எகிப்தியர்கள் பற்றி தொடர்ந்து பார்க்கும் முன்னர் பாபிலோனியா குறித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் செல்வோம். பாபிலோன் எனும் தலைநகராக கொண்டு உருவானதுதான் பாபிலோனியா பேரரசு. தற்போதைய ஈராக் அன்றைய பாபிலோனியா. அஷ்ஷிரியர்கள் குறித்து முன்னரே பார்த்து இருந்தோம். அவர்களுடன் ஒரு போட்டி அரசாக உருவானதுதான் இந்த பாபிலோனியா. கிட்டத்தட்ட நான்காயிரத்து நானூறு வருடங்கள் முன்னர் உருவாக்கி இருநூறு வருடங்கள் கோலோச்சி நின்ற அக்காடியன் எனும் பேரரசுவில் இருந்து ஹமூராபி எனும் அரசனால் உண்டாக்கப்பட்டது இந்த பாபிலோனியா. இந்த பகுதிகளில் வாழ்ந்த பலரும் செமிடிக் மக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். செமிடிக் அல்லாத மக்கள் சுமேரியன் என அழைக்கப்பட்டார்கள். இந்த பாபிலோனியர்கள், அஷ்ஷிரியர்கள் எல்லாம் அக்காடியன் என்பதுடன் செமிடிக் மக்கள் தான்.
ஒரு மொழி எப்படி அழியும் என்பதற்கு இந்த பாபிலோனியர்கள் ஒரு சாட்சி. அதாவது நமது சமஸ்கிருதம் எப்படி வழக்கொழிந்து இந்தி கோலோச்சி கொண்டு இருக்கிறதோ அதைப்போலவே இந்த பாபிலோனியர்கள் காலத்தில் சுமேரியன் மொழியானது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அக்காடியன் மொழி வடிவம் ஏற்றுக்கொண்டது. இறைவழிபாடுக்காக மட்டுமே சுமேரியன் மொழி இருந்ததை கூட பாபிலோனிய பேரரசு உருவானபின்னர் சுமேரியன் பேச்சு மொழியாக கூட இல்லை.
பாபிலோன் நகரம் ஒரு கலாச்சார, வழிபாட்டு தலமாக மட்டுமே அக்காடியன் பேரரசு காலத்தில் இருந்தது. பாபிலோன் முன்னால் என்ன இருந்தது என்பது குறித்து பின்னர் பார்ப்போம். சுமேரிய நகரங்கள் என்பது ஒரு தனிக்கதை. எலாம் பிடியில் இருந்து பாபிலோன் நகரத்தை மீட்டவர் இந்த ஹமூராபி.
படம் நன்றி: விக்கிபீடியா
இந்த ஹமூராபி அப்படியே பக்கத்தில் உள்ள நகரங்கள் எல்லாம் தனது பிடியில் கொண்டு வந்து பாபிலோனிய பேரரசு ஒன்றை உருவாக்கினார். இந்த ஹமூராபி அஷ்ஷ்ரியர்களின் பேரரசுவின் இடங்களை கூட தனதாக்கி கொண்டார். இவரது ராணுவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரு நாட்டிற்கு என்ன சட்ட திட்டங்கள் தேவை என்பதை சுமேரியர்கள், அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் எழுதியதை எல்லாம் தொகுத்து ஹமூராபி கொள்கை என கொண்டு வந்தவர் இவர். இந்த கொள்கைகளை படித்துப் பார்த்தபோது மனுசாஸ்திரம் சொன்ன பல விசயங்கள் இதில் தென்பட்டது. 1901ம் வருடம் இந்த ஹமூராபி கொள்கை கண்டு எடுக்கப்பட்டது.
