பகுதி 7
8. நினைவுகள்
திருமால், அவரது மனைவி யோகலட்சுமி, மகன் தீபக், மகள் தீபா என அனைவரும் வந்தார்கள். பாரதியையும், கிருத்திகாவையும் நன்றாக நினைவு இருந்தது.
''ரொம்ப நேரமா காத்து இருக்கீங்களா?''
''இல்லை சார்''
''சரி உள்ளே வாங்க''
வீட்டினுள் நுழைந்ததும் அவர்களை அமரச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குச் சென்றார் யோகலட்சுமி. தாங்கள் வாங்கி வந்த பழங்களை எடுத்துத் தந்தார்கள். தீபக் வாங்கிக்கொண்டு நன்றி சொன்னான். அவனது பேச்சு அத்தனை இனிமையாக இருந்தது.
''என்ன பாரதி, என்ன விஷயம் சொல்லுங்க''
''பெருமாள் தாத்தா பிறந்துட்டார், ரெட்டக்குழந்தைக, தாயும் சேயும் சுகமாக இருக்காங்க''
''ரொம்ப சந்தோசம், கேட்கவே மனசு மகிழ்ச்சியா இருக்கு''
''முக்காலமும் உங்களுக்குத் தெரியும் தானே''
அப்போது நீர்மோர் கொண்டு வந்து வைத்தார் யோகலட்சுமி.
''அக்கா, நீங்கதானே சொன்னீங்க, சாருக்கு முக்காலமும் தெரியும்னு''
கிருத்திகா சொன்னதும் யோகலட்சுமி சிரித்தவண்ணம் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார். பாரதி சாத்திரம்பட்டி சென்ற விசயம்தனை சுருக்கமாக சொன்னாள்.
''எனக்கு அப்படி எல்லாம் ஒண்ணும் தெரியாது. முக்காலம் பற்றிய கலை சொல்லித்தாங்கனு குழந்தைகள் கேட்பாங்க, நான் சும்மா சரினு சொல்வேன். மற்றபடி எனக்கு எக்காலமும் தெரியாது''
''மாதவிக்கு எல்லாம் தெரியுதே''
''அப்போ நீங்க அதை மாதவிகிட்டதான் கேட்கணும். என்கிட்டே கேட்டா எப்படி? பெருமாள் தாத்தா பிறந்தார்னு சொன்னது நீங்க, அவர் எப்படி பிறக்க முடியும். இறந்தவர் பிறப்பது இல்லை. நினைவுகளுடனே மனிதர்கள் இறந்து போவார்கள். டிமென்சியா நோய் பற்றி நீங்க படிச்சி இருப்பீங்கதானே. ஒரு மனிசனோட மூளைகளில் ஏற்படும் பாதிப்பு நினைவு, மொழி செயல்பாடு என எல்லாத்தையும் சிதைச்சிரும். அப்படி இருக்கறப்ப ஒரு மனிசன் இறந்துட்டா அவனது செல்களின் மூலம் நினைவுகளை திரும்ப கொண்டு வர முடியும் அப்படிங்கிறது முடியாத காரியம். இப்போ இனி வரும் காலங்களில் என்ன நடக்கும்னு யூகிச்சி சொல்லக்கூடிய திறன்கள் என்கிட்டே இருக்குறமாதிரி தெரியலை. மாதவிக்கு அப்படி ஒரு சக்தி இருக்கும்னா அது ஆச்சரியம்தான்''
''மெடிக்கல் பத்தி எல்லாம் பேசறீங்க, நீங்க என்ன படிச்சி இருக்கீங்க'' பாரதியின் ஆர்வம் அதிகம் ஆனது.
''நான் பத்தாவது வரைதான் படிச்சி இருக்கேன். மேற்கொண்டு படிக்க எனக்கு விருப்பம் இல்லை. இவளும் பத்தாவது வரைதான் படிச்சி இருக்கா. ஆனா இப்போ பல குழந்தைகளைப் படிக்க வைக்கிற திருப்தி இருக்கு. நினைவு வைச்சிக்கிற செல்கள் பத்தி உங்க அபிப்ராயம் என்ன''
தீபக், தீபா ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தார்கள். கிருத்திகா அவளை கவனித்த வண்ணம் அமர்ந்து இருந்தாள். திருமால் என்ன பேசுகிறார் என அந்த சிறு குழந்தைகளின் கவனிப்பு கிருத்திகாவிற்கு ஆச்சரியம் தருவதாக அமைந்து இருந்தது. பாரதிதான் பதில் சொன்னாள்.
