சாமியார் ஒருவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றா!
பக்தா, பரமாத்மாவில் இருந்து பிரிந்ததுதான் ஜீவாத்மா எனவே பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று.
முட்டாள்தனமாக இருக்கிறதே, நான் எப்போது உங்கள் பக்தன் ஆனேன். ஆத்மாவே இல்லை என சொல்லும்போது அதில் எங்கே பரமாத்மா, ஜீவாத்மா! திலோத்தமா என்றுதான் பாட வேண்டும் போலிருக்கிறது.
பக்தா, சிற்றின்பத்தில் மூழ்கி கிடந்தழியும் உனது சிந்தைக்கு ஜீவாத்மா, பரமாத்மா எல்லாம் புரிந்து கொள்ள இயலாது.
இருக்கட்டும், பூமியும், பிரபஞ்சமும் ஒன்றா.
பக்தா, பிரபஞ்சத்தில் இருந்து பிரிந்து வந்ததுதான் பூமி, எனவே பூமியும் பிரபஞ்சமும் ஒன்று.
அப்படியெனில் தாயும் சேயும் ஒன்றா.
பக்தா, தாயில் இருந்து சேய் பிரிந்து வந்ததால் தாயும் சேயும் ஒன்றுதான்.
உங்கள் தாய் எங்கே?
பக்தா, அன்னை எங்கே எனும் தேடல் என்னில் இல்லை.
முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு வந்தீரா, அல்லது தெருவில் கிடந்து உழலட்டும் என விட்டுவிட்டு வந்தீரா.
பக்தா, அன்னை அவள் தன்னை காத்து கொள்வாள்.
தாயும் சேயும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறல்லவா.
பக்தா, உண்மை புலப்படுகிறதோ. பரமாத்மாவில் இருந்து ஜீவாத்மா பிரிந்து வந்தபின்னர் ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு. அதைப்போல பூமி பிரிந்து வந்தாலும் பிரபஞ்சம் வேறு, பூமி வேறு.
இப்படி வேறு வேறு என இருக்க எதற்கு வேதங்கள் எல்லாம் அனைத்தும் ஒன்றே என புலம்பி தள்ளுகின்றன.
பக்தா, உற்று நோக்கில் எல்லாம் ஒன்றே. பற்று வைத்திடில் எல்லாம் வேறு வேறே.
பூமி உருண்டை என சொல்வது தவறு. பூமி தட்டை என்பதுதானே சரி என யஜூர் வேதம் சொல்லி இருக்கிறதே.
பக்தா, நாம் பார்க்கும் விசயங்கள் எல்லாம் ஒளியினால் நமக்கு தெரிபவை. ஒளியின் சிதறல்கள் பொறுத்தே ஒரு பொருள் வடிவமைப்பை பெற்று கொள்கிறது. பூமி உருண்டை என சொல்வதும், பூமி தட்டை என சொல்வதும் நமது பார்வையை பொறுத்தே அமையும். கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டு என சொல்வதைப் போலவே எல்லாம் அமையும்.
பூமி உருண்டை எனில் பக்கவாட்டில் இருக்கும் பொருட்கள் எல்லாம் விழுந்துவிடாதா. கடல் நீர் எல்லாம் கீழே கொட்டிவிடாதா.
பக்தா, சிற்றின்பத்தில் மூழ்கி இருக்கும் உனது சிந்தைக்கு இது எல்லாம் புரியாது. ஈர்ப்பு விசையின் காரணமாக எல்லா பொருட்களும் அட்டை போன்றே பூமியின் பரப்பில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. வெளிஈர்ப்பு விசையினை புவிஈர்ப்பு விசை முறியடித்து விடும் தன்மை உடையது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை தலைகீழாக சாய்த்தால் தண்ணீர் கீழே விழ வேண்டும், அதுதான் நியதி. ஆனால் பூமி அப்படி அல்ல.
பிறகு எப்படியாம்.
இதுகுறித்து பேச மீண்டும் ஒருநாள் வா.
இயந்திரம் மனிதர்களை விட சிந்திக்கும் வலிமை கொண்டவையாம்.
