Saturday, 1 May 2010

திருடினேன்

என்னிடம் எதுவும் சொந்தமாக சிந்தனை எழவும் இல்லை
சொந்தமான சிந்தனை எனும் எந்த எழவும் என்னிடம் இல்லை
கேட்டதை வைத்து திரித்து எழுதினேன்
கேள்விகள் கேட்டவருக்கு அறிந்ததை திரித்து சொன்னேன்

கற்பனை என்கிற பெயரில் இருப்பதை வைத்தே எழுதினேன்
கற்பு நட்பு என எதற்கும் அர்த்தம் தெரியாமல் விளக்கம் சொன்னேன்
காணாத இறைவனை கண்டதாய் கதைகள் சொன்னேன்
காட்சிக்கு கிடைக்காத பொருள் அருள் என்றேன்

பாராட்டும் புகழும் பலவிதமாய் பெற்றேன்
ஏரோட்டும் வாழ்க்கை தேரோட்டம் காணக் கிடைத்தேன்
ஆறுதல் கேட்டு வந்தவரின் கதையை கதையாய் சொன்னேன்
பாரினில் பார்த்ததாய்  எல்லாம் பரிதவித்து சொன்னேன்

என்னவெல்லாம் திருடினேன் கணக்கில் வைக்க முடிய வில்லை
எதற்காக திருடினேன் ஒரு பதிலும் என்னிடம் இல்லை
திருடிப் பிழைக்கும் வாழ்க்கை அதை பெற்ற பின்னர்
நான் திருடன் இல்லை என சொன்னால் நம்புவீரோ!

17 comments:

மதுரை சரவணன் said...

//கற்பனை என்கிற பெயரில் இருப்பதை வைத்தே எழுதினேன்
கற்பு நட்பு என எதற்கும் அர்த்தம் தெரியாமல் விளக்கம் சொன்னேன்
காணாத இறைவனை கண்டதாய் கதைகள் சொன்னேன்
காட்சிக்கு கிடைக்காத பொருள் அருள் என்றேன்//
super.

Chitra said...

///கற்பனை என்கிற பெயரில் இருப்பதை வைத்தே எழுதினேன்
கற்பு நட்பு என எதற்கும் அர்த்தம் தெரியாமல் விளக்கம் சொன்னேன்
காணாத இறைவனை கண்டதாய் கதைகள் சொன்னேன்
காட்சிக்கு கிடைக்காத பொருள் அருள் என்றேன்///


.....இந்த திருடாத வரிகளில், உங்களின் அறிவு பொக்கிஷம் மிளிர்கிறது. :-)

ஈரோடு கதிர் said...

ஆகா

புலவன் புலிகேசி said...

:))

தமிழ் உதயம் said...
This comment has been removed by the author.
தமிழ் உதயம் said...

எழுதுபவர்களின் கதை இது என்று சொல்லலாமோ. கருத்தில் கவியரசு கண்ணதாசன் தெரிகிறார்.

தோழி said...

:)

vasu balaji said...

ம்ம். அருமை

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான வரிகளில் ஒரு நல்ல படைப்பு..

ஹேமா said...

வித்தியாசமான சிந்தனை.அருமையா இருக்கு.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

ம்...

அகநாழிகை said...

அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல படைப்பு..

கிரி said...

ரொம்ப நல்லா இருக்குங்க! :-)

Radhakrishnan said...

நன்றி மதுரை சரவணன்.

நன்றி சித்ரா

நன்றி கதிர்

நன்றி புலவன் புலிகேசி

நன்றி தமிழ் உதயம்

நன்றி தோழி

நன்றி ஐயா

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி ஹேமா

நன்றி நண்டு

நன்றி வாசு சார்

நன்றி ஐயா

நன்றி கிரி சார்

சுந்தரா said...

கருத்துள்ள கவிதை ரங்கன்...

அப்படியானால் எழுதுகிற எல்லாரும் எங்காவது ஓரிடத்திலிருந்து திருடுபவர்கள்தான்.

Radhakrishnan said...

நன்றி சகோதரி.