ஊரு வம்பை விலைக்கு வாங்குவது எப்படி தெரியுமா?
இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை உலக பிரச்சினை போல உருவகம் செய்து அதில் உலை வைத்து குளிர் காயும் யுக்தி பற்றி அறிய வேண்டுமா?
எழுதப்படும் எழுத்துகள் எப்படியெல்லாம் பல கோணங்களில் பார்க்கப்படும் என்பதையும் எத்தனை அருமையாக ஆராய்ச்சிகள் செய்து பல விதங்களில் ஒரு விசயத்தை சிந்தித்து எழுதும் கலை பற்றி அறிய வேண்டுமா?
முக்கியமாக வெளிநாட்டில் வாழும் தமிழ் வாசகர்களே, உங்களுக்கு தமிழில் எத்தனை கேவலமான வார்த்தைகள் இருக்கின்றது என்பதை தெரிந்திட வேண்டுமா?
நகைச்சுவை பற்றி ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டு இருக்கிறேன். அதே நகைச்சுவையால் எப்படியெல்லாம் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
எழுதுவதன் மூலம் உங்கள் மொத்த குடும்பத்தையும் துன்பத்தில் சிக்க வைத்திடும் நிலை அறிய வேண்டுமா?
இப்படி எதிர்மறை நிலைகள் மட்டுமே எழுத்தாகிப் போனதை கண்டு கண்ணீர் வடிக்க வேண்டுமா?
எதற்கெடுத்தாலும், தேசிய பார்வையை ஒழித்துவிட்டு ஜாதீய பார்வையுடன் அணுகும் முறை தெரிந்து கொள்ள விருப்பமா?
நாம் அனைவரும் ஒன்று என்று ஒற்றுமையை நிலைநாட்டுவதாய் கூறிக் கொண்டு முதுகில் அடிகள் தந்திடும் கலை அறிய விருப்பமா?
மதச்சார்பற்ற கொள்கைகளை முன்னிறுத்தி மனிதர்களை கீழ்மைபடுத்தும் நிலையை அறிய வேண்டுமா?
வாருங்கள் உலக தமிழ் வாசகர்களே.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மிக மிக சின்ன காரியம் தான். தமிழ் திரட்டிகளை ஒரு முறை பார்வையிட்டால் போதும். அங்கே காணப்படும் பதிவுகளை படியுங்கள். ஆனால் அதைப் பற்றி ஒன்றும் எழுதி விடாதீர்கள். மீறி எழுதினால் நீங்கள் ஊர் வம்பை விலைக்கு வாங்கி விட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இதெல்லாம் தேவையில்லை, பல நல்ல விசயங்கள் தெரிந்து கொள்கிறோம் என நினைத்தால் புற்களுக்கு மத்தியில் ஒரு சில நெற்கதிர்கள் தென்பட்டுத்தான் கொண்டிருக்கும். அதை தேடி கண்டு கொள்ளுங்கள்.
வாசகர்களாக இருப்பதுதான் மிகவும் சௌகரியம். பதிவர்களாகவோ, எழுத்தாளர்களாகவோ நீங்கள் மாற நினைத்தால் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். எவரேனும் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் திட்டிக் கொண்டிருக்கலாம், அதே வேளையில் வாழ்த்திக் கொண்டும் இருக்கலாம். திட்டுகளை புறந்தள்ளி, வாழ்த்துகளை மட்டுமே தனதாக்கிக் கொள்ளும் திறன் இருப்பின் நீங்கள் நிலைத்து நிற்கலாம்.
இந்த பதிவுலகத்துக்கென பிரத்தியோகமாக எழுதப்பட்ட பதிவுகள் சில உள்ளன. அவை
விவகாரமான எழுத்தாளர்கள்
யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க
கருத்துகளும் அதன் சுதந்திரமும்
ஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது?
எழுத்துலகில் அரசியல் செய்பவர்களுக்கும், நட்பினை கொச்சைபடுத்துபவர்களுக்கும் எனது கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். இனிமேலும் ஏதேனும் பிரச்சினை வரும்போது நான் குரல் கொடுக்கவில்லையென கருதாதீர்கள். எனது பதிவுகள் அதற்காக பேசி முடித்துவிட்டன
தனித்தனி குழுவாக செயல்படுவதை அறவே தவிர்த்துவிடுங்கள். உங்கள் நட்புக்குரியவரோ, மற்றவர்களோ பிரச்சினையில் இருந்தால் அதை எழுதி பெரிதுபடுத்தி ஆதரவு தருகிறேன் பேர்வழி என களங்கப்படுத்த வேண்டாம். மின்னஞ்சல் உண்டு, தொலைபேசி உண்டு. பேசி தீர்த்து கொள்ளும் விசயங்களை எழுதி சிறுமைபடுத்தாதீர்கள். சம்பந்தப்பட்டவர்கள் அவரவர் பிரச்சினையை தீர்த்துக் கொள்வார்கள். அவர்கள் எவரும் குழந்தைகள் அல்ல.
