திரு ஞாநி ஒரு டுபாக்கூரா? என்பதற்கும், திரு ஞாநி கதை விடுபவரா, காதில் பூ சுற்றுபவரா என்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது ஆனால் அர்த்தம் என்னவோ ஒன்றுதான். டுபாக்கூர் என்பது கொச்சை தமிழ், இழிவுபடுத்தி சொல்லப்படும் வார்த்தை. கதை விடுபவர் என்பது சுத்த தமிழ், வஞ்ச புகழ்ச்சி அணியை தழுவியது.
கதை விடுபவர் என்பதற்கும் கதை சொல்பவர் என்பதற்கும் கூட வித்தியாசம் இருக்கிறது. கதை சொல்பவர் என்பது ஒருவரின் செயலை நல்லவிதமாக குறிக்கிறது, அதே வேளையில் கதை விடுபவர் என்பது ஒருவரின் செயலை கெட்டவிதமாக குறிக்கிறது. அதாவது ஏமாற்றுக்காரர் என்கிற தொனியில் அது அமைகிறது.
இப்பொழுது திரைப்படம் என்றால் என்ன? அது ஒரு கனவு தொழிற்சாலை எனவும், பொழுதுபோக்கு கலை எனவும் குறிப்பிடப்படுகிறது. கற்பனைகளின் கூடாரம் என்று கூட குறிப்பிடலாம். ஒரு திரைப்படத்திற்கான அளவுகோல் எது? மக்களின் ரசனைக்கு ஏற்றமாதிரி எடுப்பதா? சிறந்த கதையுடன் அல்லது சிறந்த கதையாக இல்லாவிட்டாலும் சிறப்பான திரைக்கதை கொண்டதா? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதா? இப்படி பல கேள்விகள் இந்த திரைப்படத்தை குறித்து எழுந்தாலும் அது ஒரு கனவு மட்டும் கற்பனை தொழிற்சாலை என்பது உண்மை.
நடந்த விசயங்களை சொன்னாலும் அது ஒரு கதை வடிவமே. உண்மையான பாத்திரங்களை சொல்ல முடியாது. திரைப்படம் சமூகத்தை சீரழிக்கின்றன என்றும், சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பது அவ்வப்போது நடைபெறும் சில விசயங்கள் உறுதிபடுத்தினாலும் முழுமையான தாக்கத்தை, ஒட்டுமொத்த சமூக மாற்றத்தை திரைப்படங்கள் கொணர இயலுவதில்லை. நமது கற்பனைகளை, ஆதங்கங்களை வடிவமாக கண்டு மகிழும் நிலையில் இருப்பவர்கள்தான் நாம். அதற்காகவே ஒரு எம் ஜி ஆரோ, ரஜினியோ பெரும் புகழ் அடைய வழிவகுத்தது.
தமிழில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு உண்டு. தமிழில் நல்ல படங்கள், மசாலா படங்கள், குப்பை படங்கள் என பிரித்து பார்த்தால் ஐம்பது சதவிகிதம் குப்பை படங்களும், நாற்பத்தி ஐந்து சதவிகிதம் மசாலா படங்களும் மீதி ஐந்து சதவிகிதம் மட்டுமே நல்ல படங்கள் என பிரித்துவிடலாம். சிறந்த பொழுதுபோக்கு படங்கள்தனை விரும்பும் மக்கள் அதிகம் உள்ளவர்களே தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு பல மசாலா படங்கள் சாட்சி. இதில் கதை எல்லாம் இரண்டாம்பட்சம் தான்.
