ஜெர்மனி எனும் நாடு உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற நாடு. இரண்டு உலகப் போர்களுக்கும் ஒருவிதத்தில் காரணமான நாடு. நல்லதொரு சிந்தனையாளர்களையும், அறிவியல் அறிஞர்களையும் கண்ட நாடு. அதற்காக பிற நாடுகள் எல்லாம் சளைத்தவைகள் என்று பொருள் அல்ல. அப்படி கருதினால் கம்யூனிசம் என்பது சாத்தியம் அல்ல. கம்யூனிசம் என்பது எந்த பாகுபாடும், பிரிவினையும் இன்றி அனைவரும் சமம் என கருத வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த கம்யூனிசம் உருவான வரலாறு முதலாளிகளின் கையில் அல்லல்படும் தொழிலாளிகளை கண்டதன் காரணம் தான். மேலும் இந்த கம்யூனிசம் கொண்ட கருத்தையே இதற்கு முன்னர் சோசியலிசம் கொண்டிருந்தது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியது.
கார்ல் மார்க்ஸ் மற்றும் ப்றேடிறிச் இங்கேல்ஸ் எனும் ஜெர்மனியில் பிறந்த இரண்டு சிந்தனையாளர்களின் எண்ணத்தில் உருவானதுதான் இந்த கம்யூனிசம் என சொன்னாலும் இவர்களுக்கு முன்னர் இருநூறு வருடங்களுக்கு முன்னரே இந்த கம்யூனிசம் உருவாகித்தான் இருந்தது என்கிறது வரலாறு. சோசியலிசம் எனப்படும் சமத்துவ முறையானது முன்னரே கடைபிடிக்கப்பட்டு வந்ததுதான்.
இந்த கம்யூனிசம் மிகவும் சிறந்த சிந்தனை, ஆனால் இந்த உலகத்தில் கம்யூனிசம் என்பது சாத்தியம் கிடையாது. கம்யூனிச நாடுகள் என இருப்பவை, இருந்தவை எல்லாம் கம்யூனிச சிந்தனைகளை பின்பற்றியவைகளே அல்ல. கம்யூனிசவாதிகள் என சொல்லிக் கொள்வோர்கள் எல்லாம் கம்யூனிசவாதிகளே அல்ல என்பதை அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
சோசியலிசமும் கம்யூனிசமும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையவை. முதலாளித்துவ கொள்கைகளை எதிர்ப்பவை. அப்படி என்னதான் இந்த சோசியலிசம் சொன்னது.
தனி உடைமை என்பதை ஒழித்தல். அனைத்தும் பொதுவுடைமை ஆக்குதல். எல்லாவற்றிருக்கும் ஒருவரே முதலாளி, அந்த முதலாளி வேறு யாருமல்ல, அனைத்து தொழிலாளிகள், சுருங்கச் சொன்னால் அனைத்து மக்கள்.
சர்வாதிகாரம் எனும் பேச்சுக்கே இடம் கிடையாது. அனைத்துமே ஜனநாயக கட்டுபாட்டில் இருப்பதுதான். ஆனால் லெனின், ஸ்டாலின், மாவோ எல்லாம் சர்வாதிகாரத்தின் பேரில் செயல்பட்டவர்கள். ஏனெனில் காலமும் சூழ்நிலையும் அவ்வாறு செயல்பட வைத்தன. ஒன்றை எதிர்க்க சர்வாதிகாரம்தான் மிகவும் துணை நின்றது.
உபயோகத்திற்காக மட்டுமே பொருள்கள் உருவாக்கப்பட வேண்டும், லாப நோக்கத்திற்காக எதுவுமே உருவாக்கப்படக் கூடாது. இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். வியாபார உலகில் லாப நோக்கம் இல்லாமல் எது சாத்தியம்? இது சாத்தியம், எப்படி தெரியுமா?
கம்யூனிசத்தின், பொதுவுடைமையின், முழு சிந்தனையான பிரிவினையேதும் இல்லாத , இந்த ஊர், நாடு எனும் அடையாளமில்லாத ஒரு சமூகம். அதாவது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விசா, குடியுரிமை எனும் கொடுமை எல்லாம் இல்லாமலிருப்பது. எங்கு வாழும் மக்களும் அதே சகல வசதிகளுடன் வாழ்வது, அதன் காரணமாக ஒரு இடம் மற்றொரு இடம் என எந்த பாகுபாடும் இல்லாமலிருப்பது.
இந்த உலகில் சாத்தியமே இல்லாத இந்த சிந்தனைகள் கற்பனையில் வெளிபட்டது அல்ல. இங்கேல்ஸ் இங்கிலாந்து நாட்டிற்கு பிரயாணம் செய்தபோது தான் கண்ட குழந்தை தொழிலாளர்கள் நிலை, வர்க்க ரீதியாக பிரிக்கப்பட்டிருந்த மக்கள் நிலை எனும் பல அவல நிலைகள் தான்.
இங்கேல்சும், கார்ல் மார்க்சும் இணைந்து முதலாளித்துவத்தை எதிர்த்து போராடினாலும் கம்யூனிசம் என்பதை அவர்களால் உறுதி செய்ய இயலவில்லை. அவர்களால் ஒரு தெளிவான பார்வையை செயல்படுத்த இயலாத நிலையே இருந்தது. அது ஏன்?
கற்கால மனிதர்களைப் போல இக்கால மனிதர்களும் வாழத் தயாரா? கம்யூனிசம், மாவோயிசம், சோசியலிசம், அந்த இசம், இந்த இசம் என எல்லா இசங்களும் நமது வசம்.
(தொடரும்)
5 comments:
communisam nichyam oru karuvaaduthaan....good post
சார் ,
நான் இதை பற்றி ஒரு பதிவருக்கு நீண்ட பின்னோட்டம் இடலாம் என்று காத்திருந்தேன்...நல்ல வேலை நீங்கள் அந்த அரும்பணியை செய்து விட்டீர்கள் ...,
ஆஹா, ஒரு முடிவுக்கே வந்துவிட்டீங்களே ஆர்கே குரு. மிக்க நன்றி.
மிக்க நன்றி ஷங்கர், ஒரு பதிவரின் ஆதங்கத்தை தீர்க்க வேண்டும் என்றுதான் தனியாய் எழுதினேன்.
இப்படி ஒரு சமூகம் அமையும் என்பது நம் எல்லாருடைய அதீத கனவு :)
:) மிக்க நன்றி டாக்டர்.
Post a Comment