Friday, 8 February 2013

எந்திரனை வீழ்த்திய விஸ்வரூபம்

ரஜினி-கமல் படங்களுக்கு நேரடி போட்டி வெகுவாகவே குறைந்து போய்விட்டது. ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள் ஒரே நேரத்தில் விவாதிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். கமலின் திரைப்படங்களைவிட விஜய் திரைப்படங்கள் வசூலில் ரஜினிக்கு அடுத்த நிலை என்றெல்லாம் உருவாகிவிட்ட காலம். தமிழ் திரையுலகினை புதிய பரிமாணத்திற்கு எடுத்து செல்ல பல இயக்குனர்கள் உருவாகிவிட்டார்கள். ஆனால் இவர்களையும் தாண்டி கமல் தனது இயக்கத்தின் மூலம் வித்தியாசமான இயக்குனர் என்பதை நிரூபித்து கொண்டு வருகிறார். 

சமீபத்திய விஸ்வரூபம் சாதாரண கதைதான் எனினும் கமல் கையாண்ட தொழில்நுட்பம் படம் பார்த்த அனைவரையும் பாராட்டத்தான் செய்யும், ஒரு சிலரைத் தவிர. எந்திரனை விட மிக சிறப்பான படம் என்று விஸ்வரூபம் பெயர் எடுத்து இருக்கிறது என்பதை ரஜினி ரசிகர்கள் கூட ஏற்றுக்கொள்ள கூடிய சூழல் தான் இப்போது அமைந்து இருக்கிறது. சர்ச்சைகள் இல்லாமல் விஸ்வரூபம் வெளியாகி இருந்தால் இத்தனை அளவுக்கு பேசப்படுமா என்றால் எந்திரன் கூட அளவுக்கு அதிகமான விளம்பரத்தில் தான் வெளிவந்தது. ரஜினி தன்னை ஒரு சூழ்நிலை கைதி என அறிவிக்கவே செய்தது எந்திரன் திரைப்படம். 

ஒரு படத்தில் என்ன இருக்கிறது எனும் எதிர்பார்ப்பை தூண்டிவிடுவதே ஒரு படத்தின் வெற்றியாகும். ரஜினி நடித்தால் அந்த படமே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி விடும் சூழல் தான் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கமலுக்கு அப்படியல்ல. மன்மதன் அம்பு என்றொரு படம் வந்த சுவடே தெரியாமல் ஒளிந்து கொண்டது. ரஜினி கௌரவ வேடத்தில் வந்தாலும் கூட  குசேலன் ரஜினிக்கு ஒரு தோல்விப்படம் என்றே பேசப்பட்டது. 

அத்தகைய சூழலில் இப்போது விஸ்வரூபத்தின் வசூல் எந்திரனை மிஞ்சிவிட்டது எனும் செய்தி வெளியாகிவருகிறது. எந்திரன் தமிழக திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதால் எந்த ஒரு படம் வெளியானாலும் எந்திரன் வசூலுக்கு இணையாக வைத்து பார்க்கப்படுகிறது. பல நாட்கள் ஓடிய அல்லது ஓட்டப்பட்ட சந்திரமுகியை பலரும் மறந்து போனார்கள். 

தமிழகத்தில் இந்த வசூல் கணக்கெல்லாம் ஒழுங்காகவே இருக்காது என்பது காலம் கண்டு கொண்ட செய்தியாகும். இல்லையெனில் ஒன்றரை கோடி நஷ்டம் என ஒரு கோஷ்டி எந்திரன் படத்திற்கு கணக்கு காண்பித்து இருக்காது. விஸ்வரூபம் முதல் நாளே தமிழில் பத்து கோடி சம்பாதித்து விட்டது எனும் வசூல் கணக்கு கூட அதிகாரப்பூர்வமானது அல்ல என்றே சொல்கிறார்கள். ஒரு வேளை அதற்கு அதிகமாகவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம். 

