சுபத்ராவை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று அவளது வீட்டிற்கு சென்றேன். வாடகை வீடு கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை கடினமாக இல்லை. சுபத்ரா பற்றி கேட்டதும் மாடியினை காட்டினார்கள். பின்னர் சிறிது நேரம் யோசித்துவிட்டு அவர்களே சென்று சுபத்ராவை அழைத்து வந்தார்கள். என்னைப் பார்த்ததும் சுபத்ரா முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. என்னோட நண்பர் தான் என அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை அவள் தங்கி இருக்கும் மாடிக்கு அழைத்துச் சென்றாள்.
''சுபா, என் மீது கோபமா?''
''இல்லைடா, நான் உன் மேல சின்ன வயசில இருந்து ஆசை வைச்சது என்னமோ உண்மைதான். அது காதல்னு இன்னைக்கு வரைக்கும் நம்புறேன். இந்த ஊருக்கு வந்ததே உன்னைப் பார்க்கணும் பேசணும்னு தான். ஆனால் எல்லாம் தலைகீழா இருக்கு. கோரன் மூலம் உன்னை மிரட்டி கூட பார்த்தேன். எப்ப என்னை நீ வீட்டை விட்டு வெளியே அனுப்புனியோ அப்பவே நீ வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்டா.
முயற்சி செஞ்சிட்டு முடியலைன்னு செத்துரக்கூடாதுனு எங்கம்மா அடிக்கடி சொல்லும். ஆனா உன்கிட்ட என்னால முயற்சி கூட செய்ய முடியலை. ஏன்டா என்னை நீ எப்படி மறந்த? எத்தனை ஆசையா என்னோட பழகின பேசின, எப்படிடா உன்னால முடிஞ்சது. இனிமே உன் வழியில நான் குறுக்கே வரலை. நீ என்னைப் பார்க்கறது பேசறது எல்லாம் நிறுத்திக்கோ. இதுவே நம்ம கடைசி சந்திப்பா இருக்கட்டும். நான் இனிமே உன்கூட பேசவோ பழகவோ மாட்டேன்''
''சுபா''
''போடா, எத்தனை நம்பிக்கையா நான் இருந்தேன்னு உனக்கு எங்கடா தெரியப்போகுது. கோரன் உன்னை கொல்வானு சொன்னப்ப என்னால அதை தாங்கிக்க முடியலை. கிளம்பிப் போடா, அவளோட நிம்மதியா இரு''
''சுபா, என்னை மன்னிச்சிரு, நான் நீ இப்படி நினைப்ப பழகுவேணு நான் பழகலை. ஆனா உனக்குள்ள இந்த காதல் எல்லாம் எனக்குத் தெரியாது. அப்படியே தெரிஞ்சி இருந்தாலும் உன்னோட குணத்திற்கு நான் பொருந்த மாட்டேன்''
''கிளம்பிப் போடா''
''அதில்லை சுபா''
''போடான்னு சொல்றேன்ல''
அதுக்கு மேல் அங்கிருக்க கூடாது என வீடு வந்து சேர்ந்தேன். காயத்ரியிடம் எல்லா விசயங்களையும் சொன்ன பின்னர் அவளுக்குள் உண்டான நிம்மதியை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.
கர்மவினை என்பது எல்லாம் என்னவென இதுவரை கண்டு கொண்டதும் இல்லை. எதற்கு எது நடக்கிறது என இதுவரை புரிந்த பாடில்லை. அன்று இரவு சற்று நிம்மதியாக தூங்கமுடிந்தது.
மாதங்கள் கடந்து போவதில் தாமதம் ஏற்படவில்லை. கல்லூரி வாழ்க்கை வேகமாக கடந்து போய்க்கொண்டு இருந்தது. இந்த ஒரு வருடம் எவ்வித துப்பறியும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. கல்லூரி முடியும் காலம் வந்தது. அனைவரும் பிரிந்து சென்றனர். நானும் காயத்ரியும் மேற்கொண்டு படிப்பது குறித்து யோசித்துக் கொண்டு இருந்தோம்.
எந்த ஒரு விசயமும் அப்படியே முடிந்து போவது இல்லை என்பது போல அன்று இரவு கோரன் எனது வீட்டிற்கு வந்து இருந்தான். இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவனை வீட்டிற்குள் அழைப்பதா வேண்டாமா என யோசித்துக் கொண்டு இருந்தபோது எனது அம்மா அவனை உள்ளே வாப்பா என அழைத்து அமரச் சொன்னார்.
''என்னடா முருகேசு எப்படி இருக்க''
''நல்லா இருக்கேன் கோரன், நீ இதுவரை எங்க போன''
''இப்போ நாங்க கரியநேந்தல் போய்ட்டோம். அங்கே ஒரு சின்ன பிசினஸ் வைச்சி நடத்திட்டு இருக்கோம். உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சி அதான் வந்தேன். சுபத்ரா எங்கே போயிட்டா''
''அவ சொந்த ஊருக்குப் போய்ட்டா, இங்கே வந்த வேலை முடிஞ்சதுனு கிளம்பிட்டா''
''அவளுக்கு போன் பண்ணினேன், எடுக்கலை. நம்பர் மாத்திட்டாளா''
''ஆமா''
''அவ நம்பர் கொடு''
''புது நம்பர் என்கிட்டே இல்லை, அவளோட பழக வேணாம்னு சொல்லிட்டா''
அதற்குள் என் அம்மா அவனுக்கு பலகாரங்கள், காபி கொண்டு வந்து வைத்தார். அவனும் பலகாரங்கள் சாப்பிட்டுக்கொண்டே காபி குடித்து முடித்தான்.
''இங்கே வேணும்னா தங்கிக்கப்பா''
''இல்லைம்மா, அவனுக்கு வேற வேலை இருக்கு, அவன் போகணும்''
''இல்லைடா முருகேசு, இங்கே தங்கிட்டுதான் நான் காலையில போகணும்''
''எங்கே தங்கப்போற''
''தெரிஞ்சவங்க வீட்டில''
''இங்கே தங்குப்பா''
''வேணாம்மா''
''சரிடா, நான் கிளம்பறேன்''
கோரன் அங்கிருந்து கிளம்பினான். எதற்கு வந்தான், எதற்கு சுபத்ராவை விசாரித்தான் என எனக்குப் புரியவே இல்லை. அவனை பின்தொடர நினைத்தேன். பிறகு வேணாம் என விட்டுவிட்டேன்.
அதிகாலையில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. புதிய எண் கண்டு திடுக்கிட்டேன். சிறிது யோசனைக்குப் பிறகு எடுத்தேன்.
''கோரனை நான் கொன்னுட்டேன்டா''
''சுபா''
''நேத்து உன் வீட்டுக்கு வந்துட்டு என்னைத் தேடி எங்க ஊருக்கு வந்துட்டான், என்னை கொலை பண்ண முயற்சி செஞ்சான். நான் அவனை கொலை பண்ணிட்டேன்''
''என்ன சொல்ற சுபா, போலிஸ் கேசு''
''நீ பேசமா இருடா''
சுபத்ரா இணைப்பைத் துண்டித்தாள். அவளது எண்ணுக்கு அழைத்தபோது அவள் எடுக்கவே இல்லை. தகவல் எதற்கு சொல்ல வேண்டும்.
சில மணி நேரத்தில் எனது வீட்டு வாசலில் காவல் அதிகாரிகள் வந்து நின்றனர்.
''நீதானே முருகேசு''
கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.
(தொடரும்)