Wednesday, 6 February 2013

அவள் இறங்கிவிட்டாள்

எட்டிப் பிடித்த பேருந்து ஒன்றில்
முட்டி மோதி இடம் பிடிக்கையில்
பட்டுபோன்ற கன்னம் கொண்டவள்
சிட்டாக அமர்ந்து இருந்தாள்
எதிர் இருக்கையில்

இதயத்தில் மொட்டு ஒன்று
உதயம் ஆனது போன்று
புன்னகை பூக்கள்
மென்னகையாய் விழுந்தது
எதிர் இருக்கையில்

அவள் செல்லுமிடத்து
நானும் சென்றிடவே
எண்ணம் கொண்ட வேளையில்
நடந்துவந்த நடத்துனரிடம்
நளினமாக பேசிய அவள்
கண்ணிமைக்கும் நேரத்தில்
இறங்கியே போனாள்
எவரேனும் இனி அமரக்கூடும்
எதிர் இருக்கையில். 

4 comments:

மதுரை அழகு said...

ஏ.க்..க...ம்...!

Radhakrishnan said...

நன்றி மதுரை அழகு.

G.M Balasubramaniam said...


அமர்ந்தால் என்ன.?அழகாயிருந்தால் ரசியுங்கள். அவள் போகுமிடத்துக்குச் செல்ல நினைத்து மறுபடியும் ஏமாற வேண்டுமா.?

Radhakrishnan said...

ஆஹா மிகவும் சிறப்பு ஐயா.