ஐம்பது நாள், நூறு நாட்கள், வெள்ளிவிழா என்றெல்லாம் முன்பு போல் படங்கள் இப்போது கொண்டாடுவது இல்லை. ஒரு வாரம் ஓடினாலே பெரிய விசயம் என்று ஆகிவிட்டது. கடல், டேவிட் எனும் சமீபத்திய திரைப்படங்கள் பெரும் சரிவினை அடைந்து இருக்கின்றன. 

முன்பு ரஜினி, கமல் படங்கள் எத்தனை நாட்கள் ஓடும் என்பதில் போட்டி இருக்கும். காரணம் குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியாகும். இப்போதெல்லாம் அறுநூறு, ஆயிரம் என்று சொல்கிறார்கள். ''ஒரே காலகட்டத்தில் ரஜினி கமல் படம் வெளியாகி அப்போது வசூல் விபரங்கள் வெளிவந்தால் அப்போது யார் வசூல் சக்ரவர்த்தி என்பது தெளிவாகும். அதுவரை எந்திரன் ஒவ்வொருமுறை ஒவ்வொரு படத்தினால் வீழ்த்தப்பட்ட கதை சொல்லப்பட்டு கொண்டே இருக்கும்'' என்கிறார் ஒரு ரஜினி ரசிகர். ஆனால் என்னைப் பொருத்தவரை விஸ்வரூபம் எந்திரனை வீழ்த்திவிட்டது படம் அமைப்பில் மட்டுமல்ல, வசூலிலும் என்றுதான் மதிப்பீடு செய்ய முடிகிறது. 


5 comments:

James said...

வசூல் நிலவரத்தை பார்த்து முடிவு செய்வோம்.

வருண் said...

VR:

Viswaroopam has not beaten enthiran anywhere in the world including NI.

KH tried a crooked approach to beat Rajni by taking on other religion and of course it backfired.

Now he started crying (another drama) to get publicity after it was banned.

Even after all these dramas viswaroopam did not beat Enthiran in US or Canada or UK or north india or AP or KA.

That is the fact!

Radhakrishnan said...

கணக்கு சரியாக காண்பித்தால் மட்டுமே அது உறுதி. நன்றி டைரி.

நீங்கள் சொல்வது உண்மையாக ஓரளவு இருந்தாலும், இன்னும் ஓரிரு மாதங்களில் முழுவிபரம் கிடைத்துவிடும். விக்கிபீடியாவில் இப்போதெல்லாம் துள்ளிவிபரமாக தருவதுபோல் எழுதிவிடுகிறார்கள். ஒருவேளை ஆடிட்டர்ஸ்களுக்கு இதில் தொடர்பு உண்டா என தெரியவில்லை. நன்றி வருண்.

rajkumar said...

அதுக்குள்ள என்ன பாஸ் அள்ளி விடுறீங்க. நேத்து அஞ்சு கோடி வந்துருக்கு. தாக்குபிடிக்குதான்னு பாப்போம். உத்திர பிரதேசத்துல காத்தடிக்குதுன்னு ஹிந்து நியூஸ் சொல்லுது. எந்திரன் 200 கோடி பாஸ். இன்னும் ரொம்ப தூரம் போகணும்.

M (Real Santhanam Fanz) said...

எனக்கென்னமோ, எந்திரனையும் விஸ்வரூபதையும் வசூல் ரீதியா கம்பேர் பண்ணுறது சரின்னு தோணல!!
ஏன்னா, எந்திரன விஸ்வரூபம் பீட் பண்ணுங்குறது கொஞ்சம் டவுட்தான்.. ஆனா, ஒரு முக்கியமான விஷயம், எந்திரன் படம் பலரின் கூட்டணியில் உரு வாக்கப்பட்ட ஒரு படம், ரஜினி முதல் கொண்டு, ஷங்கர், ஏ ஆர் ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், மத்த தொழில்நுட்பகலைஞர்கள் எல்லாருக்குமே தனிதனி ரசிகர்கள் இருக்காங்க, அவர்கள் எல்லாரது பங்களிப்பும் எந்திரனின் "சரித்திர" வெற்றியில் இருக்கு!! ஆனா விஸ்வரூபம ஒன் மேன் ஆர்மி!!!