அமெரிக்காவில் கொண்டுவரப்பட இருக்கும் இரண்டு சட்டங்களை எதிர்த்து இணையதளங்கள் நாளை இருபத்தி நான்கு மணிநேரம் தங்களை முடக்கி கொண்டு எதிர்ப்பினை தெரிவிக்க இருக்கின்றன.
கிட்டத்தட்ட ஐயாயிரம் இணையதளங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் என களத்தில் இறங்கி இருக்கின்றன.
எப்படி நமது இணையதளத்தை முடக்குவது என்பது குறித்தான விபரங்களையும் இந்த இணையதளம் வெளியிட்டு உள்ளது. இணையதளம் வைத்திருக்காத நபர்கள் எதிர்ப்பினை ட்விட்டர், முகநூல் தனில் பதிவு செய்ய வேண்டுமென கேட்டு கொண்டிருக்கிறார்கள். சிடிசன், குடிமக்கள், என்பது போல இணையதளம் வைத்து இருப்பவர்கள் நெட்டிசன், வலைதளமக்கள், என புது பட்டம் அளித்து இருக்கிறார்கள்.
கருப்பு கொடி காட்டுவது போல எல்லா இணையதளங்களும் கருப்பாகவே இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள்.
சரி, அப்படி என்ன அந்த இரண்டு சட்டங்கள் சொல்கிறது. இணையதள ரகசியங்கள் பாதுகாப்பு தடுப்பு சட்டம், அறிவுசார் சொத்து பாதுகாப்பு சட்டம். இப்படி இந்த இரண்டு சட்டங்கள் கொண்டு வந்தால் நிறைய அறிவுசார் இணையதளங்கள் எல்லாம் மூட வேண்டிய நிலை வந்து விடும். நாளை அமெரிக்காவில் கொண்டு வர இருக்கும் சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், நமது சுதந்திர பேச்சை, நமது முன்னேற்றத்தை தடுக்கும் இந்த சட்டங்கள் ஒடுக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்து இருக்கிறார்கள்.
இந்த இணையதளங்கள் செய்யும் பல விசயங்கள் கண்டனத்துக்குரியவையாக இருக்கின்றன என சொல்கிறார்கள்.
1 ஒருவர் எழுதிய நூலை அப்படியே அப்பட்டமாக பதிவது. (இது போன்று நான் எழுத நினைத்த கம்பராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் கிடப்பில் போடப்பட்டு விட்டன).
2 பி டி எப் வடிவில் புதத்தகத்தையே காப்பி செய்து இணையத்தில் பதிவது.
3 இசையை வெளியிடுவது, படங்களை வெளியிடுவது, தொடர்கள் வெளியிடுவது என பல வேலைகளை இலவசமாகவே செய்து வருகின்றன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைகிறார்கள்.
எத்தனையோ அறிவு சார்ந்த விசயங்கள் இணைய தளம் மூலம் கிடைப்பதால் நூலகம் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்படியெனில் நூலகங்களில் இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள் முடக்கப்படுமா? ஒரு படம் வாங்கி அதில் பல படங்கள் உருவாக்கி வாடகைக்கு விடப்படும் தொழில் முடக்கப்படுமா?
இணையதள வளர்ச்சியினால் பதிப்புரிமை, காப்புரிமை வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டது என்னவோ உண்மைதான். அதற்காக இணையதளத்தையே முடக்குவது அறிவை சிதைப்பது போன்றதாகும்.
காப்புரிமை, பதிப்புரிமை வைத்திருப்பவர்கள் சற்று சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது. அதே வேளையில் இணையதளம் வைத்திருப்பவர்கள் மிகவும் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டிய தருணம் இது.
இணையதளங்கள் மீது திணிக்கப்பட இருக்கும் சட்டத்தை நீங்கள் எதிர்க்கிறீர்களா?, ஆதரிக்கிறீர்களா?
6 comments:
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
இது இந்தியாவின் தலைநகரத்திலா நடக்குது.நல்லது நல்லாவே நடக்கட்டும். தொழில் போட்டியில்ல
நன்றி நண்பர்களே
கொசுக்குப் பயந்து கோட்டையைக் காலி செய்வது என்று சொல்வார்கள்...
அது இது தான் போலும்....
