அவனைக் கொன்றுவிட மனம் துடித்தது. அன்றே வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். என்னை இரு என சொல்ல எவருக்குமே தைரியம் இல்லை. எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது. எவரேனும் நமக்குத் தேவைப்படுவார்கள் என்றுதானே நாம் கொடுமைகளை பொறுத்துக் கொள்கிறோம். கோபமாக வெளியேறினேன். வீட்டுக்கு வந்ததும் அப்பா கடுமையாகவே சத்தம் போட்டார். இதுக்குனு வேலைய விடுவியாம்மா, சுத்த அறிவுகெட்ட ஜென்மம் நீ என்றார். உங்களுக்கு ரொம்ப அறிவு, திட்டுறாராம் திட்டு. நீ செஞ்சது சரிதான் உனக்காச்சும் தைரியம் இருக்கே என்றார் அம்மா. காவ்யாவிற்கு போன் செய்தேன். அடியேய் உன்னைப்பத்தி கேவலமா பேஸ்புக்ல ஒருத்தன் எழுதி இருக்கான். நீ ஒரு வேசினு வேற எவனு தெரியலைடி. அந்த கௌதமன்தான் பண்ணி இருப்பான். ஏன்டீ? அவனை ஓங்கி ஒரு அறைவிட்டேன் அந்த கடுப்பில் பண்ணி இருப்பான் என்றேன். உன்ட்ட என்னடி சொன்னேன், பேசாம ஒதுங்கிப் போயிருக்கலாம்ல என்றாள். சரிடீ என சொல்லிவிட்டு போலிஸிடம் புகார் சொன்னேன். இனி வேலை தேட வேண்டும். சிறிது நேரத்தில் கௌதமன் போன் செய்தான். அந்த பேஸ்புக் ரிமூவ் பண்ணிட்டேன். புகாரை வாபஸ் வாங்கு என்றான். இணைப்புதனை துண்டித்தேன் இச்சமூகத்தில் மன்னிப்பு கிடைக்கும் என்ற தைரியம் பாவம் செய்யத் தூண்டுகிறது. சாவட்டும்.
எனது இன்னொரு தோழி சியாமளினி மூலம் வேறு ஒரு வேலை நான்கே நாட்களில் கிடைத்தது. காவ்யா அவளது எண்ணை மாற்றி இருந்தாள். எனக்கு புது எண் தரவில்லை . கௌதமன் என் மீது பெரும் வெறியில் இருந்து இருக்க வேண்டும் அவனை பலர் பேஸ்புக்கில் காறித்துப்பி விடும்படி ஒரு காரியம் செய்து இருந்தேன் தண்டனை தந்த திருப்தி எனக்குள் இருந்தது. ஆம்பள பசங்க அப்படித்தான் என சில பெண்களின் சப்பைக்கட்டு வேறு. வலி தாங்கிப் பழகியவர்கள். கௌதமன் வேலையை ரிசைன் பண்ணியதாக தகவல் வந்தது. அவன் வேறு எங்கேனும் சென்று திருந்தினால் சரி என இருந்தேன். முதல் நாள். புது வேலை. ஐ ஆம் ஶ்ரீதர் என வந்து நின்றவனைப் பார்த்ததும் என் கண்கள் காதல் கொள்ளத்துடித்தன. யுவர் ப்ரொஜக்ட் லீடர் காயத்ரி லெட் மீ இன்ட்ரடியூஸ் அவர் கொலீக்ஸ் டூ யூ. தேன் ஒலி ஒவ்வொருவராக அறிமுகம் முடிந்தது எனது இருக்கையில் அமர்ந்தேன். பெரிய அலுவலகம் எல்லாம் கிடையாது. ஆரம்பித்து ஒரு மூன்று வருடங்கள் ஆகி இருந்தது. எட்டு பேர் கொண்ட வேலை இடம். ஆண்கள் மூன்று பெண்கள் ஐந்து. மேலும் பத்து பேர் வீட்டில் இருந்து வேலை செய்வார்கள். மொத்தம் 18 பேர் மட்டுமே. சியாமளினி பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. என்னைவிட பேரழகு. சிறு வயதிலிருந்து தோழி. அவள் ஒரு டாக்டர். மாதம் ஒரு முறை சந்திக்கும் வழக்கம் உண்டு. அவளிடம் நிறைய பேசுவதுண்டு. எங்கள் வீட்டு குடும்ப டாக்டர். அப்பா அம்மாவுக்கு ஏதேனும் என்றால் அவள்தான். வயது 24. மாநிறம். நல்ல உயரம்.
