அவளிடம் எப்படி சொல்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருந்தேன்.
ஒருவழியாய் தைரியம் வரவழைத்து 'உன்னை எனக்குப் பிடிச்சி இருக்கு, நான் உன்னை காதலிக்கிறேன்' என சொன்னதும் 'செருப்பு பிஞ்சிரும்' என திட்டிவிட்டு போய்விட்டாள்.
எனக்கு அவமானமாக இருந்தது. அவளை பின் தொடர்ந்துசெல்ல என் மனம் இடம் தரவில்லை. வாழ்வது வீண் என்றே எண்ணிக் கொண்டு இருந்தேன். வீட்டில் சொல்லவும் தயக்கம்.
ஒருநாள் எதேச்சையாக அவளைப் பார்த்தேன். பார்த்த மறுகணம் தலைகுனிந்தே இடம் அகன்றேன். இப்படியாக எனது காதல் தத்தளித்தது. அம்மாவிடம் சொல்லி பெண் கேட்டு வர சொன்னேன். அம்மா பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பினார்.
வாழ்வா சாவா என போராடிக் கொண்டு இருந்தேன். வாழ்வது என முடிவு எடுத்தேன்.
சாமியார் ஆகிவிட்டேன்.
3 comments:
கவித்துவமான நடை
முடிவு வெகு வெகு சுவாரஸ்யம்
பகிர்வுக்கும் தொடரவும் (பதிவுகள் )
நல்வாழ்த்துக்கள்
குடும்ப பாரம் தாங்க முடியலைன்னு சாமியார் ஆகிறாங்க ,நீங்க காதல் துயரம் தாங்க முடியலைன்னு சாமியார் ஆகிட்டேன்னு சொல்றீங்க ...சாமியார் லைப் என்ன ஜாலி லைப்பா ?
நன்றி ஐயா, நன்றி பகவான்ஜி
Post a Comment