Monday, 8 March 2010

திருமணம் எனும் பந்தம்




கையின் மேல் கை வைத்து 
ஒன்றான விதம் சொல்லும் 

அன்பில் குறைவுமில்லை
அன்பே சொர்க்கமாகும் 

அழகிய அலங்காரம் சுமந்து
அர்த்தமாகும் வாழ்க்கை 

பொருந்தும் கரங்கள் மட்டுமே
பொருந்திக் கொள்ளும் திறமை 

மனம் தாங்கிய உணர்வினை
கரம்தொட்டு கடத்துகிறாள் 

இங்கிருந்து அங்குமாய்
அங்கிருந்து இங்குமாய் 

மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறான்
மனதில் பூரணமாய் 

அவளைத் தாங்குவதாய் அவனும்
அவனை உயர்த்துவதாய் அவளும் 

கரங்கள் சொல்லும்அன்பின் காவியம்
கறைபடியாத நிச்சய ஓவியம் 

ஒரே ஒரு உயிராய் இருக்க
ஒரு முறையே நடக்கும் 

ஒப்பில்லாத அன்பில் திருமணம்

ஊரை உலகை சொர்க்கமாக்கி நடக்கிறது.

Friday, 5 March 2010

அந்த மான் சிறை




அழகான அந்தமானில் 
சொந்த உரிமைக்கென குரலிட்டவர்களை
குரல்வளையை நெறித்து
சுதந்திர காற்றைக் கூட 
சிறைப்படுத்தி அனுப்பிய இடமோ?

அந்த மானைத் தேடிச்சென்ற
ராமன் பட்ட அவஸ்தை
சொந்த மண்ணை வேண்டியவரை
வெந்து போக வைத்திட
கட்டப்பட்ட கல்லறை இதுவோ?

சுதந்திர வேட்கை தணித்திட
இப்படியும் ஒரு சுடுகாடோ?
மனிதம்தனை கொளுத்திட 
இப்படியும் ஒரு கல்வெட்டோ?

சுதந்திரம் பெற்றுக் கொண்டோம் நாங்கள்
இக்கட்டிடத்துக்கும் சுதந்திரம் கொஞ்சம் தாருங்கள்
உடலெல்லாம் வலியைச் சுமந்திடும் 
உடனடியாய் விடுதலை தாருங்கள்
மனிதர்களை அடைத்திடும் சிறை அல்லாது
மனிதம் உருவாக்கிடும் கருவறையாய் மாற்றுங்கள்.

Thursday, 4 March 2010

நாய் பாசம்



சிரிக்கச் சொன்னதும்
ஆ வென வாய் திறந்த
அன்பே ஆருயிரே
இந்த பாட்டிக்கு நீங்கள்
இரு கண்களாய்

நன்றிக்கும் விசுவாசத்திற்கும்
இறைவன்கூட உங்களிடம்
வந்து ஏங்குவான் 
நீங்கள் பிழைக்கும் பிழைப்பினை
பிழையென சொல்வது ஏன்

வாலை ஆட்டி வருவாய்
தோல் பாட்டி சிரித்தே மகிழ்வாள்
யாரும் கல்லெடுத்து உங்கள் மீதெறிந்தால்
அவரை சொல்லெடுத்து பாட்டி சுளுக்கெடுப்பாள்

காவல் காக்கும் தெய்வமாய்
ஏவல் கேட்கும் பிள்ளையாய்
ஆதரவோடு இருக்கும் பாட்டியின்
கொஞ்சல்கள் கேட்டு மகிழ்வாய்
ஜாக்கிரதை என்ற எச்சரிக்கை
எதுவுமின்றி...
பிறந்த பாக்கியம் இது
பெருமிதம் கொள்ளுங்கள்.