டெரர் கும்மி விருதுகள் - 2011 காண அழுத்துக உங்களுக்கு பிடித்த உங்கள் பதிவுகளை இணைத்து விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டு சிறப்பியுங்கள்.
ஐயா டெரர் கும்மிகளே, வணக்கமுங்க. உங்களோட விருது பற்றிய அறிவிப்பை இங்கே நான் வெளியிடுறதால நான் போட்டியில இணையறது பாதிக்கும்னா அதுபத்தி கவலை இல்லீங்க. நான் என்னோட பதிவுகளை இணைச்சிட்டேன். மறக்காம நடுவர்களுக்கு அனுப்பி வைச்சிருங்க, சொல்லிட்டேன். அப்படி செய்யலைன்னா 'இது ரத்த பூமி' அப்படிங்கிற வசனத்தை 'இது ரத்த உலகம்' அப்படின்னு ஆக்கிபூடுவேன்.
அட சாமிகளா! நான் நினைச்சதை நீங்க செஞ்சிட்டீங்களே! நான் ஒரு பத்தாயிரம் ரூபாயிக்கு ஒரு விருது அறிவிப்பு செய்யலாம்னு நினைச்சேன். நிசமாத்தேன், கண்துடைப்புக்கு சொல்லலை. கடனை உடனை வாங்கி கஷ்டப்பட்டு எழுதுறாங்களே, இவங்க எழுத்தை ஊக்கம் செய்ய ஒரு அறிவிப்பு செய்யலாம்னு நினைச்சேன். அதுவும் தமிழ்மணம் இந்த வருஷம் விருது அறிவிப்புகள் இல்லைன்னு சொல்லிருச்சா நல்ல வாய்ப்பா இருக்கும்னு நானும் மனப்பால் குடிச்சேன்.
அதோட மட்டுமா. பல அறிவிப்புகள் எல்லாம் மனசுக்குள்ளார வைச்சிருந்தேன். இணையத்தில் எழுதுறவங்களுக்கு ஏகப்பட்ட ஊக்கத்தொகை, விருதுகள் எல்லாம் அறிவிச்சி எழுதறவங்க நாம வெட்டியா ஒன்னும் எழுதலை அப்படின்னு நினைக்க வைக்கனும்னு. ஆனா என்ன ஒன்னு, பயபுள்ளக நான் விளம்பரம் தேடுறதுக்குதான் இப்படி அலையுதுன்னு மனசை குத்தும் குத்தம் சொல்லிப்போடுவாகனு விட்டுட்டேன்.
நீங்க மொக்கை பதிவுகளோட கூடாரம் அப்படின்னு சொல்றதை பார்த்தா என் கண்ணுக்கு அப்படி ஒன்னும் தெரியலையே! நீங்க பண்றதெல்லாம் மொக்கை மறுமொழிகளின் ராஜ்ஜியம் அப்படின்னு சொல்றாங்களே, ம்ம்ம். எத்தனை பேரு நாம எழுதற பதிவுக்கு உருப்படியா ஒரு மறுமொழி கூட வரலைன்னு கவலைபட்டு இருக்காங்க. ஒருவேளை நான் எழுதறது கூட மொக்கை பதிவுகள் அப்படிங்கிற உணர்ச்சி இல்லையோ எனக்கு. ஒரு சினிமா படத்தில சொல்லக்கூடிய மிக முக்கிய கருத்தை சீரியஸா சொல்றதை விட நகைச்சுவையா சொன்னாத்தான் புரியும்னு அந்த காலத்திலேயே என் எஸ் கிருஷ்ணன் ரொம்பவே தீவிரமா செயல்பட்டார், அதுபோல உங்க பதிவுகள் சிலதை படிச்சேன், ரசிச்சேன். நகைச்சுவையை ரசிக்க நான் என்ன நகைக்கடையில செலவு பண்றதுக்கு யோசிக்கிறமாதிரியா யோசிக்கனும். விருது அறிவிப்பு நேரத்தில இப்படி நான் எழுதறது ஒரு வழக்கு நடக்கிற நேரத்துல அந்த வழக்கு பத்தி வழ வழானு எழுதறமாதிரி ஆயிரும், அதுவும் பயபுள்ளைக நான் ஜெயிக்கிறதுக்காக காக்கா பிடிக்குறேனு கோஷம் போடபோறாங்க.
உங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் எழுத்து தகராறு வந்ததை படிச்சேன். அந்த எழுத்து தகராருல இப்படி கூட்டமா வெளியே போயிடீங்க அப்படிங்கிற விவரத்தையும் படிச்சேன். ரொம்ப பேருக்கு மனசு வருத்தம், ரொம்ப பேருக்கு மனசுல சந்தோசம். நீங்க அடிக்கிற கும்மி எழுத்துல, சீரியஸ் எழுத்து எல்லாம் செத்து போகுதுன்னு ரொம்ப பேரு கவலைபட்டாங்களாம். சீரியசான விசயத்தை படிக்க நாலு பேருதான் இருப்பாங்க அப்படிங்கிற உத்தியை கண்டுபிடிச்சி ரஜினி கணக்கா கலக்கலா பாதை போட்டது நீங்க தான். கும்மி அடிச்சாலும் கம்மியான பதிவுகள் தானே போடறீங்க.
போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள். என்னைப் போல பலர் மின்னஞ்சல் மூலமே உங்கள் போட்டியை தெரிந்து கொள்ளும் நிலை இருப்பதாலும், பலருக்கு தெரியாமல் போய்விட வாய்ப்பு இருக்குமென்பதாலும், எனது நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்பதாலும் இந்த இடுகை. அதோட விட்டுருவமா!
இந்த கும்மி பத்தி கொஞ்சம் எழுதிரலாம். கீழே தரப்பட்ட தகவல்கள் தமிழ்வு எனப்படும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அவர்களுக்கு மிக்க நன்றி.