Thursday, 16 February 2012

காதலில் காதல் இல்லை

வருடம் தவறாமல் வாங்கி செல்கிறேன்
வாடிப்போக இருக்கும் பூக்களையும்
மடிந்துபோன மரத்திலால் ஆன வாழ்த்து அட்டையும்
உணர்வற்ற வண்ணமிகு பரிசுப் பொருளும்

எனது உணர்வுகளை இவையெல்லாம் சுமக்கின்றனவாம்
காதலை வெளிப்படுத்துவதன் அவசியம் சொல்கிறார்கள்
கட்டியணைத்து உச்சிநெற்றியில், ஓரத்து இதழில் பதிக்கும்
முத்தம் தரும் பாதிப்பைவிடவா இவை தந்துவிடப்போகின்றன.

கண்கள் கலங்க வைக்கும் கதைகள் கேட்டதுண்டு
காதலை காதலால் மட்டுமே அவை சொல்லிச் சென்றதுண்டு
கருமேகங்கள் மறைத்து நிற்க வேடிக்கைப் பார்க்கும்
மழைத்துளிகள் போன்றே காதல் தவித்து போகிறது

வருடம் தவறாமல் வாங்கிச் செல்கிறேன்
இதை ஒரு வழக்கமாக கொண்டபின்னர்
அதுவுமே பழக்கமாகிப் போனபின்னர்
காதலில் காதல் ஒருபோதும் இருப்பது இல்லை. 

8 comments:

Yaathoramani.blogspot.com said...

வழக்கமாக கொண்டபின்னர்
அதுவுமே பழக்கமாகிப் போனபின்னர்
காதலில் காதல் ஒருபோதும் இருப்பது இல்லை./

மிகச் சரி
எதுவுமே வெறும் சடங்காகவும்
சம்பிரதாயமாகவும் மாறிப் போனால்
அதில் ஜீவனற்றுத்தான் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 1

Shakthiprabha (Prabha Sridhar) said...

ரொம்பவும் பிடித்தது :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Classic...:)

Unknown said...

உண்மைதான்...
வியாபாரிகளின் சாதுர்யம்
மடத்தனத்தின் மகத்துவம்
காதலை காட்சிப் பொருளாக்கும்
கண்மூடித் தனம்
விலைமதிப்பில்லாக் காதலை
விலை ஒன்றுக் கொடுத்து
வீதிக்கு கொண்டு வரும் அவலம்..

இது தான் அந்தக் காதலர் தினம்.

Radhakrishnan said...

நன்றி ரமணி ஐயா

நன்றி சகோதரி.

நன்றி தங்கமணி சகோதரி.

நன்றி தமிழ்விரும்பி ஐயா.

எனது மனைவிக்கு தமிழ் எழுத்து கூட்டித்தான் படிக்க முடியும் என்பதால் கவிதையை வாசித்து காட்டினேன். எல்லாம் சரிதான், நீ வாங்கி வந்தது எல்லாம் சம்பிராதயத்துக்குத்தானா அதில் காதல் இல்லையா என ஒரு கேள்வி கேட்டார், கவிதை நிறைய பொய் பேசும் என காதல் சொன்னேன். ;)

அப்பாதுரை said...

ஹிஹி.. இதுக்குத் தான் சொந்தச் செலவுல சூனியம்ன்றது..

Radhakrishnan said...

ஹா ஹா! அது சரி. நன்றி அப்பாதுரை.