பாபிலோன் நகரம் தோன்றுவதற்கு முன்னர் நிப்பூர் எனும் நகரில் என்லில் எனப்படும் கடவுள் போற்றப்பட்டு வந்தார். ஒரு அரசர் உருவானதும் தலைநகரம் மாறுவது அந்த காலகட்டத்தில் வழக்கமாக நடைபெறுவது உண்டு. அப்படித்தான் ஹமூராபி பாபிலோனியா பேரரசு உருவான பொது நிப்பூர் நகரத்தில் இருந்து பாபிலோன் நகரத்திற்கு எல்லாம் மாற்றினார். பல கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் உருவாக்கி மர்டுக் எனும் கடவுளை பிராதனப்படுத்தி ஒரு சாதாரண நகரத்தை மாபெரும் நகரம் ஆக்கிய பெருமை ஹமூராபிக்கு உண்டு.
வணிகம், அறிவியல், கலை, கட்டிடம் என கோலோச்சிய பாபிலோனியா சிதைந்து போனது எவ்வாறு நான் எப்பவோ கூறியது போல நாம் எவ்வித மதத்துக்காரராக இருந்தாலும் பண்டைய காலத்தில் எழுதப்பட்ட நூல்களை புறக்கணிக்காமல் படித்து வந்தால், அதாவது கடவுள் இது செய்தார், அது செய்தார் என்பதை தவிர்த்து, நமது மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து வந்தார்கள் என்பது புலப்படும்.
ஒரு பெரிய கப்பலில் சின்ன துளை இருந்தால் தண்ணீர் உட்புகுந்து எப்படி அந்த முழு கப்பலும் கடலில் மூழ்கிவிடுமோ அதை போன்றே தெற்கு மெசொப்டொமியா பகுதியானது வலுவிழந்து இருந்தது. ஹமூராபி இறந்தபின்னர் சரியான அரசர் வழிநடத்த கிடைக்காமல் தெற்கு மெசொப்டொமியா பகுதி முதலில் கைப்பற்றபட்டது. அக்காடியர்கள், அஷ்ஷ்ரியர்கள் இதுதான் தருணம் என சில பகுதிகளை அவர்கள் கைவசம் கொண்டு வந்தார்கள். ஹிட்டிடைஸ் மற்றும் கச்சிடிஸ் போன்றவர்களின் தாக்குதலால் இந்த பாபிலோனியா சிதறுண்டு போனது.
பாபிலோனியர்களின் தொங்கு தோட்டம், ஹமூராபியின் கோட்பாடு போன்ற பல விசயங்கள் காணும் முன்னர் ஜெனிசிஸ் குறித்து வைத்த இரண்டு நகரங்கள் பற்றி இப்போது காண்போம். இந்த இரண்டு நகரங்கள் சுடோம் மற்றும் கொமோரா. இந்த நகரங்கள் உண்மையிலேயே இருந்தனவா என்பதற்கு ஆதாரங்கள் தேடி அலுத்து போனார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். இந்த நகரங்கள் இருந்தன என சொல்லுமளவிற்கு சில ஆதாரங்கள் இருக்கிறது என்றே தற்போது சொல்லப்படுகிறது. முழுவதுமாக ஜெனிசிஸ் படிக்காமல் இந்த இரண்டு நகரங்கள் குறித்து எழுதவியலாது என்றாலும் சில குறிப்புகள் குறித்து பார்ப்போம்.
சுமேரியர்கள் அரசர் உர்குர் ஒரு செமிடிக் மன்னன். அப்போது நிறைய கோவில்கள் உருவாக்கப்பட்டன. உர்குர் இதற்கு முன்னர் எந்த அரசரும் செய்யாத விசயங்களை செய்து வந்தான். வெள்ளம் ஏற்பட்டால் அதை தடுக்கும் பொருட்டு ஐந்து ஏக்கர் நிலத்தில் எட்டு அடி உயரத்தில் செங்கற்கள் கொண்டு ஒரு பெரிய பரப்பு நிப்பூர் நகரத்தில் எழுப்பினான். இதன் அடிப்புறத்தில் தண்ணீர் சென்று வரும்படி கலைவடிவத்துடன் உருவாக்கப்பட்டது. இதற்கு மேல் ஜிக்குரட் எனப்படும் டவர் ஒன்று எழுப்பப்பட்டு அது ஒரு கோவில் என்றே அழைக்கப்பட்டது. இவ்வாறு பல கோவில்கள் எழுப்பப்பட்டு பிற்காலத்தில் பாபிலோனியர்களின் வழிபாட்டு தலங்களாக மாறின. இந்த ஜிக்குரட் பைபிளில் என்லில் எனப்படும் தேவனுக்காக எழுப்பட்ட ஆலயம் என்றே குறிப்பிடுவதாக சொல்கிறார்கள்.
