Tuesday, 27 December 2011

டெரர் கும்மி விருதுகளும் டெரரான நானும்

டெரர் கும்மி விருதுகள் - 2011  காண அழுத்துக   உங்களுக்கு பிடித்த உங்கள் பதிவுகளை இணைத்து விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டு சிறப்பியுங்கள். 


ஐயா டெரர் கும்மிகளே, வணக்கமுங்க. உங்களோட விருது பற்றிய அறிவிப்பை இங்கே நான் வெளியிடுறதால நான் போட்டியில இணையறது பாதிக்கும்னா அதுபத்தி கவலை இல்லீங்க. நான் என்னோட பதிவுகளை இணைச்சிட்டேன். மறக்காம நடுவர்களுக்கு அனுப்பி வைச்சிருங்க, சொல்லிட்டேன். அப்படி செய்யலைன்னா 'இது ரத்த பூமி' அப்படிங்கிற வசனத்தை 'இது ரத்த உலகம்' அப்படின்னு ஆக்கிபூடுவேன்.

அட சாமிகளா! நான் நினைச்சதை நீங்க செஞ்சிட்டீங்களே! நான் ஒரு பத்தாயிரம் ரூபாயிக்கு ஒரு விருது அறிவிப்பு செய்யலாம்னு நினைச்சேன். நிசமாத்தேன், கண்துடைப்புக்கு சொல்லலை. கடனை உடனை வாங்கி கஷ்டப்பட்டு எழுதுறாங்களே, இவங்க எழுத்தை ஊக்கம் செய்ய ஒரு அறிவிப்பு செய்யலாம்னு நினைச்சேன். அதுவும் தமிழ்மணம் இந்த வருஷம் விருது அறிவிப்புகள் இல்லைன்னு சொல்லிருச்சா நல்ல வாய்ப்பா இருக்கும்னு நானும் மனப்பால் குடிச்சேன்.

அதோட மட்டுமா. பல அறிவிப்புகள் எல்லாம் மனசுக்குள்ளார வைச்சிருந்தேன். இணையத்தில் எழுதுறவங்களுக்கு ஏகப்பட்ட ஊக்கத்தொகை, விருதுகள் எல்லாம் அறிவிச்சி எழுதறவங்க நாம வெட்டியா ஒன்னும் எழுதலை அப்படின்னு நினைக்க வைக்கனும்னு. ஆனா என்ன ஒன்னு, பயபுள்ளக நான் விளம்பரம் தேடுறதுக்குதான் இப்படி அலையுதுன்னு மனசை குத்தும் குத்தம் சொல்லிப்போடுவாகனு விட்டுட்டேன்.

 நீங்க மொக்கை பதிவுகளோட கூடாரம் அப்படின்னு சொல்றதை பார்த்தா என் கண்ணுக்கு அப்படி ஒன்னும் தெரியலையே! நீங்க பண்றதெல்லாம் மொக்கை மறுமொழிகளின் ராஜ்ஜியம் அப்படின்னு சொல்றாங்களே, ம்ம்ம். எத்தனை பேரு நாம எழுதற பதிவுக்கு உருப்படியா ஒரு மறுமொழி கூட வரலைன்னு கவலைபட்டு இருக்காங்க. ஒருவேளை நான் எழுதறது கூட மொக்கை பதிவுகள் அப்படிங்கிற உணர்ச்சி இல்லையோ எனக்கு. ஒரு சினிமா படத்தில சொல்லக்கூடிய மிக முக்கிய கருத்தை சீரியஸா சொல்றதை  விட நகைச்சுவையா சொன்னாத்தான் புரியும்னு அந்த காலத்திலேயே என் எஸ் கிருஷ்ணன் ரொம்பவே தீவிரமா செயல்பட்டார், அதுபோல உங்க பதிவுகள் சிலதை படிச்சேன், ரசிச்சேன். நகைச்சுவையை ரசிக்க நான் என்ன நகைக்கடையில செலவு பண்றதுக்கு யோசிக்கிறமாதிரியா யோசிக்கனும். விருது அறிவிப்பு நேரத்தில இப்படி நான் எழுதறது ஒரு வழக்கு நடக்கிற நேரத்துல அந்த வழக்கு பத்தி வழ வழானு எழுதறமாதிரி ஆயிரும், அதுவும் பயபுள்ளைக நான் ஜெயிக்கிறதுக்காக காக்கா பிடிக்குறேனு கோஷம் போடபோறாங்க.