இப்படிப்பட்ட சூழலில் திரு ஞாநி அவர்கள் ஒரு சிறந்த படம் எடுக்க வேண்டும் எனும் முனைப்போடு ஒரு செயலில் ஈடுபட்டார்கள். அதாவது ஆள் பிடிப்பது. நல்ல படங்கள் வரவேண்டும் என முனைப்புடன் இருப்பவர்களை சேர்த்து ஒரு படம் எடுப்பது. இன்றைய காலகட்டத்தில் குறைந்த செலவில் படங்கள் எடுப்பது மிகவும் அரிதான விசயம். இந்த திரைப்படத்தில் பணியாற்றும் குழுவினர்கள் என பார்த்தால் ஒரு நிறுவனம் போலவே அந்த படத்தில் பங்கு பெற்று இருப்பவர்கள் இருப்பார்கள். அதற்காக செலவாகும் தொகை மிகவும் பெரிது. அதைப்போலவே அந்த திரைப்படத்தின் வாடிக்கையாளர்கள் என பார்த்தால் மிகவும் அதிகம். அதன் காரணமாகவே பல கோடி செலவு செய்து லாபம் அடையவும் செய்கிறார்கள். இதனால் இந்த திரைப்படம் எடுப்பது சாதாரண விசயம் இல்லை என்பதை பலரும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் எனது நண்பர் செல்வமுரளி தனது விசுவல் மீடியா நிறுவனத்தை விரிவாக்கம் செய்துள்ளார். அவருக்கும் வாடிக்கையாளர் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் விளம்பரம் செய்தது மிகவும் குறைவே. இது ஒரு சிறிய நிறுவனம், மிகப் பெரிய நிறுவனமாக வளரும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் திரைப்படம் என்பது அப்படியல்ல. அது ஒரு பொழுதுபோக்கு சித்திரம். உடனடி லாபதாரர்கள் ஒரு படத்தின் மூலம் பார்க்கலாம், அதைப்போலவே பெரும் நஷ்டம் அடைபவர்களையும் காணலாம்.
திரு. ஞாநி அவர்களின் விளம்பரம் இப்படித்தான் இருந்தது.
'நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....
நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.
எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.
ஊர் கூடி தேர் இழுப்போம்.
எப்படி பணம் அனுப்புவது ?
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்'
அதற்கான எனது மறுமொழி இப்படித்தான் இருந்தது.
'இப்படி அவசர அவசரமாக ஒரு படம் எடுத்து எதைச் சாதிக்க நினைத்து இருக்கிறீர்கள். ஒரு படத்தின் மூலம் சமுதாயத்தில் என்ன சாதித்துவிட முடியும் என நினைக்கிறீர்கள். இதுவரை வெளியான படங்கள், கதைகள் சாதித்தது என்ன? தனிமனிதனின் முயற்சியினால் மட்டுமே ஒவ்வொருவரும் சாதித்து காட்டி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் காரணங்கள் குறிப்பில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைதான். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து திருந்தினேன் என ஒரு காந்தி தான் சொன்னார், நாடகம் பார்த்த பலர் எங்கே போனார்கள்?
ஒரே ஒரு படம் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் மாற்றுமாறு எடுங்கள், பாராட்டுகிறேன். நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி எனக்கு என்னவோ மனிதர்களை முட்டாளாக்க முயற்சிப்பதாகத்தான் படுகிறது. இருப்பினும் தங்கள் முயற்சி நன்மை பயக்குமெனின் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.'
ஒரே ஒரு படம் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் மாற்றுமாறு எடுங்கள், பாராட்டுகிறேன். நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி எனக்கு என்னவோ மனிதர்களை முட்டாளாக்க முயற்சிப்பதாகத்தான் படுகிறது. இருப்பினும் தங்கள் முயற்சி நன்மை பயக்குமெனின் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.'
இந்த உரையாடல் எனது வலைப்பூவில் நடந்த வருடம் ஆகஸ்ட் 2009. திரு ஞாநி அவர்கள் தங்களது இலக்கை அடைந்தாரா? இலக்கை நோக்கிய பயணம் தொடர்கிறதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. திரு ஞாநி நீங்கள் கதை விடுபவரா? என்கிற கேள்வி மட்டுமே தொக்கி நிற்கிறது.
இவரைப்போலவே ரூபாய் 30,000 முதலீடு செய்யுங்கள், ஒரு அழகிய படம் எடுத்து காட்டுகிறேன் என முயற்சி செய்து கொண்டிருக்கும் நண்பர் திரு. கேபிள் சங்கர் எனும் சங்கர் நாராயண் இலக்கை அடைந்தாரா? இந்த திரைபடத்தின் மூலம் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களுக்காக மூலதனம் செய்பவர்கள் மூலம் நல்ல திரைப்படம் எடுக்கப்பட்டு நிறைய பொருளாதாரம் ஈட்டிட்டால் மேலும் மேலும் இது போன்ற நிகழ்வுகள் பெருகும். வாழ்த்துகள்.
இவர்களை போன்றே பல கனவுகளுடன் வாழும் பலர் தங்கள் இலக்குகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற பெரும் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வெற்றி பெற வாழ்த்துகள். எங்களது ஆய்வில் பத்து பதினைந்து வருடங்கள் போராடி ஒரு மருந்தினை கண்டுபிடித்து உலக மக்களை நோயிலிருந்து விடுபட செய்தாலும் எங்களுக்கு கிடைக்கும் வரவோ வெறும் வாய்.
