Wednesday, 15 December 2010

மைனா கபடி குழுவும் சொந்தலாலாவும்

விடுமுறை காலங்கள் என்றாலே ஒருவித தனி மகிழ்ச்சிதான். வேலைக்கு செல்ல வேண்டியதில்லை. நிம்மதியாக தொலைகாட்சிகள் பார்த்து கொண்டு பொழுது போக்கிவிடலாம். ஆனால் இந்த வருடம் நானாக தேவையில்லாமல் சமூக பணி செய்கிறேன் என நான் முன்னர் இருந்த ஒரு அமைப்பில் என்னை இணைத்து கொண்டு விட்டதால் இந்த முறை விடுமுறை விடுமுறையாக இருக்க போவதில்லை என்பது மட்டும் உண்மை. இந்த சமூக பணி குறித்து சில மாதங்கள் பின்னர் எழுதுகிறேன்.

திங்கள் கிழமை அன்று மகனிடம் வாக்கு கொடுத்தபடி நானும் அவனும் ஹர்ரி போட்டர் படம் பார்க்க சென்றோம். காலை பதினோரு மணிக்கு திரைப்படம். நாங்கள் இருவரும் பத்து நிமிடங்கள் முன்னர் திரையரங்கு சென்றோம். திரையரங்கு கதவுகள் திறக்கப்படவில்லை. மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஐந்து நிமிடங்கள் பின்னர் ஒருவர் வந்து கதவை திறந்தார். உள்ளே சென்று டிக்கட் வாங்கினோம். படம் பார்க்க வந்தவர் என எவரும் இல்லை. நாங்கள் இருவர் மட்டுமே. எவரேனும் வரக் கூடும் என உள்ளே சென்று அமர்ந்தோம். உள்ளேயும் எவரும் இல்லை. நாங்கள் இருவர் மட்டுமே. சரியாக பதினோரு மணிக்கு விளம்பரம் போட ஆரம்பித்தார்கள். மணி பதினொன்று முப்பது ஆனது. எவருமே வரவில்லை. எங்களை வெளியே அனுப்பிவிடுவார்கள் என நினைத்தேன். ஆனால் எங்கள் இருவருக்காக படம் ஓடியது. எனக்கு படத்தில் அத்தனை பிடிப்பு வரவில்லை. தியேட்டரில் அவ்வப்போது தூங்கிய படம் இதுவாகத்தான் இருக்கும். மகன் என்னை எழுப்பி கொண்டே இருந்தான்.

அதற்கடுத்து நேற்று மைனா என்றொரு படம் தனை வீட்டில் பார்த்தோம். எரிச்சலை கிளப்பிய மைனா என தலைப்பு இடலாம் என நினைத்து பேசாமல் விட்டுவிட்டேன். படம் மிகவும் நன்றாக இருந்தது எனலாம். நகைச்சுவையுடன் ஆவேசமான காதல் சொல்லப்பட்டு இருந்தது. வெறித்தனமான காதல் எனலாம். படம் மிகவும் ரசிக்கும்படியாகவே இருந்தது.

கதையில் எல்லாம் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது. நடக்கிறார்கள், நடந்து கொண்டே இருக்கிறார்கள். பாதை மாறி போகும்போது ஊரு வந்து சேராது என பாடலாம். மிகவும் அருமையான படம்தனை கடைசி காட்சியின் மூலம் எரிச்சல் அடைய செய்துவிட்டார் இயக்குநர். எனது மனைவியின் கணிப்பு படியே மைனா இறந்து போயிருந்தாள். எனக்கு போங்கப்பா நீங்களும் உங்க கொலைகார சிந்தனையும் என்றே சொல்ல தோன்றியது.