இந்த தருணத்தில் தான் ஏலமிடிஸ் பெரும் தாக்குதலை சுமேரியர்கள், அக்காடியர்கள் மீது ஏற்படுத்தியது. அப்போதிருந்த பாபிலோன் அரசன் சுமு அபி எனப்பட்டான். அவன் சுமேரியர்கள், அக்காடியர்கள் செமிடிக் மக்களுடன் போராடிக்கொண்டு இருந்தபோதுதான் இந்த தாக்குதல் நடந்தது. ஏலமிடிஸ் எல்லா வரலாற்று விசயங்களையும் அழித்தார்கள். எல்லா கோவில்களும் சிதறடிக்கப்பட்டன. இப்படி சில விசயங்கள் பைபிளில் குறிப்பிட்டு இருப்பது பாபிலோனியா வரலாறை குறிப்பிடுகிறது என்கிறார்கள்.
சாக்கடல் அல்லது செங்கடல் ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நகரங்களை தனது கரைகளாக கொண்டது. இந்த கடலின் கரைகளில் எழுப்பப்பட்ட நகரங்கள் தான் சுடோம், கொமோரா. இந்த சுடோம், கொமோரா நகரங்கள் ஒழுக்கத்தின் முறைகேடுகளாக, ஓரினச்சேர்க்கை கொண்டவர்களாக திகழ்ந்தது என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த நகரத்தின் அடிப்படையில் சுடோமி என்ற ஆங்கில வார்த்தை காமம் சம்பந்தமான விசயங்களை குறித்து அதற்குரிய சட்டங்களும் சுடோமி விதிகள் என குறிக்கப்பட்டன. இந்த ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள், அதுவும் மிருகங்களுடன் கலவி முறை எல்லாம் சுடோம் கொமாரா நகரங்களில் தலைவிரித்து ஆடியது அதனால் தான் அந்த நகரங்கள் பேரழிவுக்கு கடவுளால் பணிக்கப்பட்டது என்கிறது ஜெனிசிஸ். இதனுடன் சேர்த்து மூன்று நகரங்கள் ஜெனிசிசில் குறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நகரங்கள் இயற்கை பேரழிவினால் அழிந்து இருக்கக்கூடும் என்றே நம்பப்படுகிறது.
படம் நன்றி: சாக்கடல், செங்கடல் விக்கிபீடியா
ஆபிரகாம் கடவுளிடம் மன்றாடி இந்த நகரங்களை காத்திட பத்து நல்லவர்கள் இருந்தால் போதும் என கண்டதுதான் லாட் எனப்படுபவன். ஏஞ்சல்கள் லாட் என்பவனை சந்தித்து சாப்பிட்டதாகவும், லாட்டிடம் உனக்கு வந்த விருந்தினரை எங்களுடன் கலவி செய்ய அனுமதி என அந்த நகரத்து மக்கள் கேட்டதாகவும், லாட் அதற்கு மறுத்து தனது இரண்டு கன்னி மகள்களை தருவதாக சொன்னதாக குறிப்பு இருக்கிறது. அதை மறுத்து அந்த மக்கள் லாட்டினை தாக்க முற்பட இந்த ஏஞ்சல்கள் லாட்டினை காப்பாற்றி பத்து நல்லவர்கள் கூட கண்டுபிடிக்க முடியாததால் லாட் குடும்பத்துடன் இந்த ஏஞ்சல்கள் வெளியேறின. லாட் மனைவி கெட்டவள் என்பதால் அவளை அந்த நகரத்திலேயே விட்டுவிட்டு போனதாக கதை சொல்கிறது. இப்படி ஓரினச்சேர்க்கை, முறையற்ற கலவி முறைகள் மூலம் அழிந்ததுதான் இந்த நகரங்கள். இதே நிலைமை பாபிலோனுக்கும் வந்து சேரும் என்றுதான் குறிப்பில் உள்ளதாம்.