உங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் எழுத்து தகராறு வந்ததை படிச்சேன். அந்த எழுத்து தகராருல இப்படி கூட்டமா வெளியே போயிடீங்க அப்படிங்கிற விவரத்தையும் படிச்சேன்.  ரொம்ப பேருக்கு மனசு வருத்தம், ரொம்ப பேருக்கு மனசுல சந்தோசம். நீங்க அடிக்கிற கும்மி எழுத்துல, சீரியஸ் எழுத்து எல்லாம் செத்து போகுதுன்னு ரொம்ப பேரு கவலைபட்டாங்களாம். சீரியசான விசயத்தை படிக்க நாலு பேருதான் இருப்பாங்க அப்படிங்கிற உத்தியை கண்டுபிடிச்சி ரஜினி கணக்கா கலக்கலா பாதை போட்டது நீங்க தான். கும்மி அடிச்சாலும் கம்மியான பதிவுகள் தானே போடறீங்க.

போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள். என்னைப் போல பலர் மின்னஞ்சல் மூலமே உங்கள் போட்டியை தெரிந்து கொள்ளும் நிலை இருப்பதாலும், பலருக்கு தெரியாமல் போய்விட வாய்ப்பு இருக்குமென்பதாலும், எனது நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்பதாலும் இந்த இடுகை. அதோட விட்டுருவமா!

இந்த கும்மி பத்தி கொஞ்சம் எழுதிரலாம்.  கீழே தரப்பட்ட தகவல்கள் தமிழ்வு எனப்படும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அவர்களுக்கு மிக்க நன்றி.


//புற விளையாட்டுகள்
கும்மியும்     கோலாட்டமும் தமிழக நாட்டுப்புற உழைக்கும் வர்க்கப்
பெண்களிடையே காணப்படும் புற     விளையாட்டுகள் ஆகும்.
இவ்விளையாட்டுகள் பெண்களின் உடல்திறனை வளர்ப்பவையாக
உள்ளன.
 கும்மி
பெண்கள்     வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்தடிக்கும்
விளையாட்டு கும்மி ஆகும்.
நாட்டுப்புறப்     பெண்களுக்கே உரிய விளையாட்டாகவும் பெண்களைத்
தெய்வ வழிபாட்டுச் சூழலில் ஒன்றிணைக்கும் கருவியாகவும் கும்மி
விளையாட்டு விளங்குகிறது. கும்மி நிகழ்த்துதலின் போது பெண்களால்
பாடப்படு்ம் பாடல் கும்மிப் பாட்டு என வழங்கப் படுகிறது.
கும்மியானது கும்மி கொட்டுதல், கும்மி விளையாட்டு,முளைப்பாரிப்
பாட்டு, கும்மி தட்டுதல், கும்மி ஆட்டம்
 எனப் பலவாறு
கூறப்பட்டாலும் கும்மி தட்டுதல், கும்மிப் பாட்டு என்பதே
பெருவழக்காக உள்ளது.
கும்மி,     திருவிழாக் காலங்களில் இரவு பகல் இருவேளைகளிலும், பிற
நாட்களில் நிலவொளியில் பொழுது போக்குக்காகவும் பெண்களால்
விரும்பி ஆடப்படுகிறது. பருவமுற்ற பெண்களுக்குச் சடங்கு நிகழ்த்தும்
போதும் கும்மி கொட்டுதல் உண்டு.
குலவையிட்டுக்     கும்மி ஆட்டத்தைத் தொடங்குவதும் முடிப்பதும்
கும்மியின் மரபாக உள்ளது. கும்மியில் கொட்டப்படும் கைத்தாளமே
பக்க இசையாகவும் ஆட்டத்தை வழிநடத்தும்     கூறாகவும்
அமைந்துள்ளது. கைதட்டுதலின் தாள எண்ணிக்கையில் ஒருதட்டுக்
கும்மி, இரண்டுதட்டுக் கும்மி, மூன்றுதட்டுக் கும்மி என்று கும்மி
ஆட்டங்கள் தரப்படுத்தப் படுகின்றன.
கும்மி     விளையாட்டின் போது கும்மி கொட்டும் பெண்கள்
பார்வையாளர்களாக     மாறுவதும்     பார்வையாளர்கள்     கும்மி
கொட்டுபவர்களாக மாறுவதும் இயல்பான ஒன்றாகும்.
கைகளை     உட்புறம், வெளிப்புறம் தட்டிக் கொண்டே கால்களை
மாறிமாறி எடுத்து வைத்து வட்டத்தில் முன்னோக்கி நகர்தல், குனிந்து
நிமிர்தல், உட்புறமும், வெளிப்புறமும் தட்டுதல் ஆகிய ஆட்டக்
கூறுகள் கும்மியில் மேற்கொள்ளப் படுகின்றன.
அம்மன்     கோயில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுப்பது ஒரு
சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப்படும். அந்நிலையில் கும்மி கொட்டிப்
பாடுவதுண்டு.
தானானே தானானே
தானானே தானானே
கும்மியடிக்கிற ரெக்கத்தில
கூட்டமென்னடி பெண்டுகளா
முந்தாங்கி படுது எந்திரிங்க
மூனுபணந்தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)

