தொலைநோக்கிப் பார்வை - சிறுகதை (2011)
இருபத்தி நான்கு வயதாகும் விஷ்ணு ஒரு
விசித்திரமான ஆர்வம் கொண்டவன். திடமான உடல். நன்றாக கலைத்து விடப்பட்ட தலைமுடி.
மாதக்கணக்கில் சவரம் செய்யப்படாத முகம். கண்களில் அடக்க முடியாத ஒரு தேடல். நான்கு
மணி நேர உறக்கம். இரவு வந்துவிட்டால் நட்சத்திரங்கள் பார்க்கத் தொடங்கிவிடுவான்.
நிலாவில் ஏதேனும் தெரிகிறதா என கண்களை கசக்கி கசக்கிப் பார்ப்பான். என்ன காரணமோ பத்தாம்
வகுப்பு படிக்கும்போது வானமும், நட்சத்திரங்களும் அவனது மனதில் ஒருவித ஈர்ப்பினை
ஏற்படுத்தி இருந்தது. அவனது குடும்ப சூழல் காரணமாக பத்தாம் வகுப்புடன் படிப்பை
விட்டுவிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியதாகிப் போனது. பகலில் வயலில் வேலை செய்தது
போக நேரம் கிடைக்கும்போதெல்லாம் நூலகங்களில் சென்று வானவியல் பற்றிய புத்தகங்களை
படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டான். மிக குறைந்த அளவிலான வான சாஸ்திரம் புத்தகங்களே
நூலகங்களில் இருந்தன.
கடந்த ஏழெட்டு வருடங்களில் இவன்
புத்தகங்களில் இருந்து எடுத்து குறித்து கொண்ட குறிப்புகள் இவனுக்குள் ஒரு புதிய
அனுபவத்தை கொடுத்திருந்தன. எவரேனும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள
கிடைக்கமாட்டர்களா எனும் ஏக்கத்தில் நட்சத்திரம் பற்றி பேசினால் நடிகர் நடிகைகள்
பற்றி பிறர் பேசுவது கண்டு ஏமாற்றமே அடைந்தான். இரவு நேரங்களில் தோட்டத்தில் வேலை
பார்க்க செல்லும் போது நிலவின் ஒளியை ஒரு இடத்தில் குவித்து வைக்க முடியுமா எனப்
பார்ப்பான். வானமும், வயலும் என வாழ்க்கையில் வருடங்கள் மிக வேகமாகத்தான்
போய்க்கொண்டிருந்தது. கடந்த வருடம் தான் கொரட்டூர் பஞ்சு ஆலையில் வேலைக்கு
சேர்ந்தான்.
விஷ்ணுவுக்கு வீட்டில் பெண் தேட
ஆரம்பித்தார்கள். கொரட்டூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த
சின்னவயல் எனும் ஊரில் எட்டு வரை படித்திருந்த ஜெயலட்சுமியை விஷ்ணுவுக்குப்
பிடித்துப் போனது, ஜெயலட்சுமிக்கும் விஷ்ணுவைப் பிடித்துப் போனது. ஜெயலட்சுமி
வெட்டப்படாத நீண்ட கூந்தல் உடையவளாய் இருந்தாள். அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமண தேதி ஆறு மாதங்களுக்கு பின்னர் என குறித்து வைத்தார்கள்.
பெண் பார்க்க சென்ற நாள் அன்றே தனது
ஆர்வத்தை பற்றி ஜெயலட்சுமியிடம் பேசினான் விஷ்ணு.
''எனக்கு இந்த வானம், நட்சத்திரங்கள் மேல நிறைய ஆர்வம், உங்களுக்கு அதுபோல எதுவும் ஆர்வம் உண்டா''
விஷ்ணுவின் ஆர்வத்தைக் கேட்ட ஜெயலட்சுமி முதலில் புரியாமல் விழித்தாள்.
''வானத்தையே வெறிச்சிப் பார்த்துட்டு இருப்பீங்களா, நான் ஒருத்தி இருக்கிறதை மறந்துர மாட்டீங்களே''
''இல்லை, வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் பத்தி நிறையத் தெரிஞ்சிக்க ஆசைப்படுவேன், கல்யாணம் பண்ண முன்னாடியே மறக்குறதைப் பத்தி கேட்கறீங்களே''
''உங்களுக்குப் பிடிச்சது எனக்கும் பிடிச்சா நல்லா இருக்கும்''
''ம்ம், நல்லா பேசறீங்க, ரொம்பப் பிடிச்சிருக்கு''
விஷ்ணு தன்னை வந்துப் பார்த்துச் சென்றதில் இருந்து வானவியல் பற்றிய ஆர்வம் கொண்டாள் ஜெயலட்சுமி.
