Thursday, 6 May 2010

ஒரு இயக்குநர் தேடும் கதை

எப்படியாவது திரைப்படத் துறையில் இயக்குநர் ஆகிவிட வேண்டுமெனும் கனவு பலருக்கும் இருக்கிறது. இதற்காக வெயில், மழை, உணவு, நட்பு என எதையும் பொருட்படுத்தாமல் அந்த கனவினை நிறைவேற்ற பாடுபடும் பலர் கண்களுக்குத் தெரிகிறார்கள்.

ஆனால் இவர்களில் பலர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பினை பெறுவதே இல்லை. இவர்களின் மன நிலை ஒரு கனவு வட்டத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு சிலரே வெற்றி பெறுகிறார்கள். அவர்களில் வெகு சிலரே தொடர்ந்து வெற்றியைத் தக்க வைத்து கொள்கிறார்கள்.

திரைப்படத்துறையில் கால் பதிக்க கதையை தேடி அலையும் இயக்குநர்களை விட, கதை சொல்ல துடிக்கும் இயக்குநர்களே அதிகம். ஒரு வரியில் எவர் ஒருவர் கதையை சொல்கிறாரோ அவரே சிறந்த கதை உடையவர். ஆனால் ஒரு வரி கதையை எப்பிடி திரைப்படம் ஆக்குவது. அதுதான் இயக்குநரின் சிந்தனைக்கு சவால். எப்படிப்பட்ட நல்ல கதையையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவது இயக்குநரிடம் உள்ளது.

ஒரு வரி கதையின் துணை கொண்டு நான்கு  பாடல்கள், ஒரு சண்டை, சில நகைச்சுவைகள்  என திரைக்கதை எழுதிவிட்டால் ஒரு திரைப்படம் தயார் ஆகிவிடும். இப்படி கதை வேண்டும் என ஓடித் திரியும் இயக்குநர்களின் மத்தியில் கொஞ்சம் கூட சலிப்பில்லாமல் ஒரு கதாநாயகன், ஒரு வில்லன், ஒரு காதலி என அடிதடிகளுடன் கூடிய படங்களும் எடுக்கப்படுகின்றன. இந்த படங்களுக்கு கதை என்பதை விட எடுக்கப்படும் விதமே முக்கியம்.

எத்தனையோ இயக்குநர்கள் என்ன கதைகள் வைத்து இருக்கிறார்கள், கேட்டால் எனது இருபது வருட கனவு என சொல்பவர்களும் உண்டு. மேலும் பார்க்கும் விசயத்தையெல்லாம் எழுதி வைத்துக் கொண்டு இதோ ஒரு கதை என சொல்பவர்களும் உண்டு. குறும் படங்கள் எடுத்ததும் பெரிய திரைப்படம் எடுத்துவிடலாம் என எண்ணுபவர்களும் உண்டு.

இப்படியெல்லாம் இந்த கால கட்டடத்தில் இருக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு இயக்குநராகும் கனவுடன் ஒருவர் கதை தேடிக் கொண்டு இருந்தார். அவர் தேடத் தொடங்கிய வருடம் 1920. அப்போது அவருக்கு வயது 18. அவரால் என்ன கதை என முடிவு செய்ய முடியவில்லை. அப்போது வெறும் ஊமைப்படங்கள் மட்டுமே.  விவசாயம் பார்த்துக் கொண்டே இருந்தவர் திரைப்படங்களை பார்த்து பார்த்து என்ன கதை இது என்ன கதை இது என சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் ஒரு நல்ல கதை அவருக்கு கிடைத்த பாடில்லை. எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்களையும், நல்ல விளைநிலங்களையும் ஊரைச் சுற்றி உருவாக்கினார். 1976 ல் நோய்வாய்ப்பட்டார். தன்னால் ஒரு நல்ல கதையை உருவாக்க முடியவில்லை எனும் ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. செத்துப் போய்விடுவோமோ எனத் துடிதுடித்தார். தனது மகனை அழைத்தார். எனது கதையை ஒரு திரைப்படம் ஆக்கிவிடு என சொல்லிவிட்டு உயிர் துறந்தார்.

திரைப்படத்தில் கதை வேண்டும் என கேட்பவர்களே உங்கள் வாழ்க்கையை ஒரு நல்ல திரைப்படம் ஆக்கும் அளவுக்கு வாழ வேண்டும் என எண்ணியது உண்டா. இதோ ஒரு இயக்குநர் ஆகும் கனவுடன் நானும் கதை செதுக்க ஆரம்பித்து விட்டேன்.

9 comments:

Paleo God said...

வெற்றியடைய வாழ்த்துகள் ராகி!

--

(நமக்கு அவ்ளோ ஆசையெல்லாம் இல்லைங்க லைட்டா நடிச்சி, எம்மெல்லே ஆகி, சிஎம் ஆகி அப்படியே பிரதமர் ஆகிட்டா போதும்! :)

Paleo God said...

// ஒரு நல்ல திரைப்படம் ஆக்கும் அளவுக்கு வாழ வேண்டும் என எண்ணியது உண்டா.//

நல்ல கேள்வி.

இதோ ஒரு இயக்குநர் ஆகும் கனவுடன் நானும் கதை தேட ஆரம்பித்து விட்டேன்.

செதுக்க, என்றல்லவா இருக்கவேண்டும்!

Radhakrishnan said...

நன்றி ஷங்கர், இந்திய பிரதமர் ரெடினு சொல்லுங்க. இதோ மாற்றிவிடுகிறேன்.

Chitra said...

////ிரைப்படத்தில் கதை வேண்டும் என கேட்பவர்களே உங்கள் வாழ்க்கையை ஒரு நல்ல திரைப்படம் ஆக்கும் அளவுக்கு வாழ வேண்டும் என எண்ணியது உண்டா. இதோ ஒரு இயக்குநர் ஆகும் கனவுடன் நானும் கதை செதுக்க ஆரம்பித்து விட்டேன்.///



.....நமக்கு அப்படி எல்லாம் பேராசை இல்லைங்க. சின்னதா ஒரு காமெடி ரோல் கிடைச்சா போதும்..... just kidding! ஹா,ஹா,ஹா,ஹா...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

ம்....

ISR Selvakumar said...

நேற்று இரவு தான் இந்தப் பதிவை வாசித்தேன்..
என்ன ஆச்சரியம்!!!
இன்று காலை தங்கை சித்ரா இதே பதிவை எனது கவனத்துக்கு கொண்டு வந்தார்.

உங்கள் கனவு நனவாக வாழ்த்துகள்!

Vidhoosh said...

:) nice post. nice thoughts. wish you all the best sir.

i will play bgm violin :))

Radhakrishnan said...

நன்றி சித்ரா. ம்ம...

நன்றி நண்பரே.

நன்றி செல்வகுமார்.

நன்றி விதூஷ். நிச்சயமாக. குழந்தைகளுக்கு வயலின் எல்லாம் சொல்லித் தருவீங்களா?

Radhakrishnan said...

நன்றி கதிர்