Tuesday, 27 April 2010
பனிப் பிரதேசம் - 2
அங்கே பனியில் சிறிது நேரம் விளையாடினோம். முன்னும் பின்னும் காரை நகர்த்தி ஒருவழியாக ஹோட்டல் நோக்கி காரைச் செலுத்தினேன். கரு நிறப் பாதையில் மட்டுமே வாகனம் செலுத்திய அனுபவம் உண்டு. செம்மண்ணில் டிராக்டரில் அமர்ந்து சென்ற அனுபவம் நிறையவே உண்டு. ஆனால் பனிகள் நிறைந்த வெண்ணிறப் பாதையில் முதன்முதலாக காரைச் செலுத்தும்போது காரில் எச்சரிக்கை ஒலி வந்து கொண்டிருந்தது. எதிரில் ஏதேனும் கார் வந்தால் கூட விலக முடியாத நிலை. மெதுவாக காரினைச் செலுத்தி ஒருவழியாக ஹோட்டல் செல்லும் சாலை வந்தடைந்ததும் மனதில் ஒரு நிம்மதி வந்து சேர்ந்தது.
ஹோட்டல் நோக்கிச் செல்லும்போது இருபுறமும் மலைகள் எல்லாம் இமயமலைகள் போன்றே காட்சி அளித்தன. அற்புதமான பயணத்தின் முடிவில் மலையில் அமர்ந்திருக்கும் ஹோட்டலை அடைந்தவுடன் ஆச்சரியமாக இருந்தது. நல்லதொரு வரவேற்பினைத் தந்தார் அங்கிருந்த பெண். பின்னர் எங்கள் அறையை அடைந்ததும் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஒரு வரவேற்பறை. பின்னர் உள்ளே சென்றதும் படுக்கை அறையுடன் கூடிய குளியலறை என மிகப் பெரிய அறையாகவே காட்சி தந்தது. சிறிது நேரத்தில் அறையில் தொலைபேசி சப்தம் எழுப்ப, எனது மகனுக்கான படுக்கையை தயார் செய்வதாக கூறினார்கள். அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை நான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் வரவேற்பறையில் இருந்த இருக்கையானது, படுக்கையாக மாற்றப்பட்டது. அங்கே ஒரு தொலைகாட்சி, படுக்கை அறையில் தொலைகாட்சி ஒன்று என இருந்தது. வெளியில் எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து இருந்தது. மரங்கள் வெள்ளை இலையுடன் அழகாக காட்சி தந்து கொண்டிருந்தது.
இரவுச் சாப்பாடு என ஹோட்டலிலேயே சாப்பிடலாம் என சென்றால் முன்பதிவு செய்ய சொன்னார்கள். இருக்கைக்கு முன்பதிவு செய்துவிட்டு ஆறு மணியளவில் சாப்பிட சென்றோம். நாங்கள் சைவ உணவு என்பதால் சற்று சிரமமாக இருந்தது. எனினும் பசிக்கு எனச் சாப்பிட்டு விட்டு வந்தோம்.
காலையில் எங்கு செல்வது என ஒருவழியாய் முடிவு செய்து பயணித்தோம். அந்த பயணம் சிலிர்ப்பையும், பயத்தையும் தந்தது.
(தொடரும்)
பனிப் பிரதேசம் - 1
இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு (2009) என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்கையில் உச்சிகளின் மாவட்டம் ( பீக் டிஸ்டிரிக்ட்) எனப்படும் வட இங்கிலாந்தில் மான்செஸ்டருக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்துக்குச் செல்லலாம் என முடிவு எடுத்தோம். வானிலை எச்சரிக்கை எங்களை பயமுறுத்திக் கொண்டே இருந்தது.
