படம் பேரு என்ன சொன்னீங்க? களவாணியா? கலைவாணியா?
களவாணி தான் படத்தோட பேரு. களவாணி பயலுக ஜாஸ்தியா போய்ட்டாங்க போல, அதான் இப்படி எல்லாம் பேரு வைக்க தோணுது.
திருட்டு பயலே அப்படினு படம் எல்லாம் வந்திருக்குதானே?.
ஆமாம், அதுக்கென்ன, களவாணி அப்படிங்கிறது கிராமத்து பாஷை. அதை களவாண்டுட்டான், இதை களவாண்டுட்டான் அப்படினு சொல்வோம்ல. களவாணி பயலுக ஆட்டை திருடிட்டு போய்ட்டானுக அப்படினு சொல்வோம்ல. இப்ப புரியுதா களவாணி தான் படத்தோட பேரு. திருட்டு பயலே படத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.
திருட்டு பயலே அப்படின்னு சொல்றதும் களவாணி அப்படின்னு சொல்றதும் ஒண்ணுதானே?
அதுக்கு என்ன இப்போ? களவாணி அப்படிங்கிறது பொதுபால். திருட்டு பயல அப்படிங்கிறது ஆண்பால். அதிருக்கட்டும், அந்த கதை வேற, இந்த கதை வேற.
களவாணி எப்படி இருக்கு?
களவாணித்தனம் நிறைய இருக்கு. படம் பாத்து முடிச்சப்பறம் என்ன சொல்ல வராக? அப்படினு தோணிச்சி. அப்படியாகுமோ, இப்படியாகுமோ அப்படினு பரபரப்பு ஏற்படுத்தி இருக்காக, படம் முழுக்க நகைச்சுவையாத் தான் இருக்கு.
நல்லவேளை, மூட நம்பிக்கையை ஆதரிக்கும் படம் அப்படினு ஒருத்தர் கூட சவாடல் விடக் காணோம்.
என்ன சொல்றீக?
படம் நல்லா இருக்கு. பாருங்க. அதெல்லாம் எதுக்கு. நாம கிண்டிவிடனுமா? நாம நம்பிக்கையில ஊறின ஆளுக.
என்ன விமர்சனம் இப்படி இருக்கு?
களவாணிய நாமளும் களவாட வேண்டாம்னு விட்டுட்டேன். படம் பாருங்க. :)
6 comments:
//களவாணிய நாமளும் களவாட வேண்டாம்னு
விட்டுட்டேன்.//
சரி
களவாணி_ மனதை களவாண்டவன்>> :))
நல்லவேளை, மூட நம்பிக்கையை ஆதரிக்கும் படம் அப்படினு ஒருத்தர் கூட சவாடல் விடக் காணோம்.
...... எல்லோரும் இன்னும் சிரிச்சிக்கிட்டு இருக்காங்க.... அப்புறமா.... தோணுமோ?
அட இப்படி கூட விமர்சனம் எழுதலாமா..
பைனலா கலவாண்டிகளா இல்லையா ???
நன்றி வானம்பாடிகள் ஐயா. நன்றி நசரேயன். நன்றி ஸ்டார்ஜன், ம்ம். நன்றி சித்ரா, சரிதான். நன்றி நண்பரே, ம், எழுதலாம். நன்றி அமைச்சர், கொஞ்சமா களவாடினேன்.
Post a Comment