முதலீட்டாளர்கள் ஆகும் செலவைப் பற்றியே மறுபருசெலனை செய்ய வேண்டும்...
சினிமாத் துறையிலே கோடி கொடியாக ஒரு தனி மனிதனுக்கு கொட்டிக் கொடுத்து அதை
ஒவ்வொரு தனி மனிதனிடமும் சட்டப் பூர்வமாகக் கொள்ளை யடிப்பதையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்...
பொருளின் விலை நிரனயமே தவறு.. காரணம் அது செலவாகும் தொகையையும் அது அவசியமான நியாயமான முறையிலே செய்ப் படுகிறதா என்பதையே மறு பரிசீலனை செய்ய வேண்டும்... காலமெல்லாம் கஷ்டப் பட்டு படித்து தனது இளமையெல்லாம் துளைத்து தனக்கு வரப் பிரசாதமாக கிடைக்கப் பெற்ற எத்தனையோ விஞ்ஞானிகள் கூட இப்படி மூன்று ஆறு மாதத்தில் கொடிகளில் பணம் ஈட்டுவதில்லை... இது தர்மம் தானா? என்பதையே பொருளாதார வல்லுனர்களும், அரசியல் வாதிகளும், முதலீட்டாளர்களும் முதலில் தங்களது மூளையைக் கழுவி யோசிக்க வேண்டும்.. எத்தனையோ அறிவாளிகள் எல்லாம் பிரதமரின் விருந்திற்கு அளிக்கப் படுவதில்லை... ஆனால் கொலைவெறி கொண்டு மொழியையும் கலாச்சாரத்தையும் புதைகுழியில் தள்ளுபவர்களை படித்தவர்களே அழைத்து விருந்தளிக்கும் அவலம் போக வேண்டும்....
பிரச்சனை வேறெங்கோ.. ஆனால் அதை சரி செய்யாமல்???!!!!... என்னமோ போங்க, குருடன் குருடனுக்கு வழிகாட்டுவது போலத் தான் இவைகள் எல்லாம்...
தங்களின் ஆதங்கம் புரிகிறது ஐயா. ஆனால் இதுதான் உலகம் என்றாகிப் போனபின்னர் இதை மாற்ற வேண்டிய மக்கள் கொள்ளும் கவலைகள் அன்றைய நொடியில் மறைந்து போய்விடுகின்றன.மக்களின் ரசனையை பொறுத்தே ஒன்றின் அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது. இணையம் உபயோகம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சினிமா துறை மக்களின் அதிக கவன ஈர்ப்பை பெற்று இருப்பதால் கோடி கோடியாக வருவாயும், கோடி கோடியாக நஷ்டமும், அதிக செல்வாக்கும், அதிக மன உளைச்சலும் என அங்கே இருப்பவர்களின் பயணம் நடைபெறுகிறது. விஞ்ஞானிகளின் நோக்கம் செல்வாக்கு குறித்த பயணம் இல்லை, கஷ்டப்பட்டு ஒரு மருந்து உருவாக்க சிந்தித்த ஒருவருக்கு கிடைத்த தொகை வெறும் இரண்டாயிரம் பவுண்டுகள், அதை மருந்தாக்கி வெளியிட்ட தொழிற்சாலைக்கோ பில்லியன் பவுண்டுகள். உலகம் அவ்வளவுதான்.
பிரதமர் என்பவர் மக்களின் வேலைக்காரர், வேலைக்காரர் வீட்டில் சென்று உணவு அருந்துவது பலருக்கு கௌரவ குறைச்சலாகவே இருக்கும். சினிமாக்காரர்கள் பொதுவாக கௌரவம், மானம், ரோசம் எல்லாம் பார்ப்பது இல்லை. வேலைக்காரர்கள் முதலாளிகளுக்கு அத்தனை எளிதாக கௌரவம் கொடுப்பதும் இல்லை.
பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா? அதுபோலத்தான் பிரதமர் பதவி எல்லாம்.
பிரச்சினை வேறெங்கோ அல்ல, நம்மில், நம்மில், நம் ஒவ்வொருவரில் உள்ளது.
hmm...எதிர்க்கிறேனா ஆதரிக்கிறேனா...
இரண்டு தரப்பிலும் நியாயம் இருப்பதால், இப்பொதைக்கு நடுநிலை.
Post a Comment