ஒரு குழந்தை தனது எதிர்காலம் எப்படி இருக்கும் என எந்த வித எதிர்பார்ப்புமின்றி பிறக்கிறது. அந்த குழந்தையின் ஆசைகள், அந்த குழந்தையின் எண்ணங்கள் எல்லாம் சுற்றுபுற சூழல் வைத்து வளர்கிறது.
குழந்தையின் மனதில் சில விசயங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் அந்த பாதிப்புகள் எந்தவித சுவடும் இன்றி தொலைந்து விடுகிறது. சில பாதிப்புகள் மாறா வடுக்களாக பதிந்து விடுகின்றன.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நெடா எனும் பெண் குழந்தை ஈரானில் பிறந்தது. சுதந்திரம் இல்லாத பெண்கள் வாழ்வினை கண்டு மனம் வேதனை கொண்டது. பெண்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு ஈரானில் நடத்தப்படும் கொடுமைகள் மிகவும் வேதனைக்குரியவை.
பெண்கள் தான் சுதந்திரமாக தனக்கு பிடித்த உடையை கூட உடுத்த முடியாத அடுக்கு முறை பல நாடுகளில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. சில நாடுகளில் இதில் மாற்றம் ஏற்பட்டாலும் இன்னும் பல நாடுகளில் இந்த அவல நிலை தொடர்ந்து வரத்தான் செய்கிறது.
நெடா தனது துர்க்கியில் சென்று படித்தபோது தான் அனுபவித்த சுதந்திரத்தை ஈரானிலும் அனைவரும் பெற வேண்டும் என நினைத்தார். இந்த பெண் சுதந்திரமற்ற தன்மையை ஆதரித்தவர்களில் பெண்களும் இருந்தார்கள். பழமைவாதிகள் என்றும் அத்தனை எளிதாக மாறுவதில்லை.
சமீபத்தில் நடந்த தேர்தலில் நெடா புரட்சிகர பெண்ணாக போராடினார். ஆனால் தேர்தல் முறைப்படி நடக்கவில்லை. அதனால் மாற்றம் என்பது ஏற்பட வழியின்றி போனது. தேர்தலுக்கு பின்னர் நடந்த அமைதி போராட்டத்தால் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் பலர் கொல்லபட்டார்கள்.
அப்படி நடந்த ஒரு போராட்டத்தில் நெடா அநியாயமாக கொல்லப்பட்டார். வீட்டுக்கு வந்துவிடு என அம்மாவின் அழைப்பையும் மீறி நெடா துடிப்புடன் செயல்பட்டதாக நெடா சுடப்பட்டபோது அருகில் இருந்த ஒரு மருத்துவர் கூறினார்.
இந்த உலகம் சுதந்திரம் இல்லாத உலகம் என போராட்டம் நடக்கும் பல இடங்களில் ஆட்சியாளர்களால் தனி மனிதர்கள் நொறுக்கப்படும்போது ஒரு நெடா மட்டும் என்ன செய்ய இயலும்?
1 comment:
நல்ல பதிவு.
நன்றி.
Post a Comment