இருப்பினும் இது போன்ற சோகம் மனிதரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எல்லா இயக்குநர்களும் ஒரு சேர தெரிந்து வைத்திருக்கிறார்கள். இப்படித்தான் வெண்ணிலா கபடி குழு என ஒரு படம். கடைசி காட்சி அனைவரையும் உறைய வைக்கும். அது வேறு. ஆனால் இங்கே சூழல் வேறு. கதை நாயகி சாக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நடந்து விடுகிறது. நமது எதிர்பார்ப்பை மீறிய ஒரு படம். ஒவ்வொரு காட்சியும் மிகவும் நன்றாகவே செதுக்கி இருக்கிறார் இயக்குநர். நமது மனதில் பல எண்ண ஓட்டங்களை எழ செய்யும் விதமாக காட்சி அமைப்பு இருக்கிறது. இந்த படம் பலரின் பாராட்டை பெற்று இருக்கிறது என்கிறார்கள். பலர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் போலும், இது போன்ற சோகமயமான வாழ்வியலை தாண்டி எப்பொழுது மனிதம் தாண்டுமா அப்பொழுதுதான் காதல் அன்புக்கு எல்லாம் முழு வெற்றி. காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் மரணத்தின் மூலம்  காதல் தோல்வியைத்தான் அடைகிறது. பாராட்டுகள் இயக்குநர் மற்றும் மைனா படக்குழுவினர்களே.

அதோடு விட்டோமா, மணி இரவு பன்னிரண்டு ஆகி இருந்தது. நந்தலாலா எனும் படத்தை பார்க்கலாம் என தொடங்கினோம். வித்தியாசமான படம், மிகவும் அருமையான படம் என சொன்னாலும் காவியங்கள் படைக்கிறோம் என்கிற பேர்வழியில் சில விசயங்களை முழுவதுமாக நமது யோசனைக்கு விட்டு விடுகிறார்கள். அப்படி விடப்பட்ட ஒரு யோசனையில் இந்த படத்தின் மீது கடைசியில் ஒரு வெறுப்பு வந்து உட்கார்ந்து விடுகிறது.

ஒவ்வொரு காட்சியும் மெதுவாக நகர்கிறது, ஆனால் சுவாரஸ்யமாக நகர்கிறது, தயவு செய்து படத்தை இருட்டில் எடுப்பதை தவிர்த்து தொலையுங்கள். கோடி புண்ணியம் கிடைக்கும். இந்த படத்திலும் நடக்கிறார்கள், நடந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த படத்தை பார்க்கும்போது தேடினால் கிடைத்துவிடும் எனும் எனது சிறுகதைதான் நினைவுக்கு வந்தது. ஆனால் இந்த படம் பிரமிக்க வைத்த படம் தான். வழியில் அவர்களுக்கு நல்ல மனிதர்கள் கிடைத்து கொண்டே வருகிறார்கள். சிறுவனின் வசனமும், மனநிலை பாதிக்கப்பட்டவரின் வசனமும் என படம் கொள்ளை கொள்கிறது. ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் சொல்ல வரும் கதைகள் ஆயிரம். இசை படத்தை மிகவும் கெட்டியாக பிடித்து கொள்கிறது. படம் மெதுவாக நகன்றாலும் ரசிக்கும்படியாய் இருந்தது. இது போன்ற தமிழ் படங்கள் மிகவும் மிகவும் மிகவும் அரிதுதான். அதற்காக எல்லா இயக்குனர்களும் இப்படியே படம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. நாம் சொன்னாலும் இப்படிப்பட்ட படங்கள் எல்லாம் தொடர்ந்து எடுக்கப்படுவதும் இல்லை. குறிஞ்சிப்பூ!

வெள்ளேந்தி மனிதர்களாக வாழ்ந்து விடுவது எத்தனை எளிது. நகைச்சுவையாய் சில பல காட்சிகள். தாய் என்பவர் போற்றப்பட வேண்டியவர் தான். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் எத்தனை தாய்மார்கள் அதை உணர்ந்து செயல்படுகிறார்கள்? சரி தந்தைமார்களையும் கணக்கில் கொள்வோம். மனதில் வெறுப்பு என வரும்போது அன்புக்குரிய தாய் நிந்திக்கப்படுகிறார், அங்கே தாய், தந்தை என்பதெல்லாம் பெரிய விசயம் இல்லை. இதையேதான் மைனாவில் சொல்கிறார்கள். பெற்றோர்களை மதியா பிள்ளை. நான் கடவுள் எனும் படத்திலும் சொன்னார்கள். தாயை அவமதிக்கும் இயக்குநர்கள் அதிகமாகிவிட்டார்கள் போல.  அழுதபோதாவது அம்மா வருவாளா எனும் எனது கவிதை மனதில் ஏனோ ஓடிக்கொண்டே இருக்க பல காட்சிகளில் எனது கண்களில் இருந்து கண்ணீர் என்னை அறியாமல் உதிர்ந்து கொண்டிருந்தது. உலகின் மாபெரும் சோகத்தை சொன்ன இந்த படம் மிகவும் சிறப்பான படம் தான். பாராட்டுகள் இயக்குனருக்கும், பட குழுவினருக்கும்.

