Monday, 2 August 2010
பரிதாபங்கள் அவசியமோ?
இப்படம் கண்டதும்
"ஸ்" எனும் சப்தம் என்னுள்
எனது கவிதை வார்த்தைகள்
முடமாகிப் போயின
பரிதாபங்கள்
நம்பிக்கைகளை
படுகுழியில் தள்ளுமோ!
Sunday, 1 August 2010
கம்யூனிசமும் கருவாடும் - 2
ஜெர்மனி எனும் நாடு உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற நாடு. இரண்டு உலகப் போர்களுக்கும் ஒருவிதத்தில் காரணமான நாடு. நல்லதொரு சிந்தனையாளர்களையும், அறிவியல் அறிஞர்களையும் கண்ட நாடு. அதற்காக பிற நாடுகள் எல்லாம் சளைத்தவைகள் என்று பொருள் அல்ல. அப்படி கருதினால் கம்யூனிசம் என்பது சாத்தியம் அல்ல. கம்யூனிசம் என்பது எந்த பாகுபாடும், பிரிவினையும் இன்றி அனைவரும் சமம் என கருத வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த கம்யூனிசம் உருவான வரலாறு முதலாளிகளின் கையில் அல்லல்படும் தொழிலாளிகளை கண்டதன் காரணம் தான். மேலும் இந்த கம்யூனிசம் கொண்ட கருத்தையே இதற்கு முன்னர் சோசியலிசம் கொண்டிருந்தது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியது.
கார்ல் மார்க்ஸ் மற்றும் ப்றேடிறிச் இங்கேல்ஸ் எனும் ஜெர்மனியில் பிறந்த இரண்டு சிந்தனையாளர்களின் எண்ணத்தில் உருவானதுதான் இந்த கம்யூனிசம் என சொன்னாலும் இவர்களுக்கு முன்னர் இருநூறு வருடங்களுக்கு முன்னரே இந்த கம்யூனிசம் உருவாகித்தான் இருந்தது என்கிறது வரலாறு. சோசியலிசம் எனப்படும் சமத்துவ முறையானது முன்னரே கடைபிடிக்கப்பட்டு வந்ததுதான்.
இந்த கம்யூனிசம் மிகவும் சிறந்த சிந்தனை, ஆனால் இந்த உலகத்தில் கம்யூனிசம் என்பது சாத்தியம் கிடையாது. கம்யூனிச நாடுகள் என இருப்பவை, இருந்தவை எல்லாம் கம்யூனிச சிந்தனைகளை பின்பற்றியவைகளே அல்ல. கம்யூனிசவாதிகள் என சொல்லிக் கொள்வோர்கள் எல்லாம் கம்யூனிசவாதிகளே அல்ல என்பதை அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
சோசியலிசமும் கம்யூனிசமும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையவை. முதலாளித்துவ கொள்கைகளை எதிர்ப்பவை. அப்படி என்னதான் இந்த சோசியலிசம் சொன்னது.
தனி உடைமை என்பதை ஒழித்தல். அனைத்தும் பொதுவுடைமை ஆக்குதல். எல்லாவற்றிருக்கும் ஒருவரே முதலாளி, அந்த முதலாளி வேறு யாருமல்ல, அனைத்து தொழிலாளிகள், சுருங்கச் சொன்னால் அனைத்து மக்கள்.
சர்வாதிகாரம் எனும் பேச்சுக்கே இடம் கிடையாது. அனைத்துமே ஜனநாயக கட்டுபாட்டில் இருப்பதுதான். ஆனால் லெனின், ஸ்டாலின், மாவோ எல்லாம் சர்வாதிகாரத்தின் பேரில் செயல்பட்டவர்கள். ஏனெனில் காலமும் சூழ்நிலையும் அவ்வாறு செயல்பட வைத்தன. ஒன்றை எதிர்க்க சர்வாதிகாரம்தான் மிகவும் துணை நின்றது.
உபயோகத்திற்காக மட்டுமே பொருள்கள் உருவாக்கப்பட வேண்டும், லாப நோக்கத்திற்காக எதுவுமே உருவாக்கப்படக் கூடாது. இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். வியாபார உலகில் லாப நோக்கம் இல்லாமல் எது சாத்தியம்? இது சாத்தியம், எப்படி தெரியுமா?
