Thursday, 19 January 2012

இது எல்லாம் கவிதைகள்

மழையில் நனையாமல் இருக்க
குடை பிடித்தேன்
குடை நனையாமல் இருக்க
மழை நிற்குமா?!

பிரச்சினைகள் கண்டு கண்டு
ஓடி ஒளிந்தேன்
நான் ஓடி ஒளிந்ததை கண்டு
பிரச்சினைகள் ஒழியுமா?!

அன்பின் அவசியம் குறித்து 
கோபம் கொண்டேன் 
கோபம் கொள்வது என்பது
அன்பில் அவசியமா?!

இறையென பலர் சொன்னதும் 
இரை என்கிறேன் 
இரையின்றி இறைவன் சரி
மனிதன் சரியா?!

ஏனோ கவிதைகள் புரிவதில்லை
வார்த்தைகள் என்றேன் 
வெறும் வார்த்தைகள் கொண்டால்
கவிதை அவையாகுமா? 

4 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான கவிதை
ரசித்துப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

Unknown said...

இதுவும் கவிதை தான்...
பொருளற்ற வார்த்தை தான் ஏது?
கருத்தற்ற வாக்கியம் தான் ஏது?
உள்ளக் கிடப்பின் உணர்வுகளின்
குவியலில் மெல்ல முளைக்கும்!
இதுவும் கவிதை தான்... ஆம்,
இதுவும் கவிதை தான்....

சசிகலா said...

பிரச்சினைகள் கண்டு கண்டு
ஓடி ஒளிந்தேன்
நான் ஓடி ஒளிந்ததை கண்டு
பிரச்சினைகள் ஒழியுமா?!
நிறைய பேரது கேள்வி அருமை

Radhakrishnan said...

மிக்க நன்றி ரமணி ஐயா. மிக்க நன்றி தமிழ் விரும்பி ஐயா, மிக்க நன்றி சசிகலா.