மேலும் பதிவுகளிடும் பதிவாளர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் தேவைப்படுகிறது என்பது பொதுவாக ஒப்புக்கொண்ட வாதமாக இருந்தாலும் எழுதுபவர் எப்பொழுதுமே தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனெனில் உற்சாகம் என்பது பிறர் மூலம் வந்தால், பிறர் இல்லாத பட்சத்தில் உற்சாகம் தொலைந்து போய்விடும். எழுதும் எழுத்து என்றாவது எங்காவது எப்படியாவது பயன் அளிக்கும் என்ற திடகாத்திரமான நம்பிக்கை ஒன்றே தொடர்ந்து எழுத்துப் பணியில் ஒருவரை இருக்க வைக்கும்.
ஒரு பதிவரின் கருத்துக்கு மாற்று கருத்துத் தெரிவிக்கும்போது அந்த பதிவரின் சிந்தனைக்கு எதிர்மறையான சிந்தனை ஒன்று எழுந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு எழும்போது தனது சிந்தனையை அந்த பதிவர் சரியே என நிரூபிக்கும் நிலைக்கும், எதிர்மறை சிந்தனையாளர் தனது சிந்தனையை சரியே என நிரூபிக்கும் நிலை ஏற்படும் பட்சத்தில் மாற்றுக் கருத்து என்பது மறைந்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆனால் எழுதுகின்ற பதிவர்கள் மனநிலையில் 'அட அவருடைய கருத்தும் பரவாயில்லையே, ஆனா நம்ம கருத்து இது' என எண்ணம் எழும்போது அங்கே கருத்து வேறுபாடுத் தோன்றாது. ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் என எண்ணம் எழும்.
மாற்றுக் கருத்துக்கும், கருத்து வேறுபாடுக்கும் என்ன வித்தியாசம் எனில் ஒருவர் கொண்ட கருத்தினில் வேறுபாட்டு நிலையை எடுத்துக் கொண்டு எழுதியவரின் நிலையை சந்தேகிப்பது, எழுதியவரை குற்றம் சொல்வது என தனிமனிதரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிடுவது போன்ற நிலையை கருத்து வேறுபாடு உருவாக்கிவிடும். ஆனால் மாற்றுக் கருத்து என வரும்போது அங்கே அத்தகைய சூழ்நிலை தவிர்க்கப்பட்டு விடுகிறது. தனிமனிதரின் செயல்பாடுகள் குறித்து எந்த கேள்விக்குறியும் எழுவதில்லை.
பொதுவாக எதனையும் சொந்தப் பிரச்சினையாக நினைக்கும்போது செயல்பாடுகள் குறித்து வருத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நமது எண்ணத்துக்கு எப்படி மற்றொருவர் மாறிப் போகலாம் என எண்ணம் எழும்போது அங்கே எப்படியாவது நமது எண்ணமே சரி என்கிற தோற்றத்தை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஒரு கருத்தினை எடுத்துக்கொள்ளும் விதம் பொருத்தே ஒவ்வொருவரின் எண்ண ஓட்டம் அமைகிறது. மாற்றுக் கருத்து உட்பட. ஆனால் இவர்னா இப்படித்தான் என்கிற மனப்பக்குவம் ஒவ்வொரு பதிவரிடமும் இயற்கையாகவேத் தோன்றுவதால், குறிப்பிட்ட பதிவர் என்ன எழுதினாலும் அந்த எழுத்தின் தன்மைக்கு ஒரு முலாம் பூசப்பட்டு காட்சி அளிப்பதை எவராலும் மறுக்க இயலாது.

எழுத்துகள்
சாம்ராஜ்யங்கள் கட்டவும் அழிக்கவும் உதவின,
விடுதலை வேட்கையைத் தூண்டின,
பாலியல் எண்ணங்களை பரவசப்படுத்தின,
எதிரிகளை உருவாக்கின,
நண்பர்களை கொண்டு வந்து சேர்த்தன,
வரலாறை திரித்தும் திரிக்காமலும் பேசின,
கற்பனைகளை, மந்திரங்களை பிரபலமாக்கின
ஆராய்ச்சிகளுக்கு அடித்தளம் போட்டன
இறைத்தூதர்களுக்கும் ஒரு மொழியாகின
மனதின் பிம்பங்களாயின
மரணமில்லா நிலையும் பெற்றன
இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்?