பலதார மணத்தினை இந்த மெசொப்டொமியா நகரங்களில் கொண்டு வந்த காரணம் கலவியில் அதிக ஈடுபாடு கொண்ட மக்கள் என்பதை தவிர வேறு என்ன பதில் இருக்க இயலும். பாபிலோனியா அழிவிற்கு காரணம் காமம் ஓரினச்சேர்க்கை என்றே சொல்லிட ரோம பேரரசும் ஆமாம் அதுதான் என சொல்லி செல்கிறது.
இதே ஓரினச்சேர்க்கை விவகாரம் இன்றைய காலகட்டத்தில் கூட பெரிதாக விவாதிக்கப்படும் அவலம் பார்த்தீர்களா. அதுதான் வரலாறு திரும்புகிறது என சொல்வார்கள். இன்றைய சமூகத்தில் GAY, LESBIANS ஒரு அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தினர் என்பது ஏற்றுக்கொள்வதை தவிர வேறு என்ன வழி. இன்றைய இளைய தலைமுறையினர் இதை ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. We like it, we follow it, keep your nose out என்பதே தாரக மந்திரம். இப்படி எல்லாம் இந்த சுடோம், கொமோரா, பாபிலோன் நகரங்கள் இருந்ததை இறைவன் பொறுக்கவில்லை என்கிறது ஒரு கதை.
உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் எதுவெனினும் தயவு செய்து விட்டொழியுங்கள். நம்மை அழித்துவிட கடவுள் தேவை இல்லை, நாம் போதும்.
பாபிலோனியர்கள், எகிப்தியர்கள் பற்றி இன்னமும்
(தொடரும்)

12 comments:
ரா.கி,
அடடா நீங்களும் வரலாற்று தொடர் ஆரம்பிச்சு நமக்கு போட்டியாகிட்டிங்களே அவ்வ்!
ஹி...ஹி நான் ஒரு தொடர்னு ஆரம்பிச்சு 3 பகுதிக்கு மேல போகலை, ஆசிய மைனர்லவே தொங்குது அவ்வ்!
# மதப்புத்தகங்களின் அடிப்படையில் அணுகுறிங்கனு நினைக்கிறேன் , அதில் உள்ளவை எல்லாம் கால வழுக்களாக அமையும்.
செமிட்டிக்கிற்கு முன்னரே ஹிட்டைட்ஸ் எல்லாம் தொன்மையானவர்கள், அவர்களிடம் இருந்து தான் செமிட்டிக் வந்தது.
ஹமுராபியின் காலம் கூட சரியா சொல்ல முடியாது,ஆனால் ஹமுராபிக்கு முன்னரே எகிப்திய டைனாஸ்டிகள் உருவாகிடுச்சு எனத்தான் படித்தேன்.
உங்க தொடரையும் பின் பற்றி பார்க்கிறேன்.
இதையெல்லாம் 'உலகப் புனைகதைகள்'ங்கற தலைப்புல எழுதினா இன்னும் பொருத்தமா இருக்கும். முடியலைன்னா, கதைப்புத்தகங்களை மூடி வச்சுட்டு கொஞ்சம் அறிவியல் ஆதாரங்களோட எழுத முயற்சிக்கலாம்.
