Wednesday, 4 August 2010

கம்யூனிசமும் கருவாடும் - 3

கருவாடுவுக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம்? இது சந்தத்திற்காக எழுதப்பட்டதா?
காதலும், கத்தரிக்காயும் எனும் சொல்வழக்கு போன்றதா? எனும் கேள்விகளும், மேலும் கம்னியூசத்தை அவமதித்து எழுதுவது போன்ற ஒரு பிரமையும் உருவாவதை தவிர்க்க இயலவில்லை என்பதற்காக வருந்துகிறேன்.

கருவாடுவுக்கும் கம்யூனிசத்திற்கும் சம்பந்தம் உண்டு.  சாதாரணமாக மீன்கள் நீரில் துள்ளி விளையாடும். தண்ணீரில் கலந்திருக்கும் பிராண வாயுதனை சுவாசித்து தனக்கென குடில்கள் எதுவும் அமைத்து கொள்ளாமல் நீந்திக் கொண்டு திரிவதுதான் மீன்களின் வேலை. இந்த மீன்கள் யாருக்காகவும் அடிமைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவை சுதந்திரமாக நீரினில் திரியும்.

குளமோ. குட்டையோ, அருவியோ, நதியோ, கடலோ இந்த மீன்கள் நினைத்த மாத்திரத்தில் ஓரிடம் விட்டு ஓரிடம் செல்லும் வாய்ப்புதனை பெற்றிருக்கும். மீன்கள் வேட்டையாடும் வழக்கம் வைத்திருப்பதில்லை. இந்த மீன்கள் வகை வகையாக இருக்கும். இப்படிப்பட்ட மீன்கள் நீர் வாழ் உயிரின வகையை சார்ந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த மீன்கள் நிலத்திற்கு வந்தால் காற்றில் கலந்திருக்கும் பிராண வாயுவை உட்கொண்டு வாழ இயலாது. சில நிமிட மணித் துளிகளில் இறந்துவிடும்.

அப்படி இறந்து போன மீன்கள்தனை உப்புதனை தடவி வெயிலில் காயப் போட்ட பின்னர் அந்த மீன்களின் பெயர் கருவாடு. இப்பொழுது இந்த கருவாடு பல காலத்திற்கு கெடாமல் பாதுகாக்கலாம். வகை வகையாக இருந்த மீன்கள் ஒரே ஒருவகையான கருவாடு என மாறிவிடும். அதாவது பல்வேறு வகையாக பிரிந்து நிற்கும் மனிதர்கள் இறந்தவுடன் பிணம் என அழைக்கப்படுவதை போல. அந்த கருவாடுதனை கூட நெத்திலி கருவாடு, அத்திலி கருவாடு என பிரித்து விடுவார்கள் என்பது வேறு விசயம். கம்யூனிசத்திலும் அத்தகைய பிரிவுகள் உண்டு.

சுருங்க சொன்னால் இந்த கம்யூனிசம் அதுதான். எல்லா நிலைகளின் அதாவது சோசியலிசம், கேப்பிடலிசம், மாவோயிசம், மார்க்சிசம், லெனினிசம், ஸ்டாலினிசம் என எல்லாவற்றையும் கடந்த இறுதி நிலை.

இந்த கம்யூனிச தத்துவத்தில் சுதந்திரமாக வாழும் அனைத்து பறவைகளும், விலங்குகளும் அடங்கும். கம்யூனிசம் என்பது விலங்கினங்கள், பறவைகளுக்கு மிகவும் எளிதாகவே பொருந்தும். இதில் மனிதர்கள் மட்டுமே விதிவிலக்கு. அதனால்தான் சிந்தனையை  தன்னிடமிருந்து கார்ல் மார்க்ஸ் வெளிபடுத்தினார். கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிந்தனை புரட்சிகர சிந்தனை என அழைக்கப்படுகிறது. இங்கேல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் இணைந்து பணியாற்றினாலும், கார்ல் மார்க்ஸ்தான் பெரிதளவு போற்றபடுகிறார்.  அதற்கு காரணம் கார்ல் மார்க்சின் சிந்தனை வளமும் இங்கேல்சின் பெருந்தன்மையும் என சொல்லலாம். இங்கேல்ஸ், கார்ல் மார்க்ஸ்தனை மிகவும் அதிகமாகவே புகழ்ந்தார்.கம்யூனிசத்தின் முழக்கம் என்னவெனில் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்' என்பதுதான்.

ஜெர்மனியில் இருந்து பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்த ஜெர்மனியர்கள் ஒன்று கூடி 1836ம் வருடம் ஒரு அமைப்பினை உருவாக்கி இருந்தார்கள். அது குறித்தும், இங்கேல்சும், கார்ல் மார்க்சும் வெளியிட்ட கம்யூனிச தத்துவ கொள்கைகளை அடுத்து பார்ப்போம்.