பின்னர் ஒரு நாள் இது குறித்து அவளுடைய தோழி ஆண்டாளிடம் பேசினாள்.
''உனக்கு வானத்தைப் பார்த்து ஆராய்ச்சி பண்றவங்க யாருனாலும் தெரியுமா?''
''என்ன திடீருனு கட்டிக்கிறப்போறவரு வான விஞ்ஞானியா''
''அவருக்கு விருப்பமாம், அதான் என்னனு தெரிஞ்சிக்கிறனும்''
''ம்ம் வீரபத்திரனு ஒருத்தர் ஸ்ரீவைகுண்டத்தில் இருக்காரு, நீ வேணும்னா அங்கே போய் பாரு''
இதனை ஜெயலட்சுமி விஷ்ணுவுக்கு தெரியப்படுத்தினாள். விசயம் கேள்விப்பட்ட விஷ்ணு வீரபத்திரனை சந்திக்கச் சென்றான். ஆய்வாளர்களுக்கே உரிய தோற்றத்துடன் இருந்தார் வீரபத்திரன். ஆய்வகம் பெரும் நிலப்பரப்பில் கட்டப்பட்டு இருந்தது. அங்கிருந்து வானத்தை ஆராய்ச்சி பண்ணும் தொலைநோக்கிகள் நிறுவப்பட்டு இருந்தன.
விஷ்ணுவினைக் கண்டவர்கள் யாரோ ஆராய்ச்சிக்காரன் என்றே நினைத்தார்கள். விஷ்ணுவின் ஆர்வத்தை கண்ட வீரபத்திரன் விஷ்ணுவிடம் சில புத்தகங்கள் தந்தார். அங்கே நிறுவப்பட்ட தொலைநோக்கியை அவனுக்குக் காட்டினார்.
''விஷ்ணு, இந்த தொலைநோக்கியின் மூலம் வியாழன் கிரகத்தின் மேற்பகுதி வரை ஓரளவுக்குப் பார்க்க இயலும்''

''சார் ஏதாவது நட்சத்திரம் பற்றி சொல்ல
முடியுமா?, என்னவெல்லாம் இந்த தொலைநோக்கி மூலம் பாத்து இருக்கீங்க''
''ஒன்னா, ரெண்டா கணக்கிலேயே அடங்காத எந்த நட்சத்திரத்தைப் பத்தி சொல்றது, புத்தகங்களைப் படிச்சிப் பார்,
ஒரு மாசம் கழிச்சி வா''
அவனது செல்பேசி எண்களை தனது செல்பேசியில் எழுதியவர் அவனது பெயரை Vishnu informer எனக் குறித்துக் கொண்டார். அவர் கொடுத்த புத்தகங்கள் அவனால் வாசிக்கப்படாதவைகள். புரியாத ஆங்கிலத்தில் சில புத்தகங்கள். கடினப்பட்டு புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் புத்தகங்கள் சில. விஷ்ணு தன்னிடம் இருந்த கைகளால் எழுதப்பட்ட குறியீடுகள் அடங்கிய புத்தகம்தனைக் கண்டான்.
''நான் வரேன் சார்''
''ம்ம்''
ஆய்வகத்தில் இருந்து பிரதான சாலையை வந்து அடைந்தான் விஷ்ணு. அவனது செல்பேசி ஒலித்தது. விஷ்ணுவை அழைத்தார் வீரபத்திரன்.
''குறியீடுகள் அடங்கிய புத்தகம்தனை வந்து தந்துட்டுப் போ. எனக்கு நாளைக்கு ஒரு கலந்துரையாடலுக்குத் தேவைப்படுது, மறந்துபோய் உன்கிட்ட கொடுத்துட்டேன்.''
''அதுக்கென்ன சார் வந்து தந்துட்டுப் போறேன்''
புத்தகம்தனை பாதி வழியில் சென்றவன் மீண்டும் வந்து கொடுத்துச் சென்றான். அவனுக்குள் அந்த குறியீடுகள் பற்றிய ஆர்வம அதிகமானது.

திருமண வேலைகள் ஒருபுறம் நடந்து
கொண்டிருந்தன. பஞ்சு ஆலையில் வேலை பார்த்த வேறு இருவரின் வாய்த் தகராறு, அவர்களுக்குள்
அடிதடியில் போய் நின்றது. இந்த விசயம் கொரட்டூர் காவல் நிலையம் வரை சென்றது.
