Monday, 26 December 2011

நானெல்லாம் ஒரு அப்பா!

பொறுப்புகளை தட்டி கழித்தே  பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும்,
பிள்ளைகளை பேணி காக்கும் முறையை தவறவிட்ட சிறுபிள்ளையாய்,
ஆசையாய் பேச வரும் பிள்ளையை ஆயிரம் வேலையை காட்டி தள்ளிவிடும்
ஒரு ஆதரவற்ற நிலை செல்லும் ஆதரவற்ற நிலை காட்டும் நானெல்லாம் ஒரு அப்பா!

எடுத்ததற்கெல்லாம் சத்தம், அந்த சத்தத்தில் இதயம் உடையும் பிள்ளை,
 படுத்தி எடுத்துவிட்டு பாவமாய் பார்க்கும் பார்வை மீண்டும் மறந்து
ஏதேதோ உலகம் என எங்கெங்கோ சென்று அலைந்து தொலைந்து
மார்போடு கட்டி அணைத்து மகிழும் கதை பேசாத நானெல்லாம் ஒரு அப்பா!

தாயுமானவனாய் தவமிருக்காமல் தந்தையுமானவனாய் படியளக்காமல்
சேயின் மனமறிந்து சேவகம் செய்யாமல் செத்த நிலை கொண்டு
வேலை வேலை என ஓட்டமும் நடையுமாய் வெந்து போன காலமும்
நினைவில் வந்து மனதை அழுத்த கலங்கிடும் நானெல்லாம் ஒரு அப்பா!

என் அப்பாவை எண்ணி கலங்கியே ஏக்கத்துடன் நகரும் நாட்கள்
என் பிள்ளையை கண்டு கலங்கியே  கலக்கத்துடன் நகரும் நாட்கள்
என் அன்னையை அருகே வரவழைத்து அரவணைக்காத பொழுதுகள்
நல்ல பிள்ளையாய் இருக்க தெரியாத நானெல்லாம் ஒரு அப்பா!

தனது குழந்தையை சீராட்டி பாலூட்டி உறவாய் இருந்து வளர்த்து
ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அன்புடன் சேவகம் செய்து
நானெல்லாம் ஒரு அப்பா என நாணி கொள்ளாமல்
நான் தான் அப்பா என பெருமையுடன் சொல்லி மகிழ இவ்வாழ்வு போதும், எவருக்கும்!

5 comments:

Admin said...

நானெல்லாம் ஒரு அப்பா என நாணி கொள்ளாமல்
நான் தான் அப்பா என பெருமையுடன் சொல்லிக் கொள்வது சொற்ப அப்பாக்கள் தான்..நல்ல பதிவைக் கொடுத்தமைக்கு நன்றி..

TN 1

அன்போடு அழைக்கிறேன்..

அழுகை அழ ஆரம்பிக்கிறது

Unknown said...

தாயோடு அன்பு போகும்
தந்தையோடு அறிவு போகும்
பிள்ளையோடு பேரானந்தம் போகும்...

உண்மை உணர்வுகளின் வெளிப்பாடு
உய்த்துணர வேண்டிய கடப்பாடு

தங்களின் ஆதங்கம் கலங்க வைத்தது...
பொருள் தேடி அலையும் உலகில்
வாழ்வைத் தொலைத்தக் கதை...

பெற்றோர்களின் கதை எனக்கும்
ஒத்துப் போனாலும் பெற்ற
பிள்ளைகளின் அணைப்பில்
சுதாரித்துக் கொண்டேன்...

அத்தனையும் அருமையான வரிகள்... எங்கிருந்தாலும் ஆசிர்வதிக்கும் வாழும் தெய்வங்கள் அவர்கள்!... கவலையை விடுங்கள்...

முத்தாய்ப்பாய் அமைந்தது... இந்த வரிகள்!!!
//தனது குழந்தையை சீராட்டி பாலூட்டி உறவாய் இருந்து வளர்த்து
ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அன்புடன் சேவகம் செய்து
நானெல்லாம் ஒரு அப்பா என நாணி கொள்ளாமல்
நான் தான் அப்பா என பெருமையுடன் சொல்லி மகிழ இவ்வாழ்வு போதும், எவருக்கும்!///

உணர்வுகளின் ஊர்வலம் உங்களது பதிவு... பகிர்விற்கு நன்றிகள் நண்பரே!

Radhakrishnan said...

நன்றி மதுமதி.

நன்றி தமிழ் விரும்பி ஐயா.

நன்றி ரத்னவேல் ஐயா.

Shakthiprabha (Prabha Sridhar) said...

//சேயின் மனமறிந்து சேவகம் செய்யாமல் செத்த நிலை கொண்டு
வேலை வேலை என ஓட்டமும் நடையுமாய் வெந்து போன காலமும்
நினைவில் வந்து மனதை அழுத்த கலங்கிடும் நானெல்லாம் ஒரு அப்பா!
//

...உண்மை சுடுகிறது. நிறைய அப்பாக்களின் இயலா நிலைமை. நல்ல கவிதை.

Radhakrishnan said...

நன்றி சகோதரி, நம்மை நாமே அடிமைபடுத்தி கொள்கிறோம் என்பதை தவிர வேறு என்ன சொல்வது?