24. காலத்தில் காலம் இல்லை.
இந்த உலகில் எதுவுமே தெரியாமல் இருந்து கொள்வது கூட ஒரு வகையில் பேரின்பம்தான். நாம் பேசுகின்ற பல விசயங்கள் பெரும்பாலும் பிறரைப் பற்றியதாகவே இருக்கிறது. புறங்கூறுதல் போலவே புறங்கூறுதலை கேட்பதும் மோசமானது. ஒருவர் புறம் பேச ஆரம்பித்தவுடன் நாம் விலகியே இருந்தாலும் சிறிது நேரத்தில் அப்பேச்சில் ஈர்க்கப்பட்டு நாமும் அதில் இணைந்து விடுகிறோம். அதே வேளையில் அறிவியல் வளர்ச்சி, புரட்சி என ஒரு புறம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, மறுபுறம் தங்களது நம்பிக்கைகளை எல்லாம் அத்தனை எளிதாக விட்டுத்தர முன் வராமல் மகிழ்வோடு இருந்து கொள்ளவே பலரும் விருப்பம் கொள்கின்றனர்.
பாமாவும், நாச்சியாரும் இரவு எட்டு மணிக்கு குண்டத்தூர் வந்தடைந்தனர். அங்கு இருந்த ஒரு உணவகத்தில் உணவு அருந்திவிட்டு பெருமாள்பட்டிக்கு நடக்கத் தொடங்கினர். இருள் என்பது ஒளியற்ற ஒரு நிலை. அதே இருள் மனதில் இருப்பின் அதை அறிவற்ற நிலை என்றே குறிப்பிடுகின்றனர். பாமரத்தனம் என்பது அறிவற்ற நிலை என்பதைக் காட்டிலும் தெளிவற்ற நிலை என்றே குறிப்பிடலாம். பாமரத்தனத்தை வெகுளித்தனம் என எண்ணுபவர்களும் இருக்கின்றனர். நிலாவின் வெளிச்சத்தில் சாலை தெளிவாகவே தெரிந்தது.
''பாமா, ஆழ்வார் திருநகரி பத்தி ஏதேனும் உனக்கு முன் ஞாபகம் இருக்கா'' நாச்சியாரின் பாமரத்தனமான கேள்வி அது.
''இல்லைம்மா, எனக்கு அப்படி ஒன்னும் தெரியலைம்மா. நம்மாழ்வார் பத்தி படிச்சதால தெரிஞ்சிகிட்ட ஊருதான் அது, வாழ்நாளில் கட்டாயம் போய் பாக்கனும்னு நினைச்ச ஊருல ஒன்னு அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியலம்மா. அதிலயும் நான் இன்னும் திருவரங்கமோ, திருவில்லிபுத்தூரோ போனது இல்லைம்மா''
''ஒருவேளை உனக்கே தெரியாம இருக்கும், எதுக்கும் நீ ஆழ்ந்த தியானம் இருந்து பாரு''
''பண்றேன்மா, ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து இப்படி ஒரு எண்ணம் எல்லாம் எனக்கு வந்ததே இல்லை. அப்பாதான் எனக்கு பெருமாள் அறிமுகம் பண்ணி வைச்சார். நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிப்பார், அதில உண்டான ஈர்ப்புதான்ம்மா மற்றபடி என்ன சொல்றதுனு தெரியலை அதுவும் உங்களோட இந்த உறவு எல்லாம் எனக்கு நிறைய மகிழ்ச்சி தரக்கூடியதா இருக்கு''
''தியானம் இருந்து பாரு பாமா''
''சரிம்மா''
பெருமாள் கோவிலின் கோபுரத்தில் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தது. நாச்சியார் பாமாவின் தெய்வீகத் தொடர்பு குறித்து எண்ணிக் கொண்டு இருந்தார். ஆனால் பாமாவுக்கு பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் முளைத்து விட வேண்டும் என்பதிலும், நாராயணிக்கு கை கால்கள் வர வேண்டும் என்பதிலும் இருந்தது.
நல்ல மனிதர்களாக இருப்பதுவும், நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களோடு பிரியாமல் சேர்ந்து இருப்பதுவும் இன்றைய காலத்தில் பெரிய விசயம்தான். அதே போல நமது செயல்களை எந்த ஒரு காலத்தில் நினைத்துப் பார்த்தாலும் நாம் தலை நிமிர்ந்து இருக்கும்படியாக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு வாழ்வை பாமா சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை. படித்தோம், வேலைக்குச் சென்றோம் என்று இருக்கும் என்றுதான் எண்ணி இருந்தாள். இந்த உலகில் காலத்தின் தேவைக்கு ஏற்ப காலம் விசயங்களை நடத்திக் கொள்ளும். காலத்தின் தேவை, தேவையாகவே இருந்திருக்கவில்லை என காலமும் ஒரு கணத்தில் உணர்த்தி வைக்கும். இந்த மொத்த அண்டவெளியும் காலத்திற்கானது இல்லை, காலத்தில் காலமும் இல்லை.
சனிக்கிழமை அன்று அதிகாலையில் யசோதையின் வீட்டை அடைந்தாள் பாமா.
''சொன்ன நேரத்திற்கு சரியா வந்துட்ட பாமா''
''காலத்தில் காலம் இல்லை யசோ, வண்ணத்துப்பூச்சியை கவனிச்சிக்கிட்டதுக்கு நன்றி''
''யசோ, என்னோட அத்தை கூப்பிடற மாதிரியே இருக்கு. உன்னோட பேரழகுல நானே மயங்கிருவேன் போல. தெய்வீகக்கலையம்சம் உனக்கு பாமா''
''உங்க அத்தை உங்களுக்கு ஒருவேளை அந்த யசோதையை பார்த்துதான் பெயர் வைச்சி இருப்பாங்க போல''
''நல்லாவே பேசற பாமா''
''உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லனும், எவ்வளவு பெரிய உதவி நீங்க பண்றது''
யசோதை முகம் மலர்ந்தாள். இருவரும் மருத்துவர் மாறனை சந்திக்கச் சென்றனர்.
மருத்துவர் மாறன் யசோதைக்காக காத்து இருந்தவர் போல வரவேற்றார். பட்டாம்பூச்சியைப் பார்த்தவர் வியப்பு அடைந்தார்.
''நான் கொடுக்கப்போற இந்த ட்ரீட்மென்ட்ல ஒருவேளை இந்த பட்டாம்பூச்சி இறந்து போகலாம், அதுக்காக என் மேல பழி சுமத்தக் கூடாது. இப்படி டெவெலப்மென்ட் ஆகாம இத்தனை நாட்கள் இது உயிரோட இருக்கிறதே அபூர்வம்தான்''
''என்ன சொல்றீங்க டாக்டர்''
மாறன் தான் எழுதி வைத்து இருந்த விசயத்தை அவர்களிடம் காண்பித்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். இவ்வுலகில் உருவான அத்தனை உயிரினங்களும் தங்களுக்குள் பெரும் அதிசயத்தைப் புதைத்து வைத்து இருக்கிறது. பாமா மெய் மறந்து அமர்ந்து இருந்தாள்.
(தொடரும்)

No comments:
Post a Comment