''நம்ம உடலில் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும் செல்கள் நினைவுத்தன்மை கொண்டவைகள். ஒரு வேக்சீன் போட்டம்னா, அவை நமது உடலில் உள்ள செல்களைத் தூண்டி ஆண்டிபாடீஸ் உண்டாக்கும் அப்படியே நினைவு செல்கள் உண்டாக்கும். அது மட்டுமில்லாம திருப்பி அதே நோய் வந்து தாக்கினா அதை சரியாக கணிச்சி நம்மை பாதுகாக்கும்.''
''அந்த செல்களின் பணி அது. இப்போ கருவை உண்டாக்கும் செல்கள் எல்லா செயல்களை தன்னகத்தே வைத்து இருக்கும்போது தாய் தந்தை நினைவுகளை சுமந்து வருதா''
பாரதிக்கு அந்த கேள்வி சற்று குழப்பமாக இருந்தது. நினைவுகளை சுமந்து வருமா என தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். தீபக் என்ற யோகலட்சுமியின் குரல் கேட்டு தீபக் சமையல் அறைக்கு சென்றான்.
அவனைத் தொடர்ந்து தீபாவும் சென்றாள்.
''வாய்ப்பு இல்லை'' பாரதி சட்டென முடித்தாள்.
''அப்படின்னா பெருமாள் தாத்தா நினைவுகளுடன் வலம் வரமாட்டார். அந்த குழந்தைகள் சாதாரண குழந்தைகள்தான். ஆனா உங்களுக்கு வாசன் எல்லோருக்கும் அது பெருமாள் தாத்தா. உங்கள் எண்ணங்களை அந்த குழந்தைகள் மீது திணிக்கப் பார்ப்பீங்க''
பாரதி மிகவும் அமைதியானாள். தீபக், தீபா குடித்த வண்ணம் எங்கே அமர்ந்து இருந்தார்களோ அங்கே அமர்ந்து இருந்தார்கள்.
''மாதவி, உங்களைப் பார்க்க கிருத்திகாவை என்னிடம் கூப்பிட்டு போகச் சொன்னாள்''
''என்ன காரணம் என நீங்க கேட்டு இருக்கலாமே''
''என்ன காரணம்னு நீங்க சொல்லுங்க''
''எதற்கும் ஒரு துணையாக இருக்கட்டுமேனு இருக்கலாம். எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மனிதர்கள் அப்படின்னு ஜோசியர்கள், நாடி பார்ப்பவர்கள். மை தடவி சொல்பவர்கள், குறி பார்ப்பவர்கள், ரேகை பார்ப்பவர்கள் அப்படின்னு நிறைய பேர் இந்த உலகத்தில் இருக்காங்க. அவர்களுக்கு அது வேலை. ஒரு சிலர் சொல்வது நடக்கிறது அப்படின்னு நம்பும் மனிதர்கள் இப்போ மட்டுமில்லை எப்பவுமே உண்டு, இப்போ அதிகமாகிட்டே வராங்க. அதுமாதிரி எதிர்காலம் சொல்றது மாதிரி நான் இருப்பேன்னு நீங்க நினைச்சா என்னை மன்னிக்கனும் எனக்கு அப்படிப்பட்ட ஞானம் அறிவு சிந்தனை எதுவுமே இல்லை.
மாதவிகிட்ட நான் இதுவரை ஒரே ஒருமுறைதான் பேசி இருக்கேன். அதுவும் திருமலைக்குப் போகறப்பபார்த்துப் பேசியதோடு சரி. ரொம்ப அறிவான பொண்ணு. ஆனா நீங்க சொல்றமாதிரி முக்காலமும் உணர்ந்த பெண் மாதிரி எனக்குத் தோணலை. எதேச்சையாக அவங்க சொல்றதுக்கு நீங்க அர்த்தம் கண்டுபிடிச்சி அந்த பொண்ணுக்கு எல்லாம் தெரிஞ்சி இருக்கும்னு நம்புறீங்க''
''நீங்க சொன்னதுதான் சார் உண்மை, இவதான் தேவை இல்லாம மாதவியை கடவுள் ரேஞ்சுக்கு பேசுறா''
கிருத்திகா பட்டென சொன்னதும் திருமால் சிரித்தார். அப்போது பலகாரங்கள் கொண்டு வந்து வைத்தார் யோகலட்சுமி.