ஒரு மருந்தினை கண்டுபிடிக்கிறேன், நீங்கள் மூலதனம் செய்யுங்கள் என உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் என்பது எனக்கு தெரியும். :)
5 comments:
ஆமாம் கேபிள்-ளின் படம் என்னவாயிற்று? அப்போதே செந்தழல்ரவி எதிர்கருத்து கொண்டிருந்தார்
அன்புடைய.....
வணக்கம். உங்கள் பெயர் எனக்குத் தெரியவில்லை. இந்த வலைப்பூவை எனக்கு தெரிவித்து ஒரு நண்பர் பார்க்குமாறு சொல்லியிருந்தார்.படித்தேன்.
சில தகவல்கள்: அவசரமாகப் படம் எடுக்கும் நோக்கம் எனக்கு எதுவுமில்லை. எங்கள் அறிவிப்பிலும் அப்படி எதுவும் இல்லை. ஒவ்வொரு செயல்திட்டத்துக்கும் கால இலக்கு வைத்துக் கொண்டு பணியாற்றுவதுதான் நல்லது என்ற அடிப்படையில் முதல் முயற்சி தொடர்பாக சில தேதிகளை நிர்ணையித்திருந்தோம். அவ்வளவுதான்.
நீங்கள் வெளியிட்டுள்ள என் அறிவிப்பிலேயே எங்கள் நோக்கம் தெளிவாக் சொல்லப்பட்டுள்ளது. ”நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது....மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள்.” என்று சொல்லியிருக்கிறோம்.
ஆயிரம் பேரிடமிருந்து ஆளுக்கு 500 ரூபாய் வீதம் ஐந்து லட்சம் ரூபாய் திரட்டினால்தான் முழு நீள வீடியோ படம் சாத்தியம். ஆனால் முதல் ஓராண்டில் எங்களால் திரட்டமுடிந்தது அதில் ஐந்தில் ஒரு பகுதியைத்தான்.ஐந்து லட்சம் திரட்டவே விளம்பரத்துக்காக பரவலாக செய்தியை எடுத்துச் செல்ல இன்னொரு ஐந்து லட்சம் செலவிட்டாகவேண்டும் என்ற சூழலே இங்கே நிலவுகிறது. அது எமக்கு இயலாதது. திரட்டிய சுமார் ஒரு லட்சம் ரூபாயில் என்ன செய்யமுடியும் என்று யோசித்து திட்டமிட்டு மாற்று வடிவத்தில் ஒரு 90 நிமிடப் படத்தைச் சில தொழில்நுட்ப பிரச்சினைகளுடனே எடுத்து முடித்துவிட்டோம். தணிக்கைக்குழுவுடன் தேவையற்ற பிரச்சினைகளால், சிக்கல்களால் வெளியிடுவது தாமதமாயிற்று. அது முடிந்து அடுத்த கட்டமாக டி.வி.டியை விநியோகிக்கும் நிறுவனத்துடன் பேசி வருகிறோம். அதிகப்ட்சம் ஓரிரு மாதங்களுக்குள் வெளியிடுவோம் என்று நம்புகிறேன்.
எங்கள் முயற்சி குறித்து நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றி. கால மாற்றத்தில் உங்கள் வஞ்சப் புகழ்ச்சி, நெஞ்சார்ந்த மெய்யான புகழ்ச்சியாக ஆதரவாக தோழமையாக மாறும் என்று நம்புகிறேன். என் இணையதளத்தில் ( www.gnani.net.in) நான் அக்டோபர் 2009ல் அறிவித்திருப்பதை இங்கு நினைவு கூர்கிறேன். “வாழ்வைத் தொடும் அனைத்தின் மீதும் எனக்கு உள்ள அக்கறையே, பல தடைகளையும் மீறி என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது.
என் பார்வைகளை உங்கள் முன் வைப்பது என் உரிமை. அவற்றை நீங்கள் ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை. ஏற்பு குறித்த மகிழ்ச்சி, நிராகரிப்பு பற்றிய வருத்தம் ஆகிய மன நிலைகளை இப்போது நான் கடந்து விட்டேன். பகிர்தல் மட்டுமே என் இன்றைய மனநிலை.”