எழுதுவதால் பிரச்சினைகளில் சிக்குண்டு தவித்து என்ன செய்வதென புரியாமல் எழுத்துலகைவிட்டு விலகும் பதிவர்களுக்கு எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழில் எழுதி, தமிழை சிறந்திட செய்யும் அனைவருக்கும் எனது நன்றிகளும், வணக்கங்களும்.
Tuesday, 1 June 2010
Monday, 31 May 2010
எழுதி சாதித்தவைகள்
ராமநாதன் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கிறப்பவே நினைச்சேன், எதுனாச்சும் வில்லங்கமா பேசத்தான் செய்வான்னு. என்னைப் பார்த்து 'என்ன எழுதி கிழிச்சிட்டு இருக்க' அப்படினு சொன்னதும்தான் தாமசம் எனக்கு கோவம் வந்துருச்சு.
''உன்னால எழுத முடியலன்னா அதுக்கு என்னை எதுக்கு இப்படி மட்டமா பேசற' அப்படினு சொன்னதோட நில்லாம எழுந்து ஒரு அறை விட்டேன். பதிலுக்கு அவன் 'நீ அடிக்க எல்லாம் தேவை இல்ல, உன் கூட பழகுனேன் பாரு, அதுவே நீ எனக்கு தரும் பெரிய தண்டனை' அப்படினு சொல்லிட்டு விறுவிறுன்னு போனான்.
என்ன இவன் இப்படி சொல்லிட்டு போறான்னு அவன் பின்னாடியே ஓடிப்போய் இழுத்துட்டு வந்தேன். அவனுக்கு ஒரு காபி ஆத்தி கொடுத்தேன். நான் எழுதி எவ்வளவு சாதிச்சி இருக்கேன் தெரியுமா, என்னை பாத்து என்ன எழுதி கிழிச்சிட்டு இருக்க அப்படினு சொன்னா எனக்கு எத்தனை கோவம் வரும். ''ஆமா அப்படி என்னத்தத்தான் எழுதி கிழிச்ச'' அப்படினு அடி வாங்கினப்பறமும் கேட்டான். இனி சும்மா இருந்தா அவ்வளவுதான்னு என் சாதனையை பட்டியலிட்டேன்.
அ ஆவன்னா எழுதி தமிழ் எழுத கத்துகிட்டேன். ஒவ்வொரு தடவையும் பரீட்சையில் பாஸ் பண்ணினது எக்ஸாம் எழுதித்தான். அது தெரியுமா. நான் நாலாப்பு படிக்கிறப்பவே நாகுல்சாமி அண்ணன் ஒரு லவ் லெட்டரு எழுதித் தர சொல்லிச்சி, அதை நான் தான் எழுதினேன் அது தெரியுமா. பாம்பேல இருக்கிற பையனுக்கு கடிதாசி எழுத சொல்லி பங்கஜம் அத்தை வந்து நிக்கிறது என்கிட்டதான். ஆறாப்பு படிக்கிறப்ப அம்சமா இருந்த முத்துமாரிக்கு ஒரு லவ் லெட்டர் எழுதித்தான் என் லவ்வை சொன்னேன். உன்னால சொல்ல முடியுமா? அதுக்கும் என்கிட்டதான் வந்து நிற்ப. மரத்துல, கல்லுல, சுவத்துல எங்க ரெண்டு பேரை செதுக்கி வைச்சேன் நீயும் தான் பாத்துட்டு பல்லிளிச்ச.
ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம், வாரமலர்னு வாசகர் கடிதம் ஒன்னு தவறாம வருமே அது நான் எழுதி அனுப்புனதுதான். எப்படி திட்டி திட்டி எழுதி இருப்பேன், உனக்கு என்ன தெரிய போகுது. அதோட மட்டுமா முதல்வர் அண்ணாச்சிக்கு நம்ம ஊருல இருந்து மனு எழுதி போடறதே நான் எழுதித்தான். அதோடு மட்டுமா ரோடு போட கொடுத்த காசுல எவ்வளவு காசு அமுக்கினான் இசக்கிமுத்து, அவனுக்கு மொட்ட கடிதாசி போட்டது நான் எழுதித்தான். திருவிழா, அரசியலுன்னு வரப்ப நோட்டீசுக்கு எழுதி தரது நான் தான், சுவத்துல எழுதரதும் நான் தான். என்னமோ பேசற.
இப்படி நான் சொல்லிட்டே இருந்தப்ப உஷ் உஷ்னு காபிய உறிஞ்சிகிட்டே இருந்தான். நான் இடையில நிறுத்தினதும் 'ப்பூ இவ்வளவுதானா' அப்படினு சொன்னதும் அவனை அப்படியே சுவத்துல வைச்சி முட்டலாம்னு இருந்திச்சி.
இப்ப என்ன எழுதுறேன் தெரியுமா, உன்னை மாதிரி எழுத படிக்க தெரியாத முட்டாள்கள் எல்லாம் கட்டாயம் எழுதப் படிக்கனும் அப்படி இல்லைன்னா இவனுகளை சாவடிக்கனும் அப்படினு ஆனந்த விகடனுக்கு, குமுதத்துக்கு எழுதிட்டு இருக்கேன். போதுமா? அப்படினு நான் சொன்னதும் தான் தாமசம் 'குபுக்'னு சிரிச்சான். அதோட விட்டானா 'இங்கிதமே தெரியாம எழுதற உன்னை மாதிரி ஆளுக எல்லாம் எழுத படிக்க தெரிஞ்சும் முட்டாப்பையலுக' அப்படினு சொன்னான். அவனை நல்லா மொத்தினேன். இனிமேலும் இவனை விடக் கூடாதுன்னு அவனை பத்தியும் அவனோட கொழுந்தியா பத்தியும் பம்புசெட்டுல தப்பு தப்பா இன்னைக்கு நைட்டு எழுதிற வேண்டியதுதான். இப்படி என்னவெல்லாமோ எழுதி சாதிச்சிட்டு இருக்கற என்னை பாத்து அவன் இனிமே கேள்வி கேட்பானா?!

Sunday, 30 May 2010
ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 11
11. ஆராய்ச்சியில் ஏற்பட்ட ஆர்வம்
தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வது அடக்கம் என்றே கருதப்படுகிறது. சில பல வேளைகளில் எனக்குத் தெரியாத விசயங்களை தெரியாது என சொல்லும்போது நான் தன்னடக்கம் நிறைந்தவன் எனவும், நிறை குடம் தழும்பாது எனவும் சொல்லும்போது மனதில் சிரித்துக் கொள்கிறேன். உண்மையிலேயே எனக்கு பல விசயங்கள் தெரியவே தெரியாது, என்னால் அத்தனை எளிதாக எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது.
ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் விழுந்தால் அதை எடுத்து பல கடி கடித்துவிட்டுத்தான் நான் போயிருப்பேன். நியூட்டன் போல் அந்த ஆப்பிள் ஏன் விழுகிறது என யோசித்துக் கொண்டிருக்கமாட்டேன். எனக்குத் தெரிந்தது அந்த கால கட்டத்தில் அவ்வளவுதான்.
ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே ஆராய்ச்சிக்கு அடிப்படை. ஒரு பதிலோடு உட்கார்ந்துவிடுவதல்ல ஆராய்ச்சி. அந்த பதிலுக்கும் பதில் தேடி செல்வதுதான் ஆராய்ச்சி. அதன் காரணத்தினால் ஆராய்ச்சி எளிதாக முற்றுப் பெறுவதில்லை. இதன் காரணமாகவே பல நோய்களுக்கு வெவ்வேறு விதத்தில் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
எப்பொழுது விதைத்தால் எப்பொழுது அறுவடை செய்யலாம் என கால நிலைகளை அறிந்து விவசாயம் செய்யத் தொடங்கிய விவசாயி ஒரு ஆராய்ச்சியாளர் தான். சூரிய நிழலை வைத்தே காலத்தை கணக்கிட்டவரும் ஆராய்ச்சியாளர்தான். எந்த மண்ணில் எந்த தாதுப் பொருட்கள் கிடைக்கும் என தோண்டி எடுத்தவரும் ஆராய்ச்சியாளர்தான். சமய சூழலுக்கு ஏற்ப கிடைத்த விசயங்களை வைத்து ஒரு புரட்சி ஏற்படுத்தியவரும் ஆராய்ச்சியாளார்தான். இப்படி எல்லா விசயங்களிலும் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் அளப்பரியது.