''அக்கா, அதுக்குள்ளே பண்ணிட்டீங்களா, கடையில் வாங்க மாட்டீங்களா''
''இல்லைம்மா, இதெல்லாம் சின்ன சின்ன வேலைகள்தானே''
''நான் கடவுள் ரேஞ்சுக்கு எல்லாம் மாதவியைப் பத்தி பேசலை. ஆனா அவளுக்கு சில விசயங்கள் முன்கூட்டியே தெரியுது. அவள்கிட்ட பழகினப்ப எனக்கு எதுவும் தெரியலை. ஆனா அவ பேசறதை வைச்சிப் பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது. அவளுக்கு பல விசயங்கள் தெரியுது''
''பாரதி, நீங்க கிருத்திகா பேச்சு கேளுங்க. நம்முடைய செல்களுக்கு எப்படி சரியா கால் உண்டாக்கணும், கை உண்டாக்கணும்னு தெரியும். எல்லா குண நலன்கள் கொண்ட செல்கள் எப்படி மற்ற குணநலன்களை மறைச்சி ஒன்றை மட்டும் உருவாக்க துணிகிறது''
பாரதிக்கு இது சற்று ஆச்சரியமாக இருந்தது. இப்படி எல்லாம் இவர் எங்கு சென்று படித்தார் என்றே கேட்க வேண்டும் போலிருந்தது. கிருத்திகா குறுக்கிட்டாள்.
''எல்லாமே கருவில் சேர்த்து வைக்கப்பட்டது. அது திட்டமிட்டபடி வெளிப்படுகிறது. இதை ஆர்கநோஜெநிசிஸ் அப்படின்னு சொல்வாங்க. நாங்க அதை எல்லாம் படிக்கிறது இல்லை. எங்க மருத்துவத்தில் எப்படி என்ன நோய் இதுமாதிரி படிப்போம். இவதான் ஜெனிடிக்ஸ் எல்லாம் படிக்கணும்னு ஆர் என் ஏ எல்லாம் படிச்சிட்டு இருப்பா. எனக்கு ஒரு டாக்டர் ஆனா போதும்''
''கிருத்தி, ஆர் என் ஏ பத்தி இப்போ எதுக்கு? நான் இன்னும் அதுபத்தி வாசிக்கலை, உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க''
''இப்போ ஆண் பெண் இணைந்து உண்டாகிற கரு ஒரு குழந்தையா மாறும்போது இருவரின் விசயங்களை கொண்டு வருது. ஆனா பெருமாள் தாத்தா உருவான கரு அப்படி இல்லை. விஷ்ணுப்பிரியன் ஏதோ பண்ணிதான் அந்த செல்களை அவர் ஒரு குழந்தையா உருவாக வழி பண்ணி இருக்கார். எனக்கும் தெரியலை பாரதி. இப்பவாச்சும் நம்புங்க எனக்கு முக்காலம் மட்டுமில்லை இக்காலமும் தெரியாது.''
கிருத்திகா என்ன நினைத்தாள் எனத் தெரியவில்லை. அங்கிருந்த பலகாரங்கள் சாப்பிட்டு முடித்தவள் இதற்கு மேல் நமக்கு என்ன வேலை என்பதுபோல பாரதியைப் பார்த்தாள். பாரதிக்கு திருமாலிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. இவருக்கு இப்படி இத்தனை விசயங்கள் தெரிகிறது.
மனிதர்களுக்கு தனிப்பட்ட ஆர்வம் என்று ஒன்று உண்டு. மனதில் ஒன்றை நிறுத்திக்கொள்ளும் தொடர்ந்து கொள்ளும் ஆசை அது. ஒரு சிலர் அதிலேயே ஊறி இருப்பார்கள். அதைத் தவிர வேறு எதையும் எண்ணிப் பார்க்கமாட்டார்கள். சிலருக்கு பல விசயங்களில் ஆர்வம் இருக்கும். பல்வேறு விசயங்களில் ஆர்வம் கொண்டவர்கள் அவர்களது சிந்தனையை குறிப்பிட்ட வழியில் செலுத்தினால் மட்டுமே ஒன்றில் சாதனை பண்ண இயலும். திருமால் பல்வேறு விசயங்களில் ஆர்வம் கொண்டு இருப்பவராகவே தென்பட்டது.
''போவோமாயா''
''இரு கிருத்தி, கொஞ்ச நேரம் இருக்கலாம்''
''சாப்பாடு தயாராகிக் கொண்டு இருக்கு, சாப்பிட்டே போங்க, வேற எதுவும் கேட்கணுமா?''
