Wednesday, 12 May 2010
எங்க, குறை தீர்க்கும் சாமி
பொய்க்குதிரையாட்டம் பார்த்த நானும்
குதிரையாட்டம் போட ஏறிக்கொண்டேன்
ஆடு குதிரை ஆடு குதிரை என்று
நான் ஆடியே பலமுறை சொன்னபின்னரும்
முன்னங்காலை மட்டும் தூக்கி
முன்னும் பின்னும் போகாம நிற்க
கல்குதிரைக்கு என்ன விளங்கப்போகுதுனு
கலக்கமில்லாம இறங்கிடப் போறேன்
ஆடும் குதிரையிலத்தான் நானும்
ஏறிவிளையாடப் போறேன்
கவனமா ஒன்னுமட்டும் கேளுங்க
கல்லில் ஆக்கி வைச்ச கடவுள்கிட்ட
எங்க குறைதீரு குறைதீரு என்று
ஏமாளியாக நிற்க வேணாம்
என்ன செய்யனுமோ அதை
குறையில்லாம நீங்க செஞ்சிக்கிட்டா
கலக்கம் தானாப் போயிரும்
கடவுள்தான் உதவுனாருனு மனசும்
லேசாகப் போயிரும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...
13 comments:
//என்ன செய்யனுமோ அதை
குறையில்லாம நீங்க செஞ்சிக்கிட்டா
//
now, who will read my stories.. :--))
//என்ன செய்யனுமோ அதை
குறையில்லாம நீங்க செஞ்சிக்கிட்டா
கலக்கம் தானாப் போயிரும்//
சரியாச்சொன்னீங்க... அருமை....
விதூஷ், கவலையே படாதீங்க, உங்க கதைகள் பலராலும் விரும்பிப் படிக்கப்படும். :) மிக்க நன்றி.
மிக்க நன்றி பாலாசி.
சரியான கருத்துக்கள்; உண்மையானவை.
அழகு கவிதை.
நல்ல கருத்து!
//குறையில்லாம நீங்க செஞ்சிக்கிட்டா
கலக்கம் தானாப் போயிரும்
கடவுள்தான் உதவுனாருனு மனசும் //
good thought.
கடைசி நாலு வரி அருமையிலும் அருமை.
நன்றி ஸ்டார்ஜன்; நன்றி சித்ரா, நன்றி வானம்பாடிகள் ஐயா, நன்றி சரவணன், நன்றி தமிழ் உதயம் ஐயா.
சரியாச் சொல்லி முடிச்சிருக்கீங்க !
//கல்லில் ஆக்கி வைச்ச கடவுள்கிட்ட//
நீங்க சரியா எந்த விஷயத்தையும் ஆராயமாட்டீங்களா? கல்லில் செதுக்கப்பட்ட சிலை, கடவுளின் குறியீடுனுதான் அவுங்க ஆகமம் சொல்லுது அது கடவுள்னு சொல்லலையாம்.
ம்...
நன்றி ஹேமா, நன்றி ஸ்மார்ட், புது விசயம் கற்றுக்கொண்டேன். நன்றி நண்டு.
Post a Comment