அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்.
-----
எனது ஜனன குறிப்பில் இப்படித்தான் எழுதப்பட்டு இருப்பதாக ஞாபகம். 1975ம் வருடம் தை மாதம் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 12.10 மணிக்கு ஜனனம். பூரட்டாதி நான்காம் பாதம், மீன ராசி, துலாம் லக்னம் என்றெல்லாம் குறிப்பினை படித்த அனுபவம் உண்டு. இன்று எனக்கு முப்பத்து எட்டு வயது. இத்தனை வயதாகி விட்டதா என்ற எண்ணம் எழாமல் இல்லை.
அதிகாலையில் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று சொன்ன எனது மனைவிக்கும், எனது பையனுக்கும் ஒரு புன்னகை சிரிப்புடன் நன்றி சொல்லிவிட்டு இத்தனை வருடங்களை ஒரு சின்ன அசைவு போட்டபோது அம்மாவும், அப்பாவும் மட்டுமே முதலில் கண்களில் தெரிந்தார்கள். சிறிது நேரம் பின்னர் மீண்டும் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மனைவியிடம்
அன்னையை இழந்து தவித்து நின்றபோது
அன்னையாய் வந்தவள் நீ
என்று ஒரு கவிதை என அவரிடம் சொல்ல, எனது அழகு பற்றி வர்ணனை கவிதை சொல் என கேட்டார். இப்படி கடந்த பதினான்கு வருடங்களாக என்னிடம் கேட்டாலும்
நீ ஒரு காதல் கவிதை
உனக்கு எதற்கு ஒரு பொய் கவிதை
என்றே இன்னமும் சமாளித்துக் கொண்டிருக்கிறேன்.
இம்முறை பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் கிடையாது. ஆனால் திடீரென எனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உறவினர்களுடன் சேர்ந்து இந்த லண்டன் வந்த பதினான்கு வருட காலங்களில் அத்திப்பூத்தாற்போல் நடந்தது உண்டு. இந்தியாவில் இருந்தவரை பிறந்தநாள் கொண்டாடியதாக நினைவில் இல்லை, ஒரே ஒருமுறை கல்கத்தாவில் படித்து கொண்டிருந்தபோது நண்பர்களுக்கு இனிப்பு வாங்கி தந்ததாக நினைவு.
இந்த இனிய நன்னாளில், எந்நாளும் போல இவ்வுலகம் செழிப்புற்று இருக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

8 comments:
ரா.கி,
வாழ்த்துக்கள் சார்!
வாழ்த்துகளுக்கு நன்றி வவ்வால் சார்.
வெகு நாட்களுக்குப் பிறகு வலையில் உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.( 38 வயது ..ஹூம்.! )
எழுத்தைப் படிக்கும்போது இன்னும் கூடுதலாக எண்ணி இருந்தேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.
எண்ணமும், எழுத்தும், தோற்றமும் என்னை வயதானவராகவே காட்டுகிறது. :)
//இத்தனை வருடங்களை ஒரு சின்ன அசைவு போட்டபோது அம்மாவும், அப்பாவும் மட்டுமே முதலில் கண்களில் தெரிந்தார்கள். சிறிது நேரம் பின்னர் மீண்டும் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மனைவியிடம்
அன்னையை இழந்து தவித்து நின்றபோது
அன்னையாய் வந்தவள் நீ//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ........
வாழ்த்துக்கள் சார்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Post a Comment