வம்சம் நன்றாக இருக்கிறது என சொன்னார்கள்.
பாஸ் என்ற பாஸ்கரன் நன்றாக இருக்கிறது என சொன்னார்கள்.
சரி இந்த இரண்டு படத்தையும் பார்த்துவிடலாம் என தீர்மானம் செய்து முதலில் வம்சம் பார்த்தேன்.
வம்சம் துவம்சம். பாஸ் என்ற பாஸ்கரன் எரிச்சல் ஊட்டும் விதமாக இருந்தது, மொத்தத்தில் தமிழ் படங்கள் பார்க்காமல் இருந்துவிடலாம், பிறமொழி படங்கள் நான் பார்ப்பது மிகவும் அரிது, ஆனால் என்னதான் எடுத்து இருக்கிறார்கள் என பார்க்கும் ஆர்வம் தமிழ் படங்கள் பக்கம் அழைத்து சென்றுவிடுகிறது.
வம்சம், ஏன் சாமிகளா ஒரு படத்தை இப்படியா எடுக்கிறது? வம்ச பகை. உட்கார்ந்துட்டே இருக்கிறது. சண்டை போடுறது. அப்புறம் வரும் வம்சாவழியினர் பழைய பகைய மறக்கிறது. வம்சம் அம்சமாக இல்லை.
பாஸ் என்ற பாஸ்கரன்
ஊர் சுத்துவாராம். ஒரு வேலையும் செய்ய மாட்டாராம். தன்னோட கொள்கையை மாத்திக்க மாட்டாராம். வெட்டித்தனமா இருக்கிறதுக்கு என்ன கொள்கை பிடிப்பு வேண்டி கிடக்கு. இதுல காதல் மண்ணாங்கட்டி வேற. நகைச்சுவை காட்சிகளால் நகருகிறது படம். நண்பேன்டா என கழுத்தறுப்பு நடக்கிறது. கடைசி காட்சியில் இயக்குநர் தனது முத்திரையை பதிக்கிறேன் என மொத்த படத்தையும் அடச்சே என சொல்ல வைக்கிறது. பாஸ் கரன் பெயில் கரன் ஆகிப்போனதுதான் மிச்சம்.
தமிழ்பட இயக்குனர்களுக்கு
1 பணத்தை தேவையில்லாமல் விரயம் செய்யாதீர்கள். நீங்கள் செலவழிக்கும் பணத்தில் ஒரு பகுதி இருந்தால் போதும், விவசாயம் நமது நாட்டில் சீரும் சிறப்புமாக இருக்கும். தயவு செய்து விவசாய தொழில் செய்ய முயற்சியுங்கள்.
2 உங்கள் பண முதலீடு இல்லை என்பதற்காக இப்படி எல்லாம் படம் எடுத்து தயாரிப்பாளர்களை நோகடிக்காதீர்கள், அதிலும் முக்கியமாக தமிழ் படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்களை வேதனைபடுத்தாதீர்கள்
3 உலக மகா இலக்கியம் படைக்கிறோம் என வீண் சவாடல் விடாதீர்கள். நல்ல நாவல்களை படமாக்க முயற்சியுங்கள்.
4 இனிமேல் ஒரு தமிழ் படம் எடுப்பதாக இருந்தால் தயவு செய்து ஒரு முறைக்கு பல முறை சிந்தியுங்கள்.
5 தமிழ் திரையுலகம் கதைகளை நம்பி இருப்பதில்லை சதைகளை நம்பி இருக்கிறது எனும் அவச்சொல் வேண்டாம்.
6 இன்னும் எழுத இருக்கிறது, இருப்பினும் எப்படி எங்கள் எழுத்துகளை ஓசியில் படிக்கிறீர்களோ அதுபோல உங்கள் படங்களை ஓசியில் பார்க்க விட்டு தொலையுங்கள்.
5 comments:
பசங்க படத்தை இயக்கி கிடைத்த புகழை(தேசிய விருது) வம்சத்தில் கெடுத்து கொண்டார். நம் இன்றைய இயக்குனர்கள், நேற்றைய (80களின்)இயக்குனர்களிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.
வம்சம் பார்க்கவில்லை. ஆனால் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு? முழுநீள நகைச்சுவை படத்தில் சீரியஸ் ஆன கதாபாத்திரங்கள் எப்படி வர முடியும்?
இரண்டு படங்களையும் பார்க்காததால், கருத்து சொல்ல இயலவில்லை.
ப்லாக் template அழகாக இருக்கிறது.
எனக்கும் பிடிக்கல !
நன்றி தமிழ் உதயம் ஐயா.
நன்றி கோபி. நகைச்சுவை படம் தான். கடைசியில் நகைச்சுவை ம்ஹூம். எப்பொழுது பார்த்தாலும் படத்தில் வரும் கதாநாயகன் பொறுப்பற்றவனாக இருப்பது!
நன்றி சித்ரா. ப்ளாக் டெம்ப்ளேட் வாழ்த்திற்கு நன்றி. ஒருவரின் உழைப்பை நான் உபயோகபடுத்துகிறேன்.
நன்றி ஹேமா.
Post a Comment