கம்யூனிசத்தின், பொதுவுடைமையின், முழு சிந்தனையான பிரிவினையேதும் இல்லாத , இந்த ஊர், நாடு எனும் அடையாளமில்லாத ஒரு சமூகம். அதாவது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விசா, குடியுரிமை எனும் கொடுமை எல்லாம் இல்லாமலிருப்பது. எங்கு வாழும் மக்களும் அதே சகல வசதிகளுடன் வாழ்வது, அதன் காரணமாக ஒரு இடம் மற்றொரு இடம் என எந்த பாகுபாடும் இல்லாமலிருப்பது.
இந்த உலகில் சாத்தியமே இல்லாத இந்த சிந்தனைகள் கற்பனையில் வெளிபட்டது அல்ல. இங்கேல்ஸ் இங்கிலாந்து நாட்டிற்கு பிரயாணம் செய்தபோது தான் கண்ட குழந்தை தொழிலாளர்கள் நிலை, வர்க்க ரீதியாக பிரிக்கப்பட்டிருந்த மக்கள் நிலை எனும் பல அவல நிலைகள் தான்.
இங்கேல்சும், கார்ல் மார்க்சும் இணைந்து முதலாளித்துவத்தை எதிர்த்து போராடினாலும் கம்யூனிசம் என்பதை அவர்களால் உறுதி செய்ய இயலவில்லை. அவர்களால் ஒரு தெளிவான பார்வையை செயல்படுத்த இயலாத நிலையே இருந்தது. அது ஏன்?
கற்கால மனிதர்களைப் போல இக்கால மனிதர்களும் வாழத் தயாரா? கம்யூனிசம், மாவோயிசம், சோசியலிசம், அந்த இசம், இந்த இசம் என எல்லா இசங்களும் நமது வசம்.
(தொடரும்)

Friday, 30 July 2010
கம்யூனிசமும் கருவாடும் - 1
மதார் அவர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்க கம்யூனிசம் பற்றி ஒரு முழு விளக்கம் வெகு விரைவில் தரப்படும். அதனை கம்யூனிஸ்ட்கள் தந்தால் ஒருதலை பட்சமாக கருதப்படும் என்பதால் இது குறித்து விபரமாகவே எழுதுகிறேன். அதனால் கம்யூனிஸ்ட்கள் சற்று பொறுத்துக் கொள்க.
நான் கம்யூனிசவாதி கிடையாது, இந்த வாதி எனப்படும் வியாதி எதுவும் எனக்கு கிடையாது. பலருக்கு கம்யூனிசம் என்றாலே வேப்பங்காயாக கசப்பதற்கு காரணம் அரை குறையுடன் தெரிந்து வைத்து கொண்டு தன்னை கம்யூனிஸ்ட் என சொல்லிக் கொள்பவர்களும், கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு சுயநலத்துடன் வாழப் பழகி கொண்டதும், கம்யூனிசம் என்றாலே உலகில் சமத்துவம் நிலவும் என்கிற பொய்யான கோட்பாடும்தான் முழு முதற் காரணம்.
பொருளாதாரத்தை மையப்படுத்தி பல புரட்சிகள் உலகில் ஏற்பட்டு இருக்கின்றன. முதலாளிகள், தொழிலாளிகள் எனப்படும் பிரிவினையை கண்டு குமுறியவர்கள் பலர்.
கம்யூனிசம் என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை ஆணி வேர். ஆனால் புரிதல் இல்லாத காரணத்தினால் இந்த கம்யூனிசம் கேலிப் பொருளாகிப் போனது. ஜனநாயகம் என்பதன் அடிப்படையே கம்யூனிசம் தான். எத்தனை பேருக்கு கம்யூனிசம் பற்றி ஒழுங்காக தெரியும்?
கம்யுனிட்டி (சமூகம்) பற்றிய சிந்தனை மட்டுமே கம்யூனிசத்துக்கு உண்டு. கம்யூனிசத்தில்தான் தோழர்களே எனும் ஒரு அன்பு பரிமாற்றம் நிகழ்ந்தது. ஆனால் இப்பொழுது மனிதர்கள் பார்வை எப்படி இருக்கிறது?

Subscribe to:
Posts (Atom)
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...
-
அப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...