யார் எழுத்தாளர்கள் எனும் கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது? புத்தகம் வெளியிட்டு விட்டால் அவர் எழுத்தாளரா? வலைப்பூ அல்லது வலைத்தளத்தில் மட்டும் பதிபவர்கள், எழுத்தாளர்கள் எனும் அங்கீகாரம் பெறாதவர்களா?
எழுத்தாளர்கள் எனும் அங்கீகாரம் உடையவர்கள் சொந்த வலைத்தளமோ, அல்லது வலைப்பூவோ வைத்துக்கொண்டு எழுதுவார்கள். எனவே இவர்களை பதிவர்கள் என அழைத்தல் முறையல்ல செயலோ?
எழுத்தாணி பிடித்தவர் எல்லாம் எழுத்தாளர்கள் ஆகி விட முடியாது என சொல்வது வழக்கம் தான். ஆனால் இப்போது பதிவர்கள் எனப்படுபவர்கள் புத்தகம் வெளியிட்டு தங்களை எழுத்தாளர்கள் எனச் சொல்லப்படும் அங்கீகாரம் பெறத் துணிந்து விட்டார்கள், மேலும் பலர் தங்களை எழுத்தாளர்களாகவே சித்தரித்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். எனவே இனிமேல் பதிவர்கள் என இவர்கள் எவரையும் அழைப்பது முறையல்ல. எழுத்துதனை ஆள்பவர்கள் அனைவருமே எழுத்தாளர்கள். அப்படி பார்க்கையில் ஒருவகையில் இந்த பதிவர்கள் எழுத்துதனை ஆளத் தொடங்கிவிட்டார்கள். இதுவல்ல பிரச்சினை.
பிரச்சினை என்னவெனில் இந்த எழுத்தாளர்கள் மனதில் ஒரு பெரிய எண்ணம் தோன்றி இருக்கிறது. அது என்னவெனில் தங்களை சமூக நல காவலர்கள் போல் சித்தரித்துக் கொள்வது. எழுதுவதால் மட்டுமே எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு வந்து விடும் எனும் இவர்களின் விபரீதமான கனவுதனை மிகவும் நேர்த்தியாகவே செய்கிறார்கள்.
கணினியின் முன்னர் அமர்ந்து எழுதும் உலகத்துக்கும், அதைத் தாண்டி வெளியில் இருக்கும் உலகத்துக்கும் எத்தனை வித்தியாசம் என்பதை இந்த எழுத்தாளர்கள் அறிந்திருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு விஷயத்தை எப்படி வேண்டுமெனிலும் சிந்தனை செய்யலாம் என்பது சிந்திக்கத் தெரிந்த மானுடத்துக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு.
பலர் மனதில் இருப்பதை எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் எழுதுவதால் நன்றாகவே பிறரிடமிருந்து சொல்லடி படுகிறார்கள். இவர்கள் இதை எல்லாம் கணினியில் பதிவாக எழுதுவதால்தான் இந்த பிரச்சினை. இவர்கள் நினைப்பதை எல்லாம் ஒரு புத்தகமாக போட்டுவிட்டால் படிப்பவர்களுக்கு மட்டுமே பிரச்சினை எனவும் இருந்து விட முடியாது, ஏனெனில் புத்தகம் வெளி வந்த பின்னரும் பிரச்சினையாகி விடும் நிலை இருந்துதான் வருகிறது.
பல விசயங்களில் பலரும் எழுதி எழுதியே சிக்கித் தவிக்கிறார்கள். இது எழுதுபவர்களது பிரச்சினை என எவரும் இருப்பதில்லை, எப்படி இப்படி நடக்கலாம், சொல்லலாம் என சில காலத்திற்கு எங்கெங்குத் திரும்பினாலும் நடந்து முடிந்த விசயங்களை உலகப் பிரச்சினை போல இந்த எழுத்துகள் ஆக்கி விடுவது ஒருவித மாயை.
இதில் என்ன சுவாரஸ்யம் எனில் விசயம் சம்பந்தபட்டவர்கள் பற்றி ஒரு கண்டன அறிக்கை விடுவது வாடிக்கை. பிரச்சினை தீர வழி எதுவும் இவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் அதிலும் மிக மிக சுவாரஸ்யம். முன்னாள் எல்லாம் தெருவுக்கு தெரு பத்திரிக்கை படித்து பேசிக் கொள்வார்கள். பெட்டிக்கடையில் ஒருவருக்கு ஒருவர் முட்டி கொள்வார்கள். இப்பொழுது கணினி பெட்டியில் தட்டி கொள்கிறார்கள். ஒரு விஷயத்தை மாற்று கோணத்தில் சிந்திப்பது சற்று கோணலாக சிந்திக்கும் வண்ணம் தெரிவதால் எழுத்துகளும், எழுதுபவர்களும் விவகாரமானவர்களாகவேத் தெரிகிறார்கள். இது போன்ற சிந்தனைகளை தவிர்த்தலும், எழுதுவதும் அவரவர் சிந்தனைக்கு உட்பட்டது எனினும் சில வரைமுறைகள் உள்ளது. மேலும் இந்த விவகாரம், பார்க்கும் கண்களில் இருக்கிறது எனும் தத்துவம் வேறு.