அதற்கு முன்னர், மனிதர்கள் விதி விலக்கு என சொன்னாலும், கம்யூனிசம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது என்பதான தோற்றம் இருக்கும். தந்தை சம்பாதிப்பார். தாயும் பிள்ளைகளும் தந்தையிடம் இருந்து பெற்று கொள்வார்கள். ஒருவர் உழைக்கும் திறன் உடையவர். அவரது உழைப்பால் மற்றவர் பயன் பெறுகிறார்கள். இதைத்தான் கம்யூனிசம் சொல்கிறது. உழைப்பவர்கள் உழைக்கும் வாய்ப்பு அற்றவர்களையும் காப்பாற்றி கொள்ளுங்கள் என. இங்கே தந்தை முதலாளி போல நடந்து கொண்டு குடும்பத்திற்காக பாடுபடும் தாய்க்கும், குழந்தைக்கும் போதிய வசதிகள் செய்து தரவில்லையெனில் தாயும் குழந்தையும் சுரண்டபடுகிறார்கள் என்பதே பொருள். இந்த விசயத்தை கிராமம், நகரம், மாநிலம், நாடு, உலகம் என எல்லாவற்றிலும் கொண்டு வருவதே உண்மையான கம்யூனிசம் என்கிறது கோட்பாடு. வீட்டுக்கு சரி, எப்படியாவது சமாளிக்கலாம், உலகத்துக்கே என்றால்?

சோசியலிஸ்ட் , கம்யூனிஸ்ட் என இரண்டுக்குமே தமிழ் அகராதியில் பொதுவுடைமைவாதி என்றே இருக்கிறது. கார்ல் மார்க்ஸ் அவர்களை சோசியலிஸ்ட் , கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் என்றெல்லாம் சொல்கிறார்கள். கம்யூனிசம் என்பதே இவ்வுலகில் இல்லை என்பதை சுட்டிக்காட்டத்தான் மார்க்சிசம், லெனினிசம், ஸ்டாலினிசம் எல்லாம் தோன்றியது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன்.

(தொடரும்)

14 comments:

Unknown said...

//தந்தை முதலாளி போல நடந்து கொண்டு குடும்பத்திற்காக பாடுபடும் தாய்க்கும், குழந்தைக்கும் போதிய வசதிகள் செய்து தரவில்லையெனில் தாயும் குழந்தையும் சுரண்டபடுகிறார்கள்//
கட்டுப்பாடில்லாமல், தறுதலையாகத் திரிவது தான் கம்யுனிசமா?

கம்யூனிச ஆளும் இடங்களிலெல்லாம், ஒரே தலைவர், நீண்ட காலமாக பதவியில் இருப்பது, பெருமையாகப் பேசப்படுகிறதே? (க்யூபா, வட கொரியா, சீனா, பழைய சோவியத், வங்கம்) இது சர்வாதிகாரம்! இது தான் கம்யூனிசம்! இது சுரண்டல் இல்லையா?

சீனாவில் இன்று குழந்தை பெறவே கட்டுப்பாடு உள்ளதே? இது என்ன?

வால்பையன் said...

சூடு பிடிக்குது

ரிஷபன்Meena said...

இது ரொம்ப புதுசா இருக்கு

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//தந்தை சம்பாதிப்பார். தாயும் பிள்ளைகளும் தந்தையிடம் இருந்து பெற்று கொள்வார்கள்//
இங்கு சுரண்டப்படுவது யார்?
//தந்தை முதலாளி போல நடந்து கொண்டு குடும்பத்திற்காக பாடுபடும் தாய்க்கும், குழந்தைக்கும் போதிய வசதிகள் செய்து தரவில்லையெனில் தாயும் குழந்தையும் சுரண்டபடுகிறார்கள் //
இங்கு சுரண்டப்படுவது என்பது என்ன?எதை?எப்படி?
புரியவில்லை உதாரணத்தின் ஆழம்.

Renga said...

//அதனால்தான் சிந்தனையை தன்னிடமிருந்து கார்ல் மார்க்ஸ் வெளிபடுத்தினார்//

சிந்தனை காலத்திற்கு ஏற்றவாறு மாறி கொண்டு வரவேண்டும்... அதுதான் உபயோகமாக இருக்கும்... ஆனால் computer பயன்பாட்டை எதிர்த்த சிந்தனாவாதிகள் தான் இந்த communist கள்... இன்று அதே computer ஐ பயன்படுத்தி ஒன்றுக்கும் / ஒருவருக்கும் பயனில்லாத வெட்டி வேலைகளை செய்கின்றனர்...

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Robin said...

தோழர்கள் முதலாளித்துவத்தை எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதுகிறார்களே தவிர கம்யுனிசத்தைப் பற்றி ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை. நீங்களாவது எழுதுகிறீர்களே, பாராட்டுகள்.

Radhakrishnan said...

//ரம்மி said...


கட்டுப்பாடில்லாமல், தறுதலையாகத் திரிவது தான் கம்யுனிசமா?

