இந்த வருடம் தான் இந்தியாவுக்கு போகலையே, எத்தனைவாட்டிதான் இங்கிலாந்தில் உள்ள இடங்களையே சுற்றிப் பார்ப்பது, அதனால் ஐரோப்பாவில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டிற்கு செல்லலாமா என எனது மனைவி அவரது ஆசையை சொல்லி வைக்க, அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கும் முயற்சியில் இறங்கினேன்.
அவர் சொன்ன இரண்டு இடங்களும் விமானத்தில் பயணம் செய்யும்படிதான் இருந்தது. அதில் ஒன்று ஸ்பெயின் நாட்டின் குட்டித் தீவான டேனரீப் (1 ) மற்றொன்று ஸ்பெயின் நாட்டின் குட்டி தீவான மயோர்கா (2 )
1 .
2
டேனரீப் எனும் இடத்தில் தான் சில வருடம் முன்னர் ஒருவன் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணியாக வந்திருந்த ஒரு பெண்ணின் கழுத்தை வெட்டி சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து சென்றான் என்பதை படித்தபோது திகிலுடனே இருந்தது. அதனால் என்ன, டேனரீப் செல்லலாம் என முடிவு எடுத்து நான் எப்பொழுதும் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யும் தளத்தில் சென்று ஒரு ஐந்து நட்சித்திர ஹோட்டல் பார்த்தோம். அந்த ஹோட்டல் அறை விலை மிகவும் குறைச்சலானதாக இருந்ததை பார்த்து ஹோட்டலை முன்பதிவு செய்துவிட்டோம்.
பின்னர் விமானத்திற்கு பயணச்சீட்டு தேடியபோது நமது ஊருக்கே சென்று வந்துவிடலாம் போலிருக்கிறதே எனும் அளவிற்கு விலை மிகவும் அதிகமாகவே இருந்தது. டேனரீப் வேண்டாம் என முடிவு செய்து மயோர்காவைத் (majorca) தேர்ந்தெடுத்தோம். டேனரீப் ஹோட்டலை வேண்டாம் என சொல்லிவிட்டு மயோர்காவில் ஒரு ஹோட்டல் முடிவு செய்தாகிவிட்டது. விமானத்தளத்தில் இருந்து அந்த ஹோட்டல் மிகவும் அதிக தொலைவு என அதனையும் ரத்து செய்துவிட்டு மற்றொரு ஹோட்டலை தேர்வு செய்தோம். சற்று விலை குறைச்சலாகவே அப்போது இருந்தது. உடனே ஹோட்டலை முன்பதிவு செய்துவிட்டு விமானம் தேடினோம்.
ஐரோப்பா பயணம் எனில் நான் அதிகம் விரும்பி தேர்ந்தெடுக்கும் விமானம் ஈசிஜெட். நான் முதன் முதலில் கிளாஸ்கோ சென்றபோதும் சரி, சுவிட்சர்லாந்து சென்றபோதும் சரி இந்த விமானம்தான் தேர்ந்தெடுத்தேன். இதற்கு முக்கிய காரணம் பயண சீட்டு சற்று குறைந்த விலையில் கிடைக்கும். டேனரீப்க்கு விலை மிகவும் அதிகமாக இருந்தது, ஆனால் மயோர்காவுக்கு சற்று விலை குறைந்தே இருந்தது. சரி என இந்த விமானத்தில் பதிவு செய்தோம்.
மிகவும் ஆர்வமாகவும் அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது. நான், எனது மனைவி, பையன் மட்டுமே. நன்றாக வெயில் அடிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டோம். இங்கிலாந்தில் இந்தியாவைப் போலவே இடது பக்கம் வாகனம் செலுத்துவார்கள். ஆனால் ஐரோப்பா நாடுகளில் வலது பக்கம் வாகனம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறு வாகனம் ஓட்டி பழக்கம் இல்லை. எனவே மயோர்காவில் சுற்றிப் பார்க்க வேண்டும் எனில் வாடகைக்குத்தான் காரை அழைக்க வேண்டும் எனும் நினைப்பு வேறு. துபாய் சென்றபோது மிகவும் பாதுகாப்பாக இருந்தது நினைவில் வந்து போனது, அதைப்போலவே இங்கேயும் பாதுகாப்பாக இருக்குமா எனும் அச்சம் தொற்றிக்கொண்டது. இதுகுறித்து மனைவியிடம் சொன்னபோது, நாம் ஹோட்டலில் தங்கி பொழுதை கழித்துவிட்டு வந்துவிடலாம் என்றார். எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
பயண நாள் நெருங்கியது. பொதுவாகவே உறவினர் எவராவது விமான நிலையம் வரை அனுப்பிவிட்டு செல்வார்கள், அது போல திரும்பி வரும்போது எவராவது வந்து அழைத்து செல்வார்கள். ஆனால் இந்த முறை காரை விமான நிலையத்திலே விட்டுவிட்டு செல்லலாம் என முடிவெடுத்தோம். நான்கு நாட்கள் பயணம். காரை விமான நிலையத்தில் விட்டு செல்ல ஒரு தளத்தில் பதிவு செய்தோம்.