அவளுக்கு ஒரு காதலன் உண்டு பெயர் டாக்டர் சியாமளன். இருவரும் ஒரே கிளினிக்கில் வேலை பார்த்தனர் சியாமளனின் நண்பரின் கம்பெனிதான் நான் வேலைக்கு சேர்ந்து இருப்பது. நல்ல சம்பளம். நல்ல மனிதர்கள். ஆனால் ஶ்ரீதர்?! கௌதமன் போல இருப்பானோ என சந்தேகம் வந்தது. அடுத்தநாள் கோவிலுக்கு சென்று இருந்தேன். இந்த கோவிலுக்குப் போனதே இல்லை. அந்த கோவிலில் வயதான அம்மாவுடன் ஶ்ரீதர் நின்று இருந்தார். என்னைப் பார்த்தவுடன் வணக்கம் சொன்னார். நானும் வணக்கம் வைத்தேன். தலை நிறைய மல்லிகைப்பூ நீல வண்ண சேலை என நான் ஜொலித்தேன். அம்மா, இவங்க காயத்ரி என சொல்ல அந்த அம்மா லேசாக சிரித்தார். @radhavenkat2: இந்த கோவிலுக்குத்தான் வருவீங்களா? என்றார் ஶ்ரீதர். இல்லை சார், இதுதான் முதல் தடவை. நம்ம கம்பெனிக்கு வந்ததால தெரிஞ்சது என்றேன். நல்ல சாமி என சொல்லிவிட்டு கும்பிட்டு வாங்க என்றார். அந்தம்மா கணவனை இழந்தவர் என்பதானா அடையாளம் இருந்தது.
சாமியை வணங்கினேன். கோவிலை சுற்றி வந்தபோது ஶ்ரீதர் அங்குதான் நின்றார். என்ன சார் இன்னும் இங்கேயே நிற்கறீங்க என்றேன். இன்னும் கொஞ்ச நேரம் தான் என்றார். வரேன்மா என சொல்லி நடந்தேன்.
சியாமளினியை அன்று சந்தித்து பேசினேன். கௌதமன் காவ்யா ரகுராமன் குறித்து சொன்னதும் அவளின் ஒரே வார்த்தை தான் பதில். உலகம். நீ தப்பு பண்ணி இருக்கியா என்ற என் கேள்விக்கு இல்லை என்றே சொன்னாள். சியாமளன் அத்தனை நல்லவரா என்றேன். சிரித்தாள். உடல் மீதில் ஆசை எல்லோருக்கும் இல்லை. என்ற பதில் எனக்குப் பிடித்து இருந்தது. கௌதமன் மீது நான் கொண்டது உடல் மீதான காதல். ஶ்ரீதர் மீது கொள்ளத்துடிப்பது மனம் மீதான காதல். காயத்ரி எல்லா ஆண்களும் மோசம் கிடையாது சின்ன சின்ன சபலம் இருக்கும், ஆனா அறிவுள்ளவங்க அதை கட்டுபடுத்திருவாங்க சந்தேகப்படு, எல்லாரையும் இல்ல என்றாள். சியாமளனின் அறையை எட்டிப் பார்த்தேன் எனக்கொரு சியாமளன் வேண்டும் என நினைத்தேன் அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில் கௌதமனைப் பார்த்து விலகி நடந்தேன். காயத்ரி நில்லுடி என அசிங்க அசிங்கமாக பேசினான். வேடிக்கைப் பார்த்தவர்கள் அதிகம். நான் நிற்காமல் நடந்தேன். சில நிமிடத்தில் போலீஸ் வந்தது. கௌதமனை அடித்து உதைத்தார்கள். சிலர் திருந்த முனைவதே இல்லை. பெண்ணை கேவலமாகப் பேசும் கொடிய நாக்கு தானாக அறுந்து விழவேண்டும் என எனது வேண்டுதல் பலித்துவிடுவதில்லை என்றபோதும் வேண்டிக்கொண்டேன் வாழ்வை இயல்பு இயல்பற்றது என பிரித்துக்கொள்ளலாம். இயல்பாக இருப்பது கடினம். இருக்கிறதை விட இல்லாத ஒன்றின் மீது அதிகப்பற்று வரும் அதை அடைய மனம் போராடும் அந்த போராட்டம் வலியாக உருவெடுக்கும். வலி மரணத்தை உண்டுபண்ணும். (தொடரும்)