கும்மியடிக்கிற ரெக்கத்திலே
கூடியிருக்கிற அண்ணம்மாரே
முந்தாங்கிப்படுது எந்திரிங்க
மூனுபணந் தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)
(ரெக்கத்திலே = இடத்திலே)
வயது     வித்தியாசமின்றி ஆடப்படும் கும்மி விளையாட்டைப்
பெண்களும், சிறு தெய்வச் சடங்குகளும், வழிபாடுகளுமே பாதுகாத்து
வருகின்றன
மகளிர்     விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுது
போக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. பெண்கள் தங்களின்
அறிவுத் திறத்தையும், உடல் திறத்தையும், கணித அறிவையும்
மேம்படுத்திக் கொள்ள மகளிர் விளையாட்டுகள் வாய்ப்பளிக்கின்றன
எனலாம். //

15 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சார்...!

செல்வா said...

மிக்க மகிழ்வாக இருக்கிறது ஐயா. தங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கிறோம்!

இம்சைஅரசன் பாபு.. said...

உங்கள் பதிவை இணைத்தமைக்கு நன்றி சார்.!! ஏங்க குரூப் ல யாரும் நடுவர்களா இல்லையே .. இல்லையே..

தினேஷ்குமார் said...

மிக்க நன்றி சார் ... தன்னானே நானனன்னே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் ஒரு பத்தாயிரம் ரூபாயிக்கு ஒரு விருது அறிவிப்பு செய்யலாம்னு நினைச்சேன். நிசமாத்தேன், கண்துடைப்புக்கு சொல்லலை.//

அண்ணே.. உங்க மனசு கஷ்டப்படக்கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்.
பணத்தை என்னோட அக்கவுண்ட்ல போட்டுடுங்க.. ஹிஹி..

:-))

வெங்கட் said...

அன்புக்கு நன்றிங்க..!!!

MANO நாஞ்சில் மனோ said...

நாங்களும் கலந்துகிட்டோம்ல, முதல் பரிசு எனக்குதான் ஹி ஹி....

Mohamed Faaique said...

அருமையான பதிவு நண்பா... போட்டியில் இரண்டாம் பரிசு பெற வாழ்த்துக்கள்.. முதலாம் பரிசுல நம்ம பேரு இப்பவே எழுதி வச்சாச்சு...ஹி..ஹி

இராஜராஜேஸ்வரி said...

பதிவுகளை இணைக்க முடியவில்லையே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

@இராஜராஜேஸ்வரி,
மேடம், தளத்தில் ரிஜிஸ்டர் செய்து விட்டீர்களா? ரிஜிஸ்டர் செய்தவுடன், ஆக்டிவேசன் மெயில் உங்களுக்கு அனுப்பப்படும். அதைவைத்து ஆக்டிவேசன் செய்த பின் நீங்கள் லாகின் செய்து பதிவுகளை இணைத்துக் கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு contest_2011@terrorkummi.com ற்கு மெயில் அனுப்பவும். நன்றி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சார்...!

Radhakrishnan said...

தங்களின் அனைவரின் முயற்சிக்கு மிக்க நன்றி, மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வெற்றி வாகை சூடட்டும்.

ஹா ஹா பட்டாப்பட்டி, மிகவும் ரசித்தேன்.

ராஜேஸ்வரி சகோதரி, தற்போது தங்கள் பதிவுகளை இணைத்து இருப்பீர்கள் என கருதுகிறேன்.

நாஞ்சில் கலந்து கொண்டு சிறப்பு செய்தமைக்கு நன்றிகள்.

ஆமாம் பாபு, அதையும் படித்தேன், மிகவும் சிறப்பாக எல்லாம் அமையட்டும்.

முகமது, நான் எல்லாம் ஆர்வ கோளாறில் கலந்து கொள்வதோடு சரி, எழுத்தில் வெற்றி எல்லாம் எனக்கு எட்டாத விசயம் என்பதை அறிந்தே வைத்து இருக்கிறேன்.

மங்குனி அமைச்சர் said...

thanks

Madhavan Srinivasagopalan said...

thanks

Radhakrishnan said...

நன்றி அமைச்சரே, நன்றி பெசொவி, நன்றி மாதவன்