குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தை பிறந்த நேரத்தை கொண்டு கணிக்கப்படும் ஜோதிடம் எனப்படும் கலை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பது பெருமளவு உண்மைதான். நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பலர் சுவாரஸ்யத்திற்காக ஜோதிடம் பார்ப்பது உண்டு, படிப்பது உண்டு. முக்காலமும் உணர்ந்த முனிவர்களை காட்டும் கண்ணாடி அல்லவா அது! பல நேரங்களில் கண்ணாடி சரிவர காமிப்பது இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.
இந்த ஜோதிடத்தை நம்பி மோசம் போனவர்கள் உண்டு, அதே வேளையில் லாபம் அடைந்தவர்கள் உண்டு. லாபம் அடைந்தவர்கள் பெரும்பாலும் ஜோதிடம் சொல்பவர்கள்தான். இந்த ஜோதிடம் சொல்லும் பாடம் ஒன்றுதான். வாழ்க்கையானது ஒரு நிகழ்தகவு. வாழ்க்கை ஒரு வாய்ப்பு.
சிலருக்கு ஒரே மாதிரியாக, அது நல்லவிதமோ, கெட்ட விதமோ, அல்லது இரண்டு நிலைகளிலும் உட்பட்டோ அமைந்து விடுகிறது. வாழ்க்கை ஒரு சக்கரம். அது சுழன்று கொண்டே இருக்கும் என்கிறார்கள்.
எங்கு தொடங்கியதோ அங்குதான் முடியும் என்பதுதான் முக்காலம் உணர்த்தும் ஒரு செய்தி. இடுகாடோ, சுடுகாடோ எங்கு சுற்றினாலும் இங்குதான் வரவேண்டும் எனும் மொழி வழக்கு உண்டு.
'உன்னை மட்டும் என் வாழ்வில் பார்க்காது இருந்து இருந்தால் எனது வாழ்கை அஸ்தமனமாக போயிருக்க கூடும்'
'இவர் மட்டும் இல்லாது போயிருந்தால் உனது வாழ்க்கை நரகமாகி இருக்க கூடும்'
'இவரால் தான் உனது வாழ்க்கையே இப்படி நரகமாகிப் போனது'
இப்படிப்பட்ட வசனம் பேசும் பலரை நாம் காணலாம். இது போன்ற வரிகளை எல்லாம் சற்று அலசி பார்த்தால் மனிதர்களின் மனம் போடும் கணக்கு மிகவும் தவறாகவே இருக்கிறது!
அடுத்த நொடி என்ன, அடுத்த யுகத்தையே நிர்ணயிக்கும் வல்லமை முனிவர்களிடம் இருந்திருக்கிறது என்கிறது புராணங்கள். அதாவது 'பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது' போல.
அவதாரங்கள் எல்லாம் பார்த்தால் ஒரு தீயவர் படைக்கப்படுவார், அல்லது உருவாகுவார், அந்த தீயவரை, தெய்வம் அவதாரம் எடுத்து திருத்தும் அல்லது பெரும்பாலும் கொல்லும்!
'மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்'
காலை எழுந்தவுடன் ஒரு இயந்திரம் போல் பணியாற்றும் நமது நிலையை பாருங்கள். இரவு வந்ததும் என்ன என்ன செய்தோம் என நினைத்து பாருங்கள். ஒரு நாளுக்கு மற்றொரு நாள் வித்தியாசமாக இருக்கிறதா என எழுதி வைத்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு விசித்திரமா! வாழ்க்கை ஒரு சித்திரமா!
இன்று இதை இதை செய்ய வேண்டும் என பட்டியலிட்டு எதுவுமே செய்ய இயலாது போனால் வாழ்க்கை ஒரு விசித்திரம்.
என்ன செய்ய வேண்டும் என நினைத்து அதையே செய்து முடித்தால் வாழ்க்கை ஒரு சித்திரம்.
கவன குறைவு தான் பல பேராபத்துகளுக்கு காரணம். இது தவறு என்று தெரிந்து செய்யும் குணாதிசயம் உடையவன் மனிதன். முயற்சி என்பதன் அர்த்தம் பல நேரங்களில் தவறாகவே இருக்கிறது. இந்த முயற்சியினை முறையாக செயல்படுத்த தெரியாமல் அழிவுக்கு உட்பட்ட விசயங்கள் பற்பல. அதன் பொருட்டே இந்த உலகம் பொருளாதார சீரழிவுக்கோ, கலாச்சார சீரழிவுக்கோ உட்பட்டு வந்து கொண்டு இருக்கிறது. என்ன சொல்லி வைத்தார்களாம்! கலியுகம்!
சிந்தனைகளின் வலிமை பற்றி ஒரு பெரும் கருத்து உண்டு. அதாவது ஒரு சிந்தனை வலுப்பெற அதை பின்பற்ற பலர் தேவை. அப்படி இல்லாது போனால் அந்த சிந்தனை அழிந்துவிடும்.
இதில் அந்த சிந்தனை உண்மையா, பொய்யா என்பதை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் எல்லாம் தேவை இல்லை. உலகில் உள்ள மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் நம்பினாலே போதும், அது அப்படி அப்படியே பரவி அந்த சிந்தனை வலுப்பெறும் என்பதுதான் காலம் உணர்த்தும் செய்தி.
இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்கள் தொகை எத்தனை?!
இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்களின் சிந்தனை எத்தகையது?!
அப்படியே பெருக்கி கொண்டே போவோம். நான்காயிரம், எட்டாயிரம், பதினாறாயிரம்!
முக்காலம் உணர்ந்த முனிவர்கள் மிகவும் அதிசயிக்க வைக்கத்தான் செய்கிறார்கள்!
(தொடரும்)

1 comment:

...... சுவாரசியமாக இருக்கிறது.
Post a Comment