பக்தா, இயந்திரம் சுயமாக சிந்திப்பது இல்லை.
இயந்திரம் சுயமாக சிந்திக்கும் வல்லமை உடையதாக சொல்கிறார்கள்.
பக்தா, மனிதர்களின் கனவு இது. ஒரு விளையாட்டு போட்டியில் இயந்திரத்துக்கு கொடுக்கப்பட்ட விசயங்களின் அடிப்படையில் அவை செயல்பட்டு வெற்றி பெற்றால் அது இயந்திரத்தின் சிந்திக்கும் திறன் என எப்படி சொல்ல இயலும்.
மனிதர்கள் கொடுப்பதை வைத்து தனக்குத்தானே சிந்தித்துதான் இயந்திரங்கள் செயல்படுகின்றன. உதாரணத்திற்கு நாம் சாமியார் என ஒரு தேடுபொறியில் தட்டினால் எந்த சாமியார் என்பது குறித்து தேடி அது சம்பந்தமான விசயங்களை இயந்திரம் தந்துவிடுகிறது அல்லவா.
பக்தா, அது சுய சிந்தனை அல்ல. நமது மூளையை போல சிந்திக்கும் திறன் எந்த இயந்திரமும் பெற்று கொள்ள இயல்வதில்லை. காலப்போக்கில் இவை எல்லாம் சாத்தியமாக கூடும்.
இயந்திரமும், மனிதர்களும் ஒன்றா!
ஆமாம் பக்தா. மனிதன் இயந்திரமாகி கொண்டு வருகின்றான். இயந்திரம் மனிதராகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
முட்டாள்தனமாக இருக்கிறதே.
பக்தா, முட்டாள்களின் தினம் மட்டுமே வருடத்தில் ஒருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, அறிவாளிகளின் தினம் எல்லாம் கொண்டாடப்படுவதில்லை.
எப்போது உங்களை சந்திக்கலாம்?
கண்கள் மூடிக்கொண்டிருந்த வேளையில் தெரிந்த வெளிச்சம், கண்ணை திறந்த பின்னர் இருட்டாகவே இருந்தது. தலையில் லேசாக வலிக்க ஆரம்பித்தது.

6 comments:
தாயும் சேயும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறல்லவா.
எது எப்படியோ வாழ்க்கையீர்ப்பும், நிலைப்புத்தன்மை பெற வேண்டும் என்ற எண்ணமும் தான் மனிதனை விரட்டும் உந்து சக்தியாக இருந்து வருகிறது இன்று வரை..
வணக்கம் நண்பரே
மிக அருமை.
இந்த சாமியாரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.இவர் ஆத்திகரா நாத்திகரா என்றே பெரும் விவாதம் நட்த்தினாலும் கண்டுபிடிக்க முடியாது.ஆனால் உண்மையின் [கவனிக்கவும் உண்மையை அல்ல!]பல[முடிவிலி!!!] பரிமாணத் த்னமையை உணந்த ஒரு மாமனிதன் என நான் நிச்சயம் கூறுவேன்.
உண்மை பல பரிமான்ம் உடையது என்பதுதான் உண்மையான் ஆத்திகரும்,நாத்திகரும் ஏற்க வேன்டிய ஒரே விடயம்.
முனைவர் அறிவொளி அய்யாவின் பல் உண்மைகள் பற்றிய விள்க்கமும் மனதில் ஒலிக்கிறது!!!!!!
அதீத கன்வுகளின் நாயகருக்கும் நம் வண்க்கங்கள்.
கனவு நனவாகுமா?.
உண்மை அறியும் தேடல் பயணம் தொடருமா?????
உங்களுடன் நாங்களும்
பாராட்டுகள்!!!!!
மிக்க நன்றி!!!!!!
Interesting article. But what the Blogger wants to say?
சுவாரசியம்.
முருகானந்தின் கேள்வியும் சுவாரசியம்.
முற்றுப் பெறவில்லையெனினும் உரையாடல் சுவையானது; சிந்திக்க வைக்கிறது.
பாராட்டுகள்.
Post a Comment