அட, தேடிப் படிக்கிறேன்ங்க. தொலைந்த நாகரிகங்கள் எனும் கண்ணோட்டத்தில் இப்போது மத்திய கிழக்காசிய நாடுகளில் இருந்த கலாச்சாரங்கள் எழுதுகிறேன். அப்படியே தென்அமெரிக்க பயணம் அதன்பின்னர் இந்தியா. இங்கே மதப்புத்தகங்கள் அந்த காலகட்ட சமூகம் குறித்து எழுதி உள்ளது என்பதற்கு சில சான்றுகள் இருக்கும். அந்த காலகட்டத்தில் நடந்த விசயங்கள் கேள்விக்குறியவை. நீங்கள் குறிப்பிடுவது சரி. எகிப்து ஒரு தனிக்கதை. வக்கத்தவன் போக்கத்தவன் என தொடங்கி நாகரிகங்களில் பயணம். வரலாற்றுத் தொடர் என சொல்ல இயலாது.
ஒரு சமூகத்தின் அவலங்களை அறிவியல் சொல்ல இயலாது, அந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட எழுத்துகள், கல்வெட்டுகள் மட்டுமே சொல்ல இயலும். மனிதகுல சீரழிவுக்கு எவை என்பதை தொலைந்த நாகரிகங்கள் மூலம் தொட்டு செல்கிறேன். ஹமூராபி கோட்பாடுகள் ஆதாரம் உண்டு. சுடோம் போன்ற நகரங்களுக்கு ஆதாரம் உண்டு. நமது வாழ்வு கூட பின்னாளில் கதைப்புத்தகம் தான். உங்கள் ஆலோசனைக்கு நன்றி, இதே தலைப்பில் பயணிக்கிறேன்.
பாபிலோன் அழிந்தமைக்கு தற்பாலின முறை தான் காரணமா? அடடா, இது என்ன புது வகை வரலாற்று ஆய்வோ? விவிலியம், குரான் இரண்டும் யூத மத சாஸ்திரமான தோராவில் இருந்து தோன்றியவை. சிறிய இனமான யூதர்கள் தமது காழ்ப்புணர்ச்சியால் எகிப்து, பாபிலோன், பாரசீகர்களைப் பற்றி இழித்தும் பழித்தும் எழுதிய புத்தகம் தான் தோரா எனப்படும் விவிலியத்தின் பழைய ஏற்பாடு, அதனால் தான் பண்டைய நாகரிக வாழ்க்கை முறைகளை தவறு என சித்தரித்துள்ளார்கள், ஆனால் மகளோடு புணர்வது, மருமகளோடு புணர்வது, தங்கையை மணப்பது போன்றவைகளை ஏற்றுக் கொண்டு எழுதியும் உள்ளனர். உண்மையில் பாபிலோன் சிதைந்தமைக்கு அப்போது ஏற்பட்ட காலநிலை மாற்றம், நீர் பஞ்சம், வறட்சி அதன் பின் ஏற்பட்ட சமூக - பொருளாதார சீர்குலைவு தான் தவிர தற்பாலின வாழ்க்கை முறையல்ல. விவிலியம் போன்ற புனைவாக்கங்களை வரலாற்றோடு இணைத்து எழுதுவது மடமையானது.
மேலதிக விபரங்களுக்கும் எது மடமை என சுட்டிகாட்டியதற்கும் நன்றி. வரலாற்று விசயங்கள் காலம் காலமாக திரித்து எழுதப்பட்டே வந்திருக்கின்றன் இதற்கு அழிக்கப்பட்ட நூலகங்கள் சாட்சி. புனைவாக்கங்கள் எல்லாம் ஏதோ ஒன்றின் அடிப்படையில்தான் எழுதப்பட்டு இருக்க வேண்டும். மக்களின் ஒழுங்கீனச் செயல்பாடுகளின் காரணமே ஒரு நாகரீகத்தின் வீழ்ச்சி, வலுவற்ற அரசர் அதற்கு ஒரு அடுத்த காரணம். இழித்தும் பழித்தும் எழுதப்பட்ட நூலை எதிர்த்து எதற்கு எவரும் எழுத முன்வரவில்லை என்பது ஐயமே. ஹமூராபி கோட்பாடுகள் மக்களை அமைதிபடுத்தவும், நல்வழி செலுத்தவுமே எழுதப்பட்டது. அது ஒன்றும் புனைவாக்கம் அல்ல. விவிலியங்களை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க இயலாது. இன்றும் அதை பினபற்றி வருபவர்கள் குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள்? வரலாற்று ஆய்வு என்பது சாதாரண பணி அல்ல, அதை மேற்கொள்வது என்பது உண்மைக்கு புறம்பாக நடப்பது நல்லது அன்று. நீங்கள் குறித்த விசயங்களால் பாபிலோனியா அழியக்காரணம் மக்களின் ஒழுங்கீனம், வலுவான அரசர் இல்லாமல் போனது, பாபிலோன் பெயரே மாற்றப்பட்ட நிகழ்வு நடந்தேறியது. வரலாற்று பக்கங்கள் புதிரானவை. அவரவர் கற்பனைக்கு அந்த கால நாகரிகங்கள் சுவாரஸ்யமானவை. மீண்டும் பாபிலோனியா தொடரும்
ரா.கி,
நம்ம குப்பையில தேடுறது கஷ்டம் எனவே ,நானே சுட்டிய போட்டுவிடுகிறேன்.