தினமும் வானிலை எச்சரிக்கைப் பார்த்துவிட்டு பனி எதுவும் உச்சி மாவட்டத்தில் இல்லை என முடிவு செய்து கிறிஸ்துமஸ் வாரத்தில் திங்கள் கிழமை கிளம்பிச் சென்று இரண்டு நாட்கள் தங்கிவிட்டு புதன் கிழமை திரும்பலாம் என முடிவு செய்தோம். எங்கு தங்குவது என அதிக யோசனை. விலை மலிவாகவும் இருக்க வேண்டும், அதே வேளையில் தங்குமிடம் மனதுக்கு திருப்தியாகவும் இருக்க வேண்டும். என்ன செய்வது என பல இடங்களை இணையத்தில் தேடினோம்.
எத்தனை மனிதர்கள் எத்தனை விதமாக ஒரே இடத்தைப் பற்றிய அனுபவங்கள், பிரமிக்க வைத்தது. அனைவருக்கும் ஒரே மனம் இருந்துவிடக் கூடாதா எனத் தோன்றியது. கிறிஸ்துமஸ் முதல் வார வெள்ளிக்கிழமை இரவு பன்னிரண்டு மணி தாண்டியும் எந்த ஹோட்டலில் தங்குவது என முடிவு செய்ய இயலவில்லை. அறைகள் ஒன்று மட்டுமே உள்ளது எனும் அளவுக்கு சில ஹோட்டல்கள் தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தன.
இறுதியாக ஆனால் உறுதியாக ஒரு ஹோட்டல் பஃக்ஸ்டன் எனும் ஊரில் தேர்வு செய்தோம். விலை மலிவாகவே இருந்தது. சனி, ஞாயிறு கிழமை கடந்துவிடாதா எனும் ஏக்கத்தில் இருக்க திங்கள் கிழமையும் வந்து சேர்ந்தது. லண்டனில் பனி பெய்ததால் சின்னச் சாலைகள் வண்ணம் பூசியதைக் கலைக்க மறுத்துவிட்டன. கால்கள் வழுக்க ஆரம்பித்தன. கிளம்பும் முன்னர் எதிர்த் தெருவில் எவரோ திருடிய கார் ஒன்று சாலையில் வழுக்கி ஒரு வீட்டு முன்புறம் நிறுத்தப்பட்ட காரில் இடித்து நின்றுவிட, காரை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போனார் அவர். சாலையில் கவனம் தேவை என மனம் நினைத்துக் கொண்டது.
இந்த மூன்று நாட்கள் பனி இல்லை என சொன்ன வானிலை, செவ்வாய் அன்று சற்று பனி இருக்கும் என்றே சொன்னது. இதற்கு முன்னர் பனி பெய்ததா இல்லையா என்பதை மனம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. காலை ஒன்பது மணிக்கு கிளம்பி மாலை மூன்று மணி சென்றடைந்தோம். வழியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சாலையில் பனித்தடங்களே இல்லை.
உச்சிகளின் மாவட்டம் தனில் ஒரு இடத்தை அடைந்தோம். அங்கே பனி நிறைந்தே இருந்தது. பனியைக் கண்ட ஆர்வத்தில் காரினை ஓரத்தில் நிறுத்தி படங்கள் எடுத்துக் கொண்டோம். படங்கள் எடுத்துவிட்டு காரினை நகற்ற கார் பனியில் சிக்கிக் கொண்டு நகர மறுத்தது.

Monday, 26 April 2010
அடியார்க்கெல்லாம் அடியார் - 6
பூஜை அறையில் சென்று அமரும் முன்னர் கதிரேசன் குளித்துவிட்டு உடலெல்லாம் திருநீறு பூசிக்கொண்டான். உடலெல்லாம் திருநீறுடன் நிற்கும் அவனைப் பார்த்த நீலகண்டன் ''என்ன கோலம் இது?'' என்றார். ''மனம் விரும்பியது தாத்தா'' என்றான் கதிரேசன். பூஜை அறையில் அமர்ந்தார்கள். சிரத்தையுடன் வழிபட்டார்கள். தீபம் எடுத்து காண்பித்தார் நீலகண்டன். தானாகவேப் பாட ஆரம்பித்தான் கதிரேசன்.