சிறு வயதிலிருந்து மருத்துவத் துறையில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனும் அளவிலா ஆசை வந்து சேர்ந்தது. அதற்கேற்றபடி நான் படிக்கும் துறையும் அமைந்துவிட மிகவும் வசதியாகப் போனது. ஆனால் முழு அளவில் ஈடுபாடு என்னிடம் இருந்ததா என என்னால் சொல்லத் தெரியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் தமிழ் மீதுதான் தனிப்பற்று இருந்தது. இப்போது கூட சில வேளைகளில் நினைத்துக் கொள்ளத் தோன்றும், தமிழ் பட்டப் படிப்பு படித்து இருந்து இருக்கலாமா என!
முதல் ஆராய்ச்சி என எடுத்துக் கொண்டது ஆஸ்பிரின் எனப்படும் மருந்து எவ்வளவு வேகத்தில் கரையும் என கண்டுபிடிப்பது. நானும் எனது இரு நண்பர்களும் சேர்ந்து செய்தோம். நாங்களே எங்களுடன் படித்த நண்பனின் மருந்து தயாரிக்கும் கம்பெனியில்தான் மாத்திரை உருவாக்கினோம். அந்த வேளையில் ஆசிரியர் சில வாரங்கள் கல்லூரிக்கு வராததால் அவர் சொன்னதற்கு மாறாக நாங்கள் செய்து முடித்து இருந்தோம். சின்ன திட்டுகளோடு முதல் ஆராய்ச்சி முடிந்து போனது.
அதற்கடுத்த ஆராய்ச்சி பாக்டீரியா பற்றியது. ஆன்டிபயாடிக் என இருந்து கொண்டிருக்கும் போது இந்த பாக்டீரியவை ஆன்டிபயாடிக் இல்லாமல் வேறு மருந்துகளாலும் கொல்ல இயலும் என நான்-ஆன்டிபயாடிக் எனும் புது பாதையையே வகுத்து வைத்திருந்தார்கள். இதில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள் என பலரும் இருந்தார்கள். இந்த ஆராய்ச்சிதான் நான் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் செய்தேன். கிட்டத்தட்ட 305 வகையான பாக்டீரியாவை தையோரிடஜின் எனப்படும் மனநிலை பாதிப்புக்கு உபயோகப்படுத்தும் மருந்தினை வைத்து செய்யப்பட ஆராய்ச்சி அது. இந்த மருந்து பாக்டீரியாவை கொல்லத்தான் செய்தது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் கூடத்தான் பாக்டீரியாவை கொல்லும் அதற்காக அதை மருந்தாக குடிக்க முடியுமா என அறிவு எழுந்த இடம் அங்குதான். இருப்பினும் மிகத் தீவிரமாகவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதுநிலைப் பட்டப்படிப்பு படித்ததும், ஆராய்ச்சி பட்டம் பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. 'டாக்டர்' எனப் போட்டுக்கொள்ளவா ஆராய்ச்சி செய்யப் போகிறாய் என நண்பர் ஒருவர் கேலி செய்தபோதிலும் ஆராய்ச்சி பட்டம் பெறுவதே கருத்தில் இருந்தது. இதற்காக இலண்டன் வரும் முன்னர் கொல்கத்தாவிலும், டில்லியிலும் ஆராய்ச்சி பட்டம் பெற இணைந்து பின்னர் தொடராமல் நிறுத்தி விட்டேன். ஒரு கல்லூரியில் வேலைப் பார்த்தபோது அந்த ஒரு வருடத்திலேயே செடிகொடிகளை வைத்து பாக்டீரியாவை கொல்லும் சக்தி இருக்கிறதா என சில மாணவர்களை வைத்து ஆராய்ச்சி செய்தேன். இப்படியான சின்ன சின்ன ஆராய்ச்சி வேட்கை பெரிய ஆராய்ச்சி திட்டமாகி கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்கேனும் எப்படியாவது நிறுத்திவிடலாமா எனும் ஆசையும் வந்து சேர்ந்துவிட்டது.
இலண்டனில் நான் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சி பற்றிய விபரங்களை சற்று விபரமாகவே விரைவில் எழுதுகிறேன்.
(தொடரும்)

Subscribe to:
Posts (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...