Friday, 20 July 2012

எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு

இந்த முறை நான் சாமியாரை பார்க்கச் சென்றபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. எவரையுமே அவரை சுற்றி காணவில்லை.

நான் மெதுவாக அவரிடம் சென்று "சாமி" என்றேன்.

மூடிய கண்களைத் திறந்தவர் "என்ன இந்த பக்கம்" என்றார்.

"எங்கே உங்கள் சிஷ்ய கோடிகள்"

"கடந்த சில நாட்களாக எவரும் இங்கே தென்படவில்லை"

"என்ன காரணமாக இருக்கும்"

 "தெரியவில்லை"

"சாமி நீங்கள் சற்று கிளுகிளுப்பான சாமியாராக இருந்து இருந்தால் எல்லாரும் மயக்கத்தில் வந்து இருந்து இருப்பார்கள். நீங்கள் எப்போது பார்த்தாலும் பூமி, ஆகாயம், நட்சத்திரம் என சொல்லிக் கொண்டிருந்தால் எவர் உங்களைத் தேடி வருவார்கள்"

"இதோ நீ வந்து இருக்கிறாயே"

 எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அட கருமமே, என நினைத்துக் கொண்டு

"இல்லை சாமி, பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதே என்று வந்தேன்".

"சரி உட்கார்"

நான் மறு பேச்சின்றி அமர்ந்தேன்.

"நீ பூமி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என சொன்னாய் அல்லவா"

"ஆமாம் சாமி, பக்தா என என்னை எதற்கு கூப்பிட மறுக்கிறீர்கள்"

"பக்தா என்றால் உனக்குப் பிடிக்காதே, சரி சரி பூமி பற்றி கேள்"

"ஆமாம் சாமி இத்தனை கோளங்கள் இருக்க பூமியில் உயிரினங்கள் தோன்றி இருப்பதற்கு காரணம் இயற்கை தேர்வு என சொல்கிறார்களே, அதாவது ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை என்று"

"சரி, ஆண்டவன் உயிரினங்களை படைக்கவில்லை, அப்படியெனில் இந்த இயற்கை இப்படி இருக்க வேண்டுமென எவர் படைத்தது?"

அட கண்றாவியே என நினைத்துக் கொண்டு

"சாமி, இயற்கை தானாக உருவானது அதனால் தான் இயற்கைத் தேர்வு"

சாமி கலகலவென சிரித்தார்.சோளிகளை எடுத்தார். சிதறடித்தார். எல்லாம் ஆங்காங்கே உருண்டு புரண்டு நின்றது.

"மொத்தமாக இருந்த சோளிகளை சிதறடித்தது நான். நான் சிதறடிக்காமல் இருந்து இருந்தால் எப்படி அவை சிதறும்"

"சாமி இந்த சோளிகள் எங்கே இருந்து வந்தது?"

"எதற்கு கேட்கிறாய்?"

"எல்லாம் ஒரு கணக்குதான்"

"ஓஹோ, நீ என்ன சொல்ல வருகிறாய் என புரிகிறது"

"இவ்வுலகில் உள்ள மொத்த சக்தியும் இதுவரை மாற்றம் அடைந்தது இல்லை என்கிறார்களே"

 "எந்த வகையான மாற்றம்"

"புரியவில்லை"

"இதோ சோளிகள் எப்படி ஒரு பொருளில் இருந்து உருவானதோ, அந்த பொருளானது எப்படி வேறு ஒரு பொருளில் இருந்து உருவானதோ அதைப்போலவே சக்தியும் மாற்றம் கொள்ளும்"

 "சக்திக்கும், ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடு யாது?"

"இரண்டும் ஒன்றுதான். சக்தியும் விசையும் வேறு வேறு"

"சக்தியின் அளவு வேறுபாடு அடையவில்லை, அதனை உருவாக்கவும் முடியாது,  அழிக்கவும் முடியாது என்றால் என்ன அர்த்தம்? இப்படித்தான் இருக்க வேண்டும் என இயற்கைத் தேர்வு செய்ததா? எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு என்று சொல்லுங்களேன்"

"இறைவன் தவிர எல்லாமே இயற்கைத் தேர்வு தான், போய் வா"

"எதற்கு சாமி இப்படி விட்டேந்தியாக பதில் சொல்கிறீர்கள்"

"பிறகு என்ன, இறைவன் ஒருவனே அனைத்தையும் தேர்வு செய்தவன். இதில் இயற்கைத் தேர்வு, செயற்கைத் தீர்வு என்றெல்லாம் சொல்லக் கொண்டிருந்தால்  எப்படி"

"சாமி, தேர்வு, தீர்வு. எவ்வளவு அழகான பதில். இயற்கைத் தேர்வு செய்ய வாழ்க்கைக்குத் தீர்வு கிடைக்கும்"

"இறைவன் தீர்ப்பு இறுதி தீர்ப்பு"

சாமியாரை அழைத்துக் கொண்டு நடந்தேன். ஒரு இடத்தில் அளவு கடந்த கூட்டம். என்னவென விசாரித்ததில் புதிதாக ஒரு சாமியார் வந்து இருப்பதாகவும் பல விசயங்களை மிகவும் எளிமையாக சொல்வதாகவும் சொன்னார்கள்.

சாமியாரைப் பார்த்தேன்.

"சாமி, நீங்க கொஞ்சம் புரியும்படியா பேசினா எல்லாரும் உங்களைத் தேடித்தான் வருவாங்க"

 "எல்லாம் இயற்கைத் தேர்வு"

"சாமி, இறைவன் தீர்ப்பு இல்லையா?"

உன் சோலிய பாரு என சாமி தனது வேடம் கலைக்க, நான் என் தூக்கம் தொலைக்க  விட்டத்தில் இருந்த பல்லி  ஒன்று எனது வாயின் அருகில் எச்சம் விட்டுச் சென்றது. இனி அங்கே சிறு பருக்கள் முளைக்கும்.

ஆமாம் இவ்வுலகில் எதுவெல்லாம் இயற்கைத் தேர்வு?

(முற்றும்)

42 comments:

Jayadev Das said...

\\இயற்கை தேர்வு\\ அறிவியலால் இன்னமும் ஏற்றுக் கொள்ளப் படாத டார்வின் கொள்கையைப் பிடித்து தொங்குபவர்கள் மட்டுமே Natural selection என்ற இந்த சொற்றொடரை பயன்படுத்துகிறார்கள், சாமியார்கள் பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை.

Jayadev Das said...

\\இயற்கை தானாக உருவானது அதனால் தான் இயற்கை தேர்வு என்றேன் . \\ Nothing comes out of nothing. 13.4 ஒளி ஆண்டுகள் விசாலம் கொண்டது இந்த பேரண்டம், அதில் ஆயிரக்கணாக்கான ஒளி ஆண்டுகள் பரிமாணம் கொண்ட கோடானகோடி Galaxy கள், ஒவ்வொரு Galaxy யிலும் சூரியனைப் போல கோடானகோடி நட்சத்திரங்கள் இவை அத்தனையும் ஒன்றுமில்லாததில் [one single point-ல்] இருந்து வந்ததா?!! இதைத்தான் ஆற்றல் அழிவின்மை விதி என்று சொல்கிறார்களோ? நல்ல தமாஷ்!!

Jayadev Das said...

\\எல்லாம் ஆங்காங்கே உருண்டு புரண்டு நின்றது. மொத்தமாக இருந்த சோளிகளை சிதறடித்தது நான். நான் சிதறடிக்காமல் இருந்து இருந்தால் எப்படி அவை சிதறும் என்றார். சாமி இந்த சோளிகள் எங்கே இருந்து வந்தது என்றேன்.\\ சோளிகள் தானாகவே சிதறும் என்று காட்டினால் அங்கே கடவுள் இல்லை என்ற நாத்திகர்கள் வாதம் வென்றுவிடும். அதை எந்த நாத்தீகனும் செய்வதில்லை. ஆனால், அதை அப்படி விட்டு விட்டு சோளிகள் எங்கே இருந்தது என்ற கேள்விக்கு ஏன் தாவ வேண்டும்?

Jayadev Das said...