திரும்பிப்பார் என்றப்பெயரில் வரலாற்றினை திரும்பிப்பார்த்து தொடராக்க முயன்றது,நான் லீனியராக ,ஆங்காங்கே தாவியிருப்பேன் அவ்வ்.
http://vovalpaarvai.blogspot.in/2012/09/1_27.html
http://vovalpaarvai.blogspot.in/2012/10/2.html
http://vovalpaarvai.blogspot.in/2012/10/3-rosetta-stone.html
3வது மட்டுமே பாக்கி. நன்றி. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். தகவல்கள் அதிகமாக தெளிவாக உங்கள் பதிவுகளில் தென்படுகின்றன.
திரு வி நீ,
விவிலியத்தில் முறைகேடான உறவுமுறைகளை எதிர்த்தே சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிடுவது போல அவற்றை ஏற்றுக்கொண்டு எழுதப்படவில்லை.அப்படியெல்லாம் நடந்தன என்பதை குறிப்பதற்காகவே அன்றி நியாயப்படுத்துவதற்க்காக அவை எழுதப்படவில்லை. விமர்சனத்தை முறையான விதத்தில் வைப்பது நலம்.
ரா.கி,
மின்னல் வேகத்தில் படிச்சிட்டு ,பின்னூட்டம் வேற போட்டிருக்கிங்க,நன்றி!
தொடர்ந்து எழுதணும்னு தான் நினைச்சேன், அப்போ ஏதோ வேலை வரவே அப்புறம் பார்க்கலாம்னு விட்டேன் ,அப்படியே தேங்கிடுச்சு, அப்போ சேகரித்த ரெஃபெரன்ஸ்லாம் அப்படியே இருக்கு, விரைவில் தொடர முயல்கிறேன்.
பிழைதிருத்தம் கூட செய்யலை,இப்போ படிச்சா நெறைய எழுத்துப்பிழைகள் தெரியுது, எழுதும் போது தெரியலை அவ்வ்!
சாலமோன்,
//விவிலியத்தில் முறைகேடான உறவுமுறைகளை எதிர்த்தே சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிடுவது போல அவற்றை ஏற்றுக்கொண்டு எழுதப்படவில்லை.அப்படியெல்லாம் நடந்தன என்பதை குறிப்பதற்காகவே அன்றி நியாயப்படுத்துவதற்க்காக அவை எழுதப்படவில்லை.//
போப் அலெக்ஸாண்டர்-6 எனப்படும் ரோட்ரிகோ போர்கியா பத்தி படிச்சிப்பார்க்கிறது,அவரு ,அவரோட பையன் செசாரியா போர்கியாவின் மன்மத லீலைகள வச்சி தான் அலெக்சண்டர் டுமாஸ் கதையெல்லாம் எழுதினார் :-))
செம கிளு ...கிளு இன்செஸ்ட் வகையறா வரலாறு!!!
நன்றி வவ்வால். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Post a Comment