கொரட்டூர் எஸ் பி, கோகுல் விசாரித்தார். விஷ்ணுவும் சாட்சியாக விசாரிக்கப்பட்டான்.
விஷ்ணு சொன்ன சாட்சியின்படி இருவருக்கும் எந்த தண்டனையும் இல்லாமல் எஸ் பி கோகுல்
தீர்ப்பு சொல்லி அனுப்பியவர் விஷ்ணுவை அழைத்தார்.
'‘அவங்களை காப்பாத்த நீ பொய் சொல்ற, என்னிக்காச்சும் ஒருநாளைக்கு என்கிட்டே மாட்டாமலா போகப் போற'’
''நான் என்ன பொய் சொன்னேன் சார், அவங்க இரண்டு பேரும் ஒருத்தரைப் புரிஞ்சிக்காம அடிச்சிக்கிட்டாங்க, அதான் தீர்ப்புச் சொல்லிட்டீங்களே. பிறகு என்ன சார்''
''நீ மாட்டாமல் போகமாட்ட''
எஸ் பி கோகுல் அவ்வளவு நல்லவர் கிடையாது. எப்படியாவது தன்னை ஏதேனும் விஷயத்தில் மாட்டிவிடுவார் எனக் கருதி அடுத்த ஒரு வாரத்திற்குள் ஸ்ரீவைகுண்டத்தில் வேலை தேட ஆரம்பித்தான் விஷ்ணு. கொரட்டூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்வதென்றால் நாளில் பாதி பிரயாணத்தில் செலவாகிவிடும் என நினைத்து அங்கேயே வீடும் தேட ஆரம்பித்தான். இந்த விசயம் வீட்டில் உள்ளவர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் விஷ்ணு தனது முடிவில் உறுதியாக இருந்தான்.

வீரபத்திரனைச் சந்தித்தான்.
''சார் இங்கே எனக்கொரு வேலை கிடைக்குமா''
''நீ Assistant informerஆ எனக்கு கீழே வேலை செய், உனக்குத் தங்குவதற்கு குறைந்த வாடகையில் ஒரு வீடும் ஏற்பாடு செய்றேன்''
''இந்த பெரும் உதவிக்கு நன்றி சார்''
விஷ்ணுவின் உதவியால் வீரபத்திரன் உற்சாகமாக காணப்பட்டார். பொதுவாகவே வீரபத்திரன் ஆய்வகத்தில் இரவு பன்னிரண்டு மணி வரை தனியாய் இருப்பது உண்டு. குறியீடுகள் குறித்து விஷ்ணுவிடம் எல்லா விசயங்களும் சொன்னார் வீரபத்திரன்.
''எப்படியும் பிற நட்சத்திரக் குடும்பங்களில் இருப்பவர்கள் மூலம் நாம் பேச இயலும். சில தகவல்கள் எனக்குக் கிடைத்து இருக்கு''
விஷ்ணுவுக்கு வீரபத்திரன் ஆய்வு பெரு மகிழ்ச்சியை உருவாக்கியது.
''எனக்கும் அந்தக் குறியீடுகள் பத்தி சொல்ல முடியுமா''
''விஷ்ணு இந்தக் குறியீடுகள் அனைத்தும் தனது கணினியில் உள்ளது நீ அதனைக் காண ஒரு குறியீடு எழுதினால் மட்டுமே முடியும் , குறிச்சிக்கோ S V 42 6J. உள்ளே போய் மத்தக் குறியீடுகள் மூலம் பேசலாம்''
''நன்றி சார்''
''என்னோட அப்பா, அம்மா மற்றும் என்னோட பேரு எல்லாம் இதில இருக்கு யாரிடமும் இந்த குறியீடு மட்டும் தர வேண்டாம், உன் மீதான நம்பிக்கை காரணமாகத்தான் தருகிறேன், இங்கே ஆய்வு புரிபவர்களிடம் இதனை பற்றி நான் எதுவும் சொன்னதில்லை இது மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டால் அவர்கள் வெளிநாட்டுக்கு விலைபேசிருவங்க, இன்னும் முழுமையா ஆராய்ச்சிப் பண்ணி இந்த உலகத்துல நாம மட்டும் இல்லை, பிற நட்சத்திரக் குடும்பத்துல உயிரினங்கள் இருக்குனு நிரூபிக்கனும்'' என எச்சரித்தார் வீரபத்திரன்.

சில மாதங்கள் விஷ்ணு மிகவும் கவனமாகப் பணிபுரிந்து வந்தான். ஒருமுறை மதிய உணவு வேளையில் வீரபத்திரனுடன் சில வருடங்கள் பணிபுரியும்
ராகுலிடம் இந்தக் குறியீடுகள் குறித்த விசயங்கள் பற்றி வாய் தவறி சொன்னான்
விஷ்ணு.