இப்பொழுது ஒரு பிரச்சினை தட்டப்படும், அடுத்த ஒரு பிரச்சினை வந்ததும் முதல் பிரச்சினை முடிந்துவிடும். இந்த எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கு பிரச்சினைகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் ரகசியத்தின் மர்மம எதுவோ.
வள்ளுவர் சொல்வார்
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
அது சரி, எவரெல்லாம் விவகாரமான எழுத்தாளர்கள்? எவரையும் கை காட்டுவது முறையல்ல என்பதாலும் அப்படி எவரும் எவரையும் கைகாட்டுவதால் அவர்களும் விகார சொரூபமாக திகழ வாய்ப்பு இருப்பதாலும் யானைப் போரை கண்டு களியுங்கள், சோளப்பொரிதான் எனினும்.
20 comments:
நல்ல எழுத்து நடை.
(எங்க ஒருத்தரையும் காணோம்?விவகாரமான பதிவா?இல்ல தமிழகத்துல வேற ஏதாவது வில்லங்கமா?)
நான் தான் துண்டு போட்டிருக்கேனா?அப்ப சரி:)
:-)
எல்லாம் மாயை !
அப்பா நான் தான் பிரபல எழுத்தாளனா ?
லைட்டா புரிஞ்ச மாதிரி இருக்கு :))
மிக்க நன்றி ராஜ நடராஜன். விவகாரமான பதிவு பல படிப்பதால், தமிழகத்தில் நடக்கும் வில்லங்கங்கள் தெரிகிறது.
மிக்க நன்றி சந்தனமுல்லை
மிக்க நன்றி ராபின்
ஹா ஹா, அதிலென்ன சந்தேகம் அமைச்சரே, மிக்க நன்றி.
மிக்க நன்றி பரோட்டா, தெளிவாக எழுதிவிடுவோம். :)
பிரச்சினை என்னவெனில் இந்த எழுத்தாளர்கள் மனதில் ஒரு பெரிய எண்ணம் தோன்றி இருக்கிறது. அது என்னவெனில் தங்களை சமூக நல காவலர்கள் போல் சித்தரித்துக் கொள்வது. எழுதுவதால் மட்டுமே எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு வந்து விடும் எனும் இவர்களின் விபரீதமான கனவுதனை மிகவும் நேர்த்தியாகவே செய்கிறார்கள்.
....... இல்லீங்கோ, நான் அப்படி சொல்லலைங்கோ..... சொன்னாலும், என்னை மாத்திக்க முயற்சி பண்றேங்கோ .....
yarayo thakkara mathiri irukku.. nallathan eluthi irukeenga
//இப்பொழுது ஒரு பிரச்சினை தட்டப்படும், அடுத்த ஒரு பிரச்சினை வந்ததும் முதல் பிரச்சினை முடிந்துவிடும். இந்த எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கு பிரச்சினைகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் ரகசியத்தின் மர்மம எதுவோ.//
100% right
Present Radhakrishnan
நமக்கும் ஒரு துண்டு போட்டு வையிங்க!
நல்லாத்தான் யோசிச்சு இருக்கீங்க!!!!!!!
ஹா ஹா சித்ரா, மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி.
விவகாரமான எழுத்தாளர்கள் எவர் எவரோ அவர்களுக்குத்தான் எழுதப்பட்டு இருக்கிறது ஐயா. மிக்க நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி ஐயா.
மிக்க நன்றி என் ஆர் சிபி. நீங்க விவரமான எழுத்தாளர்.
மிக்க நன்றி ஆசிரியை.
:)
மிக்க நன்றி உமா அவர்களே.
சந்தேகமே இல்ல... நீங்க எழுத்தாளர் தாங்க :)
:) மிக்க நன்றி டி.ஆர் அசோக்.
நல்ல விவரமாத்தான் எழுதி இருக்கீங்க
சிந்தனைக்கான இடுகை!
மிக்க நன்றி நசரேயன், பழமைபேசி.
Post a Comment