தமிழ்மணத்தில் எனது படைப்புகளை பரிந்துரை செய்துவிட்டேன். ஆனால் வாக்கு கேட்டு உங்கள் வாசல் எல்லாம் வரும் எண்ணம் எதுவும் இல்லை. மற்ற படைப்புகளுடன் தானும் ஒரு படைப்பாக நிற்பதே பெருமைதான். இது நான் தமிழ்மணத்திற்கு தரும் அங்கீகாரம்.

16 comments:

Speed Master said...

Nice sir

sakthi said...

நல்ல பகிர்வு

Unknown said...

//இது நான் தமிழ்மணத்திற்கு தரும் அங்கீகாரம்//

அட கலக்கல்...

ம.தி.சுதா said...

நல்லாத் தான் பார்த்திருக்கிறீர்கள் அருமை...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

Rafeek said...

DVD ல படத்த பார்த்துட்டு ...செத்தவன் கைல வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி சவ சவன்னு நாட்டு நடப்பு புரியாமல் பதிவு வேற..!!
அப்படியே நேத்து ரீலிஸான சிவாஜி, சந்த்ரமுகி, மும்பை எக்ஸ்ப்ரஸ் லாம் கொஞ்சம் சீக்கிரம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க!!

Chitra said...

நேரில் இருந்து பேசுவது போலவே இருந்தது.

suneel krishnan said...

இந்த ஹாரி பாட்டர் பாகம் சற்று மொக்கை தான், :) மைனா -இறுதி காட்சி திணிக்கப்பட்டது ,அது இப்பொழுது ஒரு வழக்கம் .நந்தலாலா -கண்ணை மூடி கொண்டு பார்த்தேன் -இசை அடேங்கப்பா என்று இருந்தது ,வயோலின் ராஜாவுக்கு என்றே கண்டுபிடிக்கப்பட்டது போல் இருந்தது.இசையினாலே என்னை அழ வைத்தார் ராஜா

Radhakrishnan said...

மிக்க நன்றி மாஸ்டர்

மிக்க நன்றி சக்தி

மிக்க நன்றி பாரத் பாரதி

மிக்க நன்றி சுதா

மிக்க நன்றி ரபீக், எழுதிவிடுவோம்.

மிக்க நன்றி சித்ரா.

மிக்க நன்றி டாக்டர், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

மாதேவி said...

நான் நேற்றுத்தான் மைனா பார்த்தேன். உங்கள் கருத்துத்தான் எனக்கும் தோன்றியது.

நந்தலாலா பார்க்கவில்லை.

Radhakrishnan said...

மிக்க நன்றி மாதேவி

tamilcinemablog said...

அருமையான பதிவு மிக்க நன்றி
இவன்
http://tamilcinemablog.com/

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Harry potter exclusive show pola irukke? haha ...super

maina...innum paakalai...soga mudiva... appo vendaam...

எம் அப்துல் காதர் said...

------------------------------------------------
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
------------------------------------------------

Radhakrishnan said...

மிக்க நன்றி தமிழ்சினிமாப்ளாக், அப்பாவி தங்கமணி மற்றும் அப்துல்காதர். தாங்கள் தரும் விருதினை பெற்று கொள்கிறேன். மிகவும் மகிழ்ச்சி.

சிவகுமாரன் said...

ஒரே பதிவில் இத்தனை விமர்சனமா பலே.

Radhakrishnan said...

மிக்க நன்றி சிவகுமாரன்