ஒரு குண்டூசியின் நுனி இருமுனைகளில் இருக்கும். குண்டூசியின் நடுவில் அமர்ந்து கொண்டு இருபக்கமும் பார்த்தால் ஒரு பக்க நுனியானது கூர்மையாகவும் மற்றொரு நுனி குண்டாகவும் இருக்கும். இப்போது நம்மால் அந்த குண்டூசியின் இருபக்க நுனியைத் தாண்டி எதுவுமே பார்க்க இயலவில்லை என வைத்துக் கொள்வோம் அதற்காக எதுவுமே இல்லை என முடிவு செய்ய முடியாது. இப்போது எல்லா குண்டூசிகளையும் வட்டமாக சுற்றி வைத்து நடுவில் அமர்ந்து கொள்வோம். எங்கு சுற்றினாலும் ஒரே நுனி மட்டுமே தெரியும். நாம் அமர்ந்து இருப்பது ஒரு பக்க நுனி என்றாலும் குண்டூசியின் தொடக்கம் மத்தியப் பகுதி ஆகிறது. குண்டூசிகளைத் தாண்டி நம்மால் எதுவும் பார்க்க இயலாத போது குண்டூசியின் நுனியை எல்லை எனக் கொள்கிறோம். இப்போது அந்த குண்டூசியின் நுனி நீள்கிறது என கொள்வோம். இவ்வாறாக ஒவ்வொரு குண்டூசியை சென்று அமர்ந்தாலும் மத்திய பகுதியாகவே தோன்றும். இதை அப்படியே பிரபஞ்சத்திற்கு கொண்டு போவோம்.
இந்த பிரபஞ்சத்தில் நாம் தான் மத்திய பகுதியில் இருப்பது போலவும் நாம் பார்க்கும் எல்லா திசைகளிலும் நுனிப்பகுதி ஒரே மாதிரியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நுனிப்பகுதியைத் தாண்டி என்ன இருக்கிறது என்பது நமது பார்வைக்குட்பட்ட பிரபஞ்சத்தினைத் தாண்டி நம்மால் காண இயல்வது இல்லை என்பதால் கற்பனையில் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இந்த பிரபஞ்சம் தொடங்கிய தினம் முதல் வெகுவேகமாக விரிவடைந்து போய்க் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகள் பல நட்சத்திரங்களை உருவாக்குகிறது. நட்சத்திரங்கள் அல்லாத கிரகங்களும் உண்டாகின்றன. பால்வெளி வீதி போல பல வீதிகள், கருந்துளைகள் என நிறைந்து காணப்படுகின்றன. தாயைத் தேடி ஓடும் கன்றுக்குட்டியைப் போல எதையேனும் தேடித்தான் இந்த பிரபஞ்சத்தின் கேலக்சிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றனவா என்றால் உண்மையில் என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. இதில் என்னவெனில் இப்போது நாம் வேறு கேலக்சியில் சென்று அமர்ந்தாலும் அந்த கேலக்சியே மத்தியப்பகுதி என தெரியும். மற்ற கேலக்சிகள் நம்மைவிட்டு ஓடுவது போல் இருக்கும். இப்போது இந்த பிரபஞ்சத்தின் நுனி என சொன்னோமோ அங்கே சென்று அந்த கேலக்சியில் அமர்ந்து கொண்டால் இப்போது கூட அந்த மத்தியப்பகுதி போலவும் மற்ற கேலக்சிகள் விலகிச் செல்வது போலவும் தோன்றும். அப்படியெனில் பிரபஞ்சத்தின் நுனி தான் எது. குண்டூசியின் மறுமுனைக்குச் சென்றால் அங்கிருந்து அது மத்திய பகுதி ஆகும். ஆக குண்டூசியின் நுனி தான் எது.
அதாவது ஒவ்வொரு கேலக்சியில் இருந்தும் மற்ற கேலக்சிகள் விரிவடைந்து செல்கின்றன. இப்போது குண்டூசி எடுத்துக்காட்டு பெரும் குழப்பமாகத் தெரியும். ஆனால் அது அப்படித்தான். ஒவ்வொரு குண்டூசியும் ஒரு கேலக்சி அதற்கு வெளிப்புறமோ உட்புறமோ என இல்லை. எனக்கு வலம் எனில் என் எதிர் நிற்பவருக்கு இடம். அப்படியெனில் பிரபஞ்சத்திற்கு நுனி என்பதே இல்லையா? முடிவே இல்லாத முடிவிலியா என்றெல்லாம் யோசித்தாலும் பிரபஞ்சம் நுனி கொண்டு இருக்கிறது என்றே சொல்கிறார்கள்.
இதைவிட நமது பிரபஞ்சம் போலவே இன்னொரு பிரபஞ்சம் இருக்க வாய்ப்பு உண்டு என்றும் சொல்கிறார்கள். அதில் நம்மைப் போலவே செயல்பட்டு கொண்டு இருக்கும் நபர்கள் உண்டு என கற்பனை பண்ணுகிறார்கள்.
ஏழு பிரபஞ்சங்களில் ஏழு பூமிகள், ஏழு இராதாகிருஷ்ணன்கள் , இப்படி எழுதுவதை போல எழுதிக் கொண்டு இருக்கக்கூடும். இதை இருள் பாய்ச்சல் டார்க் ப்ளோ நிரூபிப்பதாக சொல்கிறார்கள். அதாவது நமது பிரபஞ்சத்தின் மீது உண்டாகும் ஒரு வெளி ஈர்ப்பு விசை மற்றொரு பிரபஞ்சம் மூலம் உண்டாகி இருக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது.
எவரேனும் அறிவியல் அறிந்தவர்கள் விளங்க வைக்கட்டும்.