கம்யூனிச ஆளும் இடங்களிலெல்லாம், ஒரே தலைவர், நீண்ட காலமாக பதவியில் இருப்பது, பெருமையாகப் பேசப்படுகிறதே? (க்யூபா, வட கொரியா, சீனா, பழைய சோவியத், வங்கம்) இது சர்வாதிகாரம்! இது தான் கம்யூனிசம்! இது சுரண்டல் இல்லையா?

சீனாவில் இன்று குழந்தை பெறவே கட்டுப்பாடு உள்ளதே? இது என்ன?//

தங்களின் இந்த சிந்தனைகளுக்கு நிச்சயம் பதில்கள் உண்டு நண்பரே. கம்யூனிசம் தறுதலையாக திரிவதை ஊக்குவிப்பதில்லை. மாறாக உலகெங்கும் ஒற்றுமையை நிலைநிறுத்த முயல்கிறது. அப்படிபட்ட கம்யூனிசம்தனை நிறுவ இயலாத நிலைமைதான் இப்போது. நீங்கள் குறிப்பிட்டு இருப்பவை சர்வாதிகாரம் மட்டுமே, கம்யூனிசம் அல்ல. எனது முந்தைய பதிவுகளில் மிகவும் தெளிவாகவே சொல்லிவிட்டேன், கம்யூனிச நாடுகளும் இல்லை, கம்யூனிசவாதிகளும் இவ்வுலகில் இல்லை. நன்றி.

Radhakrishnan said...

//வால்பையன் said...

சூடு பிடிக்குது//

நன்றி நண்பரே.

//ரிஷபன்Meena said...

இது ரொம்ப புதுசா இருக்கு//

சில வருடங்களில் இதுவும் பழையதாகிவிடும், நன்றி ரிஷபன்மீனா

Radhakrishnan said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//தந்தை சம்பாதிப்பார். தாயும் பிள்ளைகளும் தந்தையிடம் இருந்து பெற்று கொள்வார்கள்//
இங்கு சுரண்டப்படுவது யார்?
//தந்தை முதலாளி போல நடந்து கொண்டு குடும்பத்திற்காக பாடுபடும் தாய்க்கும், குழந்தைக்கும் போதிய வசதிகள் செய்து தரவில்லையெனில் தாயும் குழந்தையும் சுரண்டபடுகிறார்கள் //
இங்கு சுரண்டப்படுவது என்பது என்ன?எதை?எப்படி?
புரியவில்லை உதாரணத்தின் ஆழம்.//

இது குறித்து மிகவும் விளக்கமாகவே எழுத இருந்தேன் நண்பரே. இந்த சூழலை அவரவர் சிந்தித்து கொள்ளட்டும் என விட்டுவிட்டேன். நீங்கள் மிகவும் சரியான கேள்விகளை எழுப்பி இருக்கிறீர்கள். இங்கே புரிதல் எழும்போது உலகின் இன்றைய நிலைமையில் புரிதல் ஏற்படும். அடுத்த பதிவுக்கு பின்னர் விளக்கம் தருகிறேன் நண்பரே. தாமதத்திற்கு வருந்துகிறேன்.

Radhakrishnan said...

//Renga said...

சிந்தனை காலத்திற்கு ஏற்றவாறு மாறி கொண்டு வரவேண்டும்... அதுதான் உபயோகமாக இருக்கும்... ஆனால் computer பயன்பாட்டை எதிர்த்த சிந்தனாவாதிகள் தான் இந்த communist கள்... இன்று அதே computer ஐ பயன்படுத்தி ஒன்றுக்கும் / ஒருவருக்கும் பயனில்லாத வெட்டி வேலைகளை செய்கின்றனர்...//

அவர்களுக்கு தெரிந்ததை செய்கிறார்கள். இப்படி செய் என எவரையும் நாம் அறிவுறுத்த இயலாது. அவர்கள் செய்து கொண்டிருப்பதை நிச்சயம் வெட்டி வேலை என ஒருபோதும் கருதமாட்டார்கள். காலத்திற்கேற்ப மாறுவது மனிதர்களின் குணநலன்கள் என்பதால் அதில் எவரும் வேறுபாடு கொள்ள இயலாது. நன்றி ரெங்கா.

Radhakrishnan said...

//Robin said...

தோழர்கள் முதலாளித்துவத்தை எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதுகிறார்களே தவிர கம்யுனிசத்தைப் பற்றி ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை. நீங்களாவது எழுதுகிறீர்களே, பாராட்டுகள்.//

பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே.

Radhakrishnan said...

ஜீஜிக்ஸ்.காமில் பதிவிட அழைப்பு விடுத்தமைக்கு நன்றி சுவேதா.

suneel krishnan said...

காந்தி அவர்கள் மற்ற இதர கம்யுனிஸ்ட்களை காட்டிலும் சிறந்தவராக எனக்கு தென் படுகிறார் .உங்கள் கூற்றை படித்த பின் . சங்கரரின் வேதாந்தம் கூட சற்று கம்யுனிச சாயல் தென்படுகிறது