Thursday, 4 February 2010

கதைப் போட்டி

ஊரில் நடக்கும் அவலங்களையும்
நாட்டில் நடக்கும் அநியாயங்களையும்
பாருக்கு உணர்த்திட வேண்டி
போட்டிக்கு அனுப்பப்பட்ட கதையொன்று
 சேற்றில் கரைந்து போனது.

பாவப்பட்ட மக்களின் உணர்வுகளை
கூவியழுது கேட்கும் உரிமைகளை
கவனத்துடன் எடுத்தாண்ட கதையொன்று
கவனிப்பாரற்று தெருவோரம் குப்பையானது.

தேர்வாகாத கதைகள் சொல்கின்றன
என்னைப்போல் எவரும் சிந்திப்பதில்லையென
மிகவும் இறுமாப்பு கொள்கிறேன்

எப்படிதான் உலகம் திருந்தும்
கண்மூடி இறுக்கம் அடைகிறேன்.

Wednesday, 3 February 2010

தமிழ்மணத்துக்கு காமம் பிடிக்காது

பொதுவாக தமிழ்திரட்டிகளைப் பற்றி நான் எதுவுமே அதிகமாக எழுதுவதில்லை. ஆனால் என்னைப் போன்று அங்கீகாரம் பெற இயலாத பலரது எழுத்துகளை பலருக்கு அறிமுகப்படுத்தும் வகைதனில் திறம்படச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் திரட்டிகள் அனைத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் - டி.வி.டி விமர்சனம்

வெளிநாட்டில் விற்பது எல்லாம் திருட்டு டி.வி.டி வரிசையில் சேராமல் இருப்பது வரை மிகவும் சந்தோசம்.