அன்புடன் ஞாநி
மிக்க நன்றி அழகிரிவேல் அவர்களே. நண்பர் கேபிள் அவர்களிடம் விசாரித்து சொல்கிறேன். :)
மதிப்பிற்குரிய ஞாநி அவர்களுக்கு, எனது பெயர் ராதாகிருஷ்ணன். இடுகையின் கீழ் உள்ளதுதான். நீங்கள் யார், எவர் என்பது குறித்து முழுமையாக எனக்கும் இரண்டு வருடம் முன்னர் தெரியாதுதான். திடீரென ஒரு நாள் எனது வலைப்பூவில் நீங்கள் இந்த விளம்பரம் வைத்து இருந்தீர்கள். அப்பொழுதே நான் இந்த மறுமொழியை எழுதி இருந்தேன். ஒரு தனி பதிவாக போட வேண்டும் என நினைத்தேன். ஆனால் வேண்டாம் என அப்போது விட்டுவிட்டேன். காலசக்கரம் வேகமாக சுழன்று ஓடிவிட்டது.
தற்போது எனது அந்த இடுகையை தற்செயலாக படிக்க நேரிட்டபோது உங்கள் விளம்பரமும், எனது மறுமொழியும் படிக்க நேரிட்டது. உங்களை கூகிளில் தேடினேன். அப்பொழுது உங்கள் இணையதளம் தென்பட்டது. நீங்கள் இங்கு குறிப்பிட்டிருந்த கடைசி வரிகள் உங்கள் தளத்திலும் பார்த்தேன். பிடித்து இருந்தது. மனதில் தோன்றியதை அங்கே கேட்கலாம் என நினைத்தேன், ஆனால் எனது கருத்துகளை எழுதலாம் என இங்கேயே எழுதிவிட்டேன்.
உங்கள் விளக்கம் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். 2007ம் வருடம் மொழி என்றொரு படம் வந்தது. அந்த விழாவில் நீங்கள் பேசியதை நேற்று கேட்டேன். உங்கள் எதிர்பார்ப்பு, ஆசை என்னை சற்று உலுக்கிவிட்டது. இது கனவுலகில் சஞ்சரிக்கும், ஒரு கனவினை நனவாக்கும் முயற்சியில் இருக்கும் ஒருவர் என தென்பட்டது, அதனால் தான் கதை விடுபவரா? என கேள்வியோடு நிறுத்தி விட்டேன்.
நீங்கள் விளம்பரம் செய்த தளங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ன செய்தீர்கள் என தொடர்ந்து விளம்பரம் செய்து இருந்து இருந்தால் மேலும் மேலும் பல ஆதரவுகள் கிடைத்து இருக்கும்.
முடிந்தளவில் என்னால் ஆன உதவியை தங்களுக்கு செய்கிறேன். அதற்கு சில மாதங்கள் ஆகலாம். தங்களுடன் தோழமைதான் எனக்கும். உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும். வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி ஐயா.
ரா.கி,
ஞாநி சொல்றது டெலிபில்ம், குறைவான பட்ஜெட்ல எடுக்கலாம்.கேரளாவில ஒடேசா என்று திரை இயக்கம் செயல்படுவதாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனாலும் இதனால நாட்டுக்கு என்ன பலன், மனித உழைப்புகள் செல்லுலாய்ட்ல கறைந்து தான் போகும். ஒரு சைக்கிள் தயாரிக்கிறோம்னா அது சரியா வரலைனா அதை எடைக்கு போட்டா ஒரு 25% காசு கிடைக்கும் அதுக்கு மினிமம் ஜங்க் வேல்யு இருக்கு.சினிமா ரீல்லுக்கு பேரிச்சம் பழம் கூட கிடைக்காதுனு நினைக்கிறேன்.
ஹாலிவுட்ல பேராநார்மல் ஆக்டிவிட்டி படத்த் வெறும் 15000 டாலர்ல எடுத்ததா படிச்சேன்.எல்லாத்துக்கும் ஹாலிவுட் சொல்றவங்க இத பின்பற்றலாமே!ஏன் அதிகம் பணம் வேண்டும் சொல்கிறார்கள்.
கேபிள் சொல்றது திரைப்படம், அத எல்லாம் அவ்வளவு லேசா எடுக்க முடியாது, அதுவும் இல்லாம நம்ம ஆளுங்க கிடைக்கிற காசுக்கு டிவிடி வாங்கிப்போட்டுப்பார்த்து டிஸ்கஸ் செய்றேன்னு சொல்லி பிரியாணி சாப்பிடவே அது காணாது, அப்புறம் படம் எங்கே இருந்து :-))
மிக்க நன்றி வவ்வால். நீங்கள் குறிப்பிடுவது சரிதான்.
விளம்பரத்திற்கு நன்றி இணையம்.
Post a Comment