கார் பத்திரமாக இருக்குமா? எனும் கேள்வி மனதுள் எழுந்தது, இருப்பினும் தைரியத்துடன் காரை நிறுத்திவிட்டு செல்லலாம் என முடிவுடன் கிளம்பினோம். பயண நாள் வந்தது. காரை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து இருபது நிமிட தொலைவில் நிறுத்திவிட்டு (3 )கையில் கார் சாவியினை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஒரு பேருந்தில் விமான நிலையம் அடைந்தோம். நன்றி: கூகிள் படங்கள்.
இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்னர் மயோர்கா விமான நிலையம் அடைந்தோம். டாக்சி என தேடினோம், அதற்கு முன்னர் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் தோணியது. மொழி தெரியாத இடம். நானும் எனது மனைவியும் சைவம். பிரான்ஸ் நாட்டில் ஒரு முறை சைவம் என்பதால் பட்ட பாடு நினைவுக்கு வந்து போனது.
விமான நிலையத்தில் இருந்த ஒரு உணவு கடையில் கையை காட்டி ரொட்டி போன்ற உணவு வாங்கினோம். கார் வாடகைக்கு நான்கு நாட்கள் எடுத்துக் கொள்ளலாமா? என்று எனது மனைவியிடம் கேட்டதற்கு வேண்டாம் என ஒரேயடியாக மறுத்துவிட்டார். சரி, பேருந்தில் செல்லலாம் என்று சொன்னதற்கும் வேண்டாம் என மறுக்க துபாயில் போலவே வரிசையாய் விமான நிலையத்தில் வெளியில் டாக்சி நிற்க கையில் இருந்த ஹோட்டல் பெயரை காட்ட அரை மணி நேரத்தில் ஹோட்டல் அடைந்தோம். வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.
பயணம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அமெரிக்காவில் எனது அண்ணனுடன் விமான நிலையத்தில் இருந்து அவரது வீடு வரை சென்றபோது இல்லாத வித்தியாச உணர்வு இங்கே இருந்தது. கார் வாடகைக்கு எடுக்க வேண்டும் எனும் நினைப்பில் சாலையெல்லாம் மனனம் செய்ய தொடங்கிவிட்டேன். ஹோட்டல் பக்கத்தில் வந்ததும் சுற்றுப் பாதை வந்தது. இங்கிலாந்தில் செல்வதற்கு எதிர்மாறாக அங்கே சென்றதை கண்டதும், காராவது, வாடகைக்கு எடுப்பதாவது என மனம் அல்லாடியது. ஹோட்டல் மிகவும் நன்றாகத்தான் இருந்தது. கார் எடுப்பதா வேண்டாமா என மீண்டும் நடந்த சின்ன கலந்துரையாடலில் மனைவி சற்று அதிகமாகவே பயபட்டார். அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மயோர்காவில் சுற்றிப் பார்ப்பது குறித்து ஹோட்டல் அலுவலர்களிடம் பேச கீழே வந்தோம். மனம் கார், கார் என நினைக்க தொடங்கியது.
(தொடரும்)

5 comments:
பயணக் கட்டுரை ஆரம்பமே சுவாரஸ்யமாக இருக்கிறது. தொடர்ந்து வருகிறேன்.
மிக்க நன்றி ஐயா.
தலைப்பு Interesting. அது என்ன மனைவிக்கே மயோர்காவை தாரை வார்த்து கொடுத்துட்டீங்களா! :)
தொடருங்கள்!
ஹா ஹா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சகோதரி. மனைவியின் தயவால் இந்த இடத்தைப் பார்க்க முடிந்தது என்பதால் இந்த தலைப்பை இட்டுவிட்டேன். அடுத்த இடுகை இந்த பயணக் கட்டுரையின் தொடர்ச்சிதான். மிக்க நன்றி.
nice post
Post a Comment