் நூல்கள் வெளியிட்டு கொண்டிருக்கும் பதிப்பகத்தின் மூலம் தான் வெளியிட போகிறேன். இத்தனை விசயங்கள் இங்கே பகிர்ந்த பிறகும் நான் ஆங்கில நாவல் எழுதாமல் இனியும் காலம் தாழ்த்தினால் அது எனது சோதனை காலம் அல்ல, அது சோம்பேறி காலம்.

Subscribe to:
Posts (Atom)
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...
-
அப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...