சூரியனே
குயில்கள் குரல் கேட்க குளிர்ச்சியாய்
எழுந்து வந்தாயோ
செந்தூர வானத்தில்
வெள்ளை வட்ட பொட்டு வைத்து
குருவியே
ஒற்றைக்காலில் நின்று
ஒய்யாரமாய் உன் குரல்வளம்
சரிசெய்கிறாயோ
அதென்ன சூரிய
நமஸ்காரம் செய்யாமல்
இந்தப் பக்கம் பார்வை
மகிழ்வைத் தந்து விடுவாய்
மனதில் வைத்து போற்றுகிறேன்
அதிகாலை என்றும் அழகுதான்
அதிலும் உன்குரல் மெல்லிய இசைதான்
குருவியே உன்குரல் பிடிக்கும்
உன்குரல் மட்டுமே பிடிக்கும்
எனக்காக நீ பாடும் பாடல்!
5 comments:
அருமை..குருவியய் கூட அழகாய் ரசித்து கவிதையாய் எழுதி இருக்கிரீர்கள் மகிழ்ச்சி..கலக்குங்க..
அருமை நண்பரே
செல்போன் டவர்களால் குருவிகளையே பார்க்க முடியலயே.
கவிதையில் குருவி பறக்கிறது . வாழ்த்துக்கள்
நன்றி காயத்ரி.
நன்றி வேலு.
நன்றி தமிழ் உதயம் ஐயா.
நன்றி சரவணன்
நன்றி ஸ்டார்ஜன்
Post a Comment