Friday, 19 November 2010

அவள் அழகாகத்தான் இருந்தாள்

கவிதைக்கு வார்த்தைகள் தேடியபோது
கவிதையாகத்தான் இருந்தாள் அவள்

கண்ணுக்கு நிறைந்தவளாய்
மண்ணில் இருந்தாள் அவள் மட்டும்

கதைகள் பேசி சிரித்திட
கவலைகள் எல்லாம் மறந்திட
மனதில் நிழலாய் நிஜமாய் அவள்


அழகின்றி போனது என் காதல்
அவளின்றி போனதால்


அவள் அழகாகத்தான் இருந்தாள்
நூறு வயது ஆனபின்னும்



படம் நன்றி : கூகிள்

10 comments:

sathishsangkavi.blogspot.com said...

//அவள் அழகாகத்தான் இருந்தாள்
நூறு வயது ஆனபின்னும்//

அழகான வரிகள்...

Radhakrishnan said...

மிக்க நன்றி சங்கவி.

க.பாலாசி said...

எத்தன வயசானாலும் அவள் அழகிதாங்க... நல்ல கவிதை...நன்றாக இருக்கிறது.

Radhakrishnan said...

மிக்க நன்றி பாலாசி

ஹேமா said...

அழகிக்காக ஒரு கவிதை.ரொம்பவே அழகு !

சங்கரியின் செய்திகள்.. said...

நல்லாயிருக்குங்க........

G.M Balasubramaniam said...

அவள் மனதில் நிழலாய் நின்றதால்
காதல் அழகின்றிப் போனதா? The beauty lies in the eyes of the beholder. regards.

Radhakrishnan said...

நன்றி அன்பரசன்

நன்றி ஹேமா

நன்றி நித்திலம்

நன்றி ஐயா.

மங்கை said...

நல்லா இருக்கு....:)

Radhakrishnan said...

மிக்க நன்றி மங்கை