''ஒளியது உன்னால் விளைந்தது எனில் பெருமானே
தெளிய வேண்டிட இருளும் உனதோ
பஞ்ச பூதங்களும் விரிந்துபறந்து செல்லும் வழியை
அஞ்ச வைத்து அடக்குவதோ சொல்சிவனே
நெஞ்சினில் நித்தம் உனைப்பாடும் நிலையது கொண்டேன்
கெஞ்சியும் உனை தொழுவதில்லை என்றார்
உலகோர் எல்லாம் உனைமட்டும் தொழவே
கலகம் கலங்கிப் போயிருக்காதோ சொல்சிவனே
நன்மையதை மட்டுமே நாதன் நீயும் கொண்டிட
இன்னது என்வசம் தந்திடு கேட்கிலேன்
புல்லும் புல்வளர்த்த துகளும் அகக்கண் ஆனதால்
கல்லும் உயிர் பெற்றதோ சொல்சிவனே''
பாடி முடித்தவன் பக்கத்தில் பார்த்தான். கண்கள் மூடிய நிலையில் அமர்ந்து இருந்தார் நீலகண்டன். தனது கண்களை இரு கைகளால் துடைத்துக் கொண்டான். கண்கள் திறந்த நீலகண்டன் கதிரேசனை நோக்கினார்.
''உன்னோட கேள்விக்கெல்லாம் ஒருநாள் பதில் கிடைக்கும், பதில் கிடைக்கலையேனு ஆத்திரமோ ஆதங்கமோ படாதே, நீ அறிஞ்சி சொல்ற பதில் எனக்கு உகந்ததா இருக்கலாம். இந்த உலகத்தார் எல்லார்க்கும் உகந்ததா இருக்கலாம், ஏன் யாருக்குமே உகந்ததாக இல்லாமலும் போகலாம். ஆனா மொத்த உலகமும் ஏத்துக்கிற ஒன்னு இருக்கு.
உனக்குத் தெரிஞ்சிருக்கும் தென்னாட்டுச் சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அப்படினு. இரண்டாவது வரியை எழுதினப்போ ரொம்ப அழகா அமைச்சிட்டார், அதுதான் எல்லாம் சிவமயம். நான் சொல்றதெல்லாம் நீ ஏத்துக்க வேண்டியது இல்லை. எனக்கு இது போதும்னு என்னோட ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் இருந்திட்டு வரேன். என்கிட்ட படிச்சவங்க எல்லாம் என்னை இந்நிலையிலப் பார்க்கறப்போ 'சார் நீங்களா இப்படி மாறீட்டீங்கனு?' கேட்காமப் போகமாட்டாங்க. அவங்களுக்கு என்னால புன்னகையை மட்டுமே பதிலாகத் தரமுடியுது, உன்னோட பாதையை நீ எந்த ஒரு வெளி அழுத்தத்துக்கும், ஏன் உன் உள் அழுத்தத்துக்கும் அகப்பட்டு தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையை உருவாக்கிக்காதே, உருவாக்கிக்காதேனுதான் சொல்வேன், எதுவும் உன்னோட விருப்பம்''
மேலும் தொடர்ந்தார். ''சிவபுராணம் படிச்சிருக்கியா?'' என்றவரிடம் ''பிறர் பாடக் கேட்டு இருக்கேன், நானா எல்லாம் படிச்சது இல்லை தாத்தா'' என்றான் ஆச்சரியத்துடன் கதிரேசன். அதுல மாணிக்கவாசகர் பாடுவார்.
''புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணிய''
''கேட்டு இருக்கியா?''என்றார் நீலகண்டன். ''வாழ்த்தும் போற்றியும் மட்டுமே கேட்டு இருக்கேன் தாத்தா'' என்ற கதிரேசனிடம் சிவபுராணம் எடுத்துக் கொடுத்தார். நேரமிருக்கிறப்போ இதைப் படி என்றார். ''எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேனு சொல்வார், எப்படினு நீ யோசிச்சிப் பாரு. பதில் கிடைக்கலைன்னா வந்து கேளு''' என பிரசாதம் கொடுத்தார். கதிரேசன் கைகளில் சிவபுராணம் தவழ்ந்தது.

Subscribe to:
Posts (Atom)
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...
-
அப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...