காலம் என்று வந்த பின்னர் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என பிரித்து வைத்து பார்த்தாகிவிட்டது. ஆனால் இக்கணத்தில் எக்கணமும் இல்லை எனும் புத்தரின் கூற்று எத்தனை உண்மை என்பதை எத்தனை மனிதர்களின் மனம் பரிசீலிக்கும்.
பல்லாயிரம் வருடங்கள் முன்னர் நடந்தது எது? இனிமேல் நடக்கப்போவது எது? நடந்து கொண்டிருப்பது எது? எனும் எண்ணங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
முன்னாளில், இந்நாளில் இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் பல விசயங்கள் மனிதர்களுக்கு புலப்பட்டு இருக்கிறது. ஆதிகாலத்தில் எந்தவொரு கருவிகளும் இல்லாமலே பல விசயங்களை அனுமானிக்க முடிந்தது. இது ஒரு நிகழ்தகவு என கொள்ள இயலாது.
முனிவர் என்றால் முற்றும் துறந்தவர் என்பது பொருள் அல்ல. முனிவர் என்பவர் முக்காலமும் அறிந்தவர் என பொருள்படும். உண்மையிலேயே முனிவர்கள் இருந்தார்களா? இருக்கிறார்களா? எனும் கேள்விக்கு பதில் எவரிடம் இருக்கிறது என தேடி பார்த்தால் நம்மிடமே இருக்க கூடும். சித்தர் தன்னை சித்தர் என அறிவித்து கொள்வதில்லை. முனிவர் தன்னை ஒரு முனிவர் என முன்மொழிவதில்லை.
ஒரு விசயத்தை அணுகும்போது மனிதர்கள் அனைவருமே 'வாய்ப்பு' என்கிற தொனியில் அணுகாமல் இதுதான் சரி என்கிற தொனியில் அணுகும்போது அவர்கள் அந்த விசயத்தில் மிகவும் கெட்டித்தனமாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். இந்த மனிதர்களிடம் அஷ்டமா சித்திகள் அடங்கி இருக்கிறது என்கிறது சித்தர்கள் என போற்றப்படும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு. இந்த வரலாற்றில் எத்தனை உண்மை இருக்கிறது என்பது அலசப்பட, ஆராயப்பட வேண்டிய ஒன்று.
ஒரு ஆசிரியரின் அறிவினை சோதிப்பது அந்த ஆசிரியரை இழிவுபடுத்தும் நிகழ்வாகவே பெரும்பாலும் கருதுகிறார்கள், அந்த ஆசிரியர் உட்பட. ஆனால் உண்மை என்னவெனில் , இந்த சோதனை மிகவும் அத்தியாவசியம் ஆகிறது. ஆசிரியர் ஒருவர் தவறாக சொல்லித் தந்தால் அது தவறு என சுட்டி காட்டும் ஆற்றல் ஒரு சில மாணாக்கருக்கே உண்டு. விளக்கம் கேட்டல் எதிர்த்து பேசுதல் என்றாகிறது. நம்மில் முனிவர்கள் உண்டோ?
எதுவெல்லாம் நடக்கும் என எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடத்திலும் உண்டு. 'இது நடக்கும்னு நினைச்சேன்' என நடந்தபின்னர் சொல்லும் மனிதர்கள் எத்தனை?
இதற்கு அனைத்துக்கும் விடையாய் அமைவது எது தெரியுமா?
(தொடரும்)
11 comments:
//ஒரு ஆசிரியரின் அறிவினை சோதிப்பது அந்த ஆசிரியரை இழிவுபடுத்தும் நிகழ்வாகவே பெரும்பாலும் கருதுகிறார்கள், அந்த ஆசிரியர் உட்பட. ஆனால் உண்மை என்னவெனில் , இந்த சோதனை மிகவும் அத்தியாவசியம் ஆகிறது//
இன்றைய சூழலில் மாணவர்களை எதிர்க்கொள்ள மிக அதிகமான "தயாரிப்பு" தேவைப்படுகிறது..
அறிவுக்கூர்மை உள்ள ஆசிரியர்கள், மாணவர்களின் சோதனையில் ஜெயித்து, மாணவர்களை தன் வசப்படுத்துகிறது.
சோதனைக்கு பின் சாதனை..
//இக்கணத்தில் எக்கணமும் இல்லை எனும் புத்தரின் கூற்று //
எம் கருத்து
இக்கணத்தில் எக்கணமும் இருக்கிறது...
இறந்தகாலத்தை முழுமையாக ஆராய்பவர்கள், நிகழ்காலத்தை முழுமையாக அறிந்தவர்கள், எதிர்காலத்தை ஓரளவு சொல்ல கூடியவர்களே. நம்மாலும் இது முடியும்.
நிகழ் காலம் என்பது எது என்று நமக்கு பிடிபடுவத்தில்லை ,இது தான் அந்த கணம் என்று நாம் என்னும் முன் அக்கணம் கரைந்து விடும் , இறந்த காலம் எதிர் காலம் என்று இரண்டு தான் இருக்கிறதோ என்று எனக்கு தோன்றும் .
என் அறிவில் ஓரளவுக்கு ஆன்மீக முதிர்ச்சி பெற்றவர் வருங்கலத்தை அறிய முற்பட மாட்டார் ,அறிந்தாலும் அதை மாற்ற முயல மாட்டார் ,அதை அப்படியே ஏற்று கொள்ளவதே சால சிறந்தது என்று விட்டு விடுவார் .
தொடர் ஆரம்பம் நல்லா தான் இருக்கு :)
மிக்க நன்றி பாரத் பாரதி. அருமை.
மிக்க நன்றி ஐயா. ஆச்சரியம் மட்டுமே மிஞ்சும்.
மிக்க நன்றி டாக்டர். வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
என் அறிவில் ஓரளவுக்கு ஆன்மீக முதிர்ச்சி பெற்றவர் வருங்கலத்தை அறிய முற்பட மாட்டார் ,அறிந்தாலும் அதை மாற்ற முயல மாட்டார் ,அதை அப்படியே ஏற்று கொள்ளவதே சால சிறந்தது என்று விட்டு விடுவார் .//
வழிமொழிகிறேன்.
இக்கணத்தில் வாழ்ந்து வந்தாலே முக்காலமும் ‘தித்திக்கணுமே!’ இல்லையா?
ஆரம்பமே அசத்தலா இருக்கு
ஏ நேற்று என்பது திரிந்தபால். நாளை என்பது
மதில் மேல் பூனை. இன்று என்பது கையில் வீணை. உணர்ந்தால் சரி.
இந்தத் தொடர் வாசிக்க ஆர்வமாயிருக்கு டாக்டர் !
kalakkal
நன்றி தெகா
நன்றி பார்வையாளன்
நன்றி ஐயா
நன்றி ஹேமா
நன்றி ஐயா.
Post a Comment