\\இவ்வுலகில் உள்ள மொத்த சக்தியும் இதுவரை மாற்றம் அடைந்தது இல்லை என்கிறார்களே என்றேன். \\ சாமியாரை முட்டாளாகப் படைத்த நீங்களாவது விவரங்களை தீர அறிந்துகொண்டு பதிவு போட்டிருக்கலாம். பிரபஞ்சத்தில் ஆற்றல் அழிவதில்லை, ஆனால் அது ஒழுங்கான நிலையில் இருந்து ஒழுங்கற்ற நிலைக்கு மீளாவண்ணம் [irreversibly] சென்று கொண்டிருக்கிறது. இதை Entropy என்பார்கள், இது ஒருபோதும் குறைவதில்லை, அதிகரித்துக் கொண்டே செல்லும். அப்படியானால், இந்த பிரபஞ்சத்தை நேர்த்தியா வச்சு ஸ்டார்ட் பண்ணிவிட்டது யாருன்னும் கேட்கலாம். பதில் உள்ளதா உங்களிடம்???

Jayadev Das said...

\\எந்த வகையான மாற்றம் என்றார். புரியவில்லை என்றேன். இதோ சோளிகள் எப்படி ஒரு பொருளில் இருந்து உருவானதோ, அந்த பொருளானது எப்படி வேறு ஒரு பொருளில் இருந்து உருவானதோ அதைப்போலவே சக்தியும் மாற்றம் கொள்ளும் என்றார். சக்திக்கும், ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடு யாது என்றேன். இரண்டும் ஒன்றுதான். சக்தியும் விசையும் வேறு வேறு என்றார்.\\ இது எந்த சாமியாரோ தெரியவில்லை, 'சக்திக்கும், ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடு யாது' என்று நீங்களாவது சொல்லுங்கள்.

Jayadev Das said...

\\சக்தியின் அளவு வேறுபாடு அடையவில்லை, அதனை உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்றால் என்ன அர்த்தம்? \\ அப்படின்னா பிரபஞ்சம் எப்படி ஏதில் இருந்து உருவானது?

சார்வாகன் said...

வணக்கம் சகோ,

நல்ல பதிவு.இயற்கைத் தேர்வு என்பதை அழகாக விளக்கியதற்கு வாழ்த்துக்கள்.
எனினும் இயற்கைத் தேர்வு மட்டுமே மாற்ற‌த்தின் ஒரே காரணி அல்ல என்பதை சாமியார் சொல்ல வருவது அருமை.

இந்நூற்றாண்டின் மிக சிறந்த‌ பரிணாமவியல் மேதை திரு ஸ்டீஃபன் ஜே கோல்ட் அவர்களின் கருத்தும் சாமியாரின் கருத்தும் ஒன்றுதான்.இது குறித்து சில பதிவுகள் எழுதி வருகிறேன்.

அருமை
நன்றி

சார்வாகன் said...

நண்பர் ஜெ.தே.தாஸ்
1//அறிவியலால் இன்னமும் ஏற்றுக் கொள்ளப் படாத டார்வின் கொள்கையைப் பிடித்து தொங்குபவர்கள் மட்டுமே Natural selection என்ற இந்த சொற்றொடரை பயன்படுத்துகிறார்கள், சாமியார்கள் பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை./

அறிவியலால் ஏற்கப்படவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள்?
*******
2./Nothing comes out of nothing. 13.4 ஒளி ஆண்டுகள் விசாலம் கொண்டது இந்த பேரண்டம், அதில் ஆயிரக்கணாக்கான ஒளி ஆண்டுகள் பரிமாணம் கொண்ட கோடானகோடி Galaxy கள், ஒவ்வொரு Galaxy யிலும் சூரியனைப் போல கோடானகோடி நட்சத்திரங்கள் இவை அத்தனையும் ஒன்றுமில்லாததில் [one single point-ல்] இருந்து வந்ததா?!! இதைத்தான் ஆற்றல் அழிவின்மை விதி என்று சொல்கிறார்களோ? நல்ல தமாஷ்!!/
இதன் பெயர் பிக் பேங் என்படும் பெரு விரிவாக்க கொள்கை ஆற்றலின் அழிவின்மை விதி அல்ல..விசாலம் என்றால் அகலம்,அல்லது அளவு என பொருள்படும்.ஆகவே ப்ரபஞ்சத்தின் விசாலம் சுமார் 46 பில்லியன் ஒளி ஆண்டுகள்.

http://en.wikipedia.org/wiki/Observable_universe
The age of the universe is about 13.75 billion years, but due to the expansion of space humans are observing objects that were originally much closer but are now considerably farther away (as defined in terms of cosmological proper distance, which is equal to the comoving distance at the present time) than a static 13.75 billion light-years distance.[2] The diameter of the observable universe is estimated to be about 28 billion parsecs (93 billion light-years),[3] putting the edge of the observable universe at about 46–47 billion light-years away.[4][5]
*****

சார்வாகன் said...

நண்பர் தாஸ்
ஒரு பொது தளத்தில் உரையாடும் போது மாற்றுக் கருத்து கொண்டு விவாதிப்பது த்வறு அல்ல.ஆனால் 'முட்டாள்" போன்ற சொற்களை பயன்படுத்தாமல் இருக்கலாம்.

இபோது நீங்கள் கூறிய பேரண்டத்தின் விசாலம்[அகலம்] 13.7 ஒளி ஆண்டுகள் தவறு என்பது தெரிந்து விட்டது.பேரண்டத்தின் வயது என்ற பொருளில் பயன்படுத்தினாலும் அதுவும் 13.7 பீல்லியன் ஆண்டுகள் மட்டுமே.

அனைத்தும் அறிந்தவர்கள் மட்டுமே எழுத வேண்டும் எனில் ஒருவரும் எழுத முடியாது.ஆகவே கேள்வி கேட்கலாம்,தெரிந்த விவரங்களை பகிரலாம் ஆனால் மற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக.

இல்லை பேரண்டத்தின் விசாலம் 13.7 ஒளிஆண்டுகள் என்றால் நிரூபிக்கலாம்.

இது உங்களின் கூற்று

/13.4 ஒளி ஆண்டுகள் விசாலம் கொண்டது இந்த பேரண்டம்/

நன்றி

Jayadev Das said...

\\அறிவியலால் ஏற்கப்படவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள்?\\ டார்வின் சொன்னது எல்லாம் ஊகம், நிரூபணம் அல்ல. அவர் சொன்னதில், எதை எந்த வருடம் அறிவியல் ஏற்றுக் கொண்டது என்பதை ஆதாரத்தோடு நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறோம்.

Jayadev Das said...

\\ஆகவே ப்ரபஞ்சத்தின் விசாலம் சுமார் 46 பில்லியன் ஒளி ஆண்டுகள்.\\ O.K அதை விடப் பெரிது ஒன்ருமில்லாதில் இருந்து வருமா?

Radhakrishnan said...

//Jayadev Das said...
\\இயற்கை தேர்வு\\ அறிவியலால் இன்னமும் ஏற்றுக் கொள்ளப் படாத டார்வின் கொள்கையைப் பிடித்து தொங்குபவர்கள் மட்டுமே Natural selection என்ற இந்த சொற்றொடரை பயன்படுத்துகிறார்கள், சாமியார்கள் பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை.//

அறிவியல் துணையில்லாமல் இப்போது சாமியார்கள் இல்லை. ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி என இறங்கிவிடுகிறார்கள். ;)

காலம் பதில் சொல்லும். இயற்கையின் சீற்றம் என்றெல்லாம் அறிவியல் அறிஞர்கள் சொல்லித்தான் நமக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை.

பொதுவாக நமது மக்களிடையே ஒருவித மனோபாவம் இருக்கிறது. அதாவது என்ன சொல்கிறார்கள் என்பதை விட எவர் சொல்கிறார்கள் என்றுதான் பார்க்கிறார்கள். அது இன்று நேற்று அல்ல.

கண்டங்கள் நகர்கிறது என சொன்னவரை மண்ணியல் படிக்காத உனக்கு என்ன தெரியும் என்று கேட்டது அறிவியல் உலகம்.

பூமி சூரியனை சுற்றி வருகிறது என சொன்னவரை கடவுள் பத்தி விமர்சனம் செய்கிறாயா என கேட்டது ஆன்மிக உலகம்.

சாமியார்கள் சொன்னால் தான் இயற்கை தேர்வு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றோ, அறிவியல் ஏற்றுக் கொண்டால் தான் இயற்கை தேர்வு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றோ எந்த விதிகளும் இல்லை.

விரைவில் மற்ற கருத்துகளுக்குத் தொடர்கிறேன். நன்றி தாஸ்.

Jayadev Das said...

\\ஆனால் 'முட்டாள்" போன்ற சொற்களை பயன்படுத்தாமல் இருக்கலாம்.\\ முட்டாள் என்று பதிவரைச் சொல்லவில்லை, அந்த கற்பனை கேரக்டரைக் அவ்வாறு சித்தரிக்கப் பட்டதாகச் சொன்னேன்.