''என்னக் குறியீடு விஷ்ணு, எந்த நட்சத்திரங்கள் பத்தியது, ஏலியன்ஸ்?''
சுதாரித்து கொண்டான் விஷ்ணு.
''ஏலியன்ஸ் இல்லை சார், அது பிற நட்சத்திரங்கள் பற்றியது''
''எத்தனை வருசமா நாங்க இங்க உழைக்கிறோம், எனக்குத் தெரியாத குறியீடு உனக்குத் தெரிஞ்சி இருக்கு, வீரபத்திரனுக்கு நிறைய நெருக்கம் ஆயிட்ட''
''நட்சத்திரங்கள் பத்தி சொல்றதுதான் சார், வேற ஒன்னும் இல்லை''
இதைப் பற்றி ராகுல் அறிந்து கொள்ள முனைந்தவர் தனது நண்பன் கொரட்டூர் எஸ் பி கோகுலிடம் தகவல் தெரிவித்தார். எஸ் பி கோகுல் ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்தார்.
ஒருநாள் வீட்டிற்குச் செல்லாமல் ஆய்வகத்திலேயே இருந்தார் ராகுல். இரவு பதினோரு மணியளவில் எஸ் பி கோகுல் ஆய்வகத்திற்கு வந்தார். ராகுலும், கோகுலும் வீரபத்திரனிடம் சென்று விசாரித்தார்கள்.
''நீங்க விஷ்ணுகிட்ட குறியீடு தந்து இருக்கீங்க, அதை எங்களுக்குத் தரலைன்னா உங்களை உயிரோட விடமாட்டோம், ஏலியன்ஸ் பத்தி தெரிஞ்சி இருக்கு சொல்லுங்க'' மிரட்டினார்கள்.
விஷ்ணுவால் தனக்கு இத்தனை இன்னல்கள் வந்து சேரும் என வீரபத்திரன் நினைக்கவே இல்லை. இத்தனை வருடங்களாக பாதுகாக்கப்பட்ட இரகசியம் இப்படி ஆகும் என நினைத்துப் பார்க்க இயலவில்லை. ஆனாலும் சமாளிக்கவே எண்ணினார்.
''அந்தக் குறியீடுகள் அமெரிக்காவில் இருக்கும் ஆய்வகத்திற்கு அனுப்படுபவை, இந்த உலகம் தோன்றிய உடன் உருவான நட்சத்திரம் பற்றிய தகவல்கள்தான் வேறு எதுவும் இல்லை''
இதை ராகுல் சற்றும் நம்பவில்லை. ஆனாலும் மேலும் வீரபத்திரனை இதைக் கேட்பதைவிட விஷ்ணுவிடம் அதிகம் பணம் தருவதாகச் சொல்லி மிரட்டி வாங்கிவிடலாம் எனக் கருதினார்.
''சரி, உங்களை நம்பறேன்'' எனச் சொல்லிவிட்டு வெளியேறினார்கள் ராகுலும் கோகுலும்.

''கோகுல், விஷ்ணுனு ஒருத்தன் இங்கே வேலை
பார்க்கிறான். அவன்கிட்ட நீ விசாரிச்சி இந்த குறியீடு எல்லாம் எப்படி
பார்க்கலாம்னு கேளு. இனி இந்த வீரபத்திரனை சும்மா விடக்கூடாது, இந்த இரகசியம் நான்
வெளியிட்டா எனக்குத்தான் பேரும் புகழும் கிடைக்கும்''
மறுநாள் விஷ்ணுவை பார்த்த கோகுல் ஆச்சர்யம்
அடைந்தார்.
''எனக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடி வந்துட்டு இப்ப மாட்டிக்கிட்ட எனக்கு இந்த குறியீடு பத்தி விவரம் சொல்லு''
''நான் சார் கிட்ட கேட்டுட்டு உங்களுக்கு அனுப்புறேன், பழைய பிரச்சினைகள் இப்போ வேணாம் சார்''
''சரி, இந்தா ராகுலோட செல்பேசி எண், அவருக்கு மறக்காமல் அனுப்பிரு அப்படி எதுவும் ஏடாகூடமா பண்ண நினைச்ச தோலை உரிச்சிருவேன்''''
''சரி சார்''
நடந்த விசயத்தை வீரபத்திரனிடம் சொல்லி மன்னிப்பு கேட்டான் விஷ்ணு. அதோடு தன்னை மணம் முடிக்க இருக்கும் ஜெயலட்சுமி வீட்டில் சென்று தங்குமாறு கூறினான். வீரபத்திரனும் அன்றே ஸ்ரீவைகுண்டம் விட்டு சென்றார்.

