Thursday, 11 March 2010

இயற்கை பேராபத்து



குளத்தோரம் மீன் பிடிக்க 
போகச் சொன்னா 
எங்க போய் உட்கார்ந்திருக்க 

கிணத்துல குதிச்சி 
நீந்த சொன்னா 
எங்க போய் உட்கார்ந்திருக்க 

மலையில் போய் 
செடி கொண்டு வரச் சொன்னா 
எங்க போய் உட்கார்ந்திருக்க 

உயிர் விளிம்புல 
உட்கார்ந்துகிட்டு என்னத்த 
உத்து நீயும் பார்க்கிற 

உயர ஏறி வந்ததுமே 
கீழ இருக்கிறது 
ஒன்னா தெரியுதோ 

ஒரு எலும்பும் மிஞ்சாது 
உடனே வீட்டுக்கு வா 
உட்கார்ந்து சாப்பிடு 
உன்னை இனிமே 
எங்கும் போகச் சொல்லலை!

Tuesday, 9 March 2010

கண்ணான கண்ணு



என் கைகள் வெறுமையாய் இருக்கிறது 
அழகுப்பார்த்துக் கொள்ள 
அனுமதியில்லாமல் அழுது நிற்கிறது 

அழகிய அணிவகுப்பாய் 
பெண்ணுக்கென மட்டும் 
உன்னை ஒதுக்கிக் கொண்டது ஏனோ? 

சின்னஞ்சிறு வயதில் எனக்கு 
உடைத்து விளையாட 
உருவான வளையல். 

அன்புக்கட்டிலில் நொறுங்கும் வளையல் 

காப்பு கட்டி தொட்டிலுக்கு 
வருகை சொல்லும் துள்ளல் வளையல் 

குட்டிப்பெண்ணும் குதூகலித்து 
கொண்டாடும் வளையல் 

கொலுசைப் போல் மறைந்து 
காதல் சொல்லாது 

நேராய் நிமிர்ந்து காதல் சொல்லும் 
தைரிய வளையல் 

கற்கள் கொண்டு 
கண்ணைப் பறிக்கும் வளையல் 

வானவில்லில்லா நிறங்களும் கொண்டு 
வர்ணம் ஜொலிக்கும் வளையல் 

மனதில் இடம்பிடித்ததன்றி 
தமிழ்த்திரைப்பாடலில் தனியிடம் பிடித்த 
முத்து முத்தான வளையலுங்க.

Monday, 8 March 2010

நேனோவுக்கா நோ நோ



உலகம் சின்னதாகப் போனதுனு
தொழில்நுட்பம் காட்டி வருகுது
ஊரெல்லாம் சுத்தி வர
ஒரு இலட்சம் பணத்துக்கு
நேனோ காரு வலம் வருது

குண்டும் குழியுமா இருக்கற சாலையில
நண்டு போல தாவி வந்தா
நோனோவுக்கு குடைச்சல் தான்
தானா வந்து சேருமே

சாலையை பழுது பார்க்க
யாருக்குத்தான் மனசிருக்கு
சாதாரண கிராம சாலைக்கு
கட்ட வண்டிதான் லாயக்கு

ஒடுக்கமான காருக்குள்ள எட்டு பிள்ளைகளோட
ஒடுங்கிப் போகாதீங்க இது அம்பாஸிடர் இல்லீங்க
இது வண்ண குடையுமில்லை - ஆனா
மழை வந்தா இனி பயமில்லை

ஸ்கூட்டருக்கும் மீட்டருக்கும் 
இனி கவலை வேணாம்
கும்மாளம் போட்டுக்கிட்டு 
குதூகலமா நேனோவுல போலாம்

நேனோவுல உட்கார முடியாத
உடலளவு இருந்தா 
பெருமூச்சு விட்டுராதீங்க
சும்மா பறந்து போகும் பாருங்க!