Friday, 2 July 2010

இனிமேல் பொய் பேசாதே

பொய் பேசுவதால் பிரச்சினைகள் தீர்ந்து போய்விடும் எனும் கணக்கு தவறுதான். 
பிரச்சினைகள் பெரிதாகி கொண்டேதான் போய்க் கொண்டிருக்கின்றன. 
இந்த பொய்யானது அந்த பிரச்சனைகளை ஒருபோதும் தீர்த்தபாடில்லை. 
இருப்பினும் பொய் பேசுவது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகத்தான் இருக்கிறது. 

பொய் பேசுவதால் ஏமாற்றுக்காரன் என சொல்லித்தான் செல்கிறார்கள். 
ஏமாற்றுக்காரன் மட்டுமல்ல ஏமாந்தவர்களில் பொய் பேசுபவரும் ஒருவராம். 
நேர்மையாய் இருப்பது மிகவும் அசௌகரியம் என்பதால் மட்டுமே
பொய் பேசித் திரியும் காலம் இனிப்பாகவே இருக்கிறது. 

பொய் பேசுவதை நிறுத்துவது என்பது பெரும்பாடாகத்தான் இருக்கிறது
சத்தியம் செய்தாலும் அதை தவறுவது எளிதாக இருக்கிறது
குடிகாரர்களுக்கு மட்டுமல்ல இந்த பொய் பேசுபவர்களுக்கு கூட 
குடிகார பழமொழி மிகவும் பொருந்தும் தான். 

இனிமேலாவது பொய் பேசாதே என எச்சரித்து விடலாம்
ஆனால் பொய் பேசுவது என்பது மிகவும் சுகமாகத்தான் இருக்கிறது
கனவுகளும் கற்பனைகளும் கூட பொய்யின் குழந்தைகள்தான்
அந்த கனவுகளும் கற்பனைகளும் ஒருநாளேனும் உண்மையாகட்டும். 
 

2 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

பொய்பேசுவதில் இருக்கும் உண்மையும் பொய்யாகும். நல்ல பகிர்வு ராதாகிருஷ்ணன் சார்.

Radhakrishnan said...

நன்றி ஸ்டார்ஜன் அவர்களே.