Tuesday, 28 September 2010

எந்திரன் - முதல் விமர்சனம் இலண்டனிலிருந்துதான்

எந்திரன் இம்மாதம் முப்பதாம் தேதி அன்றே லண்டன் திரை அரங்குகளில் வெளியாகிறது. முதல் மூன்று காட்சிகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

படம் பார்த்துதான் விமர்சனம் எழுத வேண்டும் என எந்த விதியும் இல்லை. படம் பார்க்காமலே படத்துக்கு மதிப்பெண்கள் தந்துவிடலாம் எனும் அளவுக்கு எந்திரன் பிரமாண்டமாக இருக்கிறது.

ரஜினி - இளமை துள்ளல். இதைப் போல இன்னும் சில என்ன பல வருடங்கள் நடிக்கலாம்.

ரஹமான்  -  எந்திரத்தில் அங்கங்கே கோளாறு.

சங்கர் - இனி தமிழ் படம் இயக்கும் வாய்ப்பு இவருக்கு இருக்காது.

கலாநிதி மாறன் - பலபல பளபள கோடிகளை தேர்தல் நிதிக்காக இனி ஒதுக்கலாம்.

மொத்தத்தில் எந்திரன் வியாபாரத்தில் தந்திரன்

45/50

இத்துடன் எந்திரன் சம்பந்தப்பட்ட பதிவுகள் காலவரையற்று நிறுத்தப்படுகிறது.

4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க லண்டனா?அப்போ விமர்சனம் போடுவதில் முந்திக்குவீங்களா?

surivasu said...

உண்மையை யார்தான் உண்மையாய் இருந்திட விட்டது.

Radhakrishnan said...

இல்லை செந்தில். நீங்களே எழுதுங்க. நான் எல்லாரும் எழுதினப்பறம் ஒரு மாசத்துக்கு பின்னால்தான் எழுதுவேன். நன்றி.

நன்றி வாசு.

Radhakrishnan said...

எனது கணிப்பு தவறவில்லை. ;) கணிப்பு தவறி இருந்தால் மற்றொரு பதிவு வைத்திருந்தேன்.