Radhakrishnan said...

//Jayadev Das said...
\\இயற்கை தானாக உருவானது அதனால் தான் இயற்கை தேர்வு என்றேன் . \\ Nothing comes out of nothing. 13.4 ஒளி ஆண்டுகள் விசாலம் கொண்டது இந்த பேரண்டம், அதில் ஆயிரக்கணாக்கான ஒளி ஆண்டுகள் பரிமாணம் கொண்ட கோடானகோடி Galaxy கள், ஒவ்வொரு Galaxy யிலும் சூரியனைப் போல கோடானகோடி நட்சத்திரங்கள் இவை அத்தனையும் ஒன்றுமில்லாததில் [one single point-ல்] இருந்து வந்ததா?!! இதைத்தான் ஆற்றல் அழிவின்மை விதி என்று சொல்கிறார்களோ? நல்ல தமாஷ்!!//

நண்பர் சார்வாகன் விரிவாக விளக்கம் தந்து இருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.

ஜீரோ எழுத்து (ஒண்ணுமில்லை கோட்பாடு) என்கிற ஒரு தொடர் எழுதி வருகிறேன். நேரம் இருப்பின் விரைவில் அதைத் தொடர்வேன். அதாவது எதுவுமே ஒன்றுமில்லாத ஒன்றில் இருந்து வந்திருக்க முடியாது என்பதை சொல்லும் தொடர் அது.

நமக்கு பதின்மூன்று பில்லியன் ஆண்டுகள் முன்னர் நடந்தது என்னவென எதுவுமே தெரியாது. எல்லாம் ஒருவித தியரி. இப்போது இருக்கும் விசயங்களை வைத்து முன்னர், பின்னர் விசயங்களை கணித்தல், கணக்கீடு மூலம் சொல்லுவது. அதற்காக இதுதான் என நாம் இறுமாந்து இருந்தால் அறிவியலுக்கு அழகு அது அல்ல. இன்று பெரு வெடிப்பு கொள்கை, நாளை வேறு என்ன கொள்கையா. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சில கண்களுக்குத் தெரிகிறது. சில கண்களுக்குத் தெரிவதில்லை.

நன்றி தாஸ். மீண்டும் அடுத்த கருத்துகளுக்கு விரைவில் தொடர்கிறேன்.

Jayadev Das said...

\\இபோது நீங்கள் கூறிய பேரண்டத்தின் விசாலம்[அகலம்] 13.7 ஒளி ஆண்டுகள் தவறு என்பது தெரிந்து விட்டது.பேரண்டத்தின் வயது என்ற பொருளில் பயன்படுத்தினாலும் அதுவும் 13.7 பீல்லியன் ஆண்டுகள் மட்டுமே.\\ அது தவறாகவே இருக்கட்டும், நீங்கள் அதைவிட நாலு மடங்கு பெரியது என்று சொன்னது சரியே என்று வைத்துக் கொண்டாலும், என்னுடைய கேள்வி இன்னமும் வலுவுடையதாகவே ஆகிறது. அவ்வளவு பெரிய பேரண்டம் ஒன்ருமில்லாதில் இருந்து வரும் என்று எந்த அறிவியல் விதி சொல்கிறது?

Jayadev Das said...

\\ஒரு பொது தளத்தில் உரையாடும் போது மாற்றுக் கருத்து கொண்டு விவாதிப்பது த்வறு அல்ல.ஆனால் 'முட்டாள்" போன்ற சொற்களை பயன்படுத்தாமல் இருக்கலாம்.\\ பதிவர் சொன்னது ஒருபுறமிருக்கட்டும், Entropy பிரபஞ்சத்தின் தோற்றத்தில் உச்சபட்சமாக இருந்தது எப்படி? இந்த அளவுக்கு எழுதும் முன்னர் அடிப்படை விஷயங்களை தவற விடலாமா? ஆற்றல், பொருள் அப்படியே இருக்கிறது என்று, அது ஒழுங்கற்ற நிலைக்குச் செல்கிறது என்பதை கோட்டை விடலாமா? எதை வேண்டுமானாலும் எழுதுவதற்கு பதிவு எதற்கு? பின்னூட்டம் போடுபவன் தவறாக எழுவான் என்று முன்னரே தெரிந்து இப்படி எழுதி அதை நியாயப் படுத்துகிறீர்களா?

Jayadev Das said...

\\நமக்கு பதின்மூன்று பில்லியன் ஆண்டுகள் முன்னர் நடந்தது என்னவென எதுவுமே தெரியாது. எல்லாம் ஒருவித தியரி. இப்போது இருக்கும் விசயங்களை வைத்து முன்னர், பின்னர் விசயங்களை கணித்தல், கணக்கீடு மூலம் சொல்லுவது. அதற்காக இதுதான் என நாம் இறுமாந்து இருந்தால் அறிவியலுக்கு அழகு அது அல்ல.\\ ஐயா, தங்களுக்கும் தங்கள் நண்பருக்கும் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன். தியரிகளையும், கணக்கீடுகளின் படியும் தான் இந்த பேரண்டம் இயங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இருப்பதாக எந்த அறிவியலும் சொல்லவில்லை, நிரூபிக்கப் படவில்லை.

சார்வாகன் said...

சகோ ஜெ.தே. தாஸ்,
நமது தளத்தில் பரிணாமம் பற்றி பல கட்டுரைகள் வெளியிட்டு உள்ளோம்.இயற்கைத்தேர்வு தவிர பிற காரணிகளும் இப்போது ஏற்கப்படுகின்றன.
இயற்கைத் தேர்வு என்பது அறிவியலால் நிராகரிக்கப் படுவது போல் நானறிந்தவரை இல்லை.

நீங்கல் கூறிய இயற்கைத் தேர்வு என்பது அறிவியலால் ஏற்கப்படுவது இல்லை என்பதை நிரூபிக்க முடியாது என்று நீங்கள் ஒத்துக் கொண்டால் "இப்போதைய அறிவியலில் இயற்கைத்தேர்வின் பங்கு" என நான் ஒரு பதிவு இட சித்தமாக் இருக்கிறேன். இது பற்றி விவாதிக்க நம் தளத்திற்கு விரும்பினால் வரலாம்.

எப்படி நிரூபிக்க வேண்டும் என சில விதிகள் இட்டால் மகிழ்வோம்.ஏன் எனில் இயற்கைத்தேர்வு மூலம் விளக்கப்படும் பல ஆய்வுக்கட்டுரைகள் நம்மால் காட்ட இயலும் .அது இல்லை என சொல்லக் கூடாது.
//அது தவறாகவே இருக்கட்டும், நீங்கள் அதைவிட நாலு மடங்கு பெரியது என்று சொன்னது சரியே என்று வைத்துக் கொண்டாலும், என்னுடைய கேள்வி இன்னமும் வலுவுடையதாகவே ஆகிறது. அவ்வளவு பெரிய பேரண்டம் ஒன்ருமில்லாதில் இருந்து வரும் என்று எந்த அறிவியல் விதி சொல்கிறது?//


அப்பிறம் பில்லியன் என அறிந்தது மகிழ்ச்சி .பெருவிரிவாக்க கொள்கை ஆற்றல் மாறாக் கோட்ப்படும் வெவ்வேறு என்பதும் அறிந்தால் மகிழ்ச்சி.

ஒரு சம்யத்தில் ஒரு விடயம் மட்டுமே விவாதிப்பது நம் பணி.

ஆகவே இயற்கைத்தேர்வு அறிவியலால் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்ட என்ற கூற்றை உங்களால் நிரூபிக்க முடியாது என்னும் பட்சத்தில் இன்னும் பல
விள்க்கங்கள் இயற்கைத் தேர்வு சார்ந்து ஏற்கப்படுகிறது என்பதை நிரூபிக்க சித்தமாக் இருக்கிறேன்.

உங்களின் பொதுவான வாதம் இதுதான்
**************
ஜெ.தே.தாஸ்=
"
ஆக்வே நான் கூறும் கருத்துகளை என்னால் நிரூபிக்க முடியாது,வேண்டுமானல் எதிர்க் கூற்றை நிரூபித்து நான் கூறுவது தவறு என காட்டுங்கள்"
*********
சரி முதலில் இயற்கைத் தேர்வ் பற்றி உங்களின் கருத்தினை உங்களால் நிரூபிக்க முடியுமா? இல்லையா

முடியும்/முடியாது

முடியும் என்றால் நீங்கள் ஒரு பதிவு இடுங்கள்

முடியாது எனில் நாம் பதிவு இடுகிறோம்.

