நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது
பதினேழு முறை
நான் கொண்டு சென்று
பதினெட்டாம் முறையாய்
நான் இறந்து போனபின்
அஷ்டோத்திர மந்திரம் கற்று
உலகம் நலம் பெற வேண்டுமெனும்
ஒரு உயரிய உள்ளம் கொண்ட
அடியேன் ராமனுஜதாசன்
கதை கேட்டு
நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது
யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
உள்ளூர மோதியபோது
நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது
நான் நான் நான்
என நாணமே இல்லாமல்
செருக்குடன் கிறுக்குப் பிடித்த
நான் நான் நான்
நான் இருந்தபோது
கவலைகள் என்னை
தின்று கொண்டிருந்தது
நான் இறந்தபோது
கவலைகளை
தின்று கொண்டிருந்தேன்.
நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது
கவிதைகள் எழுதி மின்னஞ்சல் அனுப்ப : bharathphysics2010@gmail.com
7 comments:
Awesome ! ரொம்ப அருமை. ரசிச்சேன்.
மிக்க நன்றி சகோதரி
அருமை RADHAKRISHNAN...
நான் மிக ரசித்த வரிக்கள்
"நான் இருந்தபோது
கவலைகள் என்னை
தின்று கொண்டிருந்தது
நான் இறந்தபோது
கவலைகளை
தின்று கொண்டிருந்தேன்."
மிக்க நன்றி.
அருமை
Read your poems...nice ones...Research in Pharmacy?
மிக்க நன்றி அன்பரசன்.
ஆமாம் ராஜா. மிக்க நன்றி.
Post a Comment