விஷ்ணு ராகுலுக்கு S W H2 6F -இதுதான் குறியீடு –விஷ்ணு என குறுந்தகவல் அனுப்பினான்.
அதோடு வீரபத்திரனுக்கும் Sir, ராகுலிடம் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் விஷ்ணு என குறுந்தகவல் அனுப்பினான். இந்த இரண்டு விசயத்தையும் வீரபத்திரனின் ஆய்வகத்தில் இரண்டு தாள்களில் பிரின்ட் எடுத்த விஷ்ணு அந்த தாள்களை அப்படியே மேசையில் விட்டுவிட்டு போனான்.

அவன் வீரபத்திரனின் ஆய்வகத்தில் இருந்து
கதவை பூட்டிவிட்டு வெளியேறிய அடுத்த நிமிடம் ராகுல் வீரபத்திரன் ஆய்வகத்தின் கதவை உடைத்து
கணினியில் குறியீடுதனை எழுத கணினி திறக்க மறுத்தது. ராகுல் கோபம் அடைந்தார். விஷ்ணு வெளியில் நின்று அந்த நிகழ்வை எல்லாம் படம் பிடித்தான். காவல் அதிகாரிகளுக்குத் தகவல் சொன்னான்.
''ராகுல் சார், நீங்க தப்பிக்க முடியாது''
''நேத்து முளைச்ச காளான் நீ, என்னை மிரட்டுறியா''
''இவ்வளவு படிச்சும் உங்களுக்குத் திருட்டுப் புத்திப் போகலையே, நீங்க இந்த அறையை உடைச்சி வந்தது, அந்தப் பெட்டியில் இருந்து ஆவணங்களைத் திருடினதுனு எல்லாம் படம் பிடிச்சி இருக்கேன்''
''எஸ் பி கோகுல் என்னோட நண்பன்தான், யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது''
''தெரியும் சார் அதான் நான் தகவல் கொடுத்தது வேற இடம்''
அங்கே வந்த காவல் அதிகாரிகள் ராகுலை கைது செய்தார்கள்.

விவரம் அறிந்த எஸ் பி கோகுல் விஷ்ணுவிடம் ‘என்னிக்காச்சும்
ஒருநாளைக்கு என்கிட்டே மாட்டாமலா போகப் போற’ என கொக்கரித்தார். வீரபத்திரன், ஜெயலட்சுமி குடும்பத்தினருக்கு
நன்றி சொல்லி ஆய்வகம் வந்து சேர்ந்தார். வீரபத்திரன் தலைமையில் விஷ்ணுவின்
திருமணம் இனிதே நடைபெற்றது.
எஸ் பி கோகுல். விஷ்ணுவை கைது செய்ய புது
திட்டம் தீட்டிக் கொண்டு இருந்த வேளையில் அவரை வேலையை விட்டு ஒரு வருடம்
நீக்குவதாக ஒரு கடிதம் அவரது கைகளை தழுவியது.
8 comments:
கதை நல்லாருக்கு....இன்னும் கொஞ்சம் பாத்திரங்களே பேசறமாதிரி எழுதினால் சுவை கூடும்.
வெற்றிக்கு வாழ்த்துகள்!
மிக்க நன்றி அருள். வந்து படித்து விடுகிறேன். விடமாட்டேன்னு ஒரே ஆதரவு. நன்றி.
நன்றி ஷைலஜா. சென்ற கதையில் பாத்திரங்கள் பேசியது, இந்த கதையை ஒரு கதை போல சொல்லிவிட்டேன்.
அடுத்து ஒரு நகைச்சுவை கதை தயார் செய்ய வேண்டும்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..! :) கதை நன்றாக உள்ளது. ஓட்டு போட்டாச்சுங்க!
தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி. வாக்கு அளித்தமைக்கும் நன்றி.
வெற்றிக்கு வாழ்த்துகள்!
மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி.
பலரும் கடிதத்தின் செய்தியில் கொண்டு வந்துகொண்டிருக்க நீங்கள் அந்த புகைப்படத்தையே கதையில் கொண்டு வந்து விட்டீர்கள்!பலே
சைலஜா அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்
மிக்க நன்றி பாண்டியன். பாத்திரங்களை பேச வைத்து இன்னும் சுவாரஸ்யமாகவே எழுதி இருக்கலாம் போலிருக்கிறதே.
Post a Comment