''உங்ககிட்ட பேசிட்டே இருக்கலாம் போல இருக்கு, வார வாரம் ஏதேனும் ஒரு நேரம் தந்தா உங்களை வந்து பார்க்கிறேன்''
''ஆசிரமத்திற்கு வார வாரம் வாங்க, நான் பெரும்பாலும் அங்கதான் இருப்பேன்.
பாரதிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது மாதவியிடம் இருந்து போன் வந்தது. வாசனுக்கு என்ன நேர இருந்தது, குளத்தூரில் என்ன நடந்தது என எல்லா விசயங்களையும் சொன்னவள் கிருத்திகா நான் சாதாரண பொண்ணுனு சொன்னாளா அதுக்குத்தான் அவளை கூப்பிட்டு போக சொன்னேன். நீ முன்ன பார்த்த திருமால் வேற இப்போ பார்த்த திருமால் வேறனு தெரிஞ்சிகிட்டியா என்ற அவளது சொல் கேட்டு அப்படியே போனை திருமாலிடம் எதுவும் சொல்லாமல் கொடுத்தாள்.
''எப்படிமா என்கிட்டே போன் வந்ததுன்னு கண்டுபிடிச்ச, நல்லா இருக்கேன்மா. சாத்திரம்பட்டி போனதாக கேள்விபட்டேன்''
மறுமுனையில் மாதவி என்ன சொல்கிறாள் என பாரதிக்கு கேட்கவில்லை. ஆனால் போன் கைமாறியது எப்படி அவள் அறிந்தாள் என ஆச்சரியம் கொண்டாள்.
''மெடிக்கல் படிக்கிற பொண்ணுகதானே, நிறைய சந்தேகம் இருக்கத்தான் செய்யும். நீ பண்ணப்போற மூளை ஆராய்ச்சிக்கு எனது வாழ்த்துகள். பாரதிகிட்ட இப்பதான் சொல்லிட்டு இருந்தேன் உன்னோட ஒரே ஒரு தரம் தான் பேசினேன்னு''
பாரதிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. மாதவி குறித்து சற்று எரிச்சல் உண்டாகத் தொடங்கியது. எதற்கு தன்னிடம் அவள் குறித்த விசயங்களைச் சொல்ல மறுக்கிறாள் எனும் கோபத்தின் வெளிப்பாடு அது.
''சரிமா, பாரதிகிட்ட கொடுக்கிறேன், நீ சொன்னமாதிரி பாரதி முகம் கோபமாகத்தான் மாறிக்கிட்டு வருது''
அந்த வார்த்தைகள் பாரதியை மேலும் ஆத்திரமூட்டியது. தன்னை கட்டுபாட்டில் வைத்துக் கொண்டாள்.
''சரி மாதவி, அப்புறம் பேசறேன்''
எதுவும் பேசாமல் துண்டித்தாள். அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாதவளாய் பாரதி தென்பட்டாள். கிருத்திகாதான் பாரதியை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றாள். பாரதியின் கண்கள் குளமாகின. கிருத்திகா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் பாரதி கேட்பதாக இல்லை. மாதவியின் செயல்கள் தனக்கு எரிச்சல் அளிப்பதாக அழுகையின் ஊடே சொன்னாள்.
''என்னை எவளோனு அவ நினைகிறதால என்கிட்ட கூட சொல்லமாட்டேன் அப்படின்னு அடம் பிடிக்கிறா, அப்படி சொல்லாட்டியும் பரவாயில்லை எதுக்கு இப்படி பூடகமாகவே பேசணும். என்னை வெறுப்பேத்த இப்படி பண்றா. அங்க என்னோட பெரியம்மா முன்னமே வந்து இருக்கக்கூடாதா மாதவினு சொல்றாங்க. இவளுக்கு அப்படி ஏதேனும் தெரிஞ்சி இருந்தா எங்க பெரியப்பாவை எதுக்கு இப்படி தனியே தவிக்க விடனும்''
''விடுயா, அதைப் பத்தி எதுவும் நினைக்காதே. வா, சாப்பிட்டு கிளம்புவோம், சார் பார்த்தா தப்பா நினைப்பார். சொன்ன கேளுயா''
''இல்லை கிருத்தி, லீவு வரப்ப நேரா மாதவியை சந்திச்சி பேசணும். அவ என்னதான் மனசில நினைச்சிட்டு இருக்கா''
''சரிய்யா இப்பா வாய்யா போகலாம்''
பாரதியின் மனம் துடிதுடித்துக் கொண்டு இருந்தது.
(தொடரும்)

No comments:
Post a Comment