நன்றி

Aba said...

அடடா... மிஸ்டர் தாஸ், அது எப்படி யார் பரிணாமம் பற்றிய பதிவு போட்டாலும் உங்களுக்கு மூக்கு வியர்த்து விடுகின்றது என்பது எனக்குப் புரியவில்லை.

@ சார்வாகன்

//முடியும் என்றால் நீங்கள் ஒரு பதிவு இடுங்கள்
முடியாது எனில் நாம் பதிவு இடுகிறோம்.//

தாஸ் ஒரு குடுகுடுப்பைக்காரர் போல யார் அறிவியலை ஆதரித்தாலும், பரிணாமத்தை நம்பினாலும் அங்கே உடனடியாகப் போய் இப்படியாக உளறிக் கொண்டிருக்கிறார்.

அவர் எந்த ஒரு விவாதத்திலும் தனது வாதத்தையோ, அதற்கான நிரூபணங்களையோ முன்வைக்காமல், everything cannot come from noting மற்றும் பரிணாமம் ஒரு ஊகம் என்ற அவரது இரண்டு common sense (?!) நம்பிக்கைகளை மீண்டும் மீண்டும் எழுதியே விவாதம் செய்வது அழகு(?!)... சீக்கிரமாக அவருக்கும் உங்களுக்குமான ஒரு கூச்சலை எதிர்பார்க்கிறேன்...

Jayadev Das said...

\\அடடா... மிஸ்டர் தாஸ், அது எப்படி யார் பரிணாமம் பற்றிய பதிவு போட்டாலும் உங்களுக்கு மூக்கு வியர்த்து விடுகின்றது என்பது எனக்குப் புரியவில்லை.\\ அதனால உங்களுக்கு என்ன கஷ்டமோ எனக்கும் புரியலை.

\\தாஸ் ஒரு குடுகுடுப்பைக்காரர் போல யார் அறிவியலை ஆதரித்தாலும், பரிணாமத்தை நம்பினாலும் அங்கே உடனடியாகப் போய் இப்படியாக உளறிக் கொண்டிருக்கிறார்.\\ ஒன்னும் தெரியாத ஒரு உளறுவாயன் இதைச் சொல்லக் கூடாது.

\\அவர் எந்த ஒரு விவாதத்திலும் தனது வாதத்தையோ, அதற்கான நிரூபணங்களையோ முன்வைக்காமல், everything cannot come from noting மற்றும் பரிணாமம் ஒரு ஊகம் என்ற அவரது இரண்டு common sense (?!) நம்பிக்கைகளை மீண்டும் மீண்டும் எழுதியே விவாதம் செய்வது அழகு(?!).\\ மனிதன் முன்னிறுத்தும் தியரிகளையோ, கணக்கையோ அதிலிருந்து வரும் முடிவுகளின் படியோ இயற்கையோ, இந்த பேரன்டமோ இயங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று ஆனாலும், அவ்வாறு இருப்பதே விளக்க முடியாத ஒன்று என்றும் விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்டிருக்கும் வேலையில், நிரூபணம், விவாதம் என்றெல்லாம் முட்டாள் தனமாக உளறுவதை முதலில் நிறுத்திக் கொள்ளும்.

Jayadev Das said...

ஒருத்தன் அம்மணமாக ஒரு விபச்சாரியுடன் லாட்ஜில் இருந்தான். போலீஸ் ரெயிடு வந்தது.

அவனிடம், "இங்கே இந்த நேரத்தில் அம்மணமாக இவளுடன் என்னடா செய்து கொண்டிருக்கிறாய்" என்று கேட்டார்கள்.

"நான் பஸ்ஸுக்குக் காத்திருந்தேன்" என்று சொன்னான்.

"ஏன்டா அம்மணமாய் இருக்கிறாய்" என்று கேட்டார்கள்.

" நான் பேன்ட் சட்டையுடையுடன் நின்றிருந்தாலும், ஏன் பேன்ட் சட்டையோடு நிற்கிறாய் என்று அப்போதும் எண்ணைக் கேட்டிருப்பீர்கள், என்றான்.

"இவளுடன் இந்த நேரத்தில் என்னடா செய்து கொண்டிருக்கிறாய்" என்று கேட்டார்கள்.

"நான் தனியாக வீதியில் நின்றிருந்தாலும் நீங்கள் ஏன் என்று கேள்வி கேட்டிருப்பீர்கள்" என்றான்.

நான் வியக்கிறேன், எப்பேற்பட்ட சாமர்த்தியசாலி இவன் என்று. எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அவனிடமிருந்து பதில் வராது, மாறாக எதிர் கேள்விதான் வரும்.

இந்த விஞ்ஞானத்திற்குப் பல்லக்கு தூக்கும் பயல்கள் பதில்களும் இப்படித்தான் இருக்கிறது. இயற்க்கை விதிகள் ஏன் இப்படி இருக்கிறது, காரணம் என்ன என்று கேட்டா, வேறு இப்படி இருந்தாலும் இதே கேள்வியைத்தான் கேட்டிருப்பாய் என்கிறார்கள். இவர்களுக்கும் மேற்சொன்னவனுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை, ரெண்டும் ஒண்ணுதான். இவர்கள் சொல்வதை ஆமாம் என்று நீ கேட்டுக் கொண்டால் புத்திசாலி. இல்லாவிட்டால் முட்டாள், குடுடுப்பைக்காரன், உளருபவன் என்ற பட்டம் தான் கிடைக்கும்.

Jayadev Das said...

\\அவர் எந்த ஒரு விவாதத்திலும் தனது வாதத்தையோ, அதற்கான நிரூபணங்களையோ முன்வைக்காமல், everything cannot come from noting மற்றும் பரிணாமம் ஒரு ஊகம் என்ற அவரது இரண்டு common sense (?!) நம்பிக்கைகளை மீண்டும் மீண்டும் எழுதியே விவாதம் செய்வது அழகு(?!).\\ அன்பரே சீக்கிரமா ஒரு நல்ல கண் மருத்துவரையும், மன நல மருத்துவரையும் நீர் பார்ப்பது உமக்கும், உமது குடும்பத்தாருக்கும், சுற்றத்துக்கும் நல்லது. நான் சொன்னது, Nonthing can comes out of nothing நீர் வேறு எதையோ உளறிக் கொட்டி அது நான் எழுதியதாகச் சொல்கிறீர்கள். மேலும், "நான் நம்புவது, விஞ்ஞானத்தை, விஞ்ஞானிகளை அல்ல" என்று பீற்றிக் கொள்ளும் நீர் டார்வின் கொள்கையை ஏற்றுக் கொண்டது விஞ்ஞானத்தின் அடிப்படையில் தானா என்று விளக்கினால் நன்றாக இருக்கும். டார்வின் கொள்கை என்ன, நியூட்டன் விதிகள் போலவோ, மேக்ஸ்வெல் தியரியைப் போலவோ நிரூபிக்கப் பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்டதா? டார்வின் தியரியை ஏற்றுக் கொள்வது அவனவன் இஷ்டமே தவிர அறிவியல் முறைப் படி நிறுவப் பட்டதல்ல. அப்படி நிறுவப் படாத ஒன்றை நான் என்ன ....யித்துக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கிறீரோ தெரியவில்லை. உம்முடைய மூதாதையரில் எவனாவது குரங்குக்குப் பிறந்திருக்கக் கூடும், ஆனால் என் மூதாதயார் யாவரும் மனிதர்களே.

உண்மையில் நீ ஒரு விஞ்ஞானத்தை நம்புபவன் என்றால், கண்ணால் கண்டைதை, நீரே பரிசோதனை செய்து மெய்ப்பிக்கப் பட்டால் தானே நம்ப வேண்டும். குரங்கில் இருந்து மனிதன் பிறந்ததை நீர் பார்த்தீரா? இல்லை, ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனம் வந்ததை நீர் பார்த்தீரா? There is no free lunch என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒன்றுமில்லாததில் இருந்து இந்தப் பேரண்டம் வந்ததாக நம்பும் நீர், அவ்வாறு எது வந்து பார்த்தீர் என்று சொல்ல முடியுமா?

சமுத்ராவின் வலைப் பூவில் என்னை நீர் வேறு பெயரில் வந்து வசை பாடி விட்டு, அடுத்த சில மணி நேரத்தில் ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி உண்மைப் பெயரில் வந்து பின்னூட்டமிட்டது எனக்கு அப்போது புரியவில்லை. பின்னர் தான் விளங்கிக் கொண்டேன். இறை நம்பிக்கையாளர்களை வசை பாடும் உம்மைப் போன்ற நாத்தீகப் பயல்களுக்கு ஒரு அடிப்படை நேர்மையாவது இருக்கிறதா என்று யோசித்துப் பாரும் அன்பரே.

Jayadev Das said...

\\நமது தளத்தில் பரிணாமம் பற்றி பல கட்டுரைகள் வெளியிட்டு உள்ளோம்.இயற்கைத்தேர்வு தவிர பிற காரணிகளும் இப்போது ஏற்கப்படுகின்றன.
இயற்கைத் தேர்வு என்பது அறிவியலால் நிராகரிக்கப் படுவது போல் நானறிந்தவரை இல்லை.

நீங்கல் கூறிய இயற்கைத் தேர்வு என்பது அறிவியலால் ஏற்கப்படுவது இல்லை என்பதை நிரூபிக்க முடியாது என்று நீங்கள் ஒத்துக் கொண்டால் "இப்போதைய அறிவியலில் இயற்கைத்தேர்வின் பங்கு" என நான் ஒரு பதிவு இட சித்தமாக் இருக்கிறேன். இது பற்றி விவாதிக்க நம் தளத்திற்கு விரும்பினால் வரலாம்.

எப்படி நிரூபிக்க வேண்டும் என சில விதிகள் இட்டால் மகிழ்வோம்.ஏன் எனில் இயற்கைத்தேர்வு மூலம் விளக்கப்படும் பல ஆய்வுக்கட்டுரைகள் நம்மால் காட்ட இயலும் .அது இல்லை என சொல்லக் கூடாது.\\

\\ஆகவே இயற்கைத்தேர்வு அறிவியலால் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்ட என்ற கூற்றை உங்களால் நிரூபிக்க முடியாது என்னும் பட்சத்தில் இன்னும் பல
விள்க்கங்கள் இயற்கைத் தேர்வு சார்ந்து ஏற்கப்படுகிறது என்பதை நிரூபிக்க சித்தமாக் இருக்கிறேன்.

உங்களின் பொதுவான வாதம் இதுதான்
**************
ஜெ.தே.தாஸ்=
"
ஆக்வே நான் கூறும் கருத்துகளை என்னால் நிரூபிக்க முடியாது,வேண்டுமானல் எதிர்க் கூற்றை நிரூபித்து நான் கூறுவது தவறு என காட்டுங்கள்"
*********
சரி முதலில் இயற்கைத் தேர்வ் பற்றி உங்களின் கருத்தினை உங்களால் நிரூபிக்க முடியுமா? இல்லையா

முடியும்/முடியாது

முடியும் என்றால் நீங்கள் ஒரு பதிவு இடுங்கள்

முடியாது எனில் நாம் பதிவு இடுகிறோம்.
\\

சகோ சார்வாகன்.

Let us not reinvent the wheel. நான் மீண்டும் சக்கரத்தை கண்டுபிடிக்கும் வேலைக்கு போக விரும்பவில்லை. நீங்கள் கேட்ட மாதிரி ஒரு பக்கத்தை தேடி பார்த்தேன், ஒன்று சிக்கியுள்ளது. உங்கள் கேள்விகள் அத்தனையும் ஏற்கனவே அலசி ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்கள், படித்துவிட்டு அவர்களுக்கே உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.

http://www.thespiritualscientist.com/2011/07/does-the-theory-of-evolution-have-a-scientific-basis/

Jayadev Das said...

\\அப்பிறம் பில்லியன் என அறிந்தது மகிழ்ச்சி .\\ பில்லியன் என்றுதான் நானும் சொன்னேன். நான் 13.4 பில்லியன் ஒளி ஆண்டுகள் என்று சொன்னேன் நீங்கள் 40 பில்லியன் ஒளி ஆண்டுகள் என்று சொன்னீர்கள். அது சரி, ஒரு பேச்சுக்கு சொன்னால் அதையே பிடிச்சுகிட்டு தொங்குவதா? நான் என்ன விஜயகாந்தா புள்ளி விவரங்களை அள்ளி வீசுவதற்கு? நான் சொன்ன நம்பர்கள் தவறாக இருந்ததால், சொன்ன விஷயம் போய் என்றாகி விடுமா? 13.4 பில்லியன் ஒளி ஆண்டுகள் விசாலமான பேரண்டம் ஒன்றுமில்லாததில் இருந்து வராது என்றால், தவறு திருத்தப் பட்ட பின்னர் அது 40 பில்லியன் ஒளி ஆண்டுகள் விசாலமான பேரண்டம் ஒன்றுமில்லாததில் இருந்து வரும் என்று ஆகி விடுமா? ஐயோ........ஐயோ............

Jayadev Das said...

\\பெருவிரிவாக்க கொள்கை ஆற்றல் மாறாக் கோட்ப்படும் வெவ்வேறு என்பதும் அறிந்தால் மகிழ்ச்சி. \\ தெய்வமே............... உங்க கால் ஏங்க இருக்குதுன்னு மட்டும் சொல்லுங்க............ இப்படி கொல்றீங்களே!! பெருவிரிவாக்க கொள்கை ஒரு புள்ளியில் இருந்து [புள்ளி='0' ஆரமுள்ள வட்டம் என்று உமக்கு நான் சொல்ல வேண்டியதில்லை] அதாவது ஒன்றுமில்லாததில் இருந்து இந்த பேரண்டம் வந்தது என்று சொல்கிறது. ஆற்றல் அழிவின்மை விதி, ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றத்தான் முடியும் என்கிறது. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்றால் இந்த பேரண்டத்தில் உள்ள மொத்த ஆற்றலும் ஒன்றுமில்லாததில் இருந்து எப்படி வரும் என்பது தான் கேள்வி.

Jayadev Das said...

\\ஒரு சம்யத்தில் ஒரு விடயம் மட்டுமே விவாதிப்பது நம் பணி.\\ அது வேண்டுமானால் உங்க பனியா இருக்கலாம், ஆனா இந்த பதிவர் நாலு விஷயத்தையும் கலந்து கட்டி அடிச்சிருக்காரு, அதனால எல்லாத்தையும் கேட்க வேண்டியிருக்கே!!

Boys said...

நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php

Radhakrishnan said...

//Jayadev Das said...
\\எல்லாம் ஆங்காங்கே உருண்டு புரண்டு நின்றது. மொத்தமாக இருந்த சோளிகளை சிதறடித்தது நான். நான் சிதறடிக்காமல் இருந்து இருந்தால் எப்படி அவை சிதறும் என்றார். சாமி இந்த சோளிகள் எங்கே இருந்து வந்தது என்றேன்.\\ சோளிகள் தானாகவே சிதறும் என்று காட்டினால் அங்கே கடவுள் இல்லை என்ற நாத்திகர்கள் வாதம் வென்றுவிடும். அதை எந்த நாத்தீகனும் செய்வதில்லை. ஆனால், அதை அப்படி விட்டு விட்டு சோளிகள் எங்கே இருந்தது என்ற கேள்விக்கு ஏன் தாவ வேண்டும்?//

ஆஹா, அப்படியெனில் கடவுளை எவர் செய்தது என்றும் நாத்திகர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடவுள் ஒன்றும் சும்மா வந்து இருக்க வாய்ப்பு இல்லை அல்லவா. இதைத்தான் இயற்கை தேர்வு என சொல்கிறார்கள். ;)

Jayadev Das said...

\\ஆஹா, அப்படியெனில் கடவுளை எவர் செய்தது என்றும் நாத்திகர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடவுள் ஒன்றும் சும்மா வந்து இருக்க வாய்ப்பு இல்லை அல்லவா. இதைத்தான் இயற்கை தேர்வு என சொல்கிறார்கள். ;)\\

வரிசையாக செம்மறி ஆடுகள் போகும் போது ஒரு குச்சியை நீட்டி முதல் ஆட்டை தவ்வச் செய்து விட்டால் போதும், பின்னால் செல்லும் ஆடுகள் குச்சி இல்லாவிட்டாலும் தவ்விக் கொண்டே செல்லும். இங்கே இன்னொருத்தர் தவ்வ ஆரம்பித்து விட்டார்!! ஆறறிவு படைத்த நீங்களும் செம்மறி ஆட்டுக் கூட்டமாகவே இருப்பது வருந்தத் தக்கது. நெருப்புக் கோழி மணலில் தலையைப் புதைத்துக் கொள்வது போல நாத்திக அன்பர்களும் செய்கிறீர்கள், ஒரு போதும் உண்மையைப் பார்க்கப் போவதில்லை.

இங்கே கண் முன்னே ஜடம்[Matter] மட்டுமே தெரிகிறது , அதன் பண்புகளை வைத்தே நாம் வினாக்களை எழுப்புகிறோம். அதில் முக்கியமாக, ஒன்றுமில்லாததில் இருந்து இந்த பிரபஞ்சம் வரும் என்பதற்கான அறிவியல் விதி என்ன? நீங்கள் அப்படி வந்ததாக எதை பார்த்தீர்கள். பிரபஞ்சம் singularity யில் இருந்து வந்ததென்றால் அந்த singularity எங்கிருந்து வந்தது? Entropy பெருவெடிப்பின் போது அதிகபட்சமாக இருந்தது எப்படி? அறிவியல் விதிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான காரணம் என்ன? வெறும் ஜடமாக இருந்து உயிர் எப்படி தோன்றியது, ஒரு செல்லில் உள்ள complexity ஒரு நகரத்தை விட அதிகம் என்றால் அந்த அமைப்பு எப்படி தானாக வந்தது, அவ்வாறு தானாக வந்த எதையாவது நீங்கள் பார்த்துள்ளீர்களா?

மேற்கண்ட கேள்விகள் எதிலும் நான் கடவுள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே இல்லை. நீங்கள் இதற்குப் பின்னணியில் காரணிகள் [அது உயிர், உயிரற்றது எதுவாக இருந்தாலும் சரி] எதுவும் இல்லை என்று நிரூபித்தாலே உங்கள் கொள்கை வெற்றியடையும், அதற்க்கு உங்களிடத்தில் திராணி இல்லை. கடவுள் இருப்பானேயானால்......... என்ற கேள்விக்கு அங்கேயிருந்து தவ்வுகிரீர்கள். முதலில் கடவுள் என்ற ஒருத்தன் இருக்கிறான் என்று நீங்கள் ஒப்புக் கொண்ட பின்னர் அடுத்து கடவுள் இருப்பானேயானால்......... என்று கேட்கலாம். ஆகையால் முதலில் இருக்க முடியாது என்பதற்கு ஆதாரங்களை முன் வையுங்கள். அதற்க்கப்புறம் கடவுள் கருப்பா சிவாப்பா என்று உட்கார்ந்து ரூம் போட்டு யோசிக்கலாம்.

Radhakrishnan said...

//Jayadev Das said...
\\இவ்வுலகில் உள்ள மொத்த சக்தியும் இதுவரை மாற்றம் அடைந்தது இல்லை என்கிறார்களே என்றேன். \\ சாமியாரை முட்டாளாகப் படைத்த நீங்களாவது விவரங்களை தீர அறிந்துகொண்டு பதிவு போட்டிருக்கலாம். பிரபஞ்சத்தில் ஆற்றல் அழிவதில்லை, ஆனால் அது ஒழுங்கான நிலையில் இருந்து ஒழுங்கற்ற நிலைக்கு மீளாவண்ணம் [irreversibly] சென்று கொண்டிருக்கிறது. இதை Entropy என்பார்கள், இது ஒருபோதும் குறைவதில்லை, அதிகரித்துக் கொண்டே செல்லும். அப்படியானால், இந்த பிரபஞ்சத்தை நேர்த்தியா வச்சு ஸ்டார்ட் பண்ணிவிட்டது யாருன்னும் கேட்கலாம். பதில் உள்ளதா உங்களிடம்???//

சாமியாரை நான் முட்டாளாக படைக்க வேண்டிய நோக்கம் எதுவும் இல்லை. இங்கே எனது முட்டாள்தனமோ அல்லது எனது அறிவாளித்தனமோ மட்டுமே பிரதிபலிக்கும். எனது எழுத்துகளுக்கு நானே உரிமை எடுத்து கொள்கிறேன். மேலும் இது முட்டாள்களின் உலகம் என்பதில் மட்டும் எனக்கு இரு வேறு கருத்து இல்லை.

பிரபஞ்சத்தில் ஆற்றல் அழிவதில்லை எனும் கோட்பாடும், அந்த ஆற்றல் ஒழுங்கான நிலையில் இருந்து ஒழுங்கற்ற தன்மை(என்றோபி) எனும் நிலைக்கு செல்வதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இங்கே சில முரண்பாடுகள் இருக்கின்றன. ஒழுங்கான தன்மையின் அளவு எது? ஒழுங்கற்ற தன்மையின் அளவு இது?
தண்ணீர் எடுத்துக் கொள்வோம். இதனுடைய என்றோபி பற்றி பார்ப்போம். தண்ணீர் ஐஸ் கட்டியாக இருக்கும்போது அதனின் என்றோபி என்ன? அந்த தண்ணீர் நீராவியாகும் போது அதனின் என்றோபி என்ன? என்றோபி என்றால் என்ன என்பது குறித்து தனி பதிவு ஒன்று எழுதினால் மட்டுமே மிகவும் விளக்கமாக சொல்ல இயலும். மிகவும் எளிதாக கறந்த பால் மடி புகா என்பது பழமொழி. அதைத்தான் என்ரோபி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆற்றல் அதிகரிக்கிறது என்பது தவறான கூற்று, இவ்வுலகத்தில் ஓரிடத்தில் ஆற்றல் அதிகரிக்க வேண்டுமெனில் அந்த ஆற்றல் எங்கிருந்து வந்ததோ அங்கே ஆற்றல் குறையத்தான் வேண்டும். வெப்பமான பகுதியில் இருந்து குளிர் பகுதிக்கு வெப்பம் தாவினால் வெப்பமான பகுதியில் அதே வெப்பம் இருக்கும் என்பது சரியான கருத்தாக இருக்காது. எனவே இங்கே நேர்த்தி, ஒழுங்கு என்பதெல்லாம் நாம் வைத்து கொண்டது. இயற்கை தேர்வு ஒன்றுதான் இதற்கு சரியான பதில்.

Radhakrishnan said...

//Jayadev Das said...
\\எந்த வகையான மாற்றம் என்றார். புரியவில்லை என்றேன். இதோ சோளிகள் எப்படி ஒரு பொருளில் இருந்து உருவானதோ, அந்த பொருளானது எப்படி வேறு ஒரு பொருளில் இருந்து உருவானதோ அதைப்போலவே சக்தியும் மாற்றம் கொள்ளும் என்றார். சக்திக்கும், ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடு யாது என்றேன். இரண்டும் ஒன்றுதான். சக்தியும் விசையும் வேறு வேறு என்றார்.\\ இது எந்த சாமியாரோ தெரியவில்லை, 'சக்திக்கும், ஆற்றலுக்கும் உள்ள வேறுபாடு யாது' என்று நீங்களாவது சொல்லுங்கள்.//

நதி மூலம், ரிசி மூலம் எல்லாம் பார்க்க கூடாது என சொல்வார்கள். அவர் இரண்டும் ஒன்று என சொன்னார். ஆனால் என்னைப் பொருத்தவரை வேறுபாடு உண்டு.

உயிருள்ளவைகளில் உள்ளது சக்தி. உயிரற்றவைகளில் உள்ளது ஆற்றல்.

Radhakrishnan said...

//Jayadev Das said...
\\சக்தியின் அளவு வேறுபாடு அடையவில்லை, அதனை உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்றால் என்ன அர்த்தம்? \\ அப்படின்னா பிரபஞ்சம் எப்படி ஏதில் இருந்து உருவானது?//

இந்த தோற்றம், மறைவு எல்லாம் உண்மையிலேயே எனக்கு தெரியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரே ஒரு வாசகம் மட்டும் நான் அதிகம் பயன்படுத்துவேன். அது...

உண்மையை யார் தான் உண்மையாக இருக்க விட்டது.

Radhakrishnan said...

//Jayadev Das said...
\\ஒரு பொது தளத்தில் உரையாடும் போது மாற்றுக் கருத்து கொண்டு விவாதிப்பது த்வறு அல்ல.ஆனால் 'முட்டாள்" போன்ற சொற்களை பயன்படுத்தாமல் இருக்கலாம்.\\ பதிவர் சொன்னது ஒருபுறமிருக்கட்டும், Entropy பிரபஞ்சத்தின் தோற்றத்தில் உச்சபட்சமாக இருந்தது எப்படி? இந்த அளவுக்கு எழுதும் முன்னர் அடிப்படை விஷயங்களை தவற விடலாமா? ஆற்றல், பொருள் அப்படியே இருக்கிறது என்று, அது ஒழுங்கற்ற நிலைக்குச் செல்கிறது என்பதை கோட்டை விடலாமா? எதை வேண்டுமானாலும் எழுதுவதற்கு பதிவு எதற்கு? பின்னூட்டம் போடுபவன் தவறாக எழுவான் என்று முன்னரே தெரிந்து இப்படி எழுதி அதை நியாயப் படுத்துகிறீர்களா?//

இப்பொழுது ஒன்றே ஒன்றுதான். பிரபஞ்சம் எப்போது தோன்றியது என்பதை எவருமே வரையறுக்க முடியாது. அந்த வேளையில் என்றோபி அதிகமாக இருந்தது என இன்றைய நிலையை வைத்துச் சொல்லும் கணக்கீடு எல்லாம் சரி என சொல்லிக்கொண்டிருக்க என்னால் இயலாது. மொத்த ஆற்றல், மொத்த அணுக்கள் என எல்லாமே இவ்வுலகில் மாற்றமே அடையவில்லை என்பதுதான் இயற்கை கோட்பாடு. இதைத்தான் என்றோபி சொல்கிறது, அதுவும் தனித்துவிடப்பட்ட ஒன்றில். காலம் என்றோபி போன்றதுதான். கடந்த காலத்தை நம்மால் தொட இயலாது. ஆனால் கடந்த காலம் இல்லாமல் இந்த காலம் ஒன்று வந்திருக்க இயலாது. எனினும் காலம் ஒன்றுதான். அதைப்போலவே ஆற்றலும். இந்த பிரபஞ்சத்தில் ஆற்றல் எப்போதுமே ஒரே அளவில் தான் உள்ளது. ஒழுங்கற்ற நிலைக்கு செல்வதால் ஆற்றல் அளவு மாறுவதில்லை என்பதுதான் கட்டுரையின் சாரம்சம்.

Radhakrishnan said...

Jayadev Das said...

//வரிசையாக செம்மறி ஆடுகள் போகும் போது ஒரு குச்சியை நீட்டி முதல் ஆட்டை தவ்வச் செய்து விட்டால் போதும், பின்னால் செல்லும் ஆடுகள் குச்சி இல்லாவிட்டாலும் தவ்விக் கொண்டே செல்லும். இங்கே இன்னொருத்தர் தவ்வ ஆரம்பித்து விட்டார்!! ஆறறிவு படைத்த நீங்களும் செம்மறி ஆட்டுக் கூட்டமாகவே இருப்பது வருந்தத் தக்கது. நெருப்புக் கோழி மணலில் தலையைப் புதைத்துக் கொள்வது போல நாத்திக அன்பர்களும் செய்கிறீர்கள், ஒரு போதும் உண்மையைப் பார்க்கப் போவதில்லை//

ஹாஹா! மிகவும் சிரிக்க வைத்த வாக்கியம். அது செம்மறி ஆட்டின் இயற்கைத் தேர்வு. நான் என்னை ஒருபோதும் ஆத்திகன் என்றோ, நாத்திகன் என்றோ எண்ணிக கொள்வதில்லை. எவரோ ஒருவர் இறைவன் என்ற ஒன்றை சொன்னதை வைத்தே நீங்களும் அந்த வழியில் இருக்கிறீர்கள் எனலாமோ?. அப்படி ஒருவேளை இருந்தால் நீங்களும் ஒருபோதும் உண்மையை உணரப் போவதும் இல்லை.


//இங்கே கண் முன்னே ஜடம்[Matter] மட்டுமே தெரிகிறது , அதன் பண்புகளை வைத்தே நாம் வினாக்களை எழுப்புகிறோம். அதில் முக்கியமாக, ஒன்றுமில்லாததில் இருந்து இந்த பிரபஞ்சம் வரும் என்பதற்கான அறிவியல் விதி என்ன? நீங்கள் அப்படி வந்ததாக எதை பார்த்தீர்கள். பிரபஞ்சம் singularity யில் இருந்து வந்ததென்றால் அந்த singularity எங்கிருந்து வந்தது?//

அந்த சிங்குலாரிட்டிதான் இயற்கை தேர்வு. இயற்கை தானாகவே தேர்ந்தெடுத்து கொள்ளும் பண்பு உடையது. இதை இறைவன் சொல்வோர் உண்டு. அப்படி சொல்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இருந்தது இல்லை. கவனக்குறைவு கூட கடவுள் குற்றம் என்போர் உளர்.


//Entropy பெருவெடிப்பின் போது அதிகபட்சமாக இருந்தது எப்படி? அறிவியல் விதிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான காரணம் என்ன? வெறும் ஜடமாக இருந்து உயிர் எப்படி தோன்றியது, ஒரு செல்லில் உள்ள complexity ஒரு நகரத்தை விட அதிகம் என்றால் அந்த அமைப்பு எப்படி தானாக வந்தது, அவ்வாறு தானாக வந்த எதையாவது நீங்கள் பார்த்துள்ளீர்களா?//

பல்வேறு சூழல்களில் எனது சிந்தனைகள் தானாகவே எழுகின்றன. அந்த சிந்தனைகளை நான் பார்த்து இருக்கிறேன். ஒரு நிலம். அங்கே எவரும் எதையும் விதைக்கவில்லை. ஆனால் மரம் முளைக்கிறது. மரத்திற்கான விதை யார் போட்டது என்பது மட்டுமே புதிர் என நினைத்தால் அது தவறு. அது இயற்கைத் தேர்வு. இது குறித்தும் நிறைய எழுதலாம்.

ஜடம் உயிராக தோன்ற சாத்தியங்கள் உண்டு. வைரஸ் மாபெரும் உதாரணம்.

//மேற்கண்ட கேள்விகள் எதிலும் நான் கடவுள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே இல்லை. நீங்கள் இதற்குப் பின்னணியில் காரணிகள் [அது உயிர், உயிரற்றது எதுவாக இருந்தாலும் சரி] எதுவும் இல்லை என்று நிரூபித்தாலே உங்கள் கொள்கை வெற்றியடையும், அதற்க்கு உங்களிடத்தில் திராணி இல்லை. கடவுள் இருப்பானேயானால்......... என்ற கேள்விக்கு அங்கேயிருந்து தவ்வுகிரீர்கள். முதலில் கடவுள் என்ற ஒருத்தன் இருக்கிறான் என்று நீங்கள் ஒப்புக் கொண்ட பின்னர் அடுத்து கடவுள் இருப்பானேயானால்......... என்று கேட்கலாம். ஆகையால் முதலில் இருக்க முடியாது என்பதற்கு ஆதாரங்களை முன் வையுங்கள். அதற்க்கப்புறம் கடவுள் கருப்பா சிவாப்பா என்று உட்கார்ந்து ரூம் போட்டு யோசிக்கலாம்.//

உயிர், உயிரற்றது என்பது பின்னையில் இயற்கைத் தேர்வு எனும் காரணி உள்ளது. இயற்கைத் தேர்வு எனும்போது அங்கே இறைவன் அவசியம் இல்லை, அப்படியே அவசியம் எனில் இறைவன் கூட இயற்கைத் தேர்வாக இருக்கலாம் என்பதில் மறு கருத்து இல்லை.

Jayadev Das said...

\\ஒழுங்கான தன்மையின் அளவு எது? ஒழுங்கற்ற தன்மையின் அளவு இது? \\ தெய்வமே, இதென்னது விடிய விடிய இராமாயணம் கேட்ட கதையாக இருக்கிறது!! Entropy என்பதே ஒழுங்கற்ற தன்மையின் அளவுகோல் தானே!!

\\என்றோபி என்றால் என்ன என்பது குறித்து தனி பதிவு ஒன்று எழுதினால் மட்டுமே மிகவும் விளக்கமாக சொல்ல இயலும். \\ தாங்கள் சொல்ல வந்த கருத்து உலகில் உள்ள மொத்த ஆற்றலும் ஒரு போதும் மாற்றமடையப் போவதில்லை என்பதே. அதில், ஒரு சின்ன திருத்தம், ஆற்றம் மாறாவிட்டாலும், ஒழுங்கான நிலையில் இருந்து ஒழுங்கற்ற நிலைக்குச் செல்கிறது, இதை Entropy யின் தொடர்ந்த அதிகரிப்பு என்று சொல்வார்கள் என்று சொன்னேன். அதாவது, ஒரு வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் அப்படியே யாரும் எடுத்துச் செல்லாமல், தோலினது போகாமல் இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனாலும், அந்த வீடு சுத்தமாகவும், பொருட்கள் எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைக்கப் பட்டும் இருந்தது, போகப் போக அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி ஒழுங்கற்ற நிலைக்குப் போகிறது- என்று நான் சொன்னேன். முதலில் வீட்டை அடுக்கி ஒழுங்காக வைத்தது யார் என்ற கேள்வியையும் எழுப்பினேன். That's all.

\\ஆனால் ஆற்றல் அதிகரிக்கிறது என்பது தவறான கூற்று\\ அப்படி நான் சொல்லவேயில்லையே!!

Jayadev Das said...

\\பிரபஞ்சம் எப்போது தோன்றியது என்பதை எவருமே வரையறுக்க முடியாது. \\

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பெருவெடிப்பில் பிரபஞ்சம் தோன்றியது என்கிறார்களே??!!

\\அந்த வேளையில் என்றோபி அதிகமாக இருந்தது என இன்றைய நிலையை வைத்துச் சொல்லும் கணக்கீடு எல்லாம் சரி என சொல்லிக்கொண்டிருக்க என்னால் இயலாது. மொத்த ஆற்றல், மொத்த அணுக்கள் என எல்லாமே இவ்வுலகில் மாற்றமே அடையவில்லை என்பதுதான் இயற்கை கோட்பாடு. இதைத்தான் என்றோபி சொல்கிறது, அதுவும் தனித்துவிடப்பட்ட ஒன்றில். காலம் என்றோபி போன்றதுதான். கடந்த காலத்தை நம்மால் தொட இயலாது. ஆனால் கடந்த காலம் இல்லாமல் இந்த காலம் ஒன்று வந்திருக்க இயலாது. எனினும் காலம் ஒன்றுதான். அதைப்போலவே ஆற்றலும். இந்த பிரபஞ்சத்தில் ஆற்றல் எப்போதுமே ஒரே அளவில் தான் உள்ளது. ஒழுங்கற்ற நிலைக்கு செல்வதால் ஆற்றல் அளவு மாறுவதில்லை என்பதுதான் கட்டுரையின் சாரம்சம்.\\

Entropy குறித்து நீங்கள் படித்து அறிந்து கொல்லலாம், நான் கணக்கீடு எதையும் போடவில்லை, என்ட்ரோபி ஒருபோதும் குறையாமல் அதிகரிப்பது என்பது இயற்பியலில் வெப்ப இயக்கவியலில் உள்ள அரிச்சுவடி. ஆற்றல் அழியவில்லை என்றாலும், அது ஒழுங்கான நிலையில் ஆரம்பத்தில் இருந்தது, அது எவ்வாறு அங்ஙனம் வைக்கப் பட்டது என்பது சிந்திக்கத்தக்கது.

Jayadev Das said...

\\ எவரோ ஒருவர் இறைவன் என்ற ஒன்றை சொன்னதை வைத்தே நீங்களும் அந்த வழியில் இருக்கிறீர்கள் எனலாமோ?. அப்படி ஒருவேளை இருந்தால் நீங்களும் ஒருபோதும் உண்மையை உணரப் போவதும் இல்லை.
\\

ஜடத்திற்க்குப் [Matter ] புத்தியில்லை, அது தானாகவே complex வடிவங்களாக மாற்றியமைத்துக் கொள்ள இயலாது. கணினியோ, கைபேசியோ தானாக உருவாகாது. அவ்வளவு ஏன், தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள், கூர்மையான கற்களை தோண்டி கண்டுபிடித்தால் கூட அதை செய்தவன் யார், எந்த காலத்தில் வாழ்ந்திருப்பான் என்று தான் நினைக்கிறார்களே தவிர, அது தானாகவே கனிமங்களில் இருந்து உருவாகியிருக்கும் என்று நினைப்பதில்லை. அவ்வாறிருக்க, மனிதன் நூற்றுக் கணக்கான வருடங்கள் சிந்தித்து கஷ்டப் பட்டு கண்டுபிடித்த இயந்திரங்களை விட Complexity அதிகம் கொண்ட இதயம், கிட்னி, மூளை, நுரையீரல், கண்கள் போன்ற உறுப்புகள் தானாகவே உருவாகியிருக்கும் என்று நாத்தீகர்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. இவற்றின் தோற்றத்திற்குப் பின்னால் நிச்சயம் ஒரு அறிவார்ந்த ஜீவன் இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக நம்ப முடிகிறது. முடிந்தால், என்றாவது உங்கள் வீடு பானையில் உள்ள இட்லி மாவு தானாகவே சட்டியில் போய் உட்கார்ந்து அடியில் உள்ள நெருப்பு தானாக எரிந்து இட்லியானதாக நீங்கள் பார்த்தால் சொல்லியனுப்புங்கள், நான் என் சிந்தனையை மாற்றிக் கொள்கிறேன்.

Jayadev Das said...

\\அந்த சிங்குலாரிட்டிதான் இயற்கை தேர்வு. இயற்கை தானாகவே தேர்ந்தெடுத்து கொள்ளும் பண்பு உடையது. இதை இறைவன் சொல்வோர் உண்டு. அப்படி சொல்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இருந்தது இல்லை. கவனக்குறைவு கூட கடவுள் குற்றம் என்போர் உளர். \\ இப்படியெல்லாம் யார் சொல்றாங்களோ தெரியவில்லை. இது அறிவியலும் இல்லை, மூட நம்பிக்கையை விட மோசமான நம்பிக்கை.

Jayadev Das said...

\\ஒரு நிலம். அங்கே எவரும் எதையும் விதைக்கவில்லை. ஆனால் மரம் முளைக்கிறது. மரத்திற்கான விதை யார் போட்டது என்பது மட்டுமே புதிர் என நினைத்தால் அது தவறு. அது இயற்கைத் தேர்வு. இது குறித்தும் நிறைய எழுதலாம். \\ இயற்கைத் தேர்வில் விதை உருவானதாக எங்காவது நடந்துள்ளதா?

\\ஜடம் உயிராக தோன்ற சாத்தியங்கள் உண்டு. வைரஸ் மாபெரும் உதாரணம். \\ I am very sorry அன்பரே, இப்படியெல்லாம் வெளியில் பேசாதீர்கள், தங்கள் மேலுள்ள மரியாதை போய் விடும்.

Jayadev Das said...

\\உயிர், உயிரற்றது என்பது பின்னையில் இயற்கைத் தேர்வு எனும் காரணி உள்ளது. இயற்கைத் தேர்வு எனும்போது அங்கே இறைவன் அவசியம் இல்லை, அப்படியே அவசியம் எனில் இறைவன் கூட இயற்கைத் தேர்வாக இருக்கலாம் என்பதில் மறு கருத்து இல்லை.\\ இது எனக்குப் புரியவில்லை, அந்த இறைவனோ, இயற்கைத் தேர்வோ நேரில் வந்து புரிய வைத்தால் தான் உண்டு!!

Radhakrishnan said...

தங்கள் கருத்துகளுக்கு நன்றி தாஸ்.

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது என்கிறார்கள்.

மனிதர்களை கூட ஜடம் என சொல்வோரும் உண்டு. உணர்வு அற்றவரைத் தான் ஜடம் என சொல்வார்கள். உயிர் அற்றவரை பிணம் என சொல்வார்கள்.

ஆதியும், அந்தமும் இல்லாத ஒன்று உண்டா? அப்படி ஒன்று உண்டு என்பதாகவே நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். இப்படி சொன்னவர்கள் தங்கள் மரியாதை குறைந்து போகும் என்று நினைத்து எல்லாம் பேசி இருக்க மாட்டார்கள்.

அதே வேளையில் மரியாதை குறைகிறது என்பதற்காக சில விசயங்களை பேச மறுப்பது தவறாக முடியும் அல்லவா. சில விசயங்களை பேசுவதன் மூலம் அது தவறாக இருப்பின் திருத்திக் கொள்வதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. கலந்துரையாடலில் மூலம் அறிவு பெரும் வாய்ப்புகள் உண்டு.

நீங்கள் குறிப்பிடுவது போல இட்லி வேண்டுமெனில் மாவு உருவாக்கி அரைத்து இட்லி சட்டியில் ஊற்றினால் தான் உண்டு. ஆனால் அந்த மாவு, அதற்கு முந்தைய தாவரம், அந்த தாவரத்திற்கான கனிமம் என பார்த்தால் இயற்கைத் தேர்வு என நினைக்க முடியும்.

நிற்க.

இறைவனோ, இயற்கை தேர்வோ மனதை ஒரு நிலைக்கும் உட்படுத்தாமல் தேடலில் ஈடுபடுவதன் மூலமே புதிய வழிகள் தென்படும். இல்லையெனில் பலர் செல்லும் வழி தான் எனக்கும், தங்களுக்கும்.

Easy (EZ) Editorial Calendar said...

மிக நல்ல பதிவு